நளாயனி

This entry is part [part not set] of 61 in the series 20040805_Issue

பூரணி


—-
கால தர்மம் அனுசரித்து
கணவனுக்கு மதிப்பளித்து
சீக்காளிக் கணவனுக்கு
சிசுருஷை பல செய்து
அருவெறுப்புக் காட்டாது
அவனுடனே வாழ்ந்து வந்தேன்.
கொடுமையம்மா ! தாசியிடம்
கொண்டுவிடு எனப் பணித்தான்;
நடக்க வலுவற்ற அவனை
நான் சுமந்தேன் கூடையிலே
தடத்தில் ஒரு கழுமரத்தான்
‘தாலி போம் நாளை ‘ என்று
சாபமிட்டான் சண்டாளன்.
வைதவ்ய பயங்கரத்தால்
வெலவெலத்த நான் ‘ நாளை
பொழுது விடியாது போ ‘ என்று
மறு சாபம் இட்டுவிட்டேன்.
என்னுடைய சாபத்தால் ஏற்படும்
அதன் விளைவை
எண்ணி பயந்த தேவர்கள்
வந்து மிக வேண்டினர் வாபஸ் பெறச்சொல்லி
அழகான திடமான அகமுடையான் வேண்டுமென
ஐந்துமுறை கூச்சலிட்டேன்
ஆதவனை வரவிட்டேன்.
திரெளபதியாய் பிறப்பெடுத்து
திட தீரக் கணவர்கள்
ஐவரை அடைந்திருந்தும்
அடைந்ததில்லை ஒரு சுகமும்.
—-
nagarajan62@vsnl.net

Series Navigation

பூரணி

பூரணி