பாலைவனமும் ஒரு பட்டிதொட்டி தான் !

This entry is part [part not set] of 54 in the series 20090915_Issue

வைதீஸ்வரன்


உலகின் எல்லாவித சீதோஷ்ண நிலைகளிலும் மனிதக்
குடியிருப்பு மிகவும் சகஜமாக அந்த சூழலை விட்டு எக்
காலத்திலும் பிரிய முடியாத ஈர்ப்புடன் வாழ்ந்து
கொண்டிருப்பதை நாம் பார்க்க முடிகிறது. உதாரணமாக
ரிஷிகேஸம் தாண்டி கேதார்நாத்திற்கு செல்லும் மலைப்
பாதை வழியே இருண்ட மாலைப் பொழுதில் இனமற்ற அச்சத்
துடன் வாகனத்தில் போய்க்கொண்டிருக்கும் போது உயரே
கறுத்து உயர்ந்து நிற்கும் மலைகளின் இடுக்குகளில் அங்கொன்
றும் இங்கொன்றுமாக விளக்கெரிந்து கொண்டிருக்கும் குடிசை
களைப் பார்க்கும்போது திகைப்பாக இருக்கிறது.. வசிப்பதற்கு
அப்படி ஒரு இடத்தை தேர்ந்துகொண்டவர்கள் எப்படிப்பட்ட
மன உரங்கொண்ட மனிதர்களாக இருப்பார்களென்று !!!
அதே போல் தான் மனித நாகரிகத்திற்கு வெகுதூரம்
தாண்டி பரந்த பாலைவனங்களில் கிராமம் கிராமமாக மக்கள்
வசித்துக் கொண்டிருப்பதை அறிகிறோம். அங்கே
ஒவ்வொரு குழு மக்களும் தங்களுக்கென்று ஒரு பிரத்யேக
அடையாளத்தையும் சமூக அமைப்பையும் வேறுபட்ட பேச்சு
முறையையும் கொண்டு அங்கே வாழ்ந்து வருகிறார்கள்.
அப்படி ஒரு Darfur என்ற கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர் தான்
Daoud Hari என்பவர் [இது அவர் பின்னால் வைத்துக் கொண்ட
பெயர்.] அவர் தங்கள் பாலைவன வாழ்க்கையை உலகம் அறியும்
வகையில் புத்தகமாக எழுதியிருக்கிறார்.

அவர் சொந்த ஊர் Darfur ஒரு பாலைவனக் குடியிருப்பு.
இது சூடன் நாட்டிற்கு மேற்கு திசையில் உள்ளது. ஒரு
சந்தர்ப்ப சூழ்நிலையால் அங்கே வருகிற ஐரோப்பிய ஆய்வாளர்
களுடன் பழக நேர்ந்ததால் ஆங்கில மொழியையும் பேசக் கூடிய
சாமர்த்தியத்தை பெற்றார்.. இதனால் பாலைவனக் குடியிருப்புமக்க
ளின் வாழ்க்கையை; பரஸ்பர போராட்டங்களை; அறியாமைகாரண
மாக அண்டை நாடுகள் அவர்களை பகடைக் காய்களாக பயன்படு
த்திக் கொள்ளும் பரிதாபத்தை விவரமாக எழுதியிருக்கிறார்.
ஆப்பிரிக்கர்களும் அரேபியர்களும் அவர்கள் குடியிருப்புகளை
பணத்தைக் காட்டி ஒன்றுக்கு எதிராக மற்றொன்றை தூண்டிவிட்டு
மொத்தமாக அழித்து விட ஓயாமல் செய்யும் சதியையும் அதனால்
மக்கள் நிரந்தரமாக மரணவாசனையிலும் அயராமல் மற்றவனை
அழிப்பதில் திட்டங்கள் தீட்டிக் கொண்டிருக்கும் அவல நிலைமை
யிலும் வாழும் விதத்தைப் பற்றி எழுதியிருக்கிறார்..
இதனிடையே பாலைவனத்திற்கும் தங்களுக்கும் உள்ள பிரிக்க
முடியாத உயிர்ப்பிணைப்பையும் நேசத்தையும் எழுதுகிறார்..
பாலைவனம் அன்னியர்களை உள்ளே விடாமல் அலைக்கழிக்கும்
குணம் கொண்டது. அங்கேயே பிறந்து வாழும் தன் மக்களுக்கு
அதன் ரகஸியங்களை பகிர்ந்து கொள்ளும் பான்மை கொண்டது.
Daoud hari பாலைவனத்தை பற்றி சொல்லும் சில ஸ்வாரஸ்யமான
செய்திகளை இங்கே பார்க்கலாம்

* * * * *
ஸஹாரா பாலை வனத்தின் வழியாக ஒட்டகத்திலோ அல்லது
வாகனத்திலோ பயணம் செய்வதற்கு நிறைய அனுபவங்கள் வேண்டும்.
அங்கே பாதைகள் கிடையாது.. வழி தொலைந்து அலைந்து அல்லல்
பட்டு தன்னந்தனியாக கேட்பாரற்று இறந்து போவதற்கு நிறைய
சாத்தியங்கள் உண்டு.
வடக்கு darfourல் இருந்து கொண்டு வரப்பட்ட சிவப்பு நிற
உப்பை ஒட்டகம் குடிக்கும் நீரில் கலந்து விடுவார்கள்..இதனால்
அவைகள் கொஞ்சம் நீர் குடித்தாலும் அதிக நேரம் சக்தி இழக்
காமல் இருக்க ஏதுவாகும். இங்கே குதிரைகள் உபயோகமில்லை.

