பிரபஞ்சத்தின் இயக்கம்

This entry is part [part not set] of 47 in the series 20110430_Issue

வளத்தூர் தி. ராஜேஷ் .


நினைவுகள் நினைக்கப்படும்
தொகுப்புகளாக உறைந்து
உறங்கி கொண்டிருக்கிறது .

எதை முன்னிலைப்படுத்துவது
என்பதன் தீர்மானம் எடுக்கும் முடிவு
சூழ்நிலைகளும் சிந்தனையுமே
தீர்மானிக்கிறது .

மூன்று காலங்களின்
கோர்வைகளாக கற்பனையின்
அகழியில் வீழ்ந்து கிடக்கிறது
நினைவுகள் .

இழப்புகளின் நினைவுகள்
இருப்புகளாகவே பதிவு
செய்து விடுகிறது .

தொடரும் ஏக்கங்கள்
தனிமையின் நினைவாக
உருவாக்கப்படுகிறது .

நேசங்களின் நினைவுகள்
மனதின் வலிகளை
குறைக்கிறது .

தொடர்ந்து வரும் இன்பங்கள்
நீடிக்கவே நினைவுகள்
விரும்புகிறது .

மாற்றமாகி விடுகிறது
நிகழ் கால நினைவுகள்
கடந்த கால நினைவுகள்
சாட்சியாகி மட்டுமே
உறுத்துகிறது
வரும் கால நினைவுகள்
கனவுகளாகவே
பார்க்கபடுகிறது .

அனைத்து நினைவுகளும்
என் உயிர்
பிரபஞ்சத்தின் இயக்கத்திற்கு
அருகிலே பயணிக்கிறது .

வளத்தூர் தி. ராஜேஷ் .

Series Navigation

வளத்தூர் தி .ராஜேஷ்

வளத்தூர் தி .ராஜேஷ்