புழுங்கலரிசி ரவை –1 ஆழாக்கு
வெல்லம்(தூள்) –ஒன்றரை ஆழாக்கு
ஏலக்காய் –2
முந்திரிப் பருப்பு –5
நெய் –அரைக் கரண்டி
துவரம் பருப்பு –2ஸ்பூன்
தேங்காய்த் துருவல் –2ஸ்பூன்
புழுங்கலரிசி ரவையை, மாவில்லாமல் சலித்துக்கொண்டு வெறும் வாணலியில் சிவக்க வறுத்து எடுத்துக்கொள்ளவும். துவரம்பருப்பைச் சிறிது நீரில் ஊறவைக்கவும். அரை மணி கழித்து முக்கால் ஆழாக்கு ஜலத்தை கால் ஸ்பூன் உப்பும் போட்டுக் கரைத்து ரவையில் விட்டு நன்றாகப் பிசிறிக் கொள்ளவும். இட்லிப் பானையில் தட்டில் துணியைக் கட்டி அதன்மீது பிசிறி வைத்த ரவையைப் பரப்பி வைத்து ஊறவைத்த துவரம்பருப்பையும் போட்டு, மூடி, ஆவியில் வேகவைக்கவும். நடுநடுவில் திறந்து பார்த்து வேகவில்லையென்றால் ஒரு கை நீர் தெளித்து மறுபடியும் மூடி வேகவைக்கவும். நன்கு வெந்தவுடன் தாம்பாளத்தில் கொட்டிக் கையால் நன்கு உதிர்த்துக் கொள்ளவும்.
வெல்லத்தை, ஒரு கரண்டி ஜலத்தில் கரையவிட்டு, மண்ணில்லாமல் வடிக்கட்டவும். பிறகு அதை அடுப்பில் வைத்து ஏலக்காய், தேங்காய் சேர்த்து, நல்ல முற்றின பாகாய் வந்தவுடன் வெந்த ரவையைக் கொட்டி ஒரு தடவை நன்கு கிளறி நெய், வறுத்த முந்திரி இவற்றைச் சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கிவிடவும். அடுப்பிலிருந்து இறக்கியவுடன் சிறிது இளகினாற்போல்தான் இருக்கும். அரை மணிநேரம் அப்படியே வைத்திருந்தால் பாகு உள்ளே இழுத்துக் கொண்டு நன்றாக உதிரியாக வந்துவிடும். பச்சரிசி நொய்யில் கூட புட்டு செய்யலாம்.
- நான்கு கவிதைகள்
- வீண்
- மூன்று பேர்- 2 தொடர் நிலைச் செய்யுள்
- சின்ன திண்ணை அட்டவணை – செப்டம்பர் 2001
- சத்யஜித் ராய்– இன்று
- சினிசங்கம் – தமிழ் விவரணப்பட மற்றும் குறும்பட விழா
- திருவனந்தபுரம் இலக்கிய கூட்டம்
- புட்டு
- நொக்கல்
- பொருளாதாரத்தின் அலை வடிவம்: ஒரு கடிதம்
- நெடுநாட்கள் கழித்து திண்ணைக்கு எழுதிய கவிதைகள்
- அன்னையும் தந்தையும்
- சேவல் கூவிய நாட்கள் (குறுநாவல்)
- சக மனிதனுக்கு…
- டி.எஸ் எலியட்டும் உள்ளீடற்ற மனிதர்களும்…(4)
- மூன்று விகடகவிதைள்
- மூன்று கனேடியக் கவிதைகள் (கோடைப்பல்லி, பனி உறைந்த ஆற்றின் மீது நடத்தல், முதல்)
- சம்மதம்
- பொருளாதாரத்தின் அலை வடிவம்: ஒரு கடிதம்
- ‘பொியார் ? ‘- அ. மார்க்ஸ் என்ற நூல் குறித்த எனது கருத்து
- இந்த வாரம் இப்படி – செப்டம்பர் 1 , 2001 (மூப்பனார், டர்பனில் மாநாடு,அகதிகள்,தெஹல்கா, திருத்தங்கள்)
- நடுத்தர வர்க்கம்
- மெளனமாய் ஒரு மரணம்.