இன்னா செய்தாரை ஒறுத்தல்

This entry is part [part not set] of 31 in the series 20091029_Issue

முத்துசாமி பழனியப்பன்



காயத்திற்கு மருந்திட்டுக்
கொண்டது குழல் – இசையால்
இளகியது காயப்படுத்தியவன்
மனதும்!

muthusamypalaniappan@gmail.com

Series Navigation

முத்துசாமி பழனியப்பன்

முத்துசாமி பழனியப்பன்

இன்னா செய்தாரை ஒறுத்தல்…

This entry is part [part not set] of 37 in the series 20030309_Issue

-இரவி ஸ்ரீகுமார்.


-1-

ராஜகோபாலின் ஆயசு அநியாயமாக அந்த நண்பகல் வேளை

-யில் முடிந்தது.

அவருடைய டூவிலருக்கு முன்னால் இரண்டு, பின்னால் இரண்டு என நான்கு ஆட்டோக்கள். மொத்தம் ஆறு ரவுடிகள்.அவரை மறித்து-வெட்டினார்கள்.

ஓடத் தடையாக முதலில் கணுக்கால்.

பிறகு, கைகள். இறுதியாக தொண்டைக் குழி.

எதிர்க்க முடியாமல், கைகள் தாக்குதலை தடுக்கும் பாவனையில்.

நொடிகளில் செத்துப் போனார்.

‘மவனே…எந்த நாயாவது மாமூல் தரமாட்டேன்..போலீஸுக்கு

போவேன்னுலாம் உதார் வுட்டா இதான் கதி.. ‘ – ரவுடிகளின் தலைவன் கபாலி.உரக்க சொன்னான்.

‘விசுக் ‘ என அருவாளை வீசிக் காட்டினான்.

தெருவே வெறிச்சோடி இருந்தது.

ஜன்னல்களிலும், கதவு சந்துகளிலும் அச்ச விழிகள்.

‘எவனாவது இங்கே நடந்த விஷயத்தை சாட்சி சொல்றேன்னு

கிளம்பினா இல்லே பேசினா தலைக் காணாமப் பூடும் ஆமாம் ‘ – சப்தமிட்டான்.

‘வாங்கடா..போவலாம் ‘-தனது ஆட்களுக்கு கட்டளை இட்டுக் கிளம்பவும்-

தூரத்தில் போலீஸ் ஜீப் வரும் சப்தமும் ஒரே நேரத்தில்.

யாரோ ஜன்னல் வீரர் போலீஸிற்குத் தகவல் கொடுத்திருக்க வேண்டும்.

-2-

மாவட்டப் போலீஸ் எஸ்.பி, சுந்தரம் நொந்துப் போயிருந்தார்.

சிறுத்தொழில் சங்கம் அவரையும் போலீஸ் துறையையும் வறுத்து எடுத்துக் கொண்டிருந்தது.

ராஜகோபால், சிறுத்தொழில் அதிபர்.

சிறுத்தொழில் சங்கம் அவருடைய கொலையை, தங்களை அச்சுறுத்த விடப்பட்ட சவாலக எடுத்துக் கொண்டு,உண்ணாவிரதம், சிறுத்தொழிலகங்களின் காலவரையற்று மூடுதல்,

சாலை மறியல் போராட்டம் என போரட்டங்களை நடத்தப் போவதாக அறிவித்தது.

அந்த சங்கத்தோடு பேசத் தான் சுந்தரம் பணிக்கப்பட்டிருந்தார்.

‘என்ன சார் செய்யுது உங்க போலீஸ்.ஒரு ரவுடி பப்ளிக்கா சவால் உடறான்..எவனாவது போலீஸ் கிட்டே போன, கொன்னுடுவானுங்களாம்.சாட்சி சொன்னா தலையை எடுப்பானுங்களாம்.

பயமுறுத்தரான்.ராஜகோபால் என்ன சார் பாவம் செய்தார் ?

மாமூல் கொடுக்க முடியாதுன்னு சொன்னார். உங்கக்கிட்ட வந்து புகார் செஞ்சார்.அவரோட புகார் கொடுக்க வந்தவங்களையும் கொல்ல திட்டமிருக்கும் சார், அந்த கும்பல்..நாங்க சந்தேகப் படறோம். எங்களுக்கு பாதுகாப்பே இல்ல சார். ‘- சங்கத்தலைவர் சண்முகம் படபடப்பாகப் பேசினார்.

‘இரண்டு பொம்பளைப் புள்ளைகளை வெச்சுக்கிட்டு அவர் மனைவி என்ன சார் இனிமே செய்வாங்க ? அவங்களுக்கு யார் சார் ஆறுதல் சொல்லி தேத்த முடியும் ‘ -சங்க செயலாளர் அப்துல்லா.

‘சார் எல்லாரும் கொஞ்சம் பொறுமையா இருங்கா பிளீஸ் ‘-சுந்தரம்

கெஞ்சினார்.

‘விடிஞ்சது…!பொறுமை..எது வரைக்கும் சார் ? நாங்க எல்லாரும் சாகர வரைக்குமா ? ‘ – சங்க உறுப்பினர் சார்லஸ் பதற்றத்தோடு கத்தினார்.

‘சார்லஸ்..கொஞ்சம் பொறுமையாதான் இருப்போமே… ‘-சண்முகம் கட்டுப்படுத்தினார்.

‘சார். culpritsஐ பிடிச்சாச்சு. இன்னும் ஒருவாரத்தில கேஸ் file பண்ணிடுவோம். உங்களுக்கும் உங்க தொழிலுக்கும் செக்யூரிட்டி கொடுக்க சொல்லி சிஎம்மே சொல்லிருக்கார். ‘

‘அவர் சொல்லிடுவார், சார். செயல்படறதிலே தானே பிரச்சனையே. ‘-

மீண்டும் சார்லஸ்.

‘இல்லை சார் இனிமே நாங்க Lethargicஆ இருக்க மாட்டோம்.

பிளீஸ் கொஞ்சம் பொறுமையா இருங்க.கொஞ்சம் கோஆபரேட் பண்ணுங்க ‘-சுந்தரம்

இதில் கடுப்பான, சண்முகம்,

‘நாங்க cooperate பண்ணிகிட்டு தான் சார் இருக்கோம். உங்க போலீஸ் கிட்டே ரவுடி மாமூலை பத்தி complaint பண்ணினதாலே தான் இன்னிக்கு ராஜகோபால் கொலை செய்யப்பட்டார். அவருக்கு என்ன சார் பாதுகாப்பு கொடுத்தீங்க..இதையெல்லாம் பேச ஆரம்பிச்சால், ஒரு முடிவும் இந்த மீட்டிங்கால, வராது. சரி எங்க side முடிவை சொல்லிடறோம். இதுதான் உங்களுக்கு கடைசி வாய்ப்பு. இன்னும் ஒரு கொலை இது மாதிரி ஆச்சுனா..நாங்க, பீகார் மாதிரி , private army வெச்சுக்க வேண்டியது தான். இப்பவே எங்க ஆளுங்க ரொம்ப பேரு அதைத் தான் சொன்னாங்க. நான் தான் அவங்களை சமாதனப்படுத்தி வெச்சுருக்கேன். ஓகேவா ? ‘

சற்று இறுகிய குரலில் சண்முகம் சொன்னார்.

நிலைமையின் தீவிரத்தை உணர்ந்தவராக,சுந்தரம் சற்று கம்மிய குரலில்,

‘இல்ல சார்.இனிமேல் நாங்க நிலைமையைக் கட்டுப்பாட்டில் வெச்சுருப்போம்.நீங்க priavte armyக்கெல்லாம் போக வேண்டி

வராது.. ‘-என்றார்.

‘ பார்க்கலாம் ‘- மீட்டிங் ஒருவித இறுக்கத்தோடு முடிந்தது.

-3-

‘என்னால தாங்க முடியல்லயே..ராதாவையும், தாராவையும் கொண்டுவந்து விட்டார்.விட்டுட்டு ராதாவுக்கு குடிக்க தண்ணி பாட்டிலையும், தாராவிற்கு பிஸ்கட் பாக்கெட்டையும் கொடுத்துட்டு, ‘ராதாக் குட்டி, இன்னும் ஒரு வாரத்திலே பப்ளிக் எக்ஸாம். அதனாலே வேற எந்த தண்ணியையும் குடிக்காதீங்க. உங்க ரெண்டு பேருக்கும் வேற தண்ணி ஒத்துக்காது. ‘-ன்னு சொல்லிட்டு போனாரே.அண்ணா…இப்படி எங்களையெல்லாம் தவிக்க வெச்சுட்டு போயிட்டியே.. ‘- மாலதி அழுதாள்.

