சோனியாஜி அவர்களே! – நீங்கள் யார்? என தயவு செய்து சொல்லுங்கள்

This entry is part [part not set] of 39 in the series 20110123_Issue

TSV Hari தமிழில் தொகுத்தது: சேஷாத்ரி ராஜகோபாலன்TSV Hari அவர்களின் “Soniaji- Please tell us who you are really “on December 26, 2010 http://www.sanghparivar.org/forum/conspiracy-behind-unique-id-number-for-indian-citizens
ஆங்கிலக் கட்டுரையிலிருந்து

தமிழில் தொகுத்தது: சேஷாத்ரி ராஜகோபாலன்

ஸ்ரீ ஹரி (TSV Hari) அவர்கள் எழுதிய ஆங்கிலக் கட்டுரையைப் படித்து முடிந்தவுடன் தமிழில் எடுத்துத் தொகுத்தவரின் முதல் பிரமிப்பு, இச் சொற்களில் உடனுக்குடனே விளைந்தது. பூந்து விளையாடி விட்டார், போங்கள்!

கனவிலும் நினைக்க முடியாத இடங்களிலிருந்து ஒரு கட்டுக்கோப்புடன் ஒருங்கே அடுத்தடுத்து முரண்பாடின்றி திரட்டிய ஆவணங்கள் அனைத்தையும் ஸ்ரீ ஹரி அவர்கள் எப்படித் தேடித் தேடித் தொகுத்துள்ளார் என அறியும் போது எனக்குள் மலைப்பு தான் மேலோங்கியது. இக்கட்டுரையை ஒரு முறைக்கு மறு முறையென இரு தடவை படித்துத் தெளிந்தேன். படிக்கும் போது கூட “James Bond 007” திரைப்படக் கதையை படிப்பது போல உணர்ந்தேன். படித்து முடித்தவுடன், இதைத் எல்லா தமிழ் மக்களும் அறிய வேண்டுமே எனும் பேராவல், என் பிடரியை பிடித்துத் தள்ளியது போல, என்னை உடன் தூண்டி விட்டது. மற்ற எல்லா அலுவல்களையும் ஒதுக்கித் தள்ளிவிட்டு, உடனுக்குடன் இத்தமிழ் தொகுப்பில் என்னை ஈடுபடவும் வைத்துவிட்டது. ‘அரசியல் ராஜ தந்திர’ம் என்றால், (diplomacy) ‘நாடு விட்டு மற்றொரு நாட்டிலும் சென்று கொலை புரிய வைத்தல்’, இடையில் சரிவு ஏற்படாதவாறு மிகவும் கவனத்துடன் செயல்படுத்தி, எதிர்பாராமல் எதையும் தற்செயலாகக் கூட நடக்க விட்டுவதில்லை என்ற கருத்துடன் – அதாவது”தங்கள் திட்டங்களை முற்றிலும், கால் புள்ளி, அரைப்புள்ளி, முற்றுப் புள்ளி முதற்கொண்டு அத்தனையும் ஒன்றுவிடாமல் நிறைவேற்று வதில் வல்லமை படைத்தல்” எனும் மற்றொரு அங்கமும் உள்ளது என நான் இதுவரை அறியாத விவரத்தை இப்போது விலாவாரியாக நன்கு அறிந்து, தெளிவும் பெற்றேன்.

இனி, ஆங்கிலக் கட்டுரையில் உள்ளபடி செல்வோம்:

அன்றைய “எட்விகே அன்டோனியோ அல்பினா மைனோ (Edvige Antonia Albina Maino) எனும் இன்றைய “சோனியா காந்தி!” அவர்களைப் பற்றிய முழு விபரங்களை இங்கே தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

முதலில் சில அடிப்படை கேள்விகள்::

• இத்தாலியில் பிறந்து இந்திய ‘ராஜீவ் 1968 இல், காதல் மணம் புரிந்தமையால், அவருக்காகப் பிரத்யேகமாக இறக்குமதி செய்யப் பட்டவரா? அல்லது
• நேரு வம்சத்தவர் என்பதால் மட்டுமே தேர்ந்தெடுக்கப் பட்டு, காங்கிரஸ் கட்சியிலுள்ள “ஆமாஞ்சாமி” களால் அங்கீகரிக்கப்பட்டு காங்கிரஸ் மேலாண்மைத் தலைவரென என இந்தியாவில் கோலோச்சிக் கொண்டு இருப்பவரா? அல்லது
• உலகிலேயே மிகச் சிறந்த புராதன கலாச்சாரமான இந்திய நாட்டை எல்லாவிதத்திலும் அழித்து விட, கெட்ட எண்ணங்கொண்ட பகைவர்கள் தூண்டிக் கொடுத்தவாறு, நெடு நோக்கு-நுழைபுலத்துடன் ஒரு செயல் திட்டப்படி, நுழைக்கப்பட்டு இருப்பவரா? மேலும்
• அதே கொடு நோக்கு-பகைமை எண்ணத்துடன், ஹிந்துஸ்தானையே, நிர்மூலமாக்கி விட வேண்டுமென சங்கல்பம் செய்து கொண்டு இங்கு வந்தவரா?

இனி அவரைப்பற்றி மட்டுமே நன்கு பகுத்தறிவுக் கூறுபடித்தி விமர்சிப்போம்.

தந்தை ‘ஸ்டெஃபினோ’ தாய் பயோலா மைனோ

இவர் தந்தை ‘ஸ்டெஃபினோ’, தாய் பயோலா மைனோ ஆகியோருக்கு அருந்தவப் புதல்வியாக, ‘வெஸென்சா’ எனும் இத்தாலிய ஊரின் பக்கத்தில் 30 கி.மீ உள்ள “ஓர்பஸ்ஸானோ” (Orbassano) எனும் கத்தோலிக்கக் கிருஸ்தவ மிகச் சிறிய கிராமத்தில், டிஸம்பர் 9, 1947 இல் பிறந்தார்.

முதலில் ஒன்றைக் கவனிக்க வேண்டும். காந்தி எனும் சிறப்புப் பெயரிட்டுக் கொண்ட நேரு வம்சத்தில், மூன்று நபர்கள், இதுவரை இயற்கையாக மரணத்தை அடையவில்லை. இந்தப் பட்டியலில் ‘மோகன் சந்த் கரம்சந்த் காந்தி’ யின் பெயர் சேர்க்கப்பட வேண்டியதில்லை. (MK Gandhi) ஏனெனில், ‘காந்தி’ என்ற பெயர், இவருக்கு உண்மையான குடும்பப் பெயர் (surname). ஆனால், இந்திரா காந்தி எனும் பெயரில் உள்ள காந்தி எனும் சொல், ‘கான்’ எனும் முஸ்லிம் பெயருக்கு பதிலாக ‘காந்தி’ பெயர் முதன் முதலாக ஒட்டிக் கொள்ளப்பட்டது. இம்மூவரும் துர்மரணத்தையே அடைந்துள்ளனர்.

கீழே உள்ளவர்களெல்லாம் நேரு வம்சாவளியைச் சார்ந்தவர்கள்.

ஜவஹர்லால் நேரு – இந்திய முதல் பிரதம மந்திரி இவருக்கு காந்தி எனும் பெயர் சேர்க்கப்பட வில்லை. (அதனால் இவர் கொல்லப்படவில்லை போலும்!!)

