தருணங்கள்

This entry is part [part not set] of 41 in the series 20110102_Issue

பாவா சாகிப் சபீர் அகமது


:

வாப்பா,
போய்ட்டீங்க…
மீண்டும் போய்ட்டீங்க…
எங்களை தவிக்க விட்டுட்டு
போய்ட்டீங்க…
இம்முறை-
எத்தனை முயன்றாலும்
மீட்க முடியாத இடம்…
எவ்வளவு நடந்தாலும்
தொடர முடியாத தூரம்!

அழுவது ஆணுக்கு அழகல்ல-
அழுவது நானல்ல…
என் உயிர்!

எத்தனை கனவுகள்
தேங்கிய கண்களை…
அத்தனை அருகில் தேடியும்-
வெற்றுப் பார்வையோடு
ஒற்றையாய் நீங்கள்!

ஆவி பிறிவதை – மிக
அருகில் பார்த்தேன் – உங்கள்
ஜில்லிட்ட விரல்கள்
பற்றிக்கொண்டே…!

வாழ்வியல் தத்துவத்தின்
தவிர்க்க முடியா தருணங்களை
இத்தனை விளக்கமாய்…
இதுவறை கற்றதில்லை!

சற்றேனும் கவனமின்றி
சிறு பிரயாசையுமில்லாத
அனிச்சை சுவாசம்
எங்கோ பிழைத்து
மூச்சு
இழுத்து விடுவது
இத்தனை சிரமாக
மாரிப்போயதா!

உங்கள்…
இறுதி மூச்சுக்காற்றை
என் –
சுவாசமாய் இழுக்க…
அசைவற்றுப் போனீர்கள்!

போய்ட்டீங்க என
கதறிய
சொந்த பந்தங்களின்
சப்தங்களினூடே…
கேட்டதா உஙகள்
மகனின்
உயிர் அழும் ஓசை?!

உங்கள்
மரணம் சகித்து…
குளிப்பாட்டி…
நறுமணமூட்டி…
கோடித்துணி போர்த்தி…
கட்டிலிலிட்டு…
காண விரும்பாத காட்சியாய்-
உஙகள் கோலம் கண்டு…
போய்ட்டீங்களே வாப்பா!

நீங்கள் போட மறந்த
உங்கள் செறுப்பணிந்து…
நீங்கள் நடக்க மறந்த
நடை நடக்கிறேன்…
உங்களுக்கு மிக அருகில்…
இறுதி ஊர்வலத்தில்!

அடக்கம் செய்து
அடக்க முடியாத
அழுகையோடு
திரும்பி நடக்கிறேன்…
மயானம் விட்டு…
போய்ட்டீங்களே வாப்பா!

வந்தது வாழ்ந்தது…
தொட்டது விட்டது…
எல்லாம் அற்றுப்போய்
காற்றுக் குமிழியென…
வெடித்துப் போயிற்று உயிர்!

மயாணத்தில்
கற்றுக்கொண்ட பாடத்தோடு
எஞ்சிய நாட்களை வாழ
இதோ நான்!
– —பாவா சாகிப் சபீர் அகமது

sabeer.abushahruk@gmail.com

Series Navigation

பாவா சாகிப் சபீர் அகமது

பாவா சாகிப் சபீர் அகமது

தருணங்கள்..

This entry is part [part not set] of 28 in the series 20081218_Issue

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி



முன் எப்போதோ நான்
முன்வைத்த யோசனையாம்.
முற்றிலும் நினைவிலில்லை.
வாங்கிய இடமொன்று நல்ல
விலை இப்போதென்று
கண்களில் ஒளிகொண்டு
கைகளைப் பிடித்தபடி
கடைத்தெருவில் ஒரு நண்பன்.

மகனுக்கு வாங்கிவந்த
மாநிற உடைகுறித்து
மற்றெப்போதும் போலன்றி
மனம்குளிர்ந்த வாழ்த்துக்கள்
மனைவியிடம் வீட்டில்.

இயல்பாய் நிகழும்
இதுபோன்ற தருணங்களில்
இளைப்பாறி களைப்பாறும்
இல்வாழ்வின் நிகழ்கணங்கள்.


SJEGADHE@tebodinme.ae

Series Navigation

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி