தமிழ் நூல்.காம் வழங்கும் புதிய வெளியீடுகள்

This entry is part [part not set] of 39 in the series 20110123_Issue

தமிழ் நூல்.காம்


தமிழ் நூல்.காம் வழங்கும் புதிய வெளியீடுகள்
1.தேகம் –சாரு நிவேதிதா-ரூ 90.
சித்ரவதைகள் மூலம் ஒரு உடலை இன்னொரு உடல் முழுமையாக வெற்றி கொள்ளும் போது நிகழ்வது ஒரு புராதனமான மிருக இச்சையா அல்லது அதற்குள் ஒரு நீதிமுறை செயல்படுகிறதா என்கிற கேள்வியை எதிர்கொள்கிறது இந்த நாவல். சாரு நிவேதிதா இந்த நாவல் மூலம் காட்டும் உலகம் கடும் மன அதிர்ச்சியை ஏற்படுத்துவதன் காரணம் அந்த உலகத்தின் ஒரு பகுதியாக ஒவ்வொருவரும் இருக்கிறோம் என்பதுதான். பக்கம் 176.
2.சரசம் சல்லாபம் சாமியார்—சாரு நிவேதிதா—ரூ 85.
நித்யானந்தர் போன்றவர்கள் இன்று ஆன்மீகத்தை ஒரு மாபெரும் வர்த்தக நிறுவனமாக மாற்றியிருக்கின்றனர். தங்களது புனித முகமூடிகளுக்குப் பின்னே நிகழ்த்தும் நிழல் நடவடிக்கைகள் எளிய மனிதர்களின் அந்தரங்கத்தை ஆழமாக காயப்படுத்துவது மட்டுமல்ல,
அவர்களை எவ்வாறு பிறழ்வு கொண்டவர்களாகவும் மாற்றுகிறது என்பதை சாருநிவேதிதா இந்த நூலில் விரிவாக முன்வைக்கிறார்.பக்கம் 144.
3.கலையும் காமமும்—சாரு நிவேதிதா—ரூ 100
சாரு தன்னைப் பற்றியும் பிறரைப் பற்றியும் இருக்கக்கூடிய அபிபிராயங்களை பாசாங்குகள் ஏதுமின்றி இந்த விவாதங்களில் முன் வைக்கிறார். சாருவைப் பற்றி பிறர் முன் வைக்கும் குற்றச்சாட்டுகள் கூட அவர் தன்னைப்பற்றி வெளிபடையாக சொல்லிக் கொண்டைவைகளிலி ருந்