உறங்கச் செல்லாதே மீண்டும் ! = கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) ஒரு பெரும் வாகனம் கவிதை -15 பாகம் -2

This entry is part [part not set] of 44 in the series 20100807_Issue

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா



நல்லது செய்வதற்கும்
பொல்லாங்கு புரிவதற்கும்
இடைப்பட்ட சிந்தனைக்கு அப்பால்
ஒரு களம் உள்ளது
உன்னை அங்கு சந்திக்கலாம்
என்று நினைக்கிறேன்.
அதன் பச்சைப் புல்லின் மீது
ஆத்மா படுத்துள்ள போது
வையகம் நிறைந்திடும்
வார்த்தைகள் வெளிவரா வண்ணம் !
அர்த்தமற்றுப் போகும்
அரிய கருத்துக்களும்
ஒருவர் மீது
ஒருவர் கூறும் புகாரும் !

+++++++++++

காலை இளம் தென்றல்
காதில் கூறுவதற்கு
இரகசியங்கள் உள்ளன !
உறங்கச் செல்லாதே நீ
திரும்பவும் !
சாதிக்க நீ விரும்புவதை
உறுதியாய் வேண்டிக் கொள் !
உறங்கச் செல்லாதே நீ
திரும்பவும் !
ஈருலகும் தொட்டுக் கொள்ளும்
வாசலைக் கடந்து
இருபுறமும் மாந்தர் போகிறார் !
வட்ட வடிவக் கதவுகள்
உனக்காகத்
திறந்தி ருக்கும் !
உறங்கச் செல்லாதே நீ
திரும்பவும் !

++++++++++++++

உனக்கு முத்தமிட விழைகிறேன்
முத்தத்தின் விலை
உனது வாழ்வு தான் !
எனது காதல்
என் வாழ்வை மிதித்து
இரைச்ச லிட்டு ஓடுது
எத்தகை மலிவுச் சரக்கு !
விலை கொடுத்து வாங்குவோம்
காதலை !
காலை இளம் பரிதியில்
காண்பாய் தூசிகள் நடனம் !
ஒரு பெரும் திருப்பம் !
நமது ஆத்மா உன்னோடு
நடனம் புரியும் கால்
தடமின்றி !
காதில் நான் முணுமுணுக்கும் போது
ஆத்மாக்களை நீ
நோக்க முடியுமா ?

(தொடரும்)

***************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (August 2, 2010)

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா