நேற்றிருந்தோம்

This entry is part [part not set] of 44 in the series 20080410_Issue

அறிவிப்பு


நேற்றிருந்தோம்
நண்பர்களே!
நேற்றிருந்தோம் நிகழ்ச்சியின் அடுத்த கூட்டம், 27-04-2008 , மாலை 0400
மணிக்கு, அங் மோ கியோ சமூக நூலகத்தின் தக்காளி அறையில்
துவங்கும், திரு. செ.பா.பன்னீர்செல்வம், நேற்றைய சிங்கப்பூரின்
வாழ்வினை நம்மோடு பகிர்ந்து கொள்வார்.

நம் முன்னோர்களின் வாழ்வினை அறிந்து கொள்வதென்பது, நம்
மரபினையும், மதிப்பீடுகளையும் அறிந்து கொள்வதாகும், −இத்தகைய
அறிவு, அவர்களின் குறை, நிறைகளை உரைத்துப் பார்த்து, நமக்கான
மதிப்பீடுகளை உருவாக்கிக் கொள்ள துணைபுரியும்…நமது சாரத்தினை
−இழக்காதிருக்கவும், நம்மை புணருதாரித்துக் கொள்ளவும் உதவும்…

வேர்களை −இழந்து −இலவம் பஞ்சென அலைந்து கொண்டிருக்கும், நம்
சமூகத்தில் −இத்தகைய முயற்சிகள் அவசியமாகிறது. ஒவ்வொரு
பத்தாண்டுகளிலும், நம் சமூகம் அதன் ஆதாரமான வேர்களில் சிலவற்றை
முற்றாக −இழந்து போகிறது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளில் நம்
அலட்சியத்தால் −இழந்தவை விலைமதிப்பற்றவையா? வெறும்
குப்பைகளையா?

நிகழ்ச்சியில் பங்கெடுத்துக் கொள்ளுங்கள்… பகிர்ந்து கொள்ளுங்கள்.
என்றும் அன்புடன்,
சுப்பிரமணியன் ரமேஷ்
(வாசகர் வட்டத்திற்காக)
பாண்டித்துரை

http://pandiidurai.wordpress.com

http://begiinning.page.tl

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு

நேற்றிருந்தோம்

This entry is part [part not set] of 41 in the series 20071206_Issue

பாண்டித்துரை



இடம்: ஆமோக்கியோ நூலகம் (சிங்கப்பூர்)

தேதி: 25-11-2007

சிங்கப்பூர் வாசகர்வட்டம் அமைப்பின் – நேற்றிருந்தோம் – நேற்றைய நிகழ்வினை மீள் பார்வை செய்யும் முகமாக 1953 முதல் 1964 வரையிலான தான் வாழ்ந்த தேக்காவின் பகுதிகளை எழுத்தாளர் இராம.கண்ணபிரான் பகிர்ந்து கொண்ட நிகழ்வின் பதிவு.

இவரது இந்த தொகுப்பிற்கு உதவிய நண்பர்களை நினைவு கூர்ந்து நினைவலையில் எழுந்த 11ஆண்டுகளை கவிஞர் துரைச்சாமி எழுதிய 3-வரி கவிதையினை ஞாபகப்படுத்தி நிறைவுசெய்தார். எனக்கோ இந்த கவிதையினை முதலில் சொல்லி என்பார்வையை திறக்கிறேன்.

திரும்பி பார்க்கையில்

காலம்

ஒரு இடமாக

காட்சிஅளிக்கிறது (பக்கம் – 166)

நகுலன் கவிதைகள்

பொன். இராமசந்திரன் அவர்கள் அவருள் எழுந்து அடங்கிய எண்ணப்பேரலைகளுக்கான விடைதேடும் ஆவலுடன் எழுத்தாளர் இராம.கண்ணபிரானை அறிமுகம் செய்துவைத்தார்.

இராம.கண்ணபிரான் சிங்கப்பூர் சிறுகதை எழுத்தாளர்களில் குறிப்பிடதக்கவர். 25ஆண்டுகள் + உமாவுக்காக உள்ளிட்ட நான்கு சிறுகதை தொகுப்பு நாவல் என்ற இவரது பரிணாமம் இன்று அதித ஈடுபாட்டுடன் ஆய்வுக்கட்டுரை எழுதுதல் மலேசிய ஈழ இலக்கியத்தின் மீதான ஈடுபாடு என்று விரிந்துள்ளது.