இவர் மகள் இந்திரா காந்தி, பிரதம மந்திரியானார் – ‘பெஃரோஸ் கான்’ எனும் முஸ்லிமை மணம் புரிந்து, ‘கான்’ எனும் மூல குடும்பப் பெயரை மாற்றி ‘காந்தி’ என இந்திய மக்களை ஏமாற்றவே “கான்” என்ற இடத்தில், புதிதாக “காந்தி” என ஒட்டப் பட்டது. 1984இல், “Operation Blue star”க்குப் பின்னர் இந்திரா சீக்கியர்களால் மிகவும் வெறுக்கப் பட்டார். இவரும் கொலை செய்யப்பட்டார்.

இந்திரா காந்தி இரண்டாவது மகன் ‘சஞ்சய் காந்தி’ – அதாவது ‘சோனியா’வின் மைத்துனர். இவர், 1980இல் இந்திரா காந்தி மீண்டும் பிரதமராக வர, தேர்தல் சமயத்தில் அரும் பாடுபட்டவர். இந்திரா காந்திக்கு அடுத்தபடியாக இந்தியா நாட்டின் பிரதமராக வருவார் என எதிர்பார்க்கப்பட்டார்.

‘சஞ்சய்’ பெயருடன் ‘கான்’ எனும் பெயர் சேர்க்காமல், ‘காந்தி எனும் பெயர் ஒட்டப்பட்டது. இவரும் ஆகாய விமானதை ஓட்டும் போது 1980 இல் விபத்துக்குள்ளாகி துர் மரணமடைந்தார். இந்த துர் மரணமும், 1968இல், ராஜீவ்ஜி சோனியாவை மணந்த பின்னரே தான் உண்டானது.

இந்திரா காந்தி 1984 இல் கொலை செய்யப்பட்டதை அடுத்து, இந்திராஜியின் முதல் மகன் ‘ராஜீவ் காந்தி’ அதுவரை விமான ஓட்டியாக இருந்த வரை, நேரு-காந்தி வம்சாவளியில் வாரிசாக பிரதம மந்திரி பதவியில் பட்டம் கட்டிக் கொள்ள அழைக்கப் பட்டார்.

ராஜீவ்ஜியும் சோனியாவை மணந்த பின்னர்தான், விடுதலைப் புலிகளால் (LTTE) ஸ்ரீபெரும்பூதூரில் மனித வெடிகுண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டார்

ஆக, ‘காந்தி’ எனும் பெயருக்கும், நேரு வசத்திற்குமே இதுவரை ராசியில்லை. ஏன்? இதற்கெல்லாம் பின்னணி என்ன சற்று ஆராய்வோமா?

சோனியாவின் தந்தை ‘ஸ்டெஃபினோ’, ஜெர்மனி சர்வாதிகாரியுடன் சேர்ந்த ‘பெனிட்டோ முஸ்ஸோலினி’ படையினருடன் இரண்டாவது உலகப் போரில் சண்டையிடும் போது உலகத்தை அன்று ஆட்டிப்படைத்த மிக பயங்கர “கேஜிபி” KGB [Komitet Gosudarstvennoy Bezopasnosti] எனும் ரஷ்ய உளவு நிறுவனத்தால், கைது செய்யப்பட்டார். இவர் ‘வ்லாடிமீர்’ ரஷ்ய சிறையில் சித்திரவதை செய்யப் பட்டதையடுத்து, தங்களுக்கு சாதகமாக உளவறிய ரஷ்யர்களால் ‘ஸ்டெஃபினோ’ சம்மதத்துடன் புதிதாக “கேஜிபி”யால் ஆள் சேர்க்கப்பட்டார். இன்னும் சிலர் இவர் இத்தாலிய மாஃபியாவைச் சேர்ந்தவர் (Mafia) என சொல்கிறார்கள். இன்னும் பலர் இவரை இன்று இந்தியாவைத் தன் உண்மையான தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும், மாஃபியாவைச் சேர்ந்தவர் (Mafia) எனும் சொல்கிறார்கள். எந்த மாஃபியா அங்கத்தினரும் – “ஓமேர்ட்டா” (‘Omerta’) என்ற “பொன்னான மௌனம்” (golden silence) எனும் செயல்பாணியில் செயலாற்றுபவர்கள். இதை மீறுபவருக்கு விரும்பத்தகாதவாறு உடனுக்குடன் துர் மரணம் கட்டாயம் உண்டாகும் என்பது உலகறிந்த சமாச்சாரம். இவர்கள் செயல் திட்டம் மிக திறன் வாய்ந்தது. தங்கள் திட்டங்கள் முற்றிலும் நிறைவேற்றுவதில் இவர்கள் மிகவும் கவனத்துடன் செயல்படுபவர்கள் இவர்கள் எதிலும் தற்செயலாக எதிர்பாராமல் நடக்க விட்டுவதில்லை என உலகத்தாரால் சொல்லப்படுகிறது. இதன் பின்னணியை இன்னும் ஒரு முனைப்பாக ஆராய்வோம்.
1965இல், ராஜிவ்ஜி இங்கிலாந்து-லண்டனில் படிக்கும் போதே, முதன் முதலாக, ராஜீவ்ஜி அடிக்கடி செல்லும் ஒரு சிற்றுண்டி நிறுவனத்தில் ‘சோனியா’ பணி புரிந்திருக்கிறார். இந்த சிற்றுண்டி நிறுவனம் – பாகிஸ்தான் உளவுப்பிரிவு ISIஐச் சார்ந்த ‘சல்மான் டஸ்ஸிர்’ (Salman Thassir) என்பவருடையது. இங்கேதான் “சோனியா”-“ராஜீவ்ஜி” இருவருடைய காதல் பூத்து மலர்ந்தது (அல்லது “ ரஷ்ய கேஜிபி” KGBயால் மலரும்படி திட்டப்படி நடத்திக் காட்டப் பட்டதா?). இவர்கள் திருமணத்திற்கு சியாரிசு செயதவர்கள் இருவர்: 1) டி.என். கௌல் (T.N. Kaul) ரஷ்யாவில் இந்தியாவின் தூதராக பணி புரிந்தவர்;

2) இந்திய உளவு ஸ்தாபனமான RAW – Research and Development Wing இன் இயக்குனர் “ராமேஷ்வர் நாத் கௌ”. இவரும் ரஷ்ய “கேஜிபி” KGB க்கு மிக மிக நெருங்கியவர். இவரும் ரஷ்யர்களுடைய இந்தியப் பணிக்காக ஆள்சேர்க்கப் பட்டவர் என பெயர் பெற்றவர். டி.என். கௌல், “ராமேஷ்வர் நாத் கௌ” (Rameshwar Nath Kao); இவ்விருவரும் காஷ்மீர் பண்டிட் இனத்தவர். நேருவும் ஒரு காஷ்மீர் பண்டிட் தான்.
இங்கு மற்றொரு ரகசியம். ரஷ்யா சிறு சிறு நாடுகளாகச் சிதைத்த பின்னர், ரஷ்ய “கேஜிபி” KGB யின் இயக்குனர், “விக்டார் செப்ரிகோவ்” (Viktor Chebrikov), தன்னுடன் மிக மிக ரகசிய மூல ஆதார ஆவணங்களுடன், சொந்த நாட்டைவிட்டு மேலை நாடுகளுக்கு சமயம் பார்த்து ஓடிப்போனவர் / விலகியவர்.

