மகாவிஸ்ணு
–
mani@techopt.com
தொலைக்காட்சிகளின் ஆரம்ப காலங்கள் அவைகள். இராமாயணமும், கிரிக்கெட்டும் தான் தொலைக்காட்சிகள் பெருகி, ஆடம்பர, ஆரம்ப நிலையிலிருந்த தொலைக்காட்சியை பெரும் சந்தைகளுக்கு (mass market )முன்னேற முக்கிய காரணமாய் இருந்தன, என்பதில் இருவேறு கருத்துக்கள் இருக்க முடியாது. இது இந்தியாவிற்கு மட்டும் உரித்தானது அல்ல.
மேலாண்மை தத்துவத்தின் படி, ஒரு பரப்பின் விளையாட்டு நிகழ்வோ, பெரும் கேளிக்கை நிகழ்வோ அந்தப் பரப்பின் வாங்கும் தன்மையை (buying pattern) பெருமளவு பாதிக்கிற குணத்தை உட்கொண்டிருக்கிறது.அவ்வாறான மாற்றத்தில் உங்களது நிறுவனம் ’அடிக்கிற காற்றில் எவ்வளவு அள்ளிக் கொள்ள முடியுமோ’ அவ்வளவு அள்ளிக் கொள்ளலாம். அது உங்கள் சமர்த்து.
இந்திய தொலைக்காட்சி விற்பனையில் 30%க்கு மேலே தனது ஆதிக்கத்தை செலுத்திக்கொண்டிருக்கும் ஒரு தனியார் தொலைக்காட்சி பெட்டி தயாரிக்கும் நிறுவனத்தில் மேலாண்மை குழுவிடம் பேசிக்கொண்டிருக்கும்போது, மேலே சொன்ன கருத்து இன்றைய கால கட்டத்திலும் மாறவில்லை என தெரிகிறது.
”கிரிக்கெட் உலக கோப்பை இந்தியாவிற்கு வருதோ இல்லையோ நம்ம கல்லா பெட்டில காசு பாருப்பா “
’ ஏதாவது செய். எதுவேணாலும் செய்.. விற்பனை உயர்த்து மவனே’
என்கிற கார்ப்பரேட் உள் அறை கூவலோடு பல நிறுவனங்கள் இதற்காகவே கடந்து இரு வருடங்களுக்கு மேலாக மண்டையை பிய்த்து விற்பனை திட்டம் தீட்டிக் கொண்டிருந்திருக்கிறார்கள். நிறைய கருத்துக் கணிப்பு, சந்தை ஆராய்ச்சி. பிரேசில், இத்தாலியின் புட்பால் விளையாட்டிற்கு பயன்படுத்தப்பட்ட சந்தை சூத்திரங்களை (market strategy) மீள் ஆய்வு செய்து இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஸ் சந்தைக்காக சில உல்டா செய்து நமது சந்தைக்கேற்ப மாறுதலுக்குட்படுத்தியிருக்கிறார்கள்.
அந்த ஆராய்ச்சியில் ஓன்று – கிரிக்கெட் பார்க்கும்போது பார்வையாளரின் பழக்க வழக்கங்களை, உப செயல்களை, உற்று நோக்கல். வீட்டில் உட்கார்ந்து பார்ப்பது, அலுவலக்த்தில் இணைய வழி பார்ப்பது, பயண நேரத்தில் ஸ்கோர் கேட்பது, அடுத்த நாள் மறுபடியும் பார்த்த மேட்சை பற்றிய பத்திகளை மறுபடி மேய்ந்து அசை போடுவது – இப்படி நிறைய விசயங்கள் விவாதிக்கப்படுகிறது.
அந்த ஆய்வு கொடுக்கிற முடிவுகளை சார்ந்து நிறைய விளம்பரங்களையும், துணை சந்தை நடவடிக்கைகளையும் ( sub market activity) மற்ற நிறுவனத்தோடு சில ஓப்பந்தங்களையும், நிறைய பரிசுப் போட்டிகளையும் அறிவித்திருக்கின்றனர் அந்த தொலைக்காட்சி பெட்டி தயாரிப்பாளர்கள்.
அப்படி செய்வதில் எல்லா துணை நடவடிக்கைகளோடும் தொலைக்காட்சி பெயரும் இணைவதில் ”பிராண்ட் ரீகால் “ அதிகமாகி, அதனால் தங்களது
தொலைக்காட்சி அதிகமாக வாங்கப்படும் என்பது விற்பனை திட்டம்.
தொலைக்காட்சி நிறுவனத்திற்கும் வெண்ணெய், சிப்ஸ், படுக்கை நிறுவனத்திற்கும் என்ன இழவு சம்பந்தம் இருக்க முடியும். ? ஆனால் இருக்கிறது என்கின்றன ஆய்வுகள்.
எல்லா மூலை முடுக்குகளையும் அலசி ஆராய்ந்த மேலாண்மை மேதாவிகள் ஒரு சின்ன குழுவை மட்டும் மெல்லிதாய் மறந்து விட்டார்கள். அதை சொன்னவுடன் அதிசியத்தார் அந்த நிறுவனர். ஆனால் கார்ப்பரேட்கள் வாங்கும் திறன் உள்ள வாடிக்கையாளனை மட்டும்தான் மனிதர்களாக கணக்கில் எடுத்துக் கொள்ளும். மற்றவர்கள் எல்லாரும் வெறும்
எண்ணிக்கை தான். அந்த குழு அவர்களின் தொலைக்காட்சி விற்பனையை எந்த விதத்திலும் பாதிக்காது என்பதால் அதைப்பற்றி அவ்வளவாய் கணக்கில் எடுத்து கொள்ள வேண்டாம் என்றும் சமாதானம் கூறிக் கொண்டார்.
அந்த குழு – தெருவில் நின்று ஓசியில் டீவி பார்க்கும் குழு. (தெ.நி.ஓ.டீ)
இப்போதும் கிரிக்கெட் பார்வையாளனாய் எனக்கு பிடித்தது அந்த குழு தான். அதன் அங்கத்தினன் நான் என்பதில் மகிழ்ச்சி தான். சிலருக்கு – தோடி ராகம், பில்டர் காப்பி, வடா பாவு, அதரங் சாயி, பையா ஜிலேபி. அதுபோல தெருவில் நின்று டீவி பார்ப்பது.
*
ஒரு நாள் முழுக்க ஓசி டீவி பார்க்க கல்யாணி மாமி வீட்டில் முடியாது. மகேஸ் அண்ணா இருந்தால் அவன் மாமியை ஏதோ பேசிப் பேசியே டீவி போட வைத்து விடுவான். மாமா வருவதற்குள் வீட்டிற்கு போய் விட வேண்டும். ஓண்டே மேட்சு அதற்குள் முடிந்து விடும்.
முரளி அண்ணன் வீட்டிலும் உள்ளே விடமாட்டார்கள். சன்னல் வழியாக நின்று தான் பார்க்க முடியும். அதுவும் முரளி அண்ணா இருந்து, அவரும் பார்த்தால் தான். உண்டு. அவரும் கல்லூரி அது, இதுவென்று போனால் அம்போதான்.
சண்முக நாதன் தாத்தா மூடு இருந்தால் தான் பார்ப்பார். அவர் வந்து பார்ப்பதற்குள் ஸிரிகாந்த் நிறைய தடவை அவுட்டாகியிருப்பார். அவர் விளையாடுவதை விட கிரவுண்டிற்குள் நடந்து வருவதையும், அவுட்டானவுடன் முக குணஸ்டையோடு நடந்து வெளியே போவதையும் பார்க்க முடியாமல் போகலாம்.
செளராஸ்டிரா தெருவில் உள்ள இரண்டு நண்பர்கள் வீட்டிற்கு போகலாம். அங்கு கலர் டீவி. ஆனால் அவர்கள் இல்லாவிட்டால் வெளி வைத்தே பேசி அனுப்பி விடுவார்கள்.
கொஞ்சம் தூரம் என்றாலும் ஹரி அண்ணா கடை தான் பெஸ்ட். ’பக்கத்து வீட்டுக்காரர்கள் பொறமை’யடைக்கூடிய தொலைக்காட்சியின் மாவட்ட டீலர் அவன். கிரிக்கெட் என்றால் ஹரி அண்ணா கடையில் எப்போது கூட்டம் இருக்கும். ஆனால் என்னைப் பார்த்தால் துரத்துவான். ஏனோ நான் கிரிக்கெட் அவன் கடையில் வெளியில் நின்று பார்ப்பது அவனுக்கு பிடிக்கவில்லை. என்னை உள்ளே உட்கார வைத்து பார்ப்பதும் அவ்வளவு உசிதமல்ல. ஆகவே, அவன் கண்ணில் படாமல் கூட்டத்தோடு நின்று பார்க்க வேண்டும். அவன் துரத்தினாலும், பக்கத்து தெருவிலுள்ள இன்னொரு தொலைக்காட்சி கடையில் தஞ்சம் புகலாம். அங்குள்ள இன்னொரு கூட்டத்தோடு சேர்ந்து கொள்ளலாம். ஒரே கடையில் எப்போதும் போய் நிற்பது அவ்வளவு உசிதமானதல்ல. மேட்சு போகும் நிலமையை உத்தேசித்து அடிக்கடி கடையை மாற்றிக் கொண்டிருப்பது நல்லது. முடிந்தவரை கடைக்காரர் முகத்தில் நம் முகம் பதியாமல் பார்த்திருப்பது உகந்தது.