கோடைகாலங்களில் சூரிய வெப்பம் பயங்கரமான உச்சத்துக்கு
போகும். குளிர் காலங்களில் பயணம் செய்யும் போது உங்கள் முகங்களை
கம்பளியால் மூடிக் கொள்ளவில்லையென்றால் பனிப்புயல் அடிக்கும் போது
உங்கள் முகத்தின் தோலுறிந்து ரத்தம் சொட்டும். ஆனால் ஒட்டகங்கள்
ஆயிரம் மைல்கள் கூட அசராமல் நடக்கக் கூடியவை.
ஸஹாராவில் பெரிய பெரிய மணல் சரிவுகள் கூடும் இடங்களில்
அநேக மனித எலும்புகள் சிதறிக் கிடப்பதை பார்க்கலாம். சில
இடங்களில் இந்த அறைகுறையான மனிதக் கூடுகள் தனது தோல்
சட்டைகளை இன்னும் போட்டுக் கொண்டு காற்றில் பட படக்கும்.
சில எலும்புகள் பல ஆண்டுகளாக வெய்யில் காய்ந்து வெளுத்துப்
போய் கிடக்கும்
பலைவனம் mirages என்கிற ஒரு மாயாலோகத்தையே
எழுப்பிக் காட்டி உங்களை ஏமாற்றி விடக் கூடியது.

கையளவு கூட இல்லாத ஒரு சின்னப் பறவை நெடுந்தூர மணல்
குன்றில் ஒரு ஒட்டகத்தைப் போல் பிரமை எழுப்பும். தட்டையான
மணல் வெளியை ஒரு குளிர்ந்து பரந்த ஏரி போல் விரித்துக்
காட்டும். கானல் ஒரு மனிதனின் எலும்புக் கூட்டை ஒரு பெரிய
அடுக்கு மாளிகை போல் நிறுத்திக் காட்டி ஒரு நகரத்தின் சமீபம்
வந்து விட்டதாக ஏமாற்றும்.
ஸஹாரா ஒரு மனிதனின் சாமர்த்தியத்துக்கு ஒரு சவால்.
மணற்காற்றின் வேகத்தில் நடந்து வந்த காலடிகள் அத்தனையும்
சுத்தமாக அழிந்து விடும்.
அங்கே சூரியனையும் நட்சத்திரங்களையும் எல்லா சமயங்களிலும்
தெளிவாக பார்த்துவிட முடியாது.. மணல் வெளிகளின் ஆயிரம் விதமான
மேடு பள்ளங்களால் மேகமற்ற வேளைகளில் கூட உங்கள் இலக்குகள்
நிச்சயமற்று திசைகள் குழம்பும்.
திசை காட்டும் மானி ஓரளவு நம்பும் வகையில் உதவியாக இருக்கும்.
ஆனால் திடீர் சூறவளிகள் எழும்பும் போது எச்சரிக்கையாக இல்லா
விட்டால் அது பழுதாகி விடலாம் அல்லது மணலில் புதைந்து தொலை
ந்து போய் விடலாம்.
பரம்பரையாக பாலைவனத்தில் பயணம் செய்பவர்கள் தங்கள்
மூதாதைகளிடமிருந்து திசைகளை அறிந்து கொள்ளும் தந்திரங்களை
அறிந்து வைத்திருக்கிறார்கள். நட்சத்திரங்களை குறி வைத்துக்
கொண்டு குச்சிகளை ஒரு விதமான வரிசையில் ஆழ நட்டு வைத்துவிட்டு
மறுநாள் அதன் துணையுடன் தங்கள் இலக்கின் திசையை சரியாக
தொடருவார்கள்.
பாலைவனத்தை அறியாதவர்கள் பலமுறை தூரத்தில் தெரியும்
உயர்ந்த மலைகள் போல் இருக்கும் மணல் குன்றுகளை அடையாளம்
வைத்துக் கொண்டு உறங்கப் போய் விடுவார்கள். மறு நாள் காலையில்
விழித்துப் பார்த்தால் மலைகளே காணாமல் போய் இருக்கும். அல்லது
இடம் மாறி வடக்கிலிருந்து கிழக்குக்கு போயிருக்கும்!! காற்றின்
அசுர வேகம் அப்படிப் பட்டது. அப்படி ஏமார்ந்து போனவர்கள்
ஒரே பரப்பிலேயே சுற்றி சுற்றி மாரடைத்து மடிந்து போவார்கள்.
ஒட்டகங்களின் அயராத தப்படிகளில் பலமுறை ஒரு வினோதமான
உலோக ஒலி எழும்புவதை கேட்கலாம். என்றோ இறந்து போன ஒரு
மனித எலும்பின் உதிரி பாகங்கள் தான் அப்படி ஒலி எழுப்பும்.!!
ஒட்டகங்கள் கடவுளின் உத்தமமான படைப்புகளில் ஒன்று.
எஜமானுக்கு மிக விசுவாசமாக நடந்து கொள்ளக் கூடிய நற்பிறவி.
ஒரு முறை இரவில் ஒரு திருடன் ஒட்டகத்தை பலவந்தமாக
ஓட்டிக் கொண்டு போன போது அது தந்திரமாக வட்ட வட்டமாக
நெளிந்து சுற்றி நடந்து போய் இருக்கிறது. காலையில் எஜமானன்
அந்த தப்படிகளின் குறிப்பை அறிந்து திருட்டுப் போன மிருகத்தைக்
கண்டறிந்து கொண்டானாம் !!
***
வனத்தோடு சேர்ந்தது பாலை
மனத்தோடு சேர்ந்தது துக்கம்
நினைப்பை பொறுத்தது
நீ தேர்ந்து கொள்ளும் உலகம்

* *

வைதீஸ்வரன்

குறிப்பு the translator
tribesman memoir
Dauod Hari

vydheesw@yahoo.com

Series Navigation