இவருடைய பயங்கர வாக்குமூல ஆதாரங்கள் இன்றும் இருப்பினும், உண்மையில் இன்னமும் நிரூபிக்கப் படாமல் பல இருக்கின்றன. – அந்த ஆவண ஆதரத்தில் நேரு வம்சத்திற்கு சட்ட விரோத செயல்களுக்கான நிதி வழங்கப் பட்டதென உள்ள அமுங்கிக் கிடக்க்கும் வாக்கு வாக்குமூலம் ஒன்று இருக்கிறது.

இந்த “விக்டார் செப்ரிகோவ்” ஆவணங்கள் உண்மையானவை என ஹார்வர்ட் பல்கலைக்கழக அறிஞர் “யெவ்கினா அல்பாட்ஸ்” (Harvard scholar of Slav extraction Yevgenia Albats) உறுதியாகச் சொல்கிறார். “விக்டார் செப்ரிகோவ்” ஆவணங்கள் கீழ்க்கண்ட உளவு நிறுவனங்களில் இன்றும் இங்கே உள்ளது.
• அமெரிக்க CIA of USA
• Military Intelligence 6 or Secret Intelligence Service of the United Kingdom.
இந்த ஆவணங்களில் முன்னாள் சோவியத் நாட்டு [CPSU] politburo பல நாடுகளுக்கு சட்ட விரோத செயல்களுக்கான நிதி வழங்கும் மேலாண்மையின் கையொப்பமும் உள்ளது. இந்த ஆவணத்தில், இந்திராஜியில் ஆரம்பித்து, “சோனியா”வின் தாய், தந்தை, ராஜீவ்ஜி, சோனியாஜிக்கும் வழங்கப்பட்டதென உள்ளது. இதில் மிக முக்கியமாகக் கவனிக்கவேண்டிய மற்றொரு ஆவணம், இதில் சோனியாஜியின் இளம் பிராய மகன் எனக் கண்டு இருக்கிறது. (வேறு யாராக இருக்க முடியும்? இவர் ஒரே மகனான அன்று 21 வயதிற்கு உட்பட்டவராக இருந்த, இனி வருங்கால பிரதமாக இன்று பயிற்சி அளிக்கப்படும், ராகுல் காந்தி தான்). இன்னொரு முக்கிய தகவல்: டிசம்பர் 1985 முன்னரும் சோவியத் நாட்டு [CPSU] politburo ஸ்தாபனத்திலிருந்து வழங்கப்பட்டுள்ளது எனவும் இருகிறது.
கற்பனைக்கும் எட்டாத இத்தனை அதிக ரொக்கத்தை இவ்வளவு நாள் கணாமல் முதன் முதலில் நேரில் கண்டபின், குட்டிபோட்ட பூனையென, இந்தியாவிலும் மற்ற வெளி நாடுகளிலும் அடிக்கடி தகவல் துறைகளுக்கு சோனியாஜியின் தாய்-தந்தை (Stefano- Paola Maino) பேட்டியளித்தபடி, ராஜீவ்ஜியை சோனியாஜி மணந்ததால் தங்களுக்கு எவ்வித நிதி ஆதாயம் எதுவும் ஏற்பட்டுவிட வில்லை, மாறாக நஷ்டம் தான் ஏற்பட்டுள்ளது என “எங்கப்பன் குதிருக்குள் இல்லை” யென ரகசியத் தகவலை கேட்காமலேயே இப்படி உளறிக்கொட்டுவது இன்னும் நம் சந்தேகத்தை வலுப் படுத்துகிறது. சோனியா காந்தியின் தாய் Paola Maino 1983 இறந்துவிட்டார்.
இந்திய மக்கள் மனதைப் புண்படுத்த, இன்னமும் சேதத்திற்குச் சேதமாக இந்த ஆவணங்கள் இன்று நிரூபிக்கின்றன.

மேற்கோள் குறிப்பீடுகளாக:
1. ரஷ்ய CPSU/CC/No 11228/3 dated 20 December 1985இல் உள்ளபடி கிஞ்சித்தும் ஐயமின்றி சோனியா காந்திக்கும் அவர் குடும்பத்திற்கும் (தாய் தந்தை, மைனர் மகன் ராகுல் காந்தி) சட்ட விரோத செயல்களுக்கான நிதி வழங்க சோவியத் ரஷ்ய ஆணை உள்ளது. USSR Council of Ministers in Directive No 2633/Rs dated 20 December 1985. இது ரஷ்ய தணிக்கை மூலமாக உண்மையென CPSU/CC resolution No 11187/22 OP dated 10/12/1984 நிரூபிக்கும் சான்று ஆதாரம் உள்ளது. இதை மீண்டும் 1992இல், ரஷ்ய அரசாங்கமும் உறுதிபடுத்தியுள்ளது.
2. இதில் மற்றொரு ரகசியம்: இந்த சட்ட விரோத செயல்களுக்கான நிதி வழங்க ராஜீவ்ஜி 1992 மறைவுக்குப் பின்னரே ஆணையிடப்பட்டுள்ளது.
3. 1991இல், ஸ்விட்சர்லாந்தில் உள்ள சோனியாஜியின் மைனர் மகன் ராகுல் காந்தியின் பெயரால் திறக்கப்பட்ட ஒரு ரகசிய எண் வங்கிக் கணக்கில், US$ 2 billion – அதாவது 200 லட்ச அமெரிக்க டாலராக பாதுகாப்பு நிதியை வரவு வைக்கப்பட்டிருக்கிறது என ஸ்விஸ் அரசாங்க பத்திரிக்கையில் (Swiss magazine Schweizer Illustrierte) காணப்படுகிறது. தோண்டத்தோண்டக் கிடைக்கும் ‘ஆற்று மணல் ஊற்று’த் தண்ணிர் போன்று, தொடர்பான ஆவணங்களில் மற்றொன்று, செப்டம்பர், 21, 2005இல், ராகுல் காந்தியும் அவர், ஸ்பானிஷ் பெண் நண்பர், “வெரோரிக்” ஆகிய இருவருடன் (Rahul Gandhi and his Spanish girlfriend Veronique) பாஸ்டன் விமான நிலையதிலுள்ள அமெரிக்க உள்நாட்டு உளவு நிறுவன ஆவணப்படி (Federal Bureau of Investigation), கணக்கில் வராத, அல்லது கணக்கு சொல்ல முடியாதபடி உள்ள அமெரிக்க டாலர் இரு லட்ச டாலர் (US$ 200,000) இவர்களிடம் ரொக்கமாக இருந்தாகக் கண்டெடுக்கப் பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக டில்லி மேல் நீதி மன்றத்தில் உள்ள “பொதுமக்கள் சட்டப்படி உரிமை வழக்கு” (Public Interest Litigation [PIL] 2005இல் பதிவாகியுள்ளது. இவ்வழக்குக்கு இன்னும் தீர்ப்பளிக்கப் படவில்லை.

4. நான்காவது செய்கையாக, மற்றொரு நேரு-காந்தி வம்ச எரிச்சலூட்டும் நெருஞ்சி முள்ளான ‘சஞ்சய் காந்தி’யை விமான விபத்தில் துர் மரணம் என நமக்கு எண்பித்து, பின்னர், அவர் விதவை, ‘சீக்கியராக’ப் பிறந்த ‘மனேகா காந்தி’ யையும் அவள் கைக்குழந்தை ‘வருண் காந்தி’யையும் அரசியல் நாடகக் காட்சிப் பிரிவு போன்று, புகுந்த வீட்டிலிருந்தும் அகற்றப்பட்டார்.

