திப்பு சுல்தானும், திரிபுவாதிகளும், அண்டப் புளுகர்களும் – II

This entry is part [part not set] of 41 in the series 20080221_Issue

கார்கில் ஜெய்


முன்குறிப்பு: போன கட்டுரையில் (சுட்டி 2) ‘ நோக்கம், விளக்கம், முடிவு’ என்று தனித்தனியாக எளிதாகவே தெரியும்படி எழுதியிருந்தேன். முதல் கேள்வியே ‘திப்புவை போற்ற வேண்டிய கட்டுரையில் பாரதியையும், சைவர்களையும் சம்பந்தா சம்பந்தமில்லாமல் தூற்றவேண்டிய அவசியம் என்ன?’ என்பதுதான். அவ்வளவு தெளிவாக எழுதிய பின்னும், அதற்கு பதில் சொல்லாமல் இணையாக அதே போன்ற கட்டுரையை எழுதியிருக்கிறார். நான் எழுதிய முதல் கட்டுரையே (சுட்டி 2) இப்னு பஷீரின் இரண்டாவது கட்டுரைக்கும் போதுமான பதிலாகும். என் சங்கநாதம் சிறிதேனும் அவர் காதில் கேட்டிருந்தால், அவர் சொன்னதையே திருப்பி சொல்லி, நான் ‘உள்நோக்கம்’ என்று எதையெல்லாம் சொன்னேனோ அதையே மீண்டும் செய்து அதிகமாக எழுதியிருக்க மாட்டார்.
சுட்டி 1: http://www.thinnai.com/?module=displaystory&story_id=20801318&format=html ( இப்னு பஷீரின் முதல் கட்டுரை)
சுட்டி 2: http://www.thinnai.com/?module=displaystory&story_id=80802072&format=html ( என் எதிர் வினை கட்டுரை)
சுட்டி 3: http://www.thinnai.com/?module=displaystory&story_id=80802141&format=html ( இப்னு பஷீரின் இரண்டாவது கட்டுரை)

(சுட்டி 1, பத்தி 5) இப்னு பஷீரின் முதல் கட்டுரை : //”திப்புவை போரில் வெல்ல முடியாது என்பதை புரிந்து கொண்ட ஆங்கிலேயர்கள், அவரது நம்பிக்கைக்கு பாத்திரமாக இருந்த அமைச்சர்கள் பூர்ணய்யா, மீர்சதக் ஆகியோரை ‘விலைக்கு வாங்கி’, அவர்களின் நம்பிக்கைத் துரோகத்தைக் கொண்டேதான் திப்புவை வென்றார்கள்.”//
சுட்டி 2: இல் இவ்வாறு எந்த ஆசிரியரும் எழுதவில்லை, வரலாற்று ஆசிரியர்களையும், ஏன் பெங்களூரு அரசு சுற்றுலா வழிகாட்டியையும் கூட விசாரித்தேன் – என்று சொல்லியிருந்தேன். இப்னு பஷீர் சொன்னது பொய் இல்லை என்றால், எந்த வரலாற்று ஆசிரியர் அவ்வாறு கூறினார் என்று துல்லியமாக சுட்டியிருக்க வேண்டும். ஆனால் அவர் இரண்டாவது கட்டுரையில் சொல்லும் வரலாற்று ஆசிரியரின் ஒரே சுட்டி:
சுட்டி3 கடைசி பத்தி //’ திப்புவுக்கு எதிரான முதல் மூன்று போர்களில் ஆங்கியேரின் துப்பாக்கி சாதிக்காததை நான்காவது போரில் அவர்களின் பொன்னும் பொருளும் சாதித்தது. திப்புவின் அமைச்சர்கள் அவருக்கு துரோகம் இழைத்தனர். சரணடைய மறுத்த திப்பு வீரத்துடன் போரிட்டு மடிந்தார்’ என்று History of the Freedom Movement in India, (revised edn., Delhi, 1965, I, pp.226-27) என்ற நூலில் நூலாசிரியர் தாராசந்த் எழுதுகிறார் //
ஆனால் இதில் பூர்ணய்யாவின் பெயரே இல்லை!!!. ‘அமைச்சர்கள்’ – என்பதற்கு பதிலாக ‘எல்லா அமைச்சர்களும்’ என்று தாராசந்த் எழுதியிருந்தால் அதில் பூர்ணய்யாவும் அடக்கம் என கொள்ளலாம். அல்லது பூர்ணய்யா மட்டும்தான் ஒரே அமைச்சர் என்றால் தாராசந்த் ‘அமைச்சர்கள்’ என்று பன்மையில் எழுதியிருக்க முடியாது. க தாராசந்த் பூர்ணய்யாவைத்தான் குறிப்பிட்டார் என்பதற்கு சற்று வாய்ப்பிருக்கிற்தே தவிர ஆதாரம் இல்லை.
இரு சுட்டிகளையும்(1,3) ஒப்பிட்டு பார்த்தால் இப்னு பஷீரே ‘பூர்ணய்யா,மீர்சதக்’ என இடைச்செருகல் செய்து இருப்பது தெரியவரும். மேலும் அவரே ஒப்புக்கொள்கிறார் :
சுட்டி 3 கடைசி பத்திகள் //திப்பு சுல்தானுக்கு மிர்சதக் செய்த துரோகம் வரலாற்றில் குறிக்கப் பட்ட அளவிற்கு பூர்ணய்யாவின் துரோகம் குறிக்கப் படவில்லை……..//
இதையேதான் நான் முந்தைய கட்டுரையிலும் கேட்டேன், ‘ஏன் ஆதாரமில்லாமல் பூர்ணய்யா மீது பழி சொல்கிறீர்கள்?’ என்று.

