முள்பாதை 25

This entry is part [part not set] of 28 in the series 20100418_Issue

தெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன்

email id tkgowri@gmail.com

மறுநாள் காலையில் நான் விழித்துக் கொள்ளும் முன் கிருஷ்ணன் குளியலை முடித்துக் கொண்டு வெளியே போய் விட்டான். வீட்டில் இருப்பவர்களுக்கும், அக்கம் பக்கத்தில் இருக்கும் எல்லோருக்கும் அன்று மதியம் நான் புறப்பட போகும் விஷயம் தெரிந்து விட்டது.
நேரம் வேகமாக ஓடிக்கொண்டிருந்தது. அத்தை சீக்கிரமாக சமையல் செய்து எனக்கு சாப்பாடு போட்டாள். பன்னிரெண்டு மணி ஆகும்போது கிருஷ்ணன் வந்தான். நான் கிளம்பப் போவது தெரிந்து மங்கம்மா வந்தாள். எங்க அப்பாவிடம் தெரிவிக்கச் சொல்லி ஏதேதோ விஷயங்களை சொல்லிக் கொண்டிருந்தாள். நான் இந்தக் காதால் கேட்டு அந்தக் காதால் வெளியேற்றிக் கொண்ருந்தேன்.
ராஜி என்னுடைய உடைகளை சூட்கேஸில் அழகாக அடுக்கி வைத்தாள். நானும் புடவையை மாற்றிக் கொண்டு தயாரானேன். அத்தை முக்காலியின் மீது உட்காரச் சொன்னாள். மணி என்னிடம் சந்தனம், குங்குமத்தை நீட்டினாள். ராஜி ஒரு தட்டில் புடவை ரவிக்கை மற்றும் பூ பழங்களை வைத்து என்னிடம் தந்தாள்.
“இதெல்லாம் எதுக்கு?” என்றேன்.
“ஏதோ எங்களுடைய சக்திக்கு ஏற்றாற்போல்” என்றாள் அத்தை.
“எடுத்துக்கொள் பெண்ணே. அத்தை வீட்டுக்கு முதல் முறையாக வந்திருக்கிறாய்.” மங்கம்மா சொன்னாள்.
தட்டை பெற்றுக்கொண்டேன். அதில் வெள்ளை நிறத்தில் ஜரிகைப் புடவையும், ரவிக்கைத் துணியும் இருந்தன. “யாருடைய செலக்ஷ்ன்?” என்றேன்.
“வேறு யாருடையது? அண்ணாவுடையதுதான். புடவையை உடுத்திக்கொள் அண்ணி! உன் புடவைகளுடன் ஒப்பிட்டால் இது சாதாரணமானது. இருந்தாலும்…”
நான் சட்டென்று ராஜியின் வாயைப் பொத்தினேன். உள்ளே போய் புதுப் புடவையை உடுத்திக் கொண்டு வந்தேன். விலை அதிகம் இல்லாவிட்டாலும் மெத்தென்று, அழகான ஜரிகை வேலைபாடுடன் இருந்தது.
புத்தாடைகளை அணிந்து கொண்டால் அப்பா அம்மாவின் கால்களில் விழுந்து வணங்கி ஆசிகளைப் பெறுவறுவது என் வழக்கம். அதான் யாரும் சொல்லாமலேயே அத்தையின் கால்களுக்கு வணங்கினேன். பக்கத்திலேயே இருந்த மங்கம்மாவின் கால்களிலும் விழுந்து வணங்கினேன். அந்த அம்மாள் மகிழ்ச்சியில் திக்குமுக்காடி விட்டாள்.
“விருந்து சாப்பாட்டுக்குக் கட்டாயம் அழைக்கணும். மறந்து விடாதே” என்றாள். நானும் ராஜியும் ஒருவரையொருவர் பார்த்து சிரித்துக்கொண்டோம். விருந்துச் சாபாடு என்றால் என்ன வென்று இப்போ எனக்குத் தெரியும்.
“உன் அத்தானிடமும் ஆசிகளை பெற்றுக் கொள்” என்றாள் மங்கம்மா.
“எதுக்கு? அதெல்லாம் கிராமத்து பழக்கம்” என்றாள் அத்தை.
யாரோ வந்ததால் கிருஷ்ணன் வராண்டாவில் நின்று அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தான். அவனிடம் எனக்கு சின்ன வேலையும் இருந்தது. அப்பா கொடுத்தார் என்று கைகடியாரம் வாங்கிக் கொள்வதற்காக பணமாகக் கொடுத்து விடலாம் என்று எண்ணியிருந்தேன். அறைக்குள் போகும் முன் “மணி! உங்கள அண்ணாவை ஒரு தடவை நான் கூப்பிட்டதாகச் சொல்லு” என்றேன். பெட்டியிலிருந்து பணத்தை எடுத்துக் கையில் தயாராக வைத்துக் கொண்டேன். கிருஷ்ணன் உள்ளே வந்தான். புதுப் புடவையில் இருந்த அவன் தலை முதல் கால் வரையிலும் பரிசீலித்ததை நான் உணராமல் இல்லை. அவன் கண்களில் திருப்தி வெளிப்படையாகத் தென்பட்டது.
“இந்தப் புடவை உனக்கு ரொம்ப நன்றாக இருக்கு” என்றான்.
“தாங்க்ஸ்.”
வந்த வேலை முடிந்து விட்டதுபோல் அவன் திரும்பப் போனான்.
“ஒரு நிமிஷம்” என்றேன்.
என் பக்கம் திரும்பி “என்ன விஷயம்?” என்று கேட்டான்.
“ஊருக்குக் கிளம்பப் போகிறேன். மகாராணியாக இருக்கச் சொல்லி என்னை வாழ்த்த மாட்டாயா?”
கிருஷ்ணன் சிரித்தான். “நான் வாழ்த்தினாலும் வாழ்த்தாவிட்டாலும் நீ மகாராணிதான்.”
அவனுடைய சிரிப்பு, பேச்சில் இருந்த சகஜபாவம் எல்லாம் சேர்ந்து என்னை அவன் அருகில் போகச் சொல்லி தூண்டிவிட்டன. நேற்று இரவு இருட்டில் பயத்தில் நான் அவனை அணைத்துக் கொணட போது அவன் கைகள் என்னை மார்போடு அழுத்திக் கொண்டது நினைவுக்கு வந்தது. அது உண்மையா இல்லை என்னுடைய பிரமையா? இப்போ ஒரு முறை அவன் என்னைத் தொட்டால் எனக்குப் புரிந்து போய்விடும். என் மனதில் மறுபடியும் மறுபடியும் அந்த நிகழ்ச்சிதான் அலைபாய்ந்து கொண்டிருந்தது. கிருஷ்ணன் என் மனக் கலவரத்தை உணர்ந்தானோ இல்லையோ தெரியாது. அந்த வாய்ப்பை மட்டும் தரவில்லை.
அருகில் சென்று கால்களில் விழுந்து வணங்கப் போனேன். “வேண்டாம்… வேண்டாம்” என்று தொலைவாகச் சென்று விட்டான்.
“ஒரு விஷயம் கேட்கிறேன். உண்மையைச் சொல்லு” என்றேன்.
“நீ எதைக் கேட்டாலும் உண்மையைத்தான் சொல்லுவேன்.”
“என்னைப் பற்றி உனக்கு எல்லாமே தெரியும். இந்த புடவையைக் கட்டிக் கொள்ளும் தகுதி உண்மையிலேயே எனக்கு இருக்கிறதா?”
ஒரு நிமிடம் அவன் பதில் பேசவில்லை. பிறகு மிருது கம்பீரமான குரலில் சொன்னான். “மீனா! நீ அந்த மாதிரி வேண்டாத யோசனைகள் எதுவும் வைத்துக் கொள்ளாதே. மாமன் மகளாக இந்த வீட்டில் உனக்கு எல்லா தகுதியும் அதிகாரமும் இருக்கிறது.”