இது பின்னர் ‘சீக்கியர் வணங்கும் பொற்கோவிலில் – Operation Bluestar in mid-1984இல், விளைந்தது. இதில் “அகால் தக்த்” எனும் சீக்கிய உலகியல் சார்ந்த அலுவலக கட்டமைப்பையும் “ஹர்மீந்தர் சாஹேப்” பும், நிர்மூலமாக்கப் பட்டது. இதுவும் டி.என். கௌல், “ராமேஷ்வர் நாத் கௌ” ஆகியோரின் அறிவுரைபடி, நடந்தேறியது. இதே இந்திராஜியால் மிகவும் ஆதரிக்கப்பட்ட சீக்கிய குண்டாவான கேடி- KD (Known Desperado) அரசியலில் மனித உருவிலுள்ள அரக்கன் (Frankenstein), ‘ஜெர்னைல் பிந்த்ரேன்வாலா’ வும் போட்டுத் தள்ளப்படார். இவரை இப்படி உண்டாக்கிவிட இந்திரா காந்தியிடம் முதன் முதலில் சிபாரிசு செய்தவர்கல் கௌல், கௌ ஆகிய இரட்டையர் தான்.

முன்னர் 1971 நடைபெற்ற பங்களாதேஷ் போரில், 92000 பாகிஸ்தான் போர்க்கைதிகளை யும் இவர்களுக்கு தலைமை தாங்கிய பாகிஸ்தான் தளபதி, AAK Niaziயை கைது செய்தது மட்டுமல்லாமல், இப்போரில், தோளோடு தோள் கொடுத்து ஒன்றாகப் போரிட்ட இந்திய ராணுவத்தைச் சார்ந்த, “ஷன்பக் சிங்ஜியும், குல்தீப் சிங் ப்ரார் என்பவர்கள் இருவரும் Operation Blue star in mid-1984இல், எதிரும் புதிருமாக, போரிட நேர்ந்தது. ஷண்பக் சிங்ஜி சீக்கிய வன்முறையாளர்கள் சார்பிலும், குல்தீப் சிங் ப்ரார் இந்திய ராணுவத்தை தலைமையேற்றுப் போரிட்டனர். இது இந்திய ராணுவத்தினர் மீதே, பொதுவாக சீக்கியர்களிடம் ‘கெட்ட குருதி ஓட்டத்தை’ ஏற்படுத்த (bad blood) வேண்டுமென திணிக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, இந்திராஜி அவருடைய இரு மெய்க்காப்பாளரால் வீட்டுத் தோட்டத்திலேயே ‘ஸ்டென் துப்பாக்கிக் குண்டுகளால் (Sten-Gun) சரமாரியாக உடல் முழுதும் சல்லடையாகத் துளைத்து, கொலை செய்யப்பட்டார். இதனால் இந்திராஜியையும் சீக்கியர் மனதிலிருந்தும் நிரந்தரமாக நீக்கப்பட்டார்.
[[[இங்கு நாம் ஒன்றை மனதில் இறுத்தி வைத்துக் கொள்ள வேண்டும். இந்திய நாட்டுப் பற்றை நிரூபிக்க, சீக்கியர் எவருக்கும் எந்நாட்களிலும் குறைந்தவர்கள் அல்லவே அல்ல. சொல்லப் போனால், மிகவும் போற்றிப் புகழத் தக்கவர்கள். இவர்கள் அன்று, ஹிந்துக்களுக்காகப் போரிடாவிட்டால் இந்திய நாடே என்றோ, இஸ்லாமிய மயமாகி இருக்கும்]]].
சீக்கியர்களின் குரு கோபிந்த் சிங்ஜி, சீக்கியப் படைகள் என்றென்றும் ஹிந்துமத கொள்கைகளுக்காகவும் பிரிவினை யாக்கப்படாத இந்தியாவுக்குக் கேடையமாக இருப்பர் எனவும் கூறியுள்ளார். ஆக சீக்கிய “கால்சா” சித்தாந்தப்படி, சீக்கியர்களை ஆள்வது மக்கள் சரி நிகர் சமானமான (அபேதவாத) கொள்கையுடன் கூறு போடாத இந்தியாவில், வாழ வேண்டுமென ஆணையிட்டுள்ளார். இதன்படி அவர் சீக்கியர் களுக்கு போதித்தபடி, “கால்சா’ சித்தாந்தப்படியே தங்கள் ஆட்சியை செலுத்துவர். RAAJ KAREGAA KHALSA என்பதே சீக்கியர்களின் செயல் படுத்தப்படும் ஆரம்ப வார்த்தை. இது சஞ்ஜய்-மனேகா இருவரின் மகனான பெஃரோஸ் வருண் காந்தி ஆகியோரின் வருங்கால அரசியல் வாழ்க்கை, கேள்விக்குறி யாகவும், இன்று இவர்கள் வலது சாரி வன்முறையாளர்கள் எனவும் சித்தரிக்கப் படுகின்றனர்.
இந்திராஜி கொலை முடிந்த கையோடு, டில்லியில் அனேக சீக்கியர்கள் படு கொலை செய்யப்பட்டனர். இதில் சீக்கியர்கள் டில்லியிலேயே ஆயிரக்கணக்கில் படுகொலை கெய்யப்பட்டனர். இதை நடத்திக் காட்டிய பல காங்கிரஸ் கட்சிப் பிரமுகர்களுக்கும் நீதிமன்றத்தால் தண்டனையும் வழங்கப்பட்டது.
இப்படி, தொலைவிலிருந்து செயலாற்றுபவர்களால், இந்திய அரசியல், கட்டுப்படுத்தப் படுகிறது. இதனால், முதலில், சஞ்சய், இந்திராஜி, என இருவரும் ஒன்றன் பின் ஒன்றாக கொலை செய்யப் பட்டனர்.
இந்திரா காந்தியின் மறைவினால் மக்கள் அளித்த அனுதாப அலையால் கிடைத்த பெரும் எண்ணிக்கையுடன் தேர்தலில் வென்று ராஜீவ்ஜி மீண்டும் அரசியல் நுழைந்தார். இதையும் ராணுவத்திற்காக “போஃபோர்” – Bofor பீரங்கி வாங்கும்போது நடந்த தில்லுமுல்லுகளால் விரயமாகப்பட்டது. இதன் இடைத் தரகரான சோனியாஜியிம் மிக நெருங்கிய “இத்தாலிய குட்ரௌச்சி” – Quattrochchi யும் இந்திய நாட்டு சட்டங்களை குப்பைத் தொட்டியில் துச்சமாக தூக்கி எறிந்தது போல இந்திய Central Bureau of intelligenceம் நடந்து கொள்கிறது (same side goal). முன்பே இதைப்பற்றி அங்கெங்கெனாதபடி எங்கும் விவாதிக்கப் படுவதால், மீண்டும் ஒருமுறை இங்கேயும் சொன்னதை திருப்பிச் சொல்லத் தேவையில்லை.

இதையடுத்து, ராஜிவ்ஜியின் அரசியல் முதிற்சி இன்மையால் படு முட்டாள்தனமாக விளைந்த, உடன்படிக்கையை ஸ்ரீலங்கா அதிபர் President J.R. Jayewardeneயுடன் செய்து கொண்டார். இதனால், LTTE தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு முன்னளித்த வாக்கை நிறைவேற்ற முடியவில்லை. ஸ்ரீலங்கா அதிபருடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி, மேலாக லங்கா சிறு தீவான வட கிழக்குப் பகுதியில் இந்திய ராணுவத்தினரால் இழைக்கப்பட்டதாகக் கூறப்படும், தீயொழுக்கழ் செயல்களின் விளைவாக LTTE ராஜீவ்ஜியை மனித வெடி குண்டுவைத்து கொலை செய்தனர். LTTE யினருக்கு, சற்றும் மூளை இருந்ததாகத் தெரியவில்லை. இந்திய நாட்டு பிரதமராக இருந்தவரும், நேரு வம்ச வாரிசான ராஜீவ்ஜியை அரசியல் நெடு நோக்கின்றி போட்டுத் தள்ளியது தவறல்லவா? இதனால் LTTE யினரின் ‘ஈழமும்’ மனித வெடிகுண்டால் மண்ணொடு மண்ணாக சிதறி வெடித்தும் விட்டது.

ஆனால், ராஜீவ்ஜி கொலையுண்டது ஏன், எதற்காக? இதற்கு பல சாத்தியக் கூறுகள் உள்ளன!!.
• முதலில், சட்ட விரோத செயல்களுக்கான நிதியை நேரு-காந்தி வம்சத்திற்கு அல்லது குடும்பத்துக்கு நிதி அளிக்கப்பட்டதை குளிர்-சாதனப் பெட்டியில் வைத்துப் பூட்டி தாற்காலிகமாகப் போட்டு அடைத்து வைக்கவா?
• அடுத்து போஃபோர் ரகசியங்களை, உலக தகவல் துறைக்கு அவ்வப்போது வேண்டிய அளவு கசிய விட்ட (leak) “கேஜிபி” KGB தகவல்களைப் பற்றித் திசை திருப்ப செய்யப் பட்டதா? இவையனைத்துக்கும், வல்லரசுகளுக்கும், சோனியாஜிவுக்கு தெரிந்தே ஒரு நாடகமாக அரங்கேற்றப்பட்டதா?
• இதற்கடுத்து, இந்திய மேலாண்மையை தொலை தூரத்திலிருந்து கையாள மிகவும் செல்வக்குள்ளவர்களால் இவ்வாறு நிர்ணயிக்கப்பட்டதா? (இவர்கள் யார்?)

இவைகள்தான் இக்கொலையில் விளைந்ததா? இவைகளில் எதெது உண்மையென இன்னும் புலப்பட வில்லை.
அடுத்தது, பிப்ரவரி 28, 1986இல் பொஃபோர் ரகசிய வெட்கக்கேடுகள் பற்றி எல்லாம் அறிந்த ஸ்வீடன் பிரதம மந்திரி, ஓல்ப் பால்மே (Olof Palme) வும் அரசியல் காரணங்களுக்காக வன்முறையில், ஸ்வீடன் நகரின் மத்திய ஸ்டாக்ஹோமில், ஒரு நடன நிகழ்ச்சியைக் கண்டுகளித்து, வீட்டிற்கு காலாற பிரதம மந்திரி நடந்தே (!) செல்லும்போது, வழியில் சதித் திட்டத்தால், கொல்லப்பட்டார்.

[[[இவருக்கு தன் மீதும் தன் மக்கள் மீதும் அவ்வளவு நம்பிக்கை பாருங்கள். மக்கள் தலைவர் காமராஜர், கக்கன் எங்கே! (மந்திரி கக்கன் அரசு பேருந்தில் நின்றுகொண்டு சில்லரை கொடுத்து பயணம் செய்தவர்) கருணாநிதி எங்கே?, ஸ்டாலின் எங்கே? (மந்திரி என்ற ஆடம்பரம், சிவப்பு மின் விளக்கு போட்டு siren ஒலிக்க கூட குறைந்தது சுமார் 20 வாகனங்கள் முன் பின் தொடர செல்வது போலல்லாமல், சந்தடி ஏதுமில்லாமல், நடந்தே சென்றது பிரதம மந்திரி “ஓல்ப்பால்மே” யின் தவறு தானே!. (sitting duck) இந்த தொழில் நுட்பத்தை கழகத்தாரிடம் முன்னரே கற்றுக் கொண்டு இருந்தால், இந்த கொலை நடந்திருக்குமா?! பாவம் ஞான சூனியம்!!]]].
இவரைத் தொடர்ந்து, 1988இல், ஓல்ப் பால்மேயின் அரசியல் ஆதரவு பெற்ற Bernt Carlssonம் வன்முறையில் மர்மமாகக் சதியால் கொல்லப்பட்டார்.

இதற்கு கிரிஸ்டர் பீட்டர்சன் என்ற சிறு வெறி மயக்க (Drug seller & Addict) விற்பனையாளனும், இக் கெட்ட பழக்கத்திற்கு அடிமையானவன் என்ற முறையில், முதலில் கைது செய்யப்பட்டு, இரு வருடங்களுக்குப் பின், நாட்டு நீதி மன்றத்தில், முறையீடு செய்து சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டான். மேலும் பெரிய இடத்து விஷயங்களல்லவா? ஒருவர் வழக்கில் மாட்டிக் கொள்ள ஆரம்பித்தால், இந்த சங்கிலித் தொடரில் யார் யார் வண்டவாளம் எப்படி எப்படி வெளிப்படுமோ!!
ஜூலை 1987இல் நம்பியா-அங்கோலாவில் நடந்த உள் நாட்டுப் போரை நிறுத்த, Bernt Carlssonம் ஐக்கிய நாடு சபையால் ஆணையராக (United Nations Commissioner) நியமிக்கப் பட்டு, பதவியேற்று, டிசம்பர் 21இல், 1988இல், ஸ்காட்லாண்ட் லாக்கர்பையில் (Lockerbie), Pan Am flight 103இல் போயங் 747-121 aircraft called Clipper Maid of the Seas, லிபியா வன்முறையாளர் கள் அவர் சென்ற விமானத்தில், வைத்த, வெடிகுண்டு வெடித்த விபத்தில் மாண்டு போனார். இந்த விமானம், லண்டன் ஹீத்ரோ விமான தளத்திலிருந்து 243 பயணிகளுடன் 16 விமான ஊழியர்க ளுடன் புறப்பட்டது.
Bernt Carlssonம் ந்யூ யார்க்கில் நிமிபியாவுக்கும் முழு சுதந்திர உடன்படிக்கையில் (UN) ஆணையர் என்ற பதவித் தகுதியால், சாட்சிக் கையொப்பமிட வந்துகொண்டிருந்தார். நிமிபியா சுதந்திர உடன்படிக்கையில் கையொப்பமிடுபவர்கள்: அங்கோலா, க்யூபா, தென் ஆப்பிரிக்கா. அங்கோலாவில் அன்று தென் ஆப்பிரிக்கா வெள்ளை நிற வெறியர்கள் தங்கள் காலனி ஆட்சியை நிலை நாட்டி அனேக ஆண்டுகளாக ரத்தச் சிகப்பு வைர சுரங்கத்தில் (blood diamond mines) சகட்டுமேனியாக அங்கோலா மக்கள் ரத்தத்தை உறிஞ்சி, கொள்ளையடிப்பதை வழக்கமாக்கிக் கொண்டு இருந்தனர்.
இவ்விமான விபத்தை, அமெரிக்க உள்நாட்டு உளவு நிறுவன ஆவணப்படி FBIம், பிரிட்டன் UK – Dumfries and Galloway Constabulary என இரு அமைப்புகளும் சேர்ந்து 3 வருடங்களுக்குப்
பிறகு, இரு ஆசாமிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டது (Abdelbaset Ali al-Meghrahi and Lamin Khalifah Fhimah – Libyan intelligence officer and head of the oil rich north African nation’s airline LAA and its station manager based in Malta respectively).
விசேஷமாக ‘மால்டா’ எனும் நாடு உலக பெட்ரோலிய எண்ணையில் கிடைக்கும் சட்ட விரோத நிதியை வேண்டியவாறு மாற்றிக் கொடுக்கும் இடம்!!. இன்னொரு மிக முக்கியத் தகவல். இதே இடத்திலிருந்து தான் இந்திய நாட்டு பங்கு சந்தையை (Indian share market) வெகு தொலைவிலிருந்து எளிதாக மற்றவர் எவரும் புரிந்து கொள்ள முடியாத முறையில் தன் கட்டுப் பாட்டில் வைத்திருக்கும் (remote controls) வகையில் இன்றும் நிர்வாகம் செய்யப் படுகிறதாம்.

