வேத வனம் விருடசம் -50

This entry is part [part not set] of 54 in the series 20090915_Issue

எஸ்ஸார்சி


விட்ணு பரந்த புகழுள்ளவன்
அவி அவனுக்கு அளித்து
மனம் நிறைந்து போற்றுவோன்
வேண்டுவது எய்துவான்

விட்ணு எமக்கு குதிரையொடு
செல்வங்கள் தருவோன்
கிட்டுக வெற்றி எமக்கு
புவியை தன் மூவடிகளால்
அளந்தோன் விட்ணு
எமக்குத்தலைவனவன்
மனித இருப்புக்கு மனை தந்தோன்

யான் எளியோன்
எட்டா இடத்து வதியும் விட்ணுவைப்பாடுகிறேன்
வசிட்டனுக்கு தன் உரு
மாற்றிப்போர் செய்தோன் அவன்
வஷடு மொழிகிறேன் யான்
தேவனவன் வளம் தந்து காத்திடுக ( ரிக் 7/100)

ஒளியை விஞ்சிடும்
வான் மழை பிழியும்
முவ்வேதம் பகர்வோம்

மின்னலவன் பெருங்காளை
செடிகொடிகள் இனம் தழைக்க
பேருதவி செய்வோன்
விரும்பும் வடிவம் எடுப்போனவன்
பர்ஜன்யன்

தந்தையினின்று தாய் தெரித்துப்பிறக்கிறாள்
தாய்ப்பூமி மழையை
ஏற்கக் குழவி வளருகிறது
தந்தையொடு புதல்வன் வளர்கிறான்
ஜீவிதத்தின் நிலைப்பு அவன்
நீர் பொதி மும்மேகம் அவனதே
மழை எமக்கு சுகம் தருக
செடிகொடிகள் செழித்தோங்குக

பர்ஜன்யனே
தாவர உலகின் உற்பத்திக்கு மூலம்
தாவர உலகின் ஆன்மா
வளமொடு நூறாண்டு வாழ
ஆசி அருள்வோன் அவன். ( ரிக் 7/101)
———————————————————————————-

Series Navigation