சரி அவர் பூர்ணய்யா பற்றி ஒட்டு மொத்தமாக என்ன இந்த கட்டுரையில்(சுட்டி 3) என்ன சொல்லியிருக்கிறார் என்று பார்ப்போம்:
சுட்டி 3 கடைசி பத்திகள் //திப்பு சுல்தானுக்கு மிர்சதக் செய்த துரோகம் வரலாற்றில் குறிக்கப் பட்ட அளவிற்கு பூர்ணய்யாவின் துரோகம் குறிக்கப் படவில்லை. ஆனால் அவருக்கு இவர் சளைத்தவர் அல்ல. இவர்கள் இருவருமே ஆங்கிலேயருடன் இரகசியத் தொடர்பு வைத்திருந்து, திப்புவின் மரணத்திற்கும் அவரது சாம்ராஜ்யம் வீழ்வதற்கு முக்கிய காரணமாக இருந்தார்கள். திப்பு இறந்தச் செய்தி கேட்ட தருணத்திலேயே, பிரிட்டிஷார் பூர்ணய்யாவை சரணடையச் சொன்னபோது ‘காசியிலிருந்து ராமேஸ்வரம் வரை எங்கள் இனத்தை பாதுகாத்து வரும் உங்களிடம் சரணடைய எனக்கென்ன தயக்கம்?’ என்று ஜெனரல் ஹாரிஸிடம் சொல்லிச் சரணடைந்தவர் பூர்ணய்யா. முதலில் ஹைதர் அலியிடமும் பின்னர் திப்பு சுல்தானிடமும் அவர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக இருந்து கணப் பொழுதில் தன் நிலையை மாற்றிக் கொண்டவரை துரோகி என்று சொல்லாமல் வேறு என்ன சொல்வது?
‘திப்புவுக்கு எதிரான முதல் மூன்று போர்களில் ஆங்கியேரின் துப்பாக்கி சாதிக்காததை நான்காவது போரில் அவர்களின் பொன்னும் பொருளும் சாதித்தது. திப்புவின் அமைச்சர்கள் அவருக்கு துரோகம் இழைத்தனர். சரணடைய மறுத்த திப்பு வீரத்துடன் போரிட்டு மடிந்தார்’ என்று History of the Freedom Movement in India, (revised edn., Delhi, 1965, I, pp.226-27) என்ற நூலில் நூலாசிரியர் தாராசந்த் எழுதுகிறார்.’திப்பு சுல்தானுக்கு துரோகம் இழைத்த பூர்ணய்யா ஒரு இந்து என்பதற்காக தான் வெட்கப்படுவதாக’ காந்தி ஒரு கட்டுரையில் எழுதியதும் இங்கு குறிப்பிடத் தக்கது. //
— இதில் அற்புதமாக உண்மையை திரித்து உள்ளார் இப்னு பஷீர். சாதாரணமாக படிக்கும் எந்த வாசகனுக்கும் ‘பூர்ணய்யாதான் காட்டி கொடுத்தான்’ என்றே தோன்றும். ஆனால் கூர்ந்து கவனித்தால் சில உண்மைகள் புலப்படுகின்றன :
1) முதல் பத்தியில் பூர்ணய்யா ங்கிலேயரிடம் சரணடைந்ததைத்தாகக் குறிப்புள்ளதே தவிர திப்புவை காட்டி கொடுத்தாக சொல்லப்படவேயில்லை.
2) முதல் பத்தியை எழுதியது எதாவது வரலாற்று ஆசிரியரா அல்லது இப்னு பஷீரே-வா என்றும் சொல்லப்படவில்லை.
3) தாரசந்த் எழுதியதாக குறிப்பிட்டதில் ‘திப்புவின் அமைச்சர்கள்’ என்று குறிப்பிடப்பட்டு உள்ளதே தவிர பூர்ணய்யாவின் பெயர் எங்கும் சொல்லப்படவில்லை. ( சரி, தாராசிங் தமிழிலா எழுதினார்? ஒர்வரி சுட்டியை ஆங்கிலத்தில் அடிபிழறாமல் எழுத வேண்டியதுதானே? )
4) காந்தி ‘ஒரு கட்டுரையில்’ எழுதியது எப்போது, எங்கு, ஏன் என்று தெரியவில்லை.
க பூர்ணய்யா காட்டி கொடுத்ததாக இப்னு பஷீர் தவிர எந்த வரலாற்று ஆசிரியரும் சொல்லவில்லை. இதையேதான் நானும் என் கட்டுரையில் சொல்லியிருந்தேன். மேலும், எப்படி காட்டி கொடுத்து கொன்றவனும், சரணடைந்தவனும் சமானமான துரோகத்தை செய்தவர்கள் ஆவர்? காட்டி கொடுத்து கொன்றவன் முகமதியன், சரணடைந்தவன் பார்ப்பனன் என்பதாலா?
இருந்தாலும் காந்திஜி பூர்ணய்யாவின் பெயரை ‘ஒரு கட்டுரையில்’ சொல்லி இருப்பதால் காந்தி கதைக்கு வருவோம்: எப்போதுமே மகாத்மா இந்துக்கள் செய்யாத தவறுகளுக்காக மன்னிப்பு கேட்கும் வழக்கத்தை கடைபிடித்தார்: ( வரலாறு தெரியாதவர்கள் கூக்ளிட்டு தெரிந்து கொள்ளவும். ஆதாரத்துடன்தான் எழுதுகிறேன் )
1) ஆயிரக்கணக்கான அப்பாவி ஹிந்துக்களை ஜாலியன் வாலா பாக்-கில் சுட்டுக்கொன்ற ஜெனரல் டயரை தேசபக்தர் உதம் சிங் கொன்றார். மகாத்மா காந்தி ‘வெறியன் உதம் சிங் செய்த படுகொலைக்காக’ ஆங்கிலேயரிடம் மன்னிப்பு கேட்பதாக தெரிவித்தார்.
2) தேசபக்தர் பகத் சிங் – கிற்கு தண்டனை கொடுக்க பட வேண்டும் என்றும் பகத் சிங் செய்த வெறிச்செயலுக்கு ஆங்கிலேய அரசிடம் மன்னிப்பு கேட்பதாகவும் அண்ணல் காந்தியடிகள் தெரிவித்தார். *(பி.கு)
3) முஸ்லீம்கள் ஹிந்துக்களை கொன்றாலும் ‘அது முஸ்லீம்களின் ஜிகாத் முறை, அதற்காக ‘அன்பே சிவமான’ ஹிந்துக்களும் தற்காப்புக்காக திருப்பி தாக்கலாமா?’ என்றும் பாபுஜி மன்னிப்பு கேட்டார். (இப்பொழுதுவது புரிகிறதா அன்பே சிவத்துக்கு அர்த்தம்)
4) ‘முஸ்லீம்கள் ஹிந்துக்களை கொன்றனர், கற்பழித்தனர் என்பதற்காக ஹிந்துக்களும் தப்பித்து ஒடி வந்தீர்களா? அங்கேயே இருந்து, திரும்பியும் தாக்காமல், இஸ்லாமிய சகோதர்களிடம் அஹிம்சை போராட்டம் நடத்த வேண்டியது தானே?’ என்றும் மகாத்மா வெட்கப்பட்டார்.
இதற்கெல்லாமே மன்னிப்பு கேட்ட காந்தி பூர்ணய்யாவுக்காக மன்னிப்பு கேட்டது ஒன்றும் ஆச்சரியமில்லைதானே?. **(பி.கு)
சுட்டி 3 பத்தி 2//மேலும் சுல்தான் இந்து முஸ்லிம் ஒற்றுமையின் உருவாக்கம்’ எனவும் காந்தி ‘யங் இந்தியா’வில் எழுதினார். விக்கிரக ஆராதனையாளர்களை தரைமட்டமாக்கி அழித்த, எட்டாயிரம் ஆண்கள், பெண்கள் ஆகியோரை சிறைப்படுத்திய, காபிர்களில் ஆண்கள் சிறுவர்கள் என பேதமில்லாமல் அனைவர் கழுத்துக்களுக்கும் தலையை சுமக்கும் பாரம் இல்லாமலாக்கிய ஒருவரைப் பற்றி காந்தி ஏன் இப்படி எதிர்மறையான கருத்தைச் சொல்ல வேண்டும்? //
இப்னு ப்ஷீர் கேட்ட இந்த கேள்விக்கு பதில் முந்தைய நான்கு புள்ளிகளிலும் இருக்கின்றன. ஏன் தேசபக்தர்களை பார்த்து மகாத்மா காந்திஜி வெட்கப்பட்டு மன்னிப்பு எதிர்மறையாக சொல்லவேண்டும்? அது மாதிரிதான் இதுவும்; அதாவது appeasing muslims and fooling hindus.
மேலும் திப்பு சுல்தான் கோவில்களுக்கு உதவியது ஆட்சியின் கடைசி காலத்தில்தான்; அப்போதுதான் சங்கராச்சாரியரிடம் கடிதப்போக்குவரத்து நடந்துள்ளது; கடிதங்களின் தேதிகளை பார்க்கவும். அதற்கு முன்னால் சுல்தான் ‘இடி’ அமீன் தான்.
சுட்டி 3 //’பாண்டிய மன்னன் சமண விரோதியாகி, பாண்டிய நாட்டிலுள்ள சமணர்களை வெட்டி வீழ்த்தி, அவர்கள் சொத்து, சுதந்திரம், கோயில், குளம், மடம் முதலியவைகளைக் கைப்பற்றும்படி தன் சைன்யங்களை ஏவியதோடு, தன் முன்னிலையிலேயே அநேக ஆயிரக்கணக்கான சமண முனிவர்களை வலியப் பிடித்து கழுமரத்திலேற்றி பதைக்கப் பதைக்கக் கொன்றான்.’
-அ.பொன்னம்பலம், அப்பரும் சம்பந்தரும், சென்னை, 1983, Page 28
திப்புசுல்தான் பற்றிய ஆதாரமற்ற ஒரு குற்றச்சாட்டை தனது கட்டுரையில் குறிப்பிட்ட பாரதி, மேற்கண்ட கொடுங்கோலனாகிய பாண்டிய மன்னனைப் பற்றியும் தனது கட்டுரைகளில் பிரஸ்தாபித்திருந்தாரென்றால் அவர் பொதுவாகவே அனைத்து மன்னர்கள் மேலும் ஆத்திரம் கொண்டவர் என்றும் அவரது எழுத்தில் நேர்மையும் யதார்த்தமும் இருக்கிறது என ஒப்புக் கொள்வதில் யாருக்கும் ஆட்சேபணை இருக்கப் போவதில்லை//
அதாவது பாரதியார் வேறு யாராவது ஆசிரியர் எழுதியதை படித்து சமண துறவிகளை கொன்ற பாண்டிய மன்னனை பற்றி எழுதி இருந்தாரென்றால் அது சரி(சுட்டி 3); ஆனால் ‘கிர்க்பாட்ரிக்’, ‘வில்க்ஸ்’ கிய வரலாற்று ஆசிரியர்களை படித்து திப்பு சுல்தான் பற்றி எழுதினால் அது குற்றம் (சுட்டி 1); ஆனாலும் இப்னு பஷீர் பொன்னம்பலத்தை படித்து எழுதினால் அது சரியே(சுட்டி 3). இப்போது அதே வியூகத்தில் சுட்டி -1 ஐயும், சுட்டி-3 ஐயும் இணைத்தால் ஒரு புதிய கோட்பாடு உருவாகிறது : ‘பாரதியார் ஒருவேளை பாண்டிய மன்னனை பற்றி எழுதி இருந்தாரென்றால், அவர் நேர்மையானவர் என ஒப்புக்(காக)கொள்ளலாம், இருந்தாலும் பாரதியார் திப்புவை பற்றி ‘கிர்க்பாட்ரிக்’, ‘வில்க்ஸ்’ கிய வரலாற்று சிரியர்களை படித்து எழுதியது தவறுதான்; ஏனென்றால் அதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை’.
–இதையேதான் நான் என் கட்டுரையில் ஆரம்பம் முதல் கடைசிவரை எழுதியிருக்கிறேன். ஏன் சம்பந்தமில்லாத விஷயங்களை சேர்த்து இப்னு பஷீர் எழுதுகிறார்? ஏன் இந்த கேள்விக்கு பதில் சொல்லவில்லை?
பாரதியார் ஏன் பாண்டிய மன்னனை பற்றி எழுதவில்லை? – என்று இவர் கேட்பதுவும் சம்பந்தமில்லாததே. பாரதியின் கண் முன்னே ஒரு நிகழ்ச்சி நடந்து அவர் கண்டுகொள்ளாமல் இருந்திருந்தால் அவரை சாடலாம். ஆனால் பாரதியார் இதைத்தான் எழுதவேண்டும் என வரையறுக்கவோ, நடக்காத ஒன்றை ***(பி.கு) ஏன் இதை எழுதவில்லை என்று கேட்கவோ யாருக்கும் உரிமையில்லை. இதுபோன்ற நியமங்களுக்கும், வரையறைகளுக்கும் பாரதியார் உட்பட்டிருந்தாரெனில் அவர் சுப்ரமணியனாகவே இறந்திருப்பார். மகாகவியாக இப்பொழுதும் வாழ்ந்துகொண்டிருக்க மாட்டார்.
பாரதியார் பாண்டிய மன்னனை பற்றி எழுதவில்லையாதலால், அவர் எழுத்தில் நேர்மை, யதார்த்தம் இல்லை – என தர்க்கம் செய்யும் இப்னு பஷீர், பல முகமதிய மன்னர்களின் கொடூரங்களை எழுதலாமே? எழுதுவாரா? அல்லது அவரது தர்க்கப்படியே தன் எழுத்தில் நேர்மை, யதார்த்தம் இல்லை என ஒப்புக்கொள்வாரா? அவரே பதில் சொன்னால் பெருமகிழ்ச்சி அடைவேன்.
சுட்டி -1 கடைசியில் இப்னு பஷீரே சொன்னது : //வரலாற்று சம்பவங்களைப் பற்றி எழுதுபவர்களுக்கு இருக்க வேண்டிய மிக அடிப்படையான தகுதி எழுத்து நேர்மை! தான் எழுதிய வார்த்தைகளைப் பற்றி விளக்கம் கேட்கப்பட்டால் அதற்கான ஆதாரங்களைக் காட்டி விளக்க வேண்டிய கடமை அந்த எழுத்தாளர்களுக்கு இருக்கிறது. அவர் எழுதியது தவறு என்று நிரூபிக்கப் பட்டால் அதை மனப்பூர்வமாக ஒப்புக் கொண்டு திருத்திக் கொள்ளும் மனப்பக்குவமும் அவர்களிடம் இருக்க வேண்டும். இதெல்லாம் இல்லாதவர்கள் வரலாற்று குறிப்புகளை எழுதுவதை விடுத்து வேறு ஏதாவது செய்யலாம். //