லாக்கர்பை (Lockerbie) வழக்கு 1991இல் ஆரம்பமானது. குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப் பட்டவர்கள் இருவர். Abdelbaset Ali al-Meghrahi and Lamin Khalifah Fhimah. இவ்விருவரையும், இக்கொடூர செயலில் ஈடுபடவைத்தவன், பழிபாவத்திற்கு அஞ்சாத போக்கிரி லிபியா சர்வாதிகாரி, ‘க(ர்)னல் மௌமர் கஃட்டாஃபி’ யால் (‘Colonel’ Muammar Quadhafi) மேலை நாட்டு அதிகாரி களின் சட்டப்படி, நீதர்லாந்த் (Netherlands) தேசத்தில், 1998இல், ஒப்படைத்தான். இதில், Fhimah என்பவன் நீதி மன்றத்தில் மௌனத்தைக் கடைபிடித்தாலும், Meghrahi என்பவனுக்கு ஜனவரி 31, 2001இல், 27 வருடங்களுக்கு சிறை தண்டனை அளிக்கப் பட்டது.

இவனையும் Scottish Criminal Cases Review Committee, மனித இரக்க உணர்ச்சியாலும், மனித இன நலப்பற்று காரணமாக, நீதியில் தவறு நேர்ந்து விடாது இருக்க சிறை தண்டனையிலிருந்து விடுதலை அளிக்கப்பட்டது. இராஃக் சர்வாதிகாரி சத்தாம் ஹுஸ்ஸைனும் கூட நிரூபிக்கப்பட்ட குற்றங்களுக்காக, தூக்கிலடப்பட்டான். ஆனால், இதில் அகில உலக ரௌடி, நீதி நெறிகளுக் கடங்காத அயோக்கியன், லிபியா சர்வாதிகாரி, ‘க(ர்)னல் மௌமர் கஃட்டாஃபி’ யால் (‘Colonel’ Muammar Quadhafi) இன்றும் எந்த தண்டனையையும் அனுபவிக்காமல் சுதந்திரமாக உலகில் நடமாடிக் கொண்டுதான் உள்ளான்.

இவனை எந்த சட்டமும், நீதியும் இன்னும் அணுக முடிய வில்லை. இவன்தான் இந்த கொலைத் திட்டத்திற்கு உண்மையில் சதித் திட்டத்தைத் தீட்டி, ஸ்வீடன் பிரதம மந்திரி, ஓல்ப் பால்மேவை (Olof Palme) கொலையையும் செய்ய வைத்தவன்.

[[[“அம்பை எய்தவனை விட்டு விட்டு, உயிர் உணர்ச்சியற்ற அம்புக்கு தண்டனை வழங்கி, இதனால் திருப்தி படுவது போல ஆகிவிட்டது”. ஒரு நாட்டு பிரதம மந்திரி, நடன நிகழ்ச்சியைக் கண்டு களித்து விட்டு சாமானியன் போல வீட்டிற்கு நடந்தே செல்லும் பணிவும், துணிவும், இவ்வளவு தன்நம்பிக்கை இருக்கவேண்டு மானால், மக்கள் மீது அவருக்கும், அவருக்கு மக்கள் மீதும் பரஸ்பரம் எவ்வளவு அன்பு இருந்திருக்க வேண்டும். இந்த அன்பு, உணர்ச்சி, மனித நேயம், ஆகியவைகளைப் பற்றி லிபியா சர்வாதிகாரி கஃட்டாஃபி’ (Quadhafi) என்ற மனித மிருகங்களிடம் எதிர்பார்க்கலாமா?]]].

ஓல்ப் பால்மே தன் நாட்டில் மிகவும் பிரசித்தமானவர். தன் நாட்டு மக்களிடம் மிகவும் அன்புள்ளவர். இவர் நாட்டு எல்லையிலிருந்து கடந்துவரும் வன்முறைகளை வெறுத்து அருவருப்பு அடைந்தவர். இவரிடம் நடு நிலையில் உள்ள (அமெரிக்க, ரஷ்ய நாடுகளைத் தவிர) மற்ற எல்லா நாடுகள் இவரிடம் மிக மதிப்பு கொண்டிருந்தனர். உலகைத் தங்கள் கட்டைவிரலடியில் என்றுமே இருக்க வேண்டுமென எண்ணங்களை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக ரஷ்ய, அமெரிக்க பேரரசுகள் கனவுகாண்பதை முற்றிலும் அடியோடு வெறுத்ததோடு மட்டுமல்லாமல், தன்னுடைய இக்கருத்தை கூறுவதில் எந்த அச்சமும் இல்லாது, இவைகளையும் வெளிப்படை யாகவே குற்றம் சாட்டினார். இவர் சதிக்கொலை நடப்பதற்கு சில மாதங்க்களுக்கு முன்னரே, ஓல்ப் பால்மே ரஷ்யர்களுக்கு ஆதரவாக இருப்பதாயும், ஆனால் ரஷ்ய ராணுவத்தால், நாட்டுக்கு எதிர்பார்க்க வேண்டிய பாதுகாப்பு அச்சுறுத்தலில் கவனம் செலுத்தாது இருப்பது பற்றி இவர் மீது ஒரு விசித்திரமான அவதூறான பிரசாரம் இவரைக் குறிவைத்து நடத்தப்பட்டது.
இந்த சதிக்கொலை நடைபெறாது இருந்திருந்தால், ஓல்ப் பால்மே இன்னும் சில நாட்களில், ரஷ்ய நாட்டுடன் பாதுகாப்பு, இன்னும் இரு நாடுகளுக்கிடையே, பல்வேறு வகையில் நச்சரிப்பு, எரிச்சலூட்டும் கருத்துகளைக் களையவும், ஸ்வீடனையொட்டி உள்ள கடலோரத்தில் வடக்கு சமுத்திர பொருளாதார சுதந்திர பாதுகாப்பு மண்டலத்தில், ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பல்கள் அடிக்கடி சட்ட விரோதமாகவும் கள்ளத்தனத்துடன் நுழைவது பற்றியும் பேச ரஷ்யப் பயணத்தை மேற்கொள்ள இருந்தார்.

