வட்டம்

This entry is part [part not set] of 32 in the series 20100711_Issue

அபிமன்யு ராஜராஜன்


இதுதான் விதியென்று
யார் சொன்னாலும்
கேளேன்!
எல்லாரும்
செய்வது போல்
ஒருபோதும்
செய்யேன்!

இது இது
இப்படித்தான்
என்பதெல்லாம்
புரிந்ததேயில்லை எனக்கு!
விமர்சனங்கள் எல்லாம்
பாதித்ததேயில்லை என்னை!

அன்னை தந்தை
தம்பி தமக்கை
உறவு பாசம் கூட
உறுத்துவதில்லை
உள்ளத்தை!
காதல் பார்வையிலோ
மனைவியின் அரவணைப்பிலோ
எந்த மாற்றமும்
ஏற்ப்பட்டதில்லை என்னுள்!

தோழமை எல்லாம் கூட
தூரத்தில் தான்!
மழலையின் சிரிப்புகூட
ஒரத்தில் தான்!

என் வட்டத்திற்குள்
விட்டதில்லை யாரையும்!
ஆனால்..
வாழ்வின் ஒரு நாள்கூட
வாழ்ந்ததில்லை நானும்!

– அபிமன்யு ராஜராஜன்.

Series Navigationஇவர்களது எழுத்து முறை – 1 – லா.ச.ராமாமிர்தம் >>

வட்டம்

This entry is part [part not set] of 29 in the series 20100402_Issue

செல்வராஜ் ஜெகதீசன்



மலைகள் ஆறு
மேலே
மேகங்கள் நிலா
ஒடமொன்றுடன்
அருகில்
வீடொன்றையும்
ஆட்கள் இரண்டையும்
வரைந்து
அம்மா அப்பா
என்றான்.
அப்பா பொம்மைக்கு
மத்தியில்
வரைந்த ஒரு
வட்டத்தை
அப்பாவின்
வயிரென்றான்.

வட்டத்தைப் பற்றி
யோசித்தபடி
விட்டத்தைப் பார்த்துக்
கொண்டிருக்கிறேன்
இந்த
நட்ட நடு இரவில்.

o

Series Navigation