மைதிலி- ராஜகோபாலின் மனைவி வயிற்று வலி என மருத்துவ மனைக்கு போயிருக்கும் வேளையில், வயசுக்கு வந்தப் பெண் குழந்தைகளைத் தனியாக விட மனசில்லாமல் ராஜகோபால், சகோதரியின் வீட்டில் கொண்டுவந்து விட்டுவிட்டு, வேலையை கவனிக்கப் போனார்.

அதை சொல்லி சொல்லியே மாலதி அழுதுக்கொண்டிருந்தாள்.

மாலதியின் அழுகுரலைத் தவிர வீட்டில் வேறு சப்தம் இல்லை.

மயான அமைதி.

தன்னுடைய அறையில் மைதிலி அடைந்துக் கிடந்தாள்.

அவளால் இன்னும் நம்ப முடியவில்லை.

ஆரோக்கியமான ஒரு மனிதர், காலையில் அலுவலத்திற்கு சிரித்தப்படிப் போனவர், மாலையில் பொட்டலமாய் – அதுவாகி வந்தது…அவளுடைய கணவர் ‘நோ மோர் ‘.

எப்படி ? எப்படி அது சாத்தியம் ?

அவளுடைய கணவர் நல்லவர். எல்லோராலேயும் விரும்பப் பட்டவர். என்ன, கொஞ்சம் நேர்மைவாதி.

அதுவே இப்போது வியாதி ஆகி, ஆளைக் கொன்று விட்டது-

ஹார்ட் அட்டாக், கேன்ஸரைப் போல.

எதற்கும் குறுக்கு வழியில் போக விருப்பம் இல்லாதவர்.

அதை வைத்துத்தான் வஞ்சகமாக அவரைக் கொன்று இருக்கிறார்கள்.

பாவிகள்.

மைதிலிக்கு விம்மி வெடித்து அழ ஆசையாக இருந்தது.

ஆனால் அழத்தெரியவில்லை.

அறைக் கதவு திறந்தது. முரளி – அவளுடைய தம்பி.

‘அக்கா வா, ஒரு வாய் சாப்பிடு. இப்படியே இருக்காதே. போனவரோடப் போயிட முடியுமா ? ‘

‘ இல்லடா. சாப்பிடாம இருந்து சாகணும்ற மாதிரியெல்லாம் எனக்கு விருப்பமில்லை. ஆனால் சாப்பாடு பிடிக்கலை. ‘ மீண்டும் யாரோ உள்ளே வந்தார்கள்.

சரவணன்- அவளுடைய மைத்துனன்.ராஜகோபாலின் தம்பி. ரொம்ப தளர்ந்திருந்தான்.

அண்ணனுமும் தம்பியும்மாகத் தான் தொழில் செய்து வந்தார்கள்.

‘என்ன முரளி, அண்ணி சாப்பிடாம அடம் பண்றாங்களா ? ‘

‘இல்லை சரவணா..பிடிக்கலை. ‘-மைதிலி,

‘அது சரி சரவணா. யார் இப்படி பண்ணியிருப்பாங்க ? ‘-

சோகத்தையும் வேதனையையும் விழுங்கிக் கொண்டு,மெதுவாகக் கேட்டாள்.

‘நான் சோகத்தாலோ, வேதனையாலோ விழுந்துவிடக்கூடாது ‘-

வைராக்கியம்.

‘அது வந்து அண்ணி, லோக்கல் ரவுடிங்க, தொடர்ந்து நம்பத் தொழிலை செய்யற முதலாளிகளை, மாசமாசம் மாமூல் கேட்டு தொந்தரவு செய்யறாங்க. அண்ணனுக்கு இது கடுப்பாயிடுச்சு. நானும் எவ்வளவோ சொன்னேன் – ‘எதுக்கண்ணேன் நமக்கு வம்பு. கேட்கறதை கொடுத்துடலாம் ‘ னேன்.அண்ணன் மறுத்துட்டாரு.