அவர் வைத்த ஒவ்வொரு வாதத்துக்கும் மிகத்தெளிவாகவே ஒன்றுக்கு மேற்பட்ட பதில்களை அளித்து இருக்கிறேன். என் கேள்விகளுக்கு அவரால் இரண்டாவது கட்டுரையில் எந்த நேரடியான பதிலும் சொல்ல இயலவில்லை. (அதற்கு பதிலாக பாரதியார் நேர்மையானவர் இல்லை என்று மட்டும் தர்க்கம் செய்து இருக்கிறார்). இப்னு பஷீரே ஆதாரங்களை காட்ட வேண்டிய தன் கடமையில் தவறியுள்ளார். இனி அவர் சொன்னது போலவே ‘ வரலாற்று குறிப்புகளை எழுதுவதை விடுத்து வேறு ஏதாவது’ செய்வாரா? அல்லது குறைந்தபட்சம், பாரதியும், சுஜாதவும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரும் இவர், பாரதியை ‘ஆங்கிலேயருடன் கைக்கோர்த்து ஓரணியில் நிற்கிறார்’ என்றும் ‘நேர்மையில்லாதவர்’ என்றும் சொன்னதற்காக, காக்கை எச்சமிட்டிருந்தாலும் கண்ணியம் குறையாத பாரதி சிலைக்கு முன் நின்று மன்னிப்புக்கேட்பாரா?
– கார்கில் ஜெய்

Series Navigation

கார்கில் ஜெய்

கார்கில் ஜெய்

திப்பு சுல்தானும் திரிபுவாதிகளும் – 2

This entry is part [part not set] of 30 in the series 20080214_Issue

இப்னு பஷீர்


காந்திஜி ‘யங் இந்தியா’ 23 ஜனவரி 1930 தேதியிட்ட இதழில் பக்கம் 31-ல் இப்படி எழுதுகிறார்;

‘மைசூரின் பதேஹ்அலி திப்பு சுல்தானைப் பற்றி வெளிநாட்டு வரலாற்றாளர்கள் மதவெறியர் என்றும் இந்து குடிமக்களை வலுக்கட்டாயமாக இஸ்லாம் மதத்திற்கு மாற்றினார் என்றும் எழுதுகிறார்கள். ஆனால் அவர் அப்படிப் பட்டவரல்ல. அதற்கு நேர்மாற்றமாக அவர் இந்துக்களுடன் நல்லிணக்கத்தை கடைப்பிடித்திருந்தார்.
சிருங்கேரி மடத்தின் சங்கராச்சாரியாருக்கு திப்பு எழுதிய 30-க்கும் மேற்பட்ட கடிதங்கள் மைசூர் அரசின் தொல்பொருள் ஆய்வு நிலையத்தில் இருக்கிறது. அவை கன்னட மொழியில் எழுதப் பட்டவை. அவற்றில் ஒரு கடிதத்தில் திப்பு சங்கராச்சாரியாரின் கடிதம் தன்னிடம் கிடைக்கப்பெற்றதை தெரியப் படுத்தி, அவரை தனக்காகவும், நாட்டு மக்களுக்காகவும், மற்றும் உலக அமைதிக்காகவும் ஒரு யாகம் நடத்தச் சொல்லி கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், நன்மக்கள் இருக்கும் இடத்தில்தான் மழை பெய்யும் என்பதைச் சொல்லி சிருங்கேரியிலிருந்த சங்கராச்சாரியாரை மைசூருக்கே திரும்ப வந்துவிடும்படியும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். அவரது இந்தக் கடிதம் இந்திய வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய ஒன்று.’

