பரிட்சயம்

This entry is part [part not set] of 50 in the series 20040408_Issue

நா.கண்ணன்


பழகுவதற்கு
பரிட்சயம் அவசியமென்ற
குள்ள நரியின் கோரிக்கை
குட்டி இளவரசனுக்குப்
புரியவில்லை.
பரிட்சயம்
பழகுதலை
பழசாக்கிவிடும்
என்று சொன்ன
குட்டி இளவரசனின் விளக்கம்
குள்ள நரிக்குப் புரியவில்லை.
நாம் புதிதாய் பழகிவிட்டு
நாளை பிரிந்தாலும்
மீண்டும் புதிதாய் பழகலாம்.
இதுவே பிரிதலின் பலன்
என்று சொன்னபோது
குள்ள நரி குழம்பியே போனது!

nkannan@freenet.de

Series Navigation

நா.கண்ணன்

நா.கண்ணன்