போலீஸ்ல கம்ப்ளெயிண்ட் கொடுத்துட்டாரு.

அதுலேயும் இந்த கபாலி மேலே அண்ணனுக்கு அசாத்திய எரிச்சல்.அவன் தான் அவரை கரம் வெச்சு வெட்டிட்டான் ‘

‘கபாலி.. ? யாரு ? ‘

‘நம்ப வீட்டுல வேலை செய்யராளே-செல்வி, அவளுடைய

கொழுந்தன் ‘

‘என்னது ‘-முரளி அதிர்ந்தான்,

‘அவளுக்கு இதுல சம்பந்தம் இருக்குமா அக்கா ‘.

‘இல்லை முரளி, அவளுடைய புருஷனுக்கும் கபாலிக்குமே ஒத்துவராதாம்.தன் அண்ணனையே போட்டு தள்ளிறதா கபாலி மிரட்டுவானாம் ‘- சரவணன்.

‘ஓ.. ‘ மற்ற இருவரும் ஆச்சர்யமும் அதிர்ச்சியுமாக கேட்டுக் கொண்டனர்.

‘சங்கத்திலேயும் இந்த விஷயத்திலே ரொம்ப தீவிரமா இருக்காங்க.. ‘-கூட ஒரு தகவலைச் சொன்னான் சரவணன்.

‘எதுக்கு ‘-மைதிலி.

‘அந்த கபாலியை தூக்கு மேடைக்கு அனுப்ப ‘ -சரவணன்

வேகத்தோடுச் சொன்னான்.

‘கபாலி தூக்கு மேடைக்கு போயிட்டா ? அவன் குடும்பம்,பொண்டாட்டி, குழந்தை குட்டி எல்லாம் என்னப் பண்ணும் ? ‘

மைதிலி கேட்டாள்.

‘அவன் உனக்கும் குழந்தைகளுக்கும் செய்த கொடுமைக்கு என்ன தண்டனை. அதோட அவன் செய்த குற்றத்துக்கு என்ன தண்டனை ? ‘-முரளி ஆவேசமானான்

‘மரணதண்டனை தானா ? ‘-மைதிலி.

பதில் சொல்லாமல் முரளியும், சரவணனும் மெளனமாயினர்.

‘சரி. அந்தப் பேச்சை அதோட விடுங்கடா. ராதாவும்,தாராவும் சாப்பிட்டாங்களா..மாலதி… ‘- மைதிலி பேச்சை மாற்றினாள். புரிந்துக் கொண்டார்கள். அறையை விட்டு வெளியில் வந்தனர்.

இருவர் முகமும் யோஜனையில் இருந்தது.

‘முரளி உன் கிட்டே ஒண்ணு டிஸ்கஸ் பண்ணனுமே ‘-

சரவணன் சொன்னான்.

‘நான் ரெடி. இப்பவே டிஸ்கஸ் பண்ணலாமே.. ‘-

முரளி அவனுடன் மாடி அறைக்கு சென்றான்.

-4-

‘பாவி மனுஷன். இவனுக்கு வாக்கப் பட்டதுக்கு, நாண்டுகினு சாவலாம். எவ்வளவு நல்ல மனுஷன். அவரைப் போய் வெட்டிட்டு இப்போ, கொட்டிக்க மட்டும் இங்க வந்துடு. ‘

ஜாமீனில் ஜெயிலிலிருந்து வெளியில் வந்திருக்கும் கபாலியின் வீடு.

‘ பதினஞ்சு நாளா.. இந்த ஊருல என்னால வெளில தலை காட்டமுடியலய்யா பாவி. உன்னை அந்த மாரியாத்தா தான் வாரிகினு போவனும்..வேற எப்படி உனக்குலாம் சாவுங்கறே.நல்ல மனுஷனைக் கொன்னுட்டு வந்து நிக்கறையே..நீ விலங்குவையா ? ‘ – மங்கா கத்தினாள்.

‘த..சொம்மா சொம்மா, நல்ல மனுஷன் நல்ல மனுஷன்கறையே…நான் கேட்ட மாமூல கரீட்டா கொடுத்திருந்த அந்த ஆளை போட்டு தள்ளியிருக்க வேணா மில்லே. அதோட நீயே நீதிபதி கிட்டே என் புருஷன் தான் கொலை காரன்னு சாட்சி சொல்லுவே போலேருக்கே..

