ரவிசந்திரன் ஸ்ரீனிவாசன்
பேக்கேஜ் ஜை போட்டு போர்டிங் பாஸ் வாங்கிட்டு , அந்த தடுப்பு கம்பி அருகில் வந்தான் நடராஜ்,
அம்மா, அப்பா, மனைவி , அக்கா எல்லோரும் தடுப்பு கம்பிக்கு பின்னால நின்றுக் கொண்டிருந்தா, அவனுக்கு போகவே பிடிக்கலே என்ன பண்றது.
அப்பாவிற்கு கண்ணு கலங்கிதான் போயிருக்கு,
அம்மாவின் அருகில் போய், அப்பாவை பாத்துங்கோ, என சொல்லிட்டு
ஆத்துக்காரியிடன் தனியா போய் அரை நாழி பேசிட்டு
அழாத குறையா கிளம்பினான் நடராஜ்,
மெதுவா கண்ணை விட்டு மறைந்தான்.
பொண்னு விமலா தான் ஒரு வழியா எல்லோரையும் கிளப்பி கால் டாக்சியில் ஏற்றினாள் ஆத்துக்கு வர வழியில் யாரும் பேசவேயில்லை.
கார்த்தல போன் வந்தது மருமகள் உமாதான் எடுத்தாள். பேசினாள்,
அத்தை “அவரு போய் சேர்ந்துட்டாரம், சாயந்தரம் போன் பேசறேன்னு சொன்னாரு”. என சொல்லிட்டு மாடிக்கு போயிட்ட உமா.
முர்த்தி இன்னும் இரண்டு வருஷத்தில் இந்த ரயில்வே உத்தியோகத்திலிருந்து ரிடெயர்மெண்ட் கிடைக்கும், போதும் னு ஆயிடுத்து.
என்று முணுமுணுத்தப்படியே ஏதோ சிந்தனையில் இருந்தார்.
சாயந்திரம் நடராஜ் போன் பண்ணான். ஆபிஸ் போனானம்,
கெஸ்ட் ஹாஸில் ஒரு வாரம் தான் தங்கல மாம். இன்னும் இரண்டு , முணு நாளைக்குள்ளே வீடு தேடனும்.. என்று சொல்லி . நெட் வந்ததும் , டெய்லி பேசலாம் என சொல்லி கட் பண்ணிட்டான்.
பத்து நாள் ஆச்சு , வெக்கெஷன் முடிச்சி விமலாவும் நியூ ஜெர்சிக்கு கிளம்பிட்டா.
அவளுடைய பெரிய மச்சினர் பையனும் வந்திருந்தான் ,இங்க சென்னையில் இன்ஜினிரீங் முதல் வருஷம் படிக்கிறான். ரெண்டு பேரும் கிளம்பினார்கள். ஸ்வீட்டு ,காரம் , பூஜை புஸ்தகம் ,பூணால் ,தாமரை தண்டு திரி,சிடி என எல்லாம் ஒரு பெரிய கட்டு எடுத்துண்டு கிளம்பினாள்.
அவா ஆத்துக்காரர் அங்க ஏர் போர்ட்டுக்கு வந்துருவாரம்.
இரண்டு மாசம் ஆச்சு,
நடராஜ் போன் பண்ணான். “அம்மா உமாவிற்கு விசா கிடைச்சிருச்சு, “ அடுத்த வெள்ளிகிழமை ஜெட் ஏர் டிக்கெட் புக் பண்ணட்டுமா? என கேட்டான்.
டேய் , ஒன்ணு வியாழக்கிழமை பண்ணு , இல்லா ஞாயித்துக்கிழமை பண்ணு , வெள்ளிகிழமையில்லாம் ஆத்து பொண்ணை அனுப்பமுடியாது. என சரோஜா திட்டவட்டமா சொன்னாள்.
சரிம்மா, ஞாயிற்றுகிழமையே புக் பண்ணிட்டேறேன், என்று கூற , உமாவிடம் போனை கொடுத்தாள் சரோஜா.
அவளுக்கு ஒரு பெரிய லிஸ்ட் டே போனில் சொல்லிட்டு இருந்தான் நடராஜ்.