• மேலாக, பால்மே திரும்பத்திரும்ப அமெரிக்காவை ஆதரிக்கும் மேலை நாடுகளையும், ரஷ்ய நாட்டையும், வியட்னாம் போரில் இவர்கள் இருவருடைய அநாவசிய குறிக்கீடு, ஈடுபாடுகளை கடுமையாக கண்டித்துக் கொண்டே இருந்திருக்கிறார். இவைகளைத் தவிர,
• இவ்விரு நாடுகள் தங்களுக்குள்ள அணு ஆற்றலால், அளவுக்கதிகமாக உலகையே அச்சுறுத்துவது பற்றியும்,
• ரஷ்ய நாட்டு அரசியலால், செக் (Czech) நட்டில் ‘பராக்’ எனும் இடத்தில் ரஷ்ய சேனையைகளை அனுப்பி, அங்கு நடந்த ரஷ்ய எதிர்ப்பு புரட்சிக் கலகத்தை கண்மூடித்தனமாக அடக்கியது பற்றியும்,
• ஸ்பானிஷ், தென் அமெரிக்க சர்வாதிகாரிகளான பஃராங்கோ, பினோசே (Franco and Pinochet) இருவரையும் சனியம்-பிடித்த கொலையாளிகள் (‘Satanic Murderers) எனவும்,

• Franco Pinochet
• தென் ஆப்ரிக்க நாட்டு, அரசியலில் இன ஒதுக்கி வைத்தல் (apartheid) எனும் கருத்தில் உலகை ஏமாற்றும் இரட்டை நியமங்கள் (double standards) அதாவது ஒருபக்கத்தில் உலகெங்கும் apartheid policyக்கு ஆதரவு தேடிக்கொண்டே, தென் ஆப்பிரிக்க நாட்டுக்குள், apartheid policyக்கு எதிராக ஆப்ரிக்க தேசீய காங்கிரஸுக்கு ஆதரவு அளித்தல்,
• El Salvador and Nicaragua.உள்ள FSLN தீவிரவாத சுதந்திர வீரர்களுக்கு மற்றொரு பயங்கர வன்முறையாளர்களான அரபு நாட்டிலுள்ள பாலஸ்தீனர்களின் ஆதரவு போன்றவைகளில்,
தன் கண்டனங்களை அடிக்கடி உலக மேடைகளில் பகிரங்கமாக பேசிவந்தார். ஆகையால், மேற்கூறிய சிந்தனை சொல், செயல் ஆகியவைகளுக்கு மேலை நாடுகள், ரஷ்ய ஆதரவு கிடைக்குமா? உலகெங்கும் இம்மாதிரி அமெரிக்க, ரஷ்ய நாடுகளின், உண்மை உருவம் பற்றித் தன் கருத்தை, அடிக்கடி அபிப்பிராயங்களாக தக்க சான்றுடன் பறைசாற்றி எப்போதும் தொந்திரவு கொடுக்கும் ஓல்ப் பால்மேயை மேலை நாடுகள் உயிருடன் தான் விட்டுவைப்பார்களா?
அவரவர்கள் செய்யும் குற்றங்களை பலரறிய மற்றொருவர் அடிக்கடி சொல்வதைக் கேட்டு அவைகளைப் பற்றி கவலைப்படாமல், குற்றம் புரிந்தவர் யாராவது அப்படியே விட்டு விடுவார்களா? ரஷ்ய இரும்புத் திரை சர்வாதிகாரத்தையும், அமெரிக்க ஏகாதிபத்தியக் கொள்கைகள் இவ்விரண்டையுமே ஒரே சமயத்தில் சாடி வந்திருக்கிறார். ஓல்ப் பால்மேவை அதுவரை உயிருடன் விட்டு வைத்ததே ஆச்சரியம் தான். இதன் விளைவுதான் ஓல்ப் பால்மேயின் உயிரைக் குடித்தது. அவர் செயத ஒரே தவறு எக்காலத்திலும் உண்மை பேசியது மட்டுமே. “யதார்த்தவாதி வெகு ஜன விரோதி” (यथार्थवादि बहु जन विरोधि) என்பது பழமொழி.
ஒழுக்க நிலையிலிருந்து விலகி, நேரிடையாக போரில் இறங்காது மற்றொரு நாட்டுக்கு எதிராக பிரசாரம் செய்யும் பகை நிலையைச் சார்ந்த மேலை நாட்டு அட்லான்டிக் உடன்படிக்கை சங்கமான North Atlantic Treaty Organisation [NATO]வுடன், எது எப்படி இருந்தாலும், ஒல்ப் பால்மே, அதாவது (ஸ்வீடனும்) மாறாது, தொடர்பு கொண்டிருந்தது. இது இப்படியே இன்றும் கபட நாடகங்கள் உலகெங்கும் அரங்கேற்றப்படுகிறது.

மேகூறியவைகளாலும், “கேஜிபி” KGB தயவாலும் இக்குற்றத்திற்கான உண்மை குற்றவாளி இன்னமும் பிடிபட வில்லை என்பது புரிந்து கொள்ளக் கூடியது தானே!

இங்கு ஒரு விசித்திரமான கேள்வி எழுகிறது?

முதலில், சஞ்சய் காந்தி, பின்னர் இந்திரா காந்தி துர்மரணத்தைத் தழுவிய பின்னர், ஸ்டெஃபினோ-பயோலா மைனோவின் மாப்பிள்ளை, அதாவது “சோனியா”வின் இந்திய கணவர் ராஜீவ் காந்தியையும் அடுத்து பட்டத்திற்குக் கொண்டு வந்து, பின்னர் அவரையே LTTEயைக் கொண்டு சதிக் கொலை நடத்த வேண்டிய பரம ரகசியம் இப்போது தொடர் நிகழ்ச்சியாக நம் கண்முன்னே, சரியாக நிரூபிக்கும் (raison-d’être) வகையில் ஏன், எதற்காக என தெளிவாகிறது. இதற்கெல்லாம் ஆதி மூல காரணம் புரிகிறது. ஒன்றன்பின் ஒவ்வொரு கொலைக்குப் பின்னர், ஒன்றுவிடாமல் கவனமாக நிறைவேற்ற ஏதோ திட்டமிட்டு செய்தது போல தெரிகிறதல்லவா? இதெல்லாம் யாருக்காக? இன்னும் தெளிவுபட சொன்னால், திருமதி சோனியாவை ஐக்கிய முன்னணி நேசக்கட்சிகள் (UPA) மூலமாக இந்தியாவின் முடி சூடாத பட்டத்து ராணியாக முடிசூட்ட நடத்தப்பட்ட நாடக ஒத்திசை என நன்கு நமக்குத் தெளிவாகிறது.
இதற்கடுத்த நிகழ்ச்சியான சோனியாஜி பிரதம மந்திரியாக பதவித் தியாகம் செய்தது என்பதும் ஒரு நாடகமே! இதற்குக் காரணம்,
• சோகத்தால் பீடிக்கப்பட்ட விதவை சோனியாஜி தன் இந்திய கணவர் ராஜீவ்ஜி துர்மரணத்திற்குப்பின் அவர் உட்கார்ந்த அதே நாற்காலியில் உட்காராமல் இருப்பதே அவருக்கு ஒரு இத்தாலிய / இந்திய மனைவி செய்யும் கடமை என ஓங்கி, பரபரக்க பறைசாற்றவும்,
• ராஜீவ்ஜியின் கொலையில், LTTE, KGB ஆகியவர்களின் ரத்தக் கரை பங்குகளை மூடி மறைக்கவும், மற்றும்
• பல்லாயிரக்கணக்கான இந்திய உயிர்கள் பழிக்குப்பழி வாங்கியதை நியாயப்படுத்தி இதைப் பற்றி எழும் கருத்தை ஒரேயடியாக இழுத்து மூடி மறைத்து விடவும்,
• போஃபோர் லஞ்சம்,
• KGB செயல்பாடு தடத்தை மூடி வைக்கவும்
• ராஜீவ்ஜியின் கொலைக் குற்றத்திற்கு குற்றம் புரிவோர்க்கு ஊக்குவித்து, சம்பந்தப்பட்டு, நேரிடையாக தொடர்புகொண்டு இன்று சிறை தண்டனை அனுபவிக்கும் கைதியை விடுவிக்க முயற்சிகளும்,
• வருண் காந்தியின் அரசியல் வாழ்க்கையை முற்றுப்புள்ளியாக்கவும்
• ஓற்படி (ஒரே வீட்டில் முறையே இரு சகோதர்களை மணந்தவர்கள், சோனியா-ராஜிவ்ஜி, மனேகா-சஞ்ஜய்) மனேகா காந்தியின் அரசியல் வாழ்க்கையை கொடு நோக்குடன் கிரகணம் பீடிக்கப்பட செய்து,
• லண்டனில், ISI இடமான சிற்றுண்டி சாலையில் ராஜீவ்ஜியை சோனியா முதன் முதலில் சந்தித்தது, காதல் செய்ய வைத்தது,
• ராகுல் காந்தியும் இன்று கிளிப்பிள்ளை என பேசும், “இந்தியாவுக்குள் இருக்கும் ஹிந்து மத கோட்பாடுகள், அமெரிக்காவுக்குள் இருக்கும் இஸ்லாமிய மத கோட்பாடுகளைக் காட்டிலும் மிக பயங்கரமானது” என்ற நாடகப் பிரசாரமும்
• ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாகத் தொடர்ச்சியாக சிந்தனை செய்தால், ISI குற்றவாளிகளுக்கும் அவர்களுக்கு உடந்தையான இத்தாலிய ரஷ்ய குற்றக் கும்பல் ஆகியவர்களுக்கும், இந்திய நாட்டையே ஒரு தங்கத் தாம்பாளத்தில் வைத்து இவர்களுக்கு பலி பீட காணிக்கையாக அர்ப்பணம் செய்யத்தான் உலக அரசியல் மேடையில் நடத்தப்பட்ட நாடகம் என் மனசாட்சி சொல்கிறது.