கழுத முண்டை.. ‘- கபாலி ஆக்ரோஷப்பட்டான்.

‘சொல்லதான்யா போறேன் ‘

பாய்ந்து வந்த கபாலி அவள் தலை முடியை பிடித்து-

‘ அவுசேரி சிறுக்கி.. புருஷனை காட்டி குடுப்பியா. அந்த பெரிய மனுஷனை வச்சிருந்தியா ?- ‘ கேட்டப் படி அடித்தான்.

‘பாவி .. ஏன்யா இப்படில்லாம் பேசறே. நீ நல்லா இருப்பியா ?

ஒரு நல்ல மனுஷனை கொன்னுட்டே.இப்போ அவரை அசிங்கமாப் பேசறே. நீ உருப்படுவியா ? அதோட, நம்ப பொண்ணு சுந்தரி வயசு தானே ஆவுது அந்த இரட்டை பொண்ணுங்களுக்கும். அது கூட உன் மனசுல படலையா அந்த மனுஷனை வெட்றச்சே. மனுஷனா நீ ? சீ மிருகம்… ‘ –

மங்கா வெறி பிடித்தவளாக கத்தினாள்.

மீண்டும் அடி .கத்தல். சண்டை.ரகளை.

அவர்களுக்கு அது ஒரு போர்க்கால இரவு.

-5-

ராதா, தாரா இருவரும் ஸ்கூல் பஸ்ஸி பரிட்சைக்கு போய் கொண்டிருந்தனர்.

‘வெரி சாரி போத் ஆஃப் யூ.. ‘ – அந்த இரட்டையருக்கு எப்படி, தோழிகளின் ஆறுதல் வார்த்தைகளை எடுத்துக் கொள்வது எனப் புரியவில்லை.

அவர்களுக்கு இன்னும் கூட தங்கள் தந்தையின் மரணத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

அவர்கள் அப்பாவை ஏன் கொலை செய்ய வேண்டும் ?

அவர் ரொம்ப நல்லவராயிற்றே.

அவர்கள் இருவருக்கும் எதைக் கேட்டாலும் வாங்கித் தருவார்.

ஃபிரெண்ட்ஸோடு பிக்னிக், சினிமா- இப்படி எல்லாவற்றிற்கும் அனுமதிப்பார். அம்மாதான் திட்டுவாள்-

‘ ரெண்டு கழுதை வயசு ஆறது ரெண்டு பேருக்கும். வயசுக்கு வந்து மூணு வருஷத்திற்கு மேல ஆச்சு இன்னும் என்ன ஊர் சுற்றல் சினிமா ? ‘

அப்பாதான் அம்மாவை சமாதானப் படுத்தி, அவர்களை அனுப்புவார்.

அப்படி பட்ட அப்பாவைக் கொன்று விட்டார்கள் என செய்தி வந்தப் போது அவர்களுக்கு அழக்கூட தோன்றவில்லை.

‘ராதா குட்டி,தாரா குட்டி எதுக்கும் அழக்கூடாது. எப்பவும் நீங்க ரெண்டு பேரும் சிரிச்சுக்கிட்டே இருக்கணும் ‘ – என்று அப்பா சொல்வது போல இருந்தது. அந்த அப்பா இப்போது இல்லை. பஸ்ஸிற்கு வெளியே – ‘டமார் ‘ என பயங்கரச் சத்தம்.

– ஆட்டோ ஒன்று ஒரு மாணவியை மோதி ஆக்ஸிடெண்ட்.

-6-

‘அக்கா… ‘- முரளி கூப்பிட்டப் படி வந்தான்.

மைதிலி பால்கனியில் இருந்தாள்.

முரளியுடன், சரவணன்.

‘என்னடா இப்பல்லாம் ரெண்டுப் பேரும் ஒண்ணாவே இருக்கீங்க ?என்னவாது திட்டம் போடறீங்களா ? ‘- மைதிலி,மெல்லிய குரலில் கேட்டாள்.

‘கரெக்ட்டா சொல்லிடாங்க அண்ணி. ‘

‘என்னது ? ‘

‘ நாங்க திட்டம் தான் போட்டிருக்கோம். ‘-

முரளி கொஞ்சம் ஆவேசமாகச் சொன்னது, மைதிலியை கவலைப்படுத்தியது.