நான் பார்வையைத் தரையில் பதித்தேன். அவன் இப்படிப் பேசுவதைவிட என்னை கேலி செய்து, ஏளனம் புரிந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
“வெளியில் அவர்கள் காத்திருக்கிறார்கள். நான் போகட்டுமா?” பிரியமான நபரிடம் அனுமதி கேட்கும் தோரணையில் கேட்டான்.
“இந்தப் பணத்தை வாங்கிக் கொள்.”
“பணமா? எதுக்கு?” அவன் குரலில் இருந்த மென்மை காணாமல் போய்விட்டது. நெற்றியைச் சுளித்துக் கொண்டே கேட்டான்.
“வாட்ச் வாங்கிக் கொள்.”
“மற்றவர்களிடமிருந்து பரிசுகள் வாங்கிக் கொள்வதற்கு நான் ஒன்றும் சின்னக் குழந்தை இல்லை. வீட்டிற்கு மூத்த மகனாக இருப்பதால் கொடுப்பதைத் தவிர வாங்கிக் கொள்ளும் பழக்கம் இல்லை.”
“நீ வாங்கிக் கொண்டுதான் ஆகணும்.” பிடிவாதமாக சொன்னேன்.
கிருஷ்ணன் ஒரு நிமிடம் பணத்தையும் என் முகத்தையும் மாறிமாறிப் பார்த்தான் பிறகு கடினமான குரலில் “நீ இங்கே தங்கியிருந்ததற்கு விலை கொடுக்கிறாய் என்றால் கட்டாயம் வாங்கிக் கொள்கிறேன். ஆனால் இது லாட்ஜ் இல்லை என்பது என்னுடைய பணிவான வேண்டுகோள்” என்றான்.
சட்டென்று கையைப் பின்னால் இழுத்துக் கொண்டேன். நிமிர்ந்து அவன் முகத்தைப் பார்த்தேன். அவனும் கண்ணிமைக்காமல் என்னையே பார்த்தக் கொண்டிருந்தான். காயப்பட்டு விட்ட மனம் அவன் கண்களில் பிரதிபலித்துக் கொண்டிருந்தது.
“இங்கே உனக்கு வருத்தம் தரக்கூடிய நிகழ்ச்சிகள் ஏதாவது இருந்தால் இங்கேயே மறந்து விடு. எங்களைப் பற்றிய சந்தோஷமான நினைவுகளை மட்டுமே நீ எடுத்துக் கொண்டு போகணும்.”
என்னால் பதில் சொல்ல முடியவில்லை.
“வரட்டுமா. வெளியே ஆட்கள் காத்திருக்கிறார்கள். அவர்களை அனுப்பினால் தவிர உன்னுடன் கிளம்ப முடியாது” என்று சொல்லிவிட்டு பதிலுக்காகக் காத்திருக்காமல் வெளியேறிவிட்டான்.
பதுமையைப் போல் நின்று விட்டேன். முட்டாள், பட்டிக்காடு, பேசத் தெரியாதவன் என்று நான் எண்ணியிருந்த கிருஷ்ணன்தானா இது? இவனுக்கு இவ்வளவு மென்மையாக, அழகாக பேசத் தெரியுமா?
“அண்ணி! என்ன செய்கிறாய்?” ராஜி தஞ்சாவூர் கதம்பத்தை கையில் எடுத்துக் கொண்டு உள்ளே வந்தாள். பூச்சரத்தை என் தலையில் வைத்துக்கொண்டே “எங்களை நினைவில் வைத்திருப்பாய் இல்லையா?” என்றாள்.
சட்டென்று திரும்பி அவள் கன்னத்தில் முத்தம் பதித்தேன். காலை முதல் பார்த்துக் கொண்டுதான் இருந்தேன். அவள் முகம் வாடியிருந்தது.
“உன்னை மறக்க முடியுமா ராஜி” என்றேன்.
“நீ கிளம்பிப் போனால் கொஞ்ச நாட்களுக்கு எனக்குப் பைத்தியம் பிடித்தாற்போல் இருக்கும்” என்றாள்.
“நான் பெரிய பெரிய கடிதங்களாக எழுதுகிறேன்.”
“உண்மையாகவா?”
“உன்மீது ஆணை.” அவள் தலைமீது கையை வைத்து சத்தியம் செய்தேன். இருவரும் வெளியே வந்தோம்.
“அப்பாவிடம் கேட்டதாகச் சொல்லு மீனா.” அத்தை சொன்னாள்.
“கட்டாயம்” என்றேன்.
“அண்ணி! மறுபடியும் எப்போ வருவீங்க?” குழந்தைகள் என்னைச் சூழ்ந்து கொண்டார்கள்.
“உங்க அண்ணாவின் திருமணத்திற்கு.”
“அண்ணாவை விட அக்காவுக்குத்தான் முதலில் கல்யாணம் நடக்கும்” என்றாள் மணி.
“எங்க மாமியார் வீட்டிலிருந்து எனக்கு ஏக்கர் நிலம் வரணும். கேசு போடுவதற்கு உங்க அப்பாவிடம் வருகிறேன்” என்றாள் மங்கம்மா.
வாசலில் வண்டி வந்து நின்றது.
“இன்னும் கிளம்பவில்லையா? நேரமாகிக் கொண்டிருக்கிறது.” அவசரப் படுத்தினான் கிருஷ்ணன்.
“வந்தது முதல் பார்த்துக் கொண்டிருக்கிறேன். எப்போடாப்பா அனுப்பி வைப்போம் என்று துடிப்புடன் இருக்கிறாய். கிளம்பும்போது ஒரு நிமிஷம் தாமதம் ஆவதைக்கூட உன்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லையா?” நிஷ்டூரமாக கேட்டேன்.
“கிளம்பிப் போகிறவர்களை எவ்வளவு சீக்கிரமாக அனுப்பி வைத்தால் அவ்வளவு நல்லது” என்றான்.
“அவளை இங்கேயே தங்க வைத்துக் கொள்ளணும் என்றால் அதுக்கு ஒரு வழியிருக்கு தம்பீ! நீதான் ஒப்புக்கொள்ள மாட்டேங்கிறாய்” என்றாள் மங்கம்மா.
அத்தை மங்கம்மாவைக் கோபமாக பார்த்தாள். கிருஷ்ணனின் முகம் சிவந்து விட்டது. ராஜேஸ்வரி பார்வையைத் திருப்பிக்கொண்டாள். திடீரென்று சூழ்நிலை ஸ்தம்பித்து விட்டது போல் இருந்தது.
“ராஜி! எதுக்காக முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு இருக்கிறாய்? வண்டியில் ஏறு. அண்ணியை பஸ்ஸில் ஏற்றிவிட்டு திரும்பலாம்.” கிருஷ்ணன் சொன்னான்.
“எதுக்கு கிருஷ்ணா?” அத்தை தடுத்தாள்.
“பரவாயில்லை வரட்டும்.”
ராஜியின் முகம் மலர்ந்தது. தாங்களும் வருவதாகக் குழந்தைகள் அடம் பிடித்தார்கள். எல்லோருமாக வண்டியில் ஏறிக் கொண்டோம். தெரு வாசலில் நின்றபடி பெண்டுகள் வேடிக்கை பார்த்தார்கள். நான் வந்தபோது ஏற்பட்ட அனுபவத்தையும், போகும்போது என் மனம் இருந்த நிலையையும் ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டேன்.
நாங்கள் வண்டியை விடு இறங்கினோமோ இல்லையோ பஸ் வந்துவிட்டது. அவசர அவசரமாக பஸ்ஸில் ஏறிக்கொண்டேன். ராஜேஸ்வரியும், குழந்தைகளும் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து போனார்கள்.