மேலும்சுல்தான் இந்து முஸ்லிம் ஒற்றுமையின் உருவாக்கம்’ னவும் காந்தி ‘யங் இந்தியா’வில் எழுதினார். விக்கிரக ஆராதனையாளர்களை தரைமட்டமாக்கி அழித்த, எட்டாயிரம் ஆண்கள், பெண்கள் ஆகியோரை சிறைப்படுத்திய, காபிர்களில் ஆண்கள் சிறுவர்கள் என பேதமில்லாமல் அனைவர் கழுத்துக்களுக்கும் தலையை சுமக்கும் பாரம் இல்லாமலாக்கிய ஒருவரைப் பற்றி காந்தி ஏன் இப்படி எதிர்மறையான கருத்தைச் சொல்ல வேண்டும்?

சாரதா கோவிலை மறுநிர்மாணம் செய்வதற்காக சிருங்கேரி மடத்திலிருந்து சங்கராச்சாரியார் திப்பு சுல்தானுக்கு கடிதம் எழுதினார். திப்பு சங்கராச்சாரியார் மீது மிகுந்த மதிப்பு கொண்டிருந்தார் என்பதற்கு ஆதாரங்களாக அவர் எழுதிய கடிதங்கள் இன்னும் இருக்கின்றன. டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் தனது ‘Present Cresis of Faiths’ என்ற நூலில் குறிப்பிட்டார், ‘திப்பு பல சந்தர்ப்பங்களில் சிருங்கேரி சங்கராச்சாரியாரிடம் நாட்டு நலனுக்காக பூசைகள் செய்யும்படி கேட்டுக் கொண்டுள்ளார். குறிப்பாக, ஒருமுறை சங்கராச்சாரியாரின் வழிகாட்டுதல்படி சஹஸ்ர சண்டி ஜபம் நடத்தப்பட்டபோது திப்பு மிகுந்த மகிழ்ச்சியை தெரிவித்தார்.’ கோழிக்கோட்டில் உள்ள இந்துக்கள் அனைவரையும் இஸ்லாத்திற்கு கொண்டு வந்தது போதாமல் கொச்சியில் உள்ளவர்களையும் இஸ்லாமை தழுவச் செய்வது தன்னுடைய ஜிகாத் என்று அறிவித்த ஒருவருக்கு இந்துக்களின் ஆன்மீகத் தலைவரான சங்கராச்சாரியார் ஏன் கடிதம் எழுதினார்? இஸ்லாமிய மத வெறியரான ஒருவர் நாட்டு நலனுக்காக இந்துமத முறைப்படி யாகங்கள் செய்யும்படி ஏன் சங்கராச்சாரியாரிடம் கேட்டுக் கொண்டார்?

‘இஸ்லாம் மதத்திற்கு மாறும்படி வற்புறுத்தியதால் 3000 பிராமணர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள்’ என்று வரலாற்று புத்தகத்தில் எழுதிய ஹரி பிரசாத் சாஸ்திரி அதற்கு ஆதாரமாக மைசூர் கெசட்டை காட்டினார். ஆனால் மைசூர் கெசட்டை ஆய்வு செய்து அதன் புதிய பதிப்பை எடிட் செய்த பேராசிரியர் ஸ்ரிகந்தையா, ‘3000 பிராமணர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மைசூர் கெசட்டில் எங்குமே குறிப்பிடப் படவில்லை. மைசூர் வரலாற்றை ஆய்வு செய்து வரும் ஒரு மாணவன் என்ற முறையில் நான் அடித்துச் சொல்வேன், இப்படி ஒரு சம்பவம் நடக்கவே இல்லை’ ன்கிறார். மைசூர் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் ஸ்ரிகந்தையாவின் கண்ணில் படாத ஒரு சம்பவம் கல்கத்தா பல்கலைக் கழக சம்ஸ்கிருத துறைத் தலைவரான ஹரி பிரசாத் சாஸ்திரி கண்ணில் எப்படி பட்டது?

இந்திய வரலாறு எந்த அளவிற்கு திரிக்கப்பட்டு சாயமேற்றப்பட்டு உருமாறிக் கிடக்கிறது என்பதற்கு இவை மிகச்சிறிய உதாரணங்கள். வரலாற்றுத் திரிபுகளுக்கு மத்தியில் உண்மையைத் தேடுவது வைக்கோல் போருக்குள் ஊசியை தேடுவதை விட சிரமமானதாகியிருக்கிறது. ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாகவும் பெரும் சவாலாகவும் இருந்தவர் திப்பு சுல்தான். ‘Haider Ali and Tipu Sultan were formidable adversaries who inflicted a severe defeat on the British and came near to breaking the power of the East India Company’ என The Discovery of India, (6th edn., London, 1956, pp.272-73) என்ற நூலில் குறிப்பிடுகிறார் ஜவஹர்லால் நேரு. முதலாம் மற்றும் இரண்டாம் மைசூர் போர்களில் கடும் தோல்வியைச் சந்தித்த ஆங்கிலேயர், திப்புவை நேருக்கு நேர் போரிட்டு வெல்ல முடியாது என்பதை புரிந்துக்கொண்டு அவர்களின் வழக்கமான ‘ஆயுதமான’ பிரித்தாளும் சூழ்ச்சியை பயன்படுத்தினர். அன்று அவர்கள் விதைத்த விதை இன்றும் விஷ விருட்சமாக வளர்ந்து நின்று இந்திய ஒருமைப்பாட்டிற்கு அச்சுறுத்தலாக விளங்குகிறது.

*************

‘பாண்டிய மன்னன் சமண விரோதியாகி, பாண்டிய நாட்டிலுள்ள சமணர்களை வெட்டி வீழ்த்தி, அவர்கள் சொத்து, சுதந்திரம், கோயில், குளம், மடம் முதலியவைகளைக் கைப்பற்றும்படி தன் சைன்யங்களை ஏவியதோடு, தன் முன்னிலையிலேயே அநேக ஆயிரக்கணக்கான சமண முனிவர்களை வலியப் பிடித்து கழுமரத்திலேற்றி பதைக்கப் பதைக்கக் கொன்றான்.’
-அ.பொன்னம்பலம், அப்பரும் சம்பந்தரும், சென்னை, 1983, Page 28

திப்புசுல்தான் பற்றிய ஆதாரமற்ற ஒரு குற்றச்சாட்டை தனது கட்டுரையில் குறிப்பிட்ட பாரதி, மேற்கண்ட கொடுங்கோலனாகிய பாண்டிய மன்னனைப் பற்றியும் தனது கட்டுரைகளில் பிரஸ்தாபித்திருந்தாரென்றால் அவர் பொதுவாகவே அனைத்து மன்னர்கள் மேலும் ஆத்திரம் கொண்டவர் என்றும் அவரது எழுத்தில் நேர்மையும் யதார்த்தமும் இருக்கிறது என ஒப்புக் கொள்வதில் யாருக்கும் ஆட்சேபணை இருக்கப் போவதில்லை.

***************
திப்பு சுல்தானுக்கு மிர்சதக் செய்த துரோகம் வரலாற்றில் குறிக்கப் பட்ட அளவிற்கு பூர்ணய்யாவின் துரோகம் குறிக்கப் படவில்லை. ஆனால் அவருக்கு இவர் சளைத்தவர் அல்ல. இவர்கள் இருவருமே ஆங்கிலேயருடன் இரகசியத் தொடர்பு வைத்திருந்து, திப்புவின் மரணத்திற்கும் அவரது சாம்ராஜ்யம் வீழ்வதற்கு முக்கிய காரணமாக இருந்தார்கள். திப்பு இறந்தச் செய்தி கேட்ட தருணத்திலேயே, பிரிட்டிஷார் பூர்ணய்யாவை சரணடையச் சொன்னபோது ‘காசியிலிருந்து ராமேஸ்வரம் வரை எங்கள் இனத்தை பாதுகாத்து வரும் உங்களிடம் சரணடைய எனக்கென்ன தயக்கம்?’ என்று ஜெனரல் ஹாரிஸிடம் சொல்லிச் சரணடைந்தவர் பூர்ணய்யா. முதலில் ஹைதர் அலியிடமும் பின்னர் திப்பு சுல்தானிடமும் அவர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக இருந்து கணப் பொழுதில் தன் நிலையை மாற்றிக் கொண்டவரை துரோகி என்று சொல்லாமல் வேறு என்ன சொல்வது?