சோனியாஜியே! அடுத்து ஒரு நேரிடையான கேள்வி உங்களுக்கு:

ISI – KGB ஆகியோர்களின் இந்தியப் பிரதிநிதி என எனக்குத் தோன்றுகிறதே! இக்கருத்து சரிதானா?
இல்லாவிட்டால், கீழ்க்கண்டவைகளுக்கு தயவு செய்து விளக்கமளிக்கவும்:
• ராஜீவ்ஜியின் கொலையில், தூக்கு தண்டனை விதிக்கப்பட நளினி ஸ்ரீஹரன் எனபவருக்கு, ஒரு குழந்தையின் தாய் என்ற வகையில் தண்டனையை குறைக்கும்படி ஏன் நீங்கள் சிபாரிசு செய்ய வேண்டும்?

• இத்தாலிய பூர்வீகம் கொண்ட மாரியா புஸோ (Mario Puzo) என்பவர் ஆங்கிலத்தில் எழுதிய மிகப் பிரசித்தி பெற்ற இத்தாலிய மாஃபியா பற்றி கற்பனை நவீனமான, “காட் பாஃதர்” (The Godfather) என்ற புத்தகத்தில் கொடு நோக்குடன் கூடிய பழிக்குப் பழி படலம் போன்று, விலாவாரியாக நிறைவேற்றத்தான் பல்லாயிரக் கணக்கான ஸ்ரீ லங்கா தமிழர்களை அழிக்கத் திட்டமிடப் பட்டதா? இத்தனை கொலைகளையும் அநாயாசமாக ஈவிரக்க மின்றி, செய்து முடித்துக் காட்டுவது என்பதே வழக்காமான இத்தாலிய மாபிஃயா செயல் முறையல்லவா? இச்செயல்பாணி, எதிலும் சாத்வீக முறைகளைப் பின்பற்றும் இந்தியர்கள் செயல் முறையல்லவே அல்ல! இது சத்தியம். இந்தியாவிலும் இத்தாலி முறை எப்படி, யாரால் இறக்குமதி செய்யப்பட்டது? (World famous phrase from Film “Godfather’– “Give them something by which they cannot refuse” = cold blooded murder)
• 2009 தேர்தல் நடப்பதற்கு சற்று முன்பாக, உங்கள் மகள் பிரியாங்கா காந்தி வாத்ரா ‘நளினி’யை எக்காலமும் மன்னிக்க மாட்டேன் என்று ஒரு காலத்தில் சூளுரைத்தவர், பின்னர் ஏன் அவரையே, வெல்லூர் சிறையில் சென்று சந்திக்க வேண்டும்?

• ராஜீவ்ஜி கொலையில் சம்பந்தப்பட்ட மற்ற தூக்கு தண்டனைக் கைதிகளை இன்னமும் தூக்கு மேடைக்கு ஏற்றாமல் இருப்பதற்கு இரண்டு ‘தொத்தல்’ காரணம் கூறப்படுகிறதே!.
1. முதலில் அனுபவமுள்ள தூக்குத் தூக்கி இந்தியாவிலேயே இல்லை எனவும்,
2. இரண்டாவதாக, இந்திய உள்துறை மந்திரி பி.சிதம்பரம் கூறுவது போல,
ஜனாதிபதி பிரதிபா படேல் அவர்களுக்கு உள்ள சில வேலை செயல் முறை
சார்ந்த பண்பு நயம் என்றும் கூறப்படுகிறதே! ஏன்?
• இந்திய பாராளுமன்ற படிகளில் நம் பாதுகாப்பு வீரர்களைக் கொன்று குவித்தவன், எவ்வளவோ முறை மன்னிப்பு மனுவை அனுப்பி அவைகள் எல்லாமே மறுக்கப்பட்டு, ஒன்பது வருடங்களாக திஹார் சிறையில் இருக்கும் தூக்கு தண்டனை பெற்ற மற்றொரு படுபயங்கரக் குற்றவாளியான அஃப்சல் குரு, இன்று சிறையில் ஒரு ராஜ குமாரன் போல அதே சிறையில் சகல வசதிகளுடன் வாழ்கிறானே அது எப்படியம்மா?

• பம்பாயில் 26/11 என்று பிரசித்தி பெற்ற பாகிஸ்தானின் இந்தியப் படுகொலையில் முக்கிய பங்கு கொண்டு அனேக இந்திய நிரபராதிகளை, டெலிவிஷன் காமிராக்களுக்கு முன்னர், கொன்று குவித்த “அஜ்மல் கசப்” நம் நீதி முறைமையை எள்ளி நகையாடும்படி தண்டனை வழங்காது வைத்திருப்பது சரிதானா?

மேற்கூறிய கேள்விகளனைத்துக்கும் உங்களிடம் நியாயமாக, பகுத்தறிவுக்குப் பொருந்தும் படி தக்க பதில் உங்களால் எளிதில் கூற இயலுமே!

அப்படி பதில் கூற முடியாவிட்டால், இந்தியனான எனக்கு மாறாத உரிமையுடன் கேட்க மற்றொரு
கடைசி கேள்விக்காவது தயவு செய்து பதிலளிக்கவும்:

சோனியாஜி அவர்களே! – நீங்கள் யார்? என தயவு செய்து சொல்லுங்கள்

என்பதையாவது கூறவும்.

Series Navigation