இது உன் கவிதை

This entry is part [part not set] of 49 in the series 20030724_Issue

தமிழ்மணவாளன்


என் எல்லைக் கோட்டை அறிந்திருக்கிறாய்

என் மெளனத்தின் முழு அர்த்தமும்

புரிந்து கொண்டிருக்கிறாய்

மெல்ல மழைதூறிக்கொண்டிருந்த மாலை

உன் வருகை சந்தோஷமாய் இருந்தது

ஆயினும்

தொடர்ந்ததன் அச்சம் தவிர்க்கவியலாததாய்

இருக்கிறது.உன்

நினைவுகள் என்னை மேலும்

சலனப்படுத்துகிறது.

வெறுப்பின்றி, விருப்பங்கொள்ளவியலாமல்

மனத்தின் ஆழம்

மின்னலாய்த் தோன்றும் மகிழ்ச்சியினூடே

செவிகிழிக்கும்

பேரிடி ஓசை அதிர்கிறது.

உனக்கொன்றும் விளங்காமலில்லை

எனவே தான்

என் கவிதையை நீயெழுதுகிறாய்

நீயும் நானும் வேறல்ல.

tamilmanavalan@yahoo.co.in

Series Navigation

தமிழ்மணவாளன்

தமிழ்மணவாளன்