*************

கிருஷ்ணன் நான் எதிர்பார்த்தது போல் என் பக்கத்தில் அமர்ந்து கொள்ளவில்லை. நான் பெண்கள் இருக்கையில் பட்டிக்காட்டுப் பெண் ஒருத்தியின் பக்கத்தில் அமர்ந்துகொண்டேன். நாங்கள் ஸ்டேஷனுக்கு போய்ச் சேரும்போது ஏற்கனவே ரயில் வந்து பிளாட்•பாரத்தில் நின்று கொண்டிருந்தது. ஸ்டேஷன் முழுவதும் சந்தடியாக, பரபரப்பாக இருந்தது. கிருஷ்ணன் டிக்கெட் வாங்கி வந்து என் கையில் கொடுத்தான். டிக்கெட்டுக்கான பணத்தைக் கொடுக்கணும் என்று தோன்றினாலும் அவனு முகத்தைப் பார்க்கும்போது அதற்கான துணிச்சல் வரவில்லை. பழங்களையும், புத்தகங்களையும் வாங்கி வந்து கொடுத்தான். நான் கம்பார்ட்மெண்டில் ஏறி உட்கார்ந்து கொண்டேன். ரயில் கிளம்ப அதிக நேரமில்லை.
“போனதுமே மாமாவைக் கடிதம் எழுதச் சொல்லு” என்றான்.
“அவ்வளவுதானே தவிர நான் எழுதக் கூடாதாக்கும்.”
“அவ்வளவு அதிர்ஷ்டம் எங்களுக்கு இல்லை என்று எனக்குத் தெரியும்.” முறுவலுடன் சொன்னான்.
“உன்னுடைய கணிப்பு எப்போது சரியாக இருக்கும் என்று நினைக்காதே.”
“இந்த விஷயத்தில் கட்டாயம் நடக்கும்.”
“என்ன ஆளு நீ? மரியாதைக்குக் கூட மறுபடியும் வரச் சொல்லி அழைக்கவில்லை.”
முறுவலித்துக் கொண்டிருந்த கிருஷ்ணனின் முகம் கம்பீரமாக மாறியது. “நண்பர்களுக்கும், நெருங்கியவர்களுக்கும் இந்த வெளி உபசாரங்கள் தேவையில்லை என்பது என்னுடைய அபிப்பிராயம்.”
“நான் இப்போ சிநேகிதியா அல்லது நெருங்கியவளா?”
“உனக்குத் தான் தெரியணும்.”
“பேச்சில் நீ இவ்வளவு சாதுரியம் மிகுந்தவன் என்று எனக்குத் தெரியாது.”
“ராஜியின் கல்யாணப் பத்திரிகையை அனுப்பி வைக்கிறேன். முடிந்தால் வா.”
“இத ஆணையா இல்லை வேண்டுகோளா? ஆணை என்றால் அப்படியே ஏற்றுக் கொள்கிறேன். வேண்டுகோள் என்றால் போனால் போகிறது என்று யோசிப்பேன்.”
ஸ்டேஷன் சந்தடியை கவனித்துக் கொண்டிருந்த கிருஷ்ணன் தலையைத் திருப்பி என் கண்களுக்குள் நேராக பார்த்தான். என் மனதில் இருந்த எண்ணத்தைப் புரிந்து கொண்டு விட்டவன்போல் “ஆணை என்னிக்குமே இல்லை. வேண்டுகோள்தான்” என்றான் முன் ஜாக்கிரதையுடன்.
“அப்படி என்றால் நான் வரப் போவதில்லை” கோபம் வந்ததுபோல் இதழ்களை இறுக்கினேன்.
“கடைசி நிமிடத்தில் கூட என்மீது கோபம் கொள்ளணுமா? உங்க வீட்டில் உனக்கு சத்யபாமா என்று பெயர் வைத்திருக்கணும். சரியாக இருந்திருக்கும்.”