தெருவில் நின்று ஓசியில் டீவி (தெ.நி.ஒ.டீ) பார்க்கும் குழுவில் நிறைய வர்ணம், வர்க்கம், வயது எல்லாம் கலந்திருக்கும். புதிதாய் வந்து சேர்பவர்களுக்கு ஸ்கோர் சொல்வது ஒரு கர்ம ஞானம் போல நடக்கும். சில சந்தோசங்கள், கெட்ட வார்த்தைகள், அநுமானங்கள், மெல்லியதான எதிர்ப்பார்ப்பு, கடைசியில் ஏதாவது நடந்து எல்லாம் நல்லபடியாகும் என்கிற ஆறுதல் வார்த்தைகள், அறிவுத் தெளிப்பு, நாயக ஆராதனைகள் – எல்லாம் கூட்டுக் கலவையாய் ஈஸ்ட் மென் கலரில் மானுட மனதில் குறுக்கு வெட்டு
தோற்றம்.
இரண்டு உலக கோப்பைகள், நிறைய ஸார்ஸா மேட்சுகள், அப்படித்தான் பார்த்தது. தெருவில், கடை வெளியில் நின்று கொண்டே பார்த்தது. வலி மறந்து பார்த்த கணங்கள்.
ஹிரி அண்ணா கடையில் பைனல் மேட்சுகள் பார்க்கக் கூடாது. அது ராசியில்லை. ராவ் ஹோட்டலில் பைனல் எப்போதும் ராசி. டெஸ்ட் மேட்ச் என்றால் கண்டிப்பாய் தோற்காது. என்ன, சர்வர் குமார் எங்களை போல கொஞ்சம் வளர்ந்த குழந்தைகளுக்கு வடை கொடுத்துவிட்டு கொஞ்சம் தொடை எடுத்துப்பான். [ ‘என்னடா ராம சேச, ஓழிஞ்சு போறாண்டா.. கடைசி அஞ்சு ஓவர்ரா.. வெயிட் பண்றா. நீ போனா.. டீவியை ஆப் பண்ணிருவாண்டா.. மியாந் தத்து வேறா.. கம்மாநாட்டி.. அவுட்டாகல..
ப்ளிஸ்ரா. “ நாங்கள்லாம் அவனிடம் கெஞ்சுவோம் ].
நாயர் ஹோட்டலில் அவனால் எந்த தொந்திரவு இல்லையென்றாலும் சாக்கடை நாத்தம் குடலை புடுங்கும். அது ஒன்றும் பெரிய விசயமில்லை. நல்ல ஜெயிக்க வேண்டிய மேட்சுகளெல்லாம் நாயரின் இரண்டாவது பெண்டாட்டி போல கை கழுவி போகும். இந்தியாவின் வெற்றியை முன்னிட்டு அவன் கடைப் பக்கமே போவதில்லை. பாகிஸ்தான், இங்கிலாந்து மேட்சுகளை மட்டும் அவன் கடையில் பார்ப்பதுண்டு. பெரும்பாலும் அந்த மேட்சுகளில் பாகிஸ்தான் தோற்றுப் போவதுண்டு.
