நிறமற்ற ஒரு சுவர்

This entry is part [part not set] of 59 in the series 20031106_Issue

பா. சத்தியமோகன்.


சிரிக்கும் நண்பர்கள் நடுவே
நண்ப உன் சோகம் அறிவேன்
குளிரூட்டிய ரயில் பெட்டி கண்ணாடி சன்னல் வழியே
கடந்து போகும் இருள் மரங்கள்
உனக்கு பயமூட்டுகின்றன
சடலமான தந்தை நினைவு மற்றும் அவரது
கருப்பு கம்பளி போன்ற புருவங்கள்
இருளில் ஆடுகினறன் தனிக் காற்றில்
அப்பா அப்பா என நீ மருகுவது
ஓடும் புகை வண்டியில் சுற்றி வருகின்றன
எதைச் சுமக்கிறோமோ அது ரயிலின் கணத்தை விட அதிகம்
பிறப்பு – வளர்ச்சி -மூப்பு – இறப்பு
யாவையும் இயல்பு எனும் போதிப்பைக் கூறி விட்டு
விடை பெறுவேன் நண்ப
கழிவறையில் சென்று அழ வேண்டும் நான்
தேவைப்படுவதெல்லாம்
எது அப்பாவை கரைக்குமோ அக்கண்ணீர்த்துளி

pa_sathiyamohan@yahoo.co.in

Series Navigation

பா. சத்தியமோகன்

பா. சத்தியமோகன்