“ஆமாம் ஆமாம். உன் பெயருக்கு பொருத்தமாக இருந்திருக்கும்.” சட்டென்று நிறுத்திவிட்டேன். நான் என்ன சொன்னேன் என்று சொல்லி முடித்த பிறகுதான் புரிந்தது.
சிவந்து கன்றிவிட்ட என் முகத்தைக் கனிவுடன் பார்த்துவிட்டு பாடம் கற்றுத் தருவதுபோல் சொன்னான். “பார்த்தாயா, அதிகம் பேசுவதால் சில சமயம் எப்படிப்பட்ட ஆபத்துகள் வருமோ?”
ரயில் கிளம்புவதற்கு அடையாளமாக விசில் ஊதியது. சுற்றிலும் இருந்த சந்தடியை, உலகத்தை மறந்துவிட்டு இனி வாழ்க்கையில் சந்தித்துக் கொள்ள முடியாதோ என்பதுபோல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம்.
அவன் ஏதாவது சொல்வானோ என்று நான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். நான் ஏதாவது பேசுவேனோ என்று அவன் காத்திருந்தான். இருவர் மனதிலும் ஒரே எண்ணம்தான் இருந்தது. ஆனால் வெளிப்படையாக சொல்வதற்கு ஒருத்தருக்கு அபிமானமும், மற்றொருவருக்குத் தயக்கமும் தடையாக இருந்தன.
ரயில் நகர்ந்தது. கடைசியில் நான் தயக்கத்தை உதறிவிட்டுக் கையை நீட்டினேன். அவன் பற்றிக் கொள்ளப் போனான். அதற்குள் ரயில் நகரத் தொடங்கியதால் நான் இருந்த பெட்டி முன்னால் நகர்ந்தது. கிருஷ்ணன் பின் தங்கிவிட்டான். ரயில் வேகத்தை எட்டியது. அவன் வேகமாக நான்கடிகள் வைத்திருந்தால் என் கையைப் பிடித்திருக்க முடியும். ஏனோ அவன் அப்படிச் செய்யவில்லை. கைக்குட்டையை எடுத்து ஆட்டினான். நான் கையை அசைக்கவில்லை. ஏமாற்றமடைந்தவள் போல் அப்படியே பார்த்துக் கொண்டிருந்தேன். கிருஷ்ணனின் உருவம் கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் கூட்டத்தோடு கலந்து விட்டது.
“என்ன ஆச்சரியம்? நீ மறுபடியும் இதே ரயிலில் வந்து கொண்டிருக்கிறாயா?”
திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தேன். வைரத்தோடும், பேசரியுடன், நீல வண்ண மடிசார் புடவையில் பட்டா மாமி! நான் முறுவலிதேன். மாமி அருகில் வந்து உட்கார்ந்து கொண்டாள். நான் கம்பார்ட்மெண்டில் ஏறியபோது மாமி பாத்ரூமுக்குச் சென்று இருந்ததால் என்னைப் பார்க்கவில்லை. மகளை பார்த்து விட்டு வரும்போது தஞ்சாவூரில் இருக்கும் அக்காவைப் பார்க்கணும் என்று இறங்கினாளாம். தஞ்சாவூருக்கு வந்து இரண்டு நாளாகிறதாம். பெரிய கோவிலுக்குப் போய்விட்டு வந்தாளாம். மாமி ஏதேதோ சொல்லிக் கொண்டே இருந்தாள். ஆனால் எதுவுமே என் காதில் விழவில்லை. தாங்க முடியாத சோர்வு என்னை ஆட்ககொண்டது. தஞ்சாவூரை விட்டு விலக விலக அழகான கனவு ஏதோ கலைந்ததுபோல், எனக்கு விருப்பமில்லாத உலகில் நிர்ப்பந்தமாக, வேறு வழியில்லாமல் நுழைவதுபோல் தோன்றியது.

Series Navigation

முள்பாதை 25

This entry is part [part not set] of 25 in the series 20100411_Issue