நானும் நீயும்.

This entry is part of 23 in the series 20020505_Issue

எஸ். வைதேஹி.


உனக்கும் எனக்குமிடையில்
ஓவியங்கள் கூடிய
நிலைக்கண்ணாடி.

அழகற்ற விலங்குகளின்
உருவமேற்று கலகக் காரர்கள் ஆனோம்
சமய சந்தர்ப்பங்களில்.

உன் கோரைப்பற்களின் சிரிப்புக்கிடையிலும்
என் கூரிய நகங்களின் கீறலுக்கு பின்புறமும்
உதிர்ந்துபோன நம் றக்கைகள்.

கனவுகளில் சுய உருவம் பெற்று
காற்றின் சப்தத்தை கிழித்துக் கொண்டிருந்தது
நாம் ரகசியமாய் பேசிய பேச்சுக்கள்.

நகரத் தெரியாத கடிகார முட்களாய்
நாம் நின்று கொண்டு பொழுதுகளை
தள்ளும் போது
யிமை மூடி நாம் தொடங்கிய
கணங்களை நான் எண்ணுகிறேன்.

********

Series Navigation