ஏர்போர்ட்டுக்கு போய் உமாவை ஏற்றி விட்டு வீடு வந்தார்கள் முர்த்தியும் , சரோஜாவும்.
முர்த்திக்கு மகன் நடராஜ் சிங்கப்பூர் போனதே பிடிக்கவில்லை.
அவர் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.
வீடு வெறிச்சோடிக்கொண்டிருந்தது.
இப்போ திருப்தி தானே எல்லோரும் ஆத்தை விட்டு போயாச்சு என மனைவி சரோஜாவிடம் கோபமாக கத்தினார் முர்த்தி..
நிம்மதியா சோழிங்கநல்லுரில் இன்போசிலில் வேலை , சொந்த வீடு பைக்கில் போயிட்டு வந்திட்டு இருந்தான். அவனை அனத்தி , ஊரை விட்டுடே அனுப்பிட்டே. எனக் கத்த ஆரம்பித்தார்.
இப்போழுது ஒன்னும் பேசவேண்டாம் , நிம்மதியா போய் படுங்கோ ,
நாளைக்கு கார்த்தல பேசிக்கலாம் , என ரெண்டு மாத்திரையும், டம்பளரில் தண்ணியும் கொடுத்துட்டு லைட் அணைத்தாள் சரோஜா.
மறுநாள்
ஒரு வழியா உமாவும் சிங்கப்பூர் போய் சேர்ந்துட்டு போன் பண்ணினான் நடராஜ்.
இன்னிக்கு நான் ஆபிஸிக்கு போகலே “மனசு ஒரு மாறி இருக்கு.” என சொல்லி முர்த்தி மட்டம் அடித்தார்.
இரண்டு பேரும் சாப்பிட்டு விட்டு , பாத்திரத்தையில்லாம் ஒழித்துப் போட்டுவிட்டு வந்தாள் சரோஜா.
முர்த்தியின் பக்கத்தில் உட்கார்ந்துக் கொண்டு அவர் இதமாக கையை பிடித்துக்கொண்டு
எண்ணா ? எனக்கு ஒண்டி பாசமில்லை ய என்னா.
பத்து மாசம் சுமந்து பெத்தவ எனக்கு இருக்காதா?
நம்ம நட்டு க்கு இருபத்திறு வயசு ஆய்ச்சு இன்னும் பொறுப்பே வரலே , ,
கோயில் , குளம் , கதா கலாசேஷபம், பாட்டுன்னா சுத்திண்டு இருக்கான் .
மீதிக்கு கோயில்ல சர்வீஸ் ணு போயிரான்.
பொறதாதுக்கு மாமியார் வீடும் மாம்பலத்திலேயே போசுக்குனா அங்கப் போயிரான்.
அந்த பொண்ணும் தான் என்ன பண்ணும் பாவம் சுத்தி சுத்தி மெட்ராஸ்லேதான் வளைய வருது ,வெளிய கூட்டிண்டு போடண்ணா,
திருவண்ணாமலைக்கு கூட்டிண்டு போறேன்ரான்.
நெச்சூர் வெங்கட் ராமன், வேளுக்குடி, திருச்சி கல்யாணராமன்னு ஒரே
எப்ப பார்த்தாலும் கோயில் , பஜனை ,
என்ன பாவம் பண்ணித்து அந்த பொண்ணு உமா.
ஒரு பொறுப்பும் வரலை நம்ம நட்டூக்கு , இப்பொழுது தான் வெளியூருக்கு வேலைக்கு போறேனு போயிருக்கான் , இனி மேல்தான் ஒழுங்கா குடித்தனம் பண்ணனும் அவன் ,
உமா கிட்ட நான் கிளின்ண சொல்லிட்டேன் “ மகளே உன் சமத்து தான் இனிமேல.” என்றாள் சரோஜா.
அது இல்லே டி நமக்கோ வயசு ஆச்சு
எப்படி நீ இப்படிக் கல்லு மாரி நெஞ்சு வெச்சி யிருக்கே. .என்றார் முர்த்தி.
இதோ பாருங்கோ ண்ணா , நம்மாத்து மா மரத்திலெ காக்கா கூடு கட்டியிருந்தே பார்த்திங்கோளோணோ , முட்டை பொரிச்சி , குஞ்சு பெரிசாய் இறக்கை முளைச்ச உடனெ அது பறந்து போயிடுத்து ,
அதுக்காக தாய் பறவையும் அழவில்லை , குஞ்சும் அழவில்லை.