பெங்களூர் டெஸ்ட் மேட்சு. ஆடுதளம் கண்ட மேனிக்கு ஆடுகிறது. பாட்டி ஸ்பின் போட்டால் கூட விக்கெட் விழும் போல. ஐந்து நாள் மேட்சு மூணரை நாளில் முடிந்து விடும் போலயிருந்து. ஆனால் பள்ளியில் தேர்வு. இரண்டு மணிக்கு மணி அடித்து கேள்வித் தாள்கள் கொடுக்கப்பட்டன. வாங்கியபின் ஓன்னுக்கு போக அநுமதி கேட்டு சுவர் ஏறி கூதித்து கேபியார் கடையில் ஸ்கோர் கேட்க போவதற்குள் சிவலால் யாதவ் பிரமாதமாய் ஆப் ஸ்பின்னில் கலக்கிக் கொண்டிருந்தார். இந்தியா ஜெயிப்பதற்கான எல்லா நட்சத்திரங்களும் மின்னிட்டன. அதற்குள் பாதர் ஜெபமாணிக்கம் பார்த்து,என் காதை பிடித்து திருகி பளார் என்று அறை விட்டதை அங்கு நின்ற கூட்டம் கண்டு கொள்ளவேயில்லை. ஆனால் இந்தியா எப்படியோ
தோற்றுபோனது. வலித்தது. நான் பார்த்திருந்தால் அன்று இந்தியா கண்டிப்பாய் ஜெயித்திருக்கும்.
நிறைய முக்கியமான மேட்சுகளை கால் வலிக்க தெருவில் நின்று கொண்டு ஏதாவது ஒரு ஓசி டீவியில் பார்த்தது எனது மகிழ்ச்சிகாக மட்டுமல்ல. இந்தியாவின் வெற்றிக்காகவும் தான். வான்கேடே ஸ்டேடியத்தையும், பாந்திரா விளையாட்டரங்கையும் ஓவ்வொரு முறையும் மின்சார வண்டி கடக்கிற கணங்களில் எழுந்து நின்று பார்க்க தூண்டும் என் உள்ளே ஏதோ ஓன்று. இந்த முறை இந்தியா பைனல் வந்தால் என் அலுவலகத்திற்கு பின்னே உள்ள ஒரு கடையை பார்த்து வைத்திருக்கிறேன்.
பார்க்கலாம். என்னவாகிறதென்று
—
Mani kr
- வளத்தூர் தி .ராஜேஷ் கவிதைகள்
- ஒரு பறவையின் பயணம் பாவண்ணனின் ”ஒட்டகம் கேட்ட இசை”
- இவர்களது எழுத்துமுறை – 30 பிரபஞ்சன்
- பேட்டி : சுப்ரபாரதிமணியனுடன் பாலு சத்யா
- ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி – (1)
- இளங்குருத்தினைக் காக்க உதவுங்கள்…
- திரு மலர்மன்னன் அவர்களுக்கு
- கம்பன் கழகத்தின் இந்த ஆண்டின் விழா 2011
- பூஜ்ஜியத்தின் கால்வாசி!
- அப்பாபோல
- வரிசையின் முகம்
- இதய ஒலி.
- பூர்வீகக் கண்டங்களின் புலப்பெயர்ச்சி (Supercontinent Split & Drift)
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) உடல் இச்சையைக் கட்டுப்படுத்தல் (கவிதை -30 பாகம் -8)
- மனசாட்சி விற்பனைக்கு
- இனி உங்களைத் தூங்க வைக்க முடியாது
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)மானிடத் தெய்வீகம் (கவிதை -42 பாகம் -1)
- கடன்
- ஒரு ஊரையே
- போர்ப் பட்டாளங்கள்
- நீ அறியும் பூவே
- பிரியம் சுமக்கும் சொற்களால்…..
- ‘இவை… நமக்கான வார்த்தைகள்…!’
- ஐந்து குறுங்கவிதைகள்
- கபீரின் கனவும் நாம் கட்டமைத்த இந்தியாவும்
- வலை (2000) – 2
- தோட்டத்துப்பச்சிலை
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (மூன்றாம் காட்சி) அங்கம் -3 பாகம் -2
- முன்னேற்பாடுகள்
- பெண் – குழந்தை … குமரி … அம்மா
- விஸ்வரூபம் அத்தியாயம் எழுபது
- இரவின்மடியில்
- தாமிரபரணித் தண்ணீர்
- கூடா நட்பினால் விளைவது கேடே
- ஊழிற் பெருவலி யாதுள ?
- நின்று கொண்டே கிரிக்கெட் பார்த்தல் :
- வலை (2000) – 1
- சரஸ்வதி சகாப்தத்தின் நாயகர்.
- (3) – தலித்துகளும் தமிழ் இலக்கியமும்
- தியான மோனம்
- ஆரம்பம்
- இயல்பில் இருத்தல்
- ப.மதியழகன் கவிதைகள்
- நரம்பறுந்த நிலம்..
- தண்ணீர்க் காட்டில் - 1
- நீ, நான் மற்றும் அவன்
- ஒரு கணக்கெடுப்பு
- முடிவற்ற பயணம் …