நேற்று நான் இருந்த தேக்கா அல்லது நேற்றிருந்த தேக்கா எனும் அணுகுமுறையில் பள்ளிக்காலம் எழுத்தாளன் தேக்காவின் தொழில் மற்றும் மக்களின் வாழ்க்கைமுறை என்ற 3 பகுதிகளாக இருந்தது. 10 வயதில் ஆங்கில வழி கல்வி கற்பதற்காகவே தனது தந்தையால் சிங்கப்பூருக்கு 1953ல் வரவழைக்கப்பட்ட இவர் புதிய கல்விமுறை மஞ்சளாய் காட்சியளித்த சீன மாணவர்கள் என்ற பொருந்தா சூழலில் துவங்கிய பயணம் பள்ளிமாணவர்கள் பாடத்திட்டம் ஆசிரியர்கள் பள்ளிக்கட்டிடங்கள் என்று சிராங்கூன் சாலையினூடே தேடல் தொடர்கிறது. தனிமையான வாழ்வு புத்தகவாசிப்பினை ஊக்கப்படுத்திய நண்பர்கள் மாதம் ஒருமுறை எதிர்பார்க்கும் புத்தகங்களை சுமந்து வரும் கப்பல் இலக்கியவாசிப்பு என்று எழுந்து ஆண்ட பிறவியின் நினைவி னை கோர்வையாக எடுத்துச்சென்றார். நேதாஜி ஜவகர்லால் நேரு பிரிட்டானியஅரசு என்று எங்கும் மக்களால் வியாபித்து திரும்பதிரும்ப பேசப்பட்ட பேச்சுக்கள் ஆங்கில புழக்கம் இல்லாத அக்காலத்தில் பேசப்பட்ட பஜார் மலாய். குறியீடுகள் கொண்டு ஊருக்கு அனுப்பிய பணவிடை நாணயங்கள் நாணயவிகிதம் முதன் முதலாக விமானத்தை இரண்டு தினங்களாக இடைவிடாது பார்த்து ரசித்த மக்கள். பதின்ம வயதில் பணிக்கு வந்த தமிழர்கள் அவர்களின் கடினமான உழைப்பு பொழுதுபோக்கு . முதல் தலைமுறையில் வேறூன்றிய தமிழர்கள் . பயணத்தமிழர்கள் என்று இருவேறுபட்ட பார்வையில் இவர்களின் வாழ்வாதாரங்கள் தேக்காவின் கட்டிடங்களின்ஊடே கடைவிரிக்கப்பட்ட வியாபாரங்கள் என்று ஜன்னல் வழி பார்த்த பல விசயங்கள் பின்னால் இவரும் இவருடைய நண்பர்களின் கதை வாயிலாக இடிபாடுகளுக்கு இடையில் மீட்டெடுத்து பதிவுசெய்துள்ளனர்.

பெட்டிசன் கந்தசாமி என்ற பதிவுசெய்யபடவேண்டிய தனிமனிதர்கள் பற்றிய சுவாரஸ்யமான பக்கங்கள் என்று மறக்கடிக்கபட்டவை மறுபடியும் தூசிதட்டப்பட்டுள்ளது.

சட்டைக்காரர் ஒட்டுக்கடை முனைகடை காலிஆட்கள் அலுவலக தம்பி என்று நான் அறிந்திராத புதியசொல்லாடல் தனிமனித பார்வையில் நிகழ்வுகள் பதிவுசெய்யப்படவேண்டிய அவசியம் என்று நேற்றிலிருந்து மீண்டபொழுது என்னிலும் அதிர்வலைகள் . தேடலுக்கான தடமாய் மாறக்கூடும்.

பேச்சினூடே கண்ணபிரான் அவர்கள் சொன்னது நினைத்துபார்க்கும் அளவில்தான் பின்னோக்கிய தேடல் இருந்துள்ளது. நான் கதைகேட்கும் ஆர்வத்தில்தான் இந்த நிகழ்வினை அணுகத்தொடங்கினேன். அனுபவங்களை பகிர்ந்துகொண்டது வாசிப்பாக இருந்ததால் என்னுள் ஏதோ கொஞ்சம் சுவாரஸ்யம் தடைபடுவதாக உணரமுடிந்தது. இந்நிகழ்வின் பகிர்வுள் அடுத்த தலைமுறைக்கு ஒலி ஒளி அல்லது அச்சு வடிவில் எடுத்துசெல்லும் பொழுது நான் முழுமையாக கண்டுணரக்கூடும் . அதற்கான சாத்தியக்கூறுகளும் இருப்பதாக இராம.கண்ணபிரான் அவர்கள் கூறியுள்ளார். இந்த சந்திப்பிற்காக 15-நாட்கள் நீண்டதொரு போராட்டமாய் 1950 காலகட்டத்தின் நிகழ்வுகளின் நினைவுகளில் மூழ்கி வந்ததும் அன்றைய தேக்காவின் இன்றைய மாற்றங்களை கடைகளின் மாற்றம் அந்த கடைகளின் பெயர் தற்போதைய வாணிபம் உள்ளிட்ட அம்சங்களை தேடிவந்தமையும் மீள்பார்வையின் அவசியம் மற்றும் அக்கறை சார்ந்த பார்வையினை உணரமுடிந்தது.

வெகுசிலரே இந் – நிகழ்வில் கலந்துகொண்டாலும் மாற்றுத்தளம் அடுத்தகட்டநகர்வு என்ற தடையற்ற பயணத்தின் தூண்டுகோலாய் சிலர் எழுந்து வருவது கண்ட மகிழ்ச்சியுடன் நிகழ்விற்கு களம் அமைத்துதந்த அமோக்கிய நூலகம் மற்றும் அதன் நிர்வாகிகள் அனைவரையும் நினைவுகூர்ந்து நிறைவுசெய்கிறேன்.

பதிவு: பாண்டித்துரை

03.12.2007

pandiidurai@gmail.com

Series Navigation

பாண்டித்துரை

பாண்டித்துரை