பவளமணி பிரகாசம் சிற்றெறும்பு ஊர்வதினால் கல்லும் தேய்வதுண்டு சிறு துளியும் சேர்வதினால் வெள்ளம் ஆவதுமுண்டு சிற்றுளியும் செதுக்குவதால் பாறையும் சிலையாகுமே சிற்றடியை பதித்துத்தான் நீள் பயணம் நிகழுமே சிறு பொறியும் பற்றித்தான் பெருந்தீயும் மூளுமே…
நெப்போலியன்,சிங்கப்பூர் நிமிடங்களின் தீர்வை கரைக்காத கண்ணாடிக் குடுவையில் நமக்கான கரைதல்கள் மேலும் கீழும் கொட்டியபடியே... உன் கழித்தலில் என் கூட்டலும் கணக்கிடப்படும் வேளைகளில் நம் தசமம் சரியென்றெண்ணி தலையாட்டுகிறாய்... வார்த்தைகளால் நம் தலைகள் சீவப்படும்…
தீபம் கோபி, சிங்கப்பூர் காண்பதனைத்தும் தனதென்று கவலையின்றி இன்புற்று இனித்திருந்த மழலை! வாலிபத்தின் வசந்தத்தில் கனவுகளில் திளைத்து களித்திருந்த இளமை! பொறுப்புகள் சுமந்து கனவுகள் நிறைவேற உழைத்துக் களைத்து துளிர்த்த வியர்வைத்துளி மறையுமுன்... வெள்ளிநரை…
புகாரி . சித்திரையே எழில் முத்திரையே சொல்லிவிடு உன் சூட்சுமத்தை எத்தனையோ தமிழ் மாதங்களும் இன்னமுதத் தேன் அளந்தாலும் முத்தொளிரும் தமிழ்ப் புத்தாண்டில் முரசொலித்தே உன் முகமெடுத்து முத்தமிழர் ஏன் முன்வைத்தார் மொழிவாயே என்…
பனசை நடராஜன்,சிங்கப்பூர் ! கொல்கிறார் மக்களை, கோட்ப்பாட்டைக் காக்கவாம்; கல்மனம் கொண்ட கயவர்கள் - சொல்வார் தெளிவில்லா அத்தகைய தீயோர் அழிந்தால் ஒளிருமே இந்த உலகு! பனசை நடராஜன்,சிங்கப்பூர் (feenix75@yahoo.co.in)
சத்தி சக்திதாசன் இதயத்தைக் கொஞ்சம் திறந்து விடு இருட்டழிந்து ஓளி வரட்டும் அன்பு எனும் அந்த அகல் விளக்கை சிறிதாய்த் தன்னும் ஏற்றி வை மின்சாரம் மறைந்து போனால் விளக்குத்தானே வெளிச்சம் தரும். எங்கே…
தமிழவன் மறந்துபோன இளம்சிவப்புப் பூ தோன்றுகிறது பூதாகரமாய், கனவில்லை. பக்கத்தில் தாளில் உறையும் புகைப்படத்திலிருந்து மனதிற்குள் வந்து நிஜமாகின்றன பெயர்தெரியா ந்ீல, மஞ்சள் பூக்கள். வெளிப்படாத கண்ணீர் நெஞ்சில். விதியென்னும் வேலிகள் பலமாய் இறுகுகின்றன.…
பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்) வழக்கமாய் ஆறு மணிக்கு விழித்து அனைத்தும் முடித்து அதே பேருந்து 61-ல் அலுவலகம்... அதே அலுவலகம் அதே நண்பர்கள் அதே வேலை அடிக்கடி தொலைபேசி அதே வருமானம்.... அன்றைக்கு மட்டும் ஏன்…
பனசை நடராஜன், சிங்கப்பூர் வெண்பா எனில்நீ விலகியே ஓடாதே மண்பானைச் சோறாய் மணக்கும் - நண்பா முதுமரபுப் பாடல் முழுலட்டு, தேர்ந்த புதுக்கவிதை பூந்தியைப் போல்! - - (feenix75@yahoo.co.in) ( இன்று வெண்பா…
ஈழநாதன் காலை வெய்யில் கண்கூசும் ஒளிபட, ஆல மரத்தடியில் அமர்ந்திருக்கும் பிள்ளையார்! வாசலுக்கு வடக்கே வளர்ந்திருக்கும் பூவரசு நிழல் தந்த மறைவில் நிற்கும் ஓர் சிறுவன். அடிமரத்துடன் ஒட்டிய அரைவயிறு ஒட்டியபடி பசிமயக்க நிலையில்…