அவர்களும் மனிதர்கள்தாம்!

This entry is part of 45 in the series 20030302_Issue

நா.முத்து நிலவன்.


இலங்கையிலே செத்ததுவும் மனிதன், அயோத்தி
இடிந்ததிலே செத்ததுவும் மனிதன், காஷ்மீர்
கலங்கையிலே செத்ததுவும் மனிதன், குஜராத்
கலவரத்தில் செத்ததுவும் மனிதன், நியூயார்க்
குலுங்கையிலே செத்ததுவும் மனிதன், ஆஃப்கன்
குத்துயிராய்ச் செத்ததுவும் மனிதன், அறிவு
மழுங்கையிலே செத்ததெல்லாம் சிவந்த ரெத்த
மனிதர்கள் மனிதர்கள் மனிதர் கள்தாம்!

muthunilavan@yahoo.com

Series Navigation