அதுதான் இயற்கை.
உங்களுக்கு நான் துணை , எனக்கு நீங்கதான் துணை,
அண்ட அவசரமுன்ன, ஒரு போன் பண்ண நடராஜும் , உமாவும் ஒரு நடை
வந்துட்டு போக போறா , இதுக்கு போய் எதுக்கு மனச போட்டு வீணா குழப்பிக்கிறீங்க? என சர்வசாதரணமாய் தைரியத்துடன் சரோஜா கேட்டாள்.
அவன் வயசில்லே நீங்க இந்த ஆத்து மனையை வாங்கிட்டேள்,
எல்லாம் உங்க அம்மா செஞ்ச புண்ணியம் , அவளோடைய தீர்க்க தரிசனம் நமக்கு ஏதோ வண்டி ஒடிண்டு இருக்கு ,
அது மாதிரி இந்த நடராஜும் நாலு காசு சேக்க வேண்டாமா ? அதுக்கு நாமா எதுக்கு தடையா இருக்கணும்? , நாமத்தான் அவனுக்கு தூண்டு கோலா இருக்கானும்
நாலு இடம் போயி பார்க்கட்டும் . அதுதான் நல்லது,
இல்லேனா இங்கேயே குண்டு சட்டியிலேயே குதிரை ஒட்டிண்டு இருப்பான்.
நீ சொல்றது சரிதான். என முர்த்தி அடையாளமாக பார்த்தார்.
ravichands@gmail.com
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) சிந்தனையும் தியானமும் (கவிதை -40 பாகம் -3)
- தமிழ்க் கணிமைக்கான சுந்தர ராமசாமி விருது – பரிந்துரைக்கான அழைப்பு
- எச்.பீர்முஹம்மதின் “கீழைச்சிந்தனையாளர்கள் ஓர் அறிமுகம்” நூல் வெளியீடு
- மேகலை இலக்கிய கூடல்
- வானங்கள்
- குட்டிக்கதைகள்
- என்னவாயிற்று மல்லிகாவிற்கு
- ஒரு கவிதை உருவாகிறாள்
- என்னுள் ஒருவன்
- நம்பிக்கையோடு
- சில்லறை கவிஞர்கள்
- அசைவத் தீ?
- இவர்களது எழுத்துமுறை – 24 ஆர்வி
- கடற்கரை காதல்
- நாச்சியாதீவு பர்வீன் கவிதைகள் இரண்டு.
- தெரு பார்த்தல்
- சுயநலம் !
- 5 கவிதைகள்
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) உடல் இச்சையைக் கட்டுப்படுத்தல் (கவிதை -30 பாகம் -2)
- இழந்த தருணங்கள்
- “பாராண்ட இனமென்று பகர்வோம் நன்கு…….!“
- உலகம் சுற்றும் குழந்தைகள்
- புளித்துப் போகிறது நாற்றம்
- ஒற்றைத் தகவலின் தூது..
- மூடிக்கோ
- குழந்தைமை..
- சமையல் யாகத்தின் பலியாடு
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -15
- யாதெனின்…யாதெனின்
- சிறகு முளைச்சுட்டா
- மேளா
- நினைவுகளின் சுவட்டில் – (61)
- விதுரநீதி விளக்கங்கள் – 4 இறுதிப் பகுதி:
- கடல் வற்றிய வேளை
- எல்லாம் மாயா
- செல்வராஜ் ஜெகதீசன் கவிதைகள்
- சொல்பேச்சுக் கேளா பேனாக்கள்
- கரன்சிகளில் காந்தி சிரிப்பதற்கான காரணங்கள்
- நாதப்பிரம்மம்
- தேனம்மைலெக்ஷ்மணன் கவிதைகள்..
- ஹைக்கூ கொத்து
- காலமும் கடிகாரங்களும்
- வால்மீனின் போக்கை வகுத்த எட்மண்ட் ஹாலி [Edmond Halley] (1656-1742)
- சங்கமம் நானூறு
- வெகுசனத் தளத்தை நோக்கி சிறுபத்திரிக்கை