‘என்னடா சொல்லறே ‘

‘ஆமாம் அண்ணி. என் அண்ணனை கொன்னவனை

பழி வாங்கப் போறோம்- ‘ வெறியோடு சரவணன் சொன்னான்.

‘சரவணா, முரளி. என்ன இது மடத்தனம் ? ‘-மைதிலி அதிர்ந்தாள்.

‘ஆமாம் அக்கா. சரவணன் சொன்னது உண்மை. உன் கிட்டே கரியத்தை முடிச்சப் பிறகு சொல்லலாம்னு தான் சொன்னேன். சரவணன் தான் உன் கிட்டே சொல்லி ஆசிர்வாதம் வாங்கிக்கலாம்னான் ‘

‘என்ன பேத்தல். இதுக்கு என்கிட்டேஆசீர்வாதம் வேறையா ? இதுக்கெல்லாம் நான் ஆசீர்வாதம் செய்வேண்னு யார் சொன்னா ?மூளையிருக்கா உங்க ரெண்டுபேருக்கும். கொலைக்கு பழி வாங்க போறன்கலாம் ‘-மைதிலி ஆவேசப்பட்டாள்.

‘அம்மா ‘-ராதாவும் தாராவும் உள்ளே வந்தனர்.

அவர்கள் வரும் நேரமாகிவிட்டதா ?

‘என்னடி. ஒழுங்கா பரீட்சை எழுதினிங்களா ? ‘

ராதா சொல்ல ஆரம்பிப்பதற்குள், தாரா சொன்னாள்:

‘அம்மா இன்னிக்கு ராதா பரீட்சை எழுதினதே பெரிய கதை.

மேடம் இன்னிக்கு ஸ்கூல்ல பெரிய்ய ஹீரோயின் ஆயிட்டாங்க.. ‘

‘என்னடி நடந்தது. சொல்லு. என்னமோ சஸ்பென்ஸ் வெக்கற. எனக்கு படபடப்பா வறது ‘-முரளியும், சரவணனும் பதறினர்.

அவர்களை முறைத்த மைதிலி-

‘ஒண்ணுமில்லே சும்மாயிருங்க,யேய் தாரா சொல்லு என்ன ஆச்சு ? ‘

‘ஒண்ணுமில்லே அம்மா. நாங்கப் பரிட்சை எழுத பஸ்ஸுல போறச்சே,ரோட்டில நம்ப சுந்தரி இல்லே..அவளை ஒரு ஆட்டோ மோதி ரோடெல்லாம் நிறைய ரத்தம்.இன்னும் பரீட்சைக்கு ஒரு மணி நேரம் இருக்குன்னு எங்க ஸ்கூல் பஸ் இன்சார்ஜ்,ஸ்கூல் அதாரிட்டாஸ் கிட்டே பர்மிஷன் வாங்கிக்கிட்டு, அவளை ஹாஸ்பிடலில் சேர்த்தாங்க. சுந்தரிக்கு நிறைய ரத்தம் வேஸ்ட் ஆயிட்டதாலே, ரத்தம் தேவை பட்டது. அவளுடைய பிளட் குரூப்பும், நம்ப ராதாவோட பிளட் குரூப்பும் ஒண்ணாயிருந்தது.. ‘

‘அதனாலே.. ‘ – சரவணனும், முரளியும் கேட்டனர்.

குரல்களில் உஷ்ணம்.

‘அம்மா.. ‘-ராதா சற்று இழுத்தாள்-

‘பாவம்மா சுந்தரி. அவளால பரிட்சை எழுத முடியலே. அதோட

உயிருக்கு வேற போராடிண்டு இருக்கா.பார்க்க பாவமா இருந்தது.

அதான் நான் சுந்தரிக்கு பிளட் டொனேட் பண்ணினேன்.அது தப்பா ? ‘-

ராதா அப்பாவியாகக் கேட்டாள்.

மைதிலி – சரவணனையும்,முரளியையும் பார்த்தாள்.

முற்றும்.

Series Navigation

இரவி ஸ்ரீகுமார்

இரவி ஸ்ரீகுமார்