‘திப்புவுக்கு எதிரான முதல் மூன்று போர்களில் ஆங்கியேரின் துப்பாக்கி சாதிக்காததை நான்காவது போரில் அவர்களின் பொன்னும் பொருளும் சாதித்தது. திப்புவின் அமைச்சர்கள் அவருக்கு துரோகம் இழைத்தனர். சரணடைய மறுத்த திப்பு வீரத்துடன் போரிட்டு மடிந்தார்’ என்று History of the Freedom Movement in India, (revised edn., Delhi, 1965, I, pp.226-27) என்ற நூலில் நூலாசிரியர் தாராசந்த் எழுதுகிறார். ‘திப்பு சுல்தானுக்கு துரோகம் இழைத்த பூர்ணய்யா ஒரு இந்து என்பதற்காக தான் வெட்கப்படுவதாக’ காந்தி ஒரு கட்டுரையில் எழுதியதும் இங்கு குறிப்பிடத் தக்கது.

http://ibnubasheer.blogsome.com


ibnubasheer@gmail.com

Series Navigation

இப்னு பஷீர்

இப்னு பஷீர்

திப்பு சுல்தானும், திரிபுவாதிகளும், அண்டப் புளுகர்களும்

This entry is part [part not set] of 42 in the series 20080207_Issue

கார்கில் ஜெய்


திப்பு சுல்தானும், திரிபுவாதிகளும், அண்டப் புளுகர்களும்

சுட்டி 1: http://www.thinnai.com/?module=displaystory&story_id=20801318&format=html ( இப்னு பஷீரின் கட்டுரை)

இப்னு பஷீர் முகமதிய அரசரான திப்பு சுல்தானை போற்றி எழுத வேண்டும் என்றால், திப்பு சுல்தானை புகழ்ந்து எழுத வேண்டும்; அல்லது திப்பு சுல்தானை தூற்றிய ஆங்கிலேய வரலாற்று ஆசிரியர்களான கிர்க்பாட்ரிக், வில்க்ஸ் ஆகியோர் நம்பதகாதவர்கள், திரிபுவாதிகள் என்பதற்கான ஆதாரத்தை எழுத வேண்டும். அதை விட்டுவிட்டு சம்பந்தமேயில்லாமல் சைவர்கள் மேல் கொலை பழி சுமத்துவது இப்னு பஷீரின் எழுத்தில் உள்நோக்கம் இருப்பதை தெளிவாக காட்டுகிறது.

1) இப்னு பஷீர் குறிப்பிட்டது (சுட்டி 1, பத்தி 8 ) : “திப்பு சுல்தான் கோழிக்கோட்டில், ஹிந்துக்களை அடக்க ஆரம்பஞ் செய்தபொழுது, இருநூறு பிராமணரைப் பிடித்து முசுலீம் ஆக்கிக் கோமாமிசம் புசிக்கச் செய்தான்” என்று எழுதுபவர் வேறு யாருமல்லர்.பாரதிதான். இதற்கு ஆதாரம் மேலே குறிப்பிட்ட இரு ஆங்கிலேயர்களின் நூல்களன்றி வேறு எதாக இருக்க முடியும்? மதநல்லிணக்கக் கொள்கையை கடைப்பிடித்தவர் திப்பு சுல்தான் என்பதற்கு ஆதாரப்பூர்வமான வரலாற்று நூல்கள் எவ்வளவோ இருக்க, உள்நோக்கத்துடன் ஆங்கிலேயர் பரப்பிய கட்டுக்கதைதான் பாரதியின் கண்ணில் பட்டது போலும். ஆங்கிலேயரை எதிர்த்தவர் எனப் புகழப்படும் பாரதி, முஸ்லிம்கள் மீதான வெறுப்பை வெளிப்படுத்துவதில் அதே ‘ஆங்கிலேயருடன் கைக்கோர்த்து ஓரணியில்’ நிற்கிறார் பாருங்கள்!”

முரணான உண்மை: மகாகவிக்கு பொதுவாக ஏழைகள் மேல் பற்றும், அனைத்து மன்னர்கள் மேல் ஆத்திரமும் இருந்தது. மன்னராட்சி முறை மீதும் அளவு கடந்த வெறுப்பு இருந்தது. இதற்கு ஆதாரமாக பல பாடல்களை காணலாம்:

‘எல்லோரும் ஓர் குலம்…………………

…. எல்லோரும் இந்நாட்டு மன்னர்’ ,

‘தனி ஒருவனுக்கு ……’

ஏன் அதற்கும் மேலே போய்,

ருஷ்ய புரட்சி

“கொடுங்கோலன் ஜார் ஒழிந்தான்

ருஷ்யாவில் மக்களாட்சி மலர்ந்த தம்மா”

என மகாகவி பெருமிதத்துடன் பாடினார். சக்ரவர்த்தி ஜார் சதி செய்து கொல்லப்பட்டதும், அவரின் வாரிசான கோமகன் அலெக்ஸி நிகாலொவிச், பதினான்கே வயதில் லெனினால் கொல்லப் பட்டதும், ஒரு பாவமும் செய்யாத, யாருக்கும் எந்த ஆபத்தையும் விளைவிக்க வாய்ப்பே இல்லாத ஐந்து இளவரசிகளும் கொடூரமாக ஏகாடெரின்பர்க் சிறையில் வைத்து சுட்டுக்கொல்லப் பட்டதும் பாரதிக்கு தெரியவேயில்லை!!. (பின்னர், லெனின் தன்னுடன் புரட்சியில் உயிரை பணயம் வைத்து உதவி செய்த போல்ஷெவிக் கட்சி தலைவர்களையும், தோழர்களையும், தோழர்களின் குடும்பத்தினரையும் ஈவு இரக்கமின்றி காரணமேயில்லாமல் கொன்றார்.) மன்னர்கள் மீது பாரதிக்கு அவ்வளவு வெறுப்பு இருந்ததால்தான் சற்றும் கபடமின்றி உணர்ச்சி வசப்பட்டு ருஷ்ய புரட்சி கவிதையை எழுதினார்.

ஆகவே, பொதுவாகவே மன்னர்கள் மீது வெறுப்பு கொண்டதனால், கிர்க்பாட்ரிக், வில்க்ஸ் எழுதிய வரலற்றை படித்தத் தாக்கதால், அல்லது திப்புவின் மகனே ஊர்ஜிதப்படுத்த்¢யதால் நம்பத் தகுந்ததான பதிவை அறிந்ததனால், (சுட்டி 3 : http://en.wikipedia.org/wiki/Tipu_sultan#Religious_policy ) மகாகவி திப்பு சுல்தான் பற்றி எழுதியதில் நேர்மையும் யதார்த்தமும் இருக்கின்றன.

ஆனால் இப்னு பஷீரின் எழுத்தில் நேர்மை சிறிதளவேனும் உண்டா? தாய் நாட்டுக்காக அன்பு மனைவி, அழகுக்குழந்தை, புனிதமிக்க முப்புரிநூலையும் பிரிந்து , உடல், பொருள், புகழ், ஆவி, அனைத்தும் தியாகம் செய்து, கள்ளங் கபடமற்ற மனத்துடன் அல்லா பற்றியும் கவி படைத்த பாரதியை நன்றியில்லாமல், அவர் அந்தணராய் பிறந்தார் என்ற ஒரே காரணத்துக்காக “ஆங்கிலேயருடன் கைக்கோர்த்தார்” என்று இப்னு பஷீர் பச்சை பொய் பேசி பழி சுமத்துவது ‘திரிபு’ அல்ல, ‘உள்நோக்கம்’.

(அது சரி, அல்லா பற்றி கவிதை எழுதிய பாரதியை ‘முகமதியருடன் கைக்கோர்த்தார்’ என்று சொல்லலாமா? அல்லது திப்புவின் மகனே 7000 பேர் என்று சொல்லும்போது அதை விட மிக குறைவாக ‘இருநூறு பிராமணரைப் பிடித்து முசுலீம் ஆக்கி’ என்று பாரதி சொன்னதனால் ‘முகமதியருடன் ஓரணியில் நிற்கிறார்’ என்று சொல்லலாமா? )

2) இப்னு பஷீர் குறிப்பிட்டது (சுட்டி 1, பத்தி 5) : “திப்புவை போரில் வெல்ல முடியாது என்பதை புரிந்து கொண்ட ஆங்கிலேயர்கள், அவரது நம்பிக்கைக்கு பாத்திரமாக இருந்த அமைச்சர்கள் பூர்ணய்யா, மீர்சதக் ஆகியோரை ‘விலைக்கு வாங்கி’, அவர்களின் நம்பிக்கைத் துரோகத்தைக் கொண்டேதான் திப்புவை வென்றார்கள்.”

