கடவுள்கள் விற்பனைக்கு

This entry is part [part not set] of 50 in the series 20040408_Issue

சேவியர்


0

அப்படித் தவறிழைத்தால்
இப்படியாவாய்
என
கதைகளில் சொன்னது
கொள்ளுத் தாத்தாக்களின் காலம்.

தாத்தாக்களின் காலமோ
அதை
எழுதி வைத்து
பெயர் வாங்கிச் சென்றது.

அப்பாக்களின் காலம்
கதாநாயகர்களைக்
கடவுள்களாக்கி
ஊரெங்கும் உலவவிட்டது.

மகன்களின் காலம்
அவர்களுக்காக
கோயில் எழுப்பி
கோஷங்கள் இட்டது.

தொடரும் தலைமுறையின்
காலங்கள்
கதைகளையெல்லாம்
ஆற்றில் கழுவிக் கரைத்துவிட்டு
கதாநாயகர்களை மட்டுமே
கையில் எடுத்து
ஊர்வலம் போக,

விஷயம் அறியாத
தற்காலத் தாத்தாக்களும்
சில
கதைகளைச்
சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்
தங்கள் பிள்ளைகளுக்கு.

0

சேவியர்

Xavier.Dasaian@in.eFunds.com

Series Navigation