இவர்களது எழுத்துமுறை – 30 பிரபஞ்சன்

This entry is part [part not set] of 48 in the series 20110313_Issue

வே.சபாநாயகம்.



———————–

========

1. சமூக உணர்வுதான் எனக்கு முக்கியம். கதை எழுதுவது, நல்லா இருக்கிறதனாலே
கதை எழுதிக்கிட்டிருக்கிறேன். ஒரு அரசியல் நடவடிக்கை மூலம் சிறப்பாகப்
பணியாற்ற முடியும்னா கதை எழுதுவதை விட்டுட்டு அதுக்குத்தான் நான் போவேன்.

2. எனக்குக் காலம் முழுதும் எழுத்தாளனா இருக்கணும்கிற அபிப்பிராயம் இல்லை.
இந்த சூழ்நிலையில் இலக்கியத்தில் எதை வேணும்னாலும் எழுதி பணம் பண்ண
முடியும். ஆனல் அதைச்செய்யக்கூடாதுன்னுதான் இருக்கேன்.

3. எழுத்தில் வித்தை காட்ட நான் விரும்பவில்லை.

4. கதை எழுதும்போது ரொம்ப அமைதியாக முழுமை பெற்ற மனிதனாக எழுதுகிறேன்.
கட்டுரை எழுதும்போது எப்படியோ எனக்கு ஆக்ரோஷம் வந்து விடுகிறது. ஒரு கோபம்
சகிக்க முடியாமல் வந்து விடுகிறது. சில சமயம் இன்னொரு எல்லைக்கே போய்
விடுகிறேன் என்று எனக்கே தெரிகிறது. அது என் குறைபாடுதான்.

5. மூளையைப் பிராண்டும்படி என்னால் எழுத முடியாது. உண்மை என்பது சிக்கலானது
அல்ல. எளிமையானது, தெளிவானது. எல்லோருக்கும் புரியும்படியாக உள்ளது. அதுதான்
எனக்கு உடன்பாடு. ‘இந்த எழுத்தாளர் இதை நினைச்சு எழுதியிருப்பாரோ’ என்பன
போன்ற சந்தேகங்களை வாசகனுக்குக் கொடுக்க விரும்பவில்லை.

Series Navigation

வே.சபாநாயகம்

வே.சபாநாயகம்