முரணான உண்மை: (சுட்டி 2:) . இது தவிர நான் சில வரலாற்று ஆசிரியர்களையும், ஏன் பெங்களூரு அரசு சுற்றுலா வழிகாட்டியிடமும் கூட கேட்டேன் (அந்த வழிகாட்டி கர்நாடக அரசால் மைசூர் பல்கலை கழகத்தில் பயிற்றுவிக்க பட்டவர். திப்புவின் அரண்மனைகளின் ஓவ்வொரு செங்கல்லும் தனக்கு அத்துபடி என்றார். திப்புவை பற்றி மிக உயர்வாக பேசினார்). அனைவரும் சொன்ன ஒரே பெயர்: மீர் சாதிக் மட்டும்தான். நண்பன் மீர் சாதிக்குக்கு ஒரு இளவரசன் போல் திப்பு சுல்தானே வசதிகளை செய்து வளர்த்ததாக சொன்னார்கள். இப்னு பஷீர் குறிப்பிட்ட (சுட்டி 1, பத்தி 7 ) நேர்மையான ஆசிரியர்களான Brittlebank, Hasan, Habib, Saletare அனைவரும் மீர் சாதிக் சதி செய்தது தவிர, முகமதிய அரசர் ஹைதராபாத் நிஜாம் திப்புவை கொல்ல தன் பங்குக்கு 16,000 படை வீரர்களை அனுப்பினாதாக பதித்து இருக்கின்றனர். பூர்ணய்யா துரோகம் செய்ததாக யாரும் சொல்லவில்லை

ஆக துரோகம் செய்தது மீர் சாதிக் என்ற முகமதியர். அதே போரில் ‘ஆங்கிலேயருடன் கைக்கோர்த்து ஓரணியில்’ நின்றது முகமதிய அரசர் ஹைதராபாத் நிஜாம். ஆனால் பழியில் பாதி பங்கு பூர்ணய்யா என்கிற பார்ப்பனன். இப்படியே நாலு தடவை பழி சொன்னால் வரலாறு ஆகிவிடும். பிற்பாடு ‘மீர் சாதிக்’ என்ற பெயரை ‘மறதி’யாக விட்டுவிட்டு பூர்ணய்யாவை மட்டும் குறிப்பிட்டு நாலு தடவை சொன்னால் இன்னும் சௌகர்யம். அப்புறம் ஒரேயடியாக ‘திப்புவை காட்டி கொடுத்தது பார்ப்பனர்களே’ என்று அறிவித்து விடலாம்!! மற்ற இந்துக்களைக்கூட பார்ப்பனரை தாக்க தூண்டிவிடலாம். ஆக இப்பொழுதும் பூர்ணய்யா மீது இப்னு பஷீர் பொய் பழி சுமத்துவது ‘திரிபு’ அல்ல, ‘உள்நோக்கம்’.

3) இப்னு பஷீர் குறிப்பிட்டது (சுட்டி 1, பத்தி 11) : மதுரையில் மன்னன் சுந்தரபாண்டியன் காலத்தில் நடந்த சைவ-சமண பிரிவினரிடையேயான மோதலைத் தொடர்ந்து எண்ணாயிரம் சமண முனிவர்களை உயிருடன் கழுவிலேற்றி கொன்ற மாபாதகத்தை செய்தவர்கள் ‘அன்பே சிவம்’ என்றோதுகிற சைவ சமயத்தார் தான். இது போன்ற ரத்த வரலாறுகளை மறக்கடிக்க முயலும் அதே வேளையில், சக மதத்தினரை சமமாக பாவித்து கண்ணியப்படுத்திய ஒரு அரசரின் பெயர் பொய்களாலும் புனைந்துரைகளாலும் களங்கப் படுத்தப் படுகிறது, அவர் ஒரு முஸ்லிமாக இருந்தார் என்ற ஒரு காரணத்திற்காகவே!

முரணான உண்மை: (சுட்டி 3 : பத்தி 3) ” M.M.K.F.G. எனப்பட்ட ஒரு மொகலாய தளபதி எழுதிய, திப்பு சுல்தானின் மகன்களில் ஒருவராலேயே திருத்தம் செய்யப்பட்ட, திப்பு சுல்தான் வாழ்க்கைக் குறிப்பில், திருவிதாங்கூர் மகாராஜாவுடனான போரில் திப்பு சுல்தான் 10,000 ஹிந்துக்களையும், கிருத்தவர்களையும் கொன்றும், 7000 பேரை ஸ்ரீரங்கபட்டினம் இட்டுச்சென்று சுன்னத் செய்து, கோமாமிசம் புசிக்க செய்தும் முகமதியராக்கினார் என குறிப்பிடப்பட்டுள்ளது”

திப்புவின் மகனே ஊர்ஜிதப்படுத்த்¢யதால், ‘திப்பு சுல்தான் சக மதத்தினரை சமமாக பாவித்து கண்ணியப்படுத்தினார்’ என்பதும், கிட்ட தட்ட முழு கட்டுரையுமே ஆதரமற்றதாகிறது. ‘எண்ணாயிரம் சமண முனிவர்கள் கழுவிலேற்றப்பட்டனர்’ என்பது திப்புவை பற்றிய கட்டுரைக்கு சம்பந்தமில்லாத ஒன்றை, திசை திருப்பி பெரிது படுத்தும் உள்நோக்கமுடன் எழுதப்பட்டது. இதுவே திரிபுவாதத்திற்கு மிகச்சிறந்த உதாரணம். அது மற்றும் இன்றி எண்ணாயிரமெல்லாம் முகமதிய மன்னர்களுக்கு ‘மொஹல் அல்வா சாப்பிடுவது’ போல. திப்புவின் மகனே பத்தாயிரம் பேரை கொன்றதாக ஒப்புதல் அளித்துள்ளார். முதல் தடவையில் மட்டுமே கஜினி முகமது பத்து லட்சம் பேரை கொன்று, பல லட்சம் பெண்களை கெடுத்து, வேண்டும் போதெல்லாம் அனுபவிக்க ஒரு லட்சம் கன்னி பெண்களையும், பிற்காலத்தில் உபயோகப்படுத்த சிறுமிகளையும் கதறக் கதற கட்டி இழுத்துக் கொண்டுபோனார். அப்புறம் திரும்ப திரும்ப வாலிபம் இருக்கும் வரையில் பதினேழு தடவை வந்தார். கணக்கு போட்டு பாருங்கள். இதே போல பல முகமதிய அரசர்கள். மறுபடியும் கணக்கு போட்டு பாருங்கள். ‘ரத்த வரலாறுகளை மறக்கடிக்க’ முயல்வது யார் என்று தெரியும். இவ்வளவுக்கு அப்புறமும் ஏன் இந்துக்கள் முகமதியரை இந்தியாவை விட்டே விரட்டவில்லை என்று சிந்தியுங்கள். ‘அன்பே சிவம்’ என்பது புரியும்.

திப்புவை புகழ வேண்டிய கட்டுரையில், திப்புவின் மகனே ஊர்ஜிதப்படுத்த்¢ய உண்மையயை மாற்றி, திடீரென்று இந்துக்கள் மீது இப்னு பஷீர் பொய் பழி சுமத்துவது ‘திரிபு’ அல்ல, ‘உள்நோக்கம்’.

சரி, அது என்ன உள்நோக்கம்?

இப்னு பஷீரின் உள்நோக்கம் இதுதான்: இந்துக்களிடம், பிராமணர்களிடமும் வேற்றுமையையும், குற்ற உணர்வையும், குழப்பத்தையும் உருவாக்குதல்; முகமதியராக மதம் மாற தூண்டுதல். இந்துக்கள் மேல் சமணர், முகமதியருக்கு அவநம்பிக்கையையும், வெறியையும் ஏற்படுத்துதல்; இதன் மூலம் இந்துக்களை, இந்து மதத்தை ஒழித்தல்.

அதற்கு அவர் கையாண்ட முறை: முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்தல். அதாவது புளுகும் திரிபுவாதமும்.

– கார்கில் ஜெய்

சுட்டிகள் :

சுட்டி 1: http://www.thinnai.com/?module=displaystory&story_id=20801318&format=html

சுட்டி 2: http://en.wikipedia.org/wiki/Fourth_Mysore_War

சுட்டி 3 : ( பத்தி 3) “A Mogul general, known only by his initials, M.M.K.F.G., wrote an account of Tippoo Sultaun’s life, which was corrected by one of Tippoo’s sons, wherein he asserts that the Sultan, in his wars against the Maharaja of Travancore, had 10,000 Hindus and Christians killed and 7,000 transported back to Seringapatam, where they were circumcised, made to eat beef and forced to convert to Mohammedanism. A more solid proof may be had from the destruction meted out to numerous lesser temples, especially in the Sultan’s southern domains, in the late 1780s.”


jaykumar.r@gmail.com

Series Navigation

கார்கில் ஜெய்

கார்கில் ஜெய்

திப்பு சுல்தானும் திரிபுவாதிகளும்!

This entry is part [part not set] of 34 in the series 20080131_Issue

இப்னு பஷீர்



இந்திய சரித்திரம் எடுத்துக் காட்டும் மிகச்சிறந்த அரசர்களுள் ஒருவர் திப்பு சுல்தான். அவர் ஒரு முஸ்லிமாக இருந்தபோதிலும் பிற மதத்தினருடன் நல்லிணக்கப் போக்கையே கடைப்பித்தார் என்பதும் சரித்திரத்தின் பக்கங்களில் பொறிக்கப் பட்டிருக்கிறது. அவர் தனது குடிமக்களை சாதி, மத அடிப்படையில் பாகுபடுத்தி வைத்திருக்கவில்லை. அவரது ஆட்சிக் காலத்தில் மதச் சண்டைகள் எதுவும் நிகழவில்லை.

சிதிலமடைந்திருந்த சாரதா கோயிலை மறுநிர்மானம் செய்வதற்காக சிருங்கேரி சங்கராச்சாரியார் பண உதவி வேண்டி திப்புசுல்தானுக்கு கடிதம் எழுதியபோது அதற்கு உடனடியாக பதிலளித்த அவர், கோயில் மறுநிர்மாணத்திற்கு வேண்டிய பொருளுதவிகளை தாராளமாக செய்தார். இதன் தொடர்பாக சங்கராச்சாரியாருக்கு திப்பு கன்னடத்தில் எழுதிய சுமார் 30 கடிதங்களில் அவர் இந்து மதம் மீதும் அதன் ஆன்மீகத் தலைவர்கள் மீதும் கொண்டிருந்த மதிப்பு வெளிப்படையாக தெரிகிறது.

சாரதா கோயில் மட்டுமின்றி, நஞ்சுங்கோட் தாலுக்காவிலிருக்கும் லட்சுமிகாந்தர் கோயில், மெல்கோட்டிலிருக்கும் நாராயணஸ்வாமி கோயில், ஸ்ரீகண்டேஸ்வரா கோயில், நஞ்சுண்டேஸ்வரா கோயில், சிரீரங்கப்பட்டணத்திலிக்கும் ரங்கநாதர் கோயில், என திப்புவிடமிருந்து நிதியோ பொருட்களோ பரிசாகப் பெற்ற கோயில்கள் பல இருக்கின்றன. இதில் ரங்கநாதர் கோயில் திப்புவின் மாளிகையிலிருந்து கூப்பிடு தொலைவில் உள்ளது. மேலும் இரண்டு கோயில்களும் திப்புவின் மாளிகைக்கு வெகு அருகிலேயே அமைந்திருந்தன. அவற்றில் தினமும் நடக்கும் பூஜை வழிபாடுகளுக்கு திப்புவிடமிருந்து எந்த இடையூறும் ஏற்பட்டதில்லை.

திப்புசுல்தானின் அரசவையில் இந்துக்கள் பலர் முக்கிய பதவிகளை பெற்றிருந்தனர். அவர்களை திப்பு மிக கண்ணியத்துடன் நடத்தினார். அவரிடம் அமைச்சராக இருந்த பூர்ணய்யா என்ற பார்ப்பனரை உதாரணம் காட்டி, ‘பார்ப்பனர்கள் நம்பிக்கைக்குரியவர்கள் அல்லர்’ என்று சிலர் திப்புவிடம் புகார் செய்தபோது, மிகுந்த கோபமடைந்த அவர், குர்ஆனின் வசனம் ஒன்றை சுட்டிக் காட்டி ‘ஒரு சிலர் செய்யும் தவறுகளுக்காக ஒரு ஒட்டுமொத்த சமுதாயத்தையும் பழிக்கலாகாது’ என்று கண்டித்தார்.

ஆங்கிலேயரை இந்தியாவிலிருந்தே விரட்டிவிட வேண்டும் என்பதை தமது வாழ்நாள் இலட்சியமாகக் கொண்டிருந்த அந்த வீரரைப் பார்த்து ஆங்கிலேயர்கள் அஞ்சி நடுங்கினர். “ஆம். நான் அவனைக் கண்டு அஞ்சுகிறேன். அவன் நாமறிந்த மற்ற இந்திய மன்னர்களைப் போன்றவன் அல்ல. மற்ற மன்னர்கள் மத்தியில் இவன் ஏற்படுத்தும் முன்னுதாரணத்தைக் கண்டும் நான் அஞ்சுகிறேன். ஆனால் அவனைப் பின்பற்றும் தகுதியில்லாத கோழைகளாக மற்ற மன்னர்கள் இருப்பது நம் அதிருஷ்டம்” என்று 1798இல் கும்பினித் தலைமைக்குக் கடிதம் எழுதினார் அன்றைய கவர்னர் ஜெனரல் மார்க்வெஸ் வெல்லெஸ்லி. திப்புவை போரில் வெல்ல முடியாது என்பதை புரிந்து கொண்ட ஆங்கிலேயர்கள், அவரது நம்பிக்கைக்கு பாத்திரமாக இருந்த அமைச்சர்கள் பூர்ணய்யா, மீர்சதக் ஆகியோரை ‘விலைக்கு வாங்கி’, அவர்களின் நம்பிக்கைத் துரோகத்தைக் கொண்டேதான் திப்புவை வென்றார்கள்.

சாதி மத பேதமின்றி, தனது குடிமக்களின் பெருத்த மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரியவராக இருந்த திப்பு சுல்தானின் பெருமையை எப்படியாவது குலைக்க வேண்டும் என்ற ‘அவசியம்’ ஆங்கிலேயர்களுக்கு இருந்தது. அதற்கு அவர்கள் கையாண்ட ஒரு வழிமுறைதான் வரலாற்று திரிபுவாதம்.

திப்புசுல்தான் இந்துக்களையும் கிருஸ்துவர்களையும் கொடுமைப் படுத்தினார் என உலவும் கதைகளுக்கு முக்கிய மூலவேர் பிரிட்டிஷ் நூலாசிரியர்களான கிர்க்பாட்ரிக், வில்க்ஸ் (W. Kirkpatrick, M. Wilks) போன்றவர்கள் எழுதிய நூல்களே. இவ்விருவரின் வரலாற்றுக் குறிப்புகள் நம்பகத்தன்மையற்றது என Brittlebank, Hasan, Chetty, Habib, Saletare மற்றும் பல வரலாற்றாசிரியர்கள் கருத்துத் தெரிவித்திருக்கின்றனர். மேற்கண்ட இரு நூலாசிரியர்களுமே அன்றைய கிழக்கிந்திய கம்பெனியின் ஆளுநர்களிடம் பணி புரிந்தவர்கள். மேலும் திப்புவுக்கு எதிரான போர்களில் பங்கு கொண்டவர்கள். அப்போர்களில் ஆங்கிலேயப்படை அடைந்த தோல்வியை நேரில் கண்டவர்கள். திப்புவின் பெருமையை குலைக்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் வரலாற்றுக் குறிப்புகள் என்ற பெயரில் நேர்மையற்ற முறையில் இவர்கள் எழுதி வைத்த கட்டுக்கதைகளைத்தான் இன்றைய வரலாற்று திரிபுவாதிகளும் ஆதாரமாக எடுத்துக் கொண்டு பேசியும் எழுதியும் வருகிறார்கள்.

“திப்பு சுல்தான் கோழிக்கோட்டில், ஹிந்துக்களை அடக்க ஆரம்பஞ் செய்தபொழுது, இருநூறு பிராமணரைப் பிடித்து முசுலீம் ஆக்கிக் கோமாமிசம் புசிக்கச் செய்தான்” என்று எழுதுபவர் வேறு யாருமல்லர்.பாரதிதான். இதற்கு ஆதாரம் மேலே குறிப்பிட்ட இரு ஆங்கிலேயர்களின் நூல்களன்றி வேறு எதாக இருக்க முடியும்? மதநல்லிணக்கக் கொள்கையை கடைப்பிடித்தவர் திப்பு சுல்தான் என்பதற்கு ஆதாரப்பூர்வமான வரலாற்று நூல்கள் எவ்வளவோ இருக்க, உள்நோக்கத்துடன் ஆங்கிலேயர் பரப்பிய கட்டுக்கதைதான் பாரதியின் கண்ணில் பட்டது போலும். ஆங்கிலேயரை எதிர்த்தவர் எனப் புகழப்படும் பாரதி, முஸ்லிம்கள் மீதான வெறுப்பை வெளிப்படுத்துவதில் அதே ஆங்கிலேயருடன் கைக்கோர்த்து ஓரணியில் நிற்கிறார் பாருங்கள்!

திப்புசுல்தான் மீது சுமத்தப்படும் மற்றொரு குற்றச்சாட்டு, முஸ்லிம்களாக மாறும்படி திப்பு வற்புறுத்தியதால் 3000 பார்ப்பனர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள் என்பது. தமது அரசவையில் பல பார்ப்பனர்களுக்கு உயர்பதவிகளை தந்து கவுரவித்தவரும் சங்கராச்சாரியாரின் வேண்டுகோளை ஏற்று கோயில் புணரமைப்பிற்கு நிதியுதவி செய்தவரும், பார்ப்பனர் ஒருவர் நம்பிக்கைத் துரோகம் செய்ததற்காக எல்லா பார்ப்பனர்களையும் பழிக்கலாகாது என்று சொன்னவருமான திப்பு சுல்தானைத்தான் அவ்வாறு குற்றம் கூறுகின்றனர். கொஞ்சமேனும் காமன்சென்ஸ் உள்ளவர்கள் இவற்றிலுள்ள முரண்பாட்டை புரிந்து கொள்வார்கள். கல்கத்தா பல்கலைகழக சமஸ்கிருத பிரிவைச் சேர்ந்த டாக்டர் ஹரி பிரசாத் சாஸ்திரி என்ற பார்ப்பனர் இந்தச் ‘சம்பவத்தை’ தமது கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டார். திப்புசுல்தான் பற்றி ஆராய்ச்சி செய்த பேராசிரியர் ஹபீப் என்பவர் அவரை தொடர்பு கொண்டு இதற்கான ஆதாரத்தை கேட்டபோது, அது மைசூர் கெசட்டில் இருப்பதாக அவர் பதில் எழுதினார். பேராசிரியர் ஹபீப் மைசூர் பல்கலைக்கழக துணைவேந்தருடன் தொடர்பு கொண்டு இந்த ‘ஆதாரம்’ பற்றி விசாரித்தபோது, ‘கெசட்டில் அப்படி ஒரு சம்பவமே குறிப்பிடப் படவில்லை’ என்று பதில் வந்தது. இதுதான் ஹரி பிரசாத் போன்றவர்கள் வரலாறு எழுதும் இலட்சணம்!

சில ஆண்டுகளுக்கு முன்பு இதையே எழுத்தாளர் சுஜாதா ஒரு கட்டுரையில் குறிப்பிட்டு ,அதற்கு சில வரலாற்று ஆய்வாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். வரலாற்று சம்பவம் ஒன்றைப் பற்றி எழுதினால் அது ஆதாரப்பூர்வமானதா இல்லையா என்று ஒன்றுக்கு இரண்டு முறை நிச்சயம் செய்து கொள்ள வேண்டாமா? அறிவியலிலிருந்து , சினிமா வரை எல்லா துறைகளிலும் கால் வைக்கும் சுஜாதாவிற்கு இந்த அடிப்படை தெரியாமல் போனதேன்?

மதுரையில் மன்னன் சுந்தரபாண்டியன் காலத்தில் நடந்த சைவ-சமண பிரிவினரிடையேயான மோதலைத் தொடர்ந்து எண்ணாயிரம் சமண முனிவர்களை உயிருடன் கழுவிலேற்றி கொன்ற மாபாதகத்தை செய்தவர்கள் ‘அன்பே சிவம்’ என்றோதுகிற சைவ சமயத்தார் தான். இது போன்ற ரத்த வரலாறுகளை மறக்கடிக்க முயலும் அதே வேளையில், சக மதத்தினரை சமமாக பாவித்து கண்ணியப்படுத்திய ஒரு அரசரின் பெயர் பொய்களாலும் புனைந்துரைகளாலும் களங்கப் படுத்தப் படுகிறது, அவர் ஒரு முஸ்லிமாக இருந்தார் என்ற ஒரு காரணத்திற்காகவே!

********************
வரலாற்று சம்பவங்களைப் பற்றி எழுதுபவர்களுக்கு இருக்க வேண்டிய மிக அடிப்படையான தகுதி எழுத்து நேர்மை! தான் எழுதிய வார்த்தைகளைப் பற்றி விளக்கம் கேட்கப்பட்டால் அதற்கான ஆதாரங்களைக் காட்டி விளக்க வேண்டிய கடமை அந்த எழுத்தாளர்களுக்கு இருக்கிறது. அவர் எழுதியது தவறு என்று நிரூபிக்கப் பட்டால் அதை மனப்பூர்வமாக ஒப்புக் கொண்டு திருத்திக் கொள்ளும் மனப்பக்குவமும் அவர்களிடம் இருக்க வேண்டும். இதெல்லாம் இல்லாதவர்கள் வரலாற்று குறிப்புகளை எழுதுவதை விடுத்து வேறு ஏதாவது செய்யலாம்.

அன்றைய பாரதியும் இன்றைய சுஜாதாவும் அச்சு ஊடகங்களில் செய்ததை, திரிபுவாதமே நோக்கமாக கொண்ட சிலர் இணையப் பக்கங்களில் செய்து வருகின்றனர். எதையாவது எழுதி வைப்பதும் அவற்றிற்கான விளக்கம் கோரப்படும்போதும் ஆதாரங்கள் கேட்கப்படும்போதும் ஓடி ஒளிந்து கொள்வதும் இவர்களின் அடையாளம். விளக்கமளிக்கப்படாத இவர்களின் வார்த்தைகள், தொடர்பற்ற சங்கிலி வளையங்களைப் போல இணைய வெளியில் சுற்றி வருகின்றன. அச்சு ஊடகங்களைப் போலன்றி, இணையத்தில் இவர்கள் பொய்களை உலவ விடும்போதெல்லாம் அதற்கான எதிர்ப்புகளும் உடனுக்குடன் இணையத்தில் பதிவு செய்யப்படுகின்றன. பதில் விளக்கங்கள்தான் வந்தபாடில்லை!

குஜராத் படுகொலைகளில் கொல்லப் பட்டவர்களின் ஆவிகள் நரேந்திர மோடியை இன்னும் விரட்டுவதாக கரண் தாப்பர் ‘Devil’s Advocate’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மோடியை பேட்டி கண்டபோது குறிப்பிட்டார். ‘ஆவிகள்’ என அவர் குறிப்பிட்டது அந்தப் படுகொலைகள் தொடர்பாக மோடி மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளையே!


ibnubasheer@gmail.com

Series Navigation

இப்னு பஷீர்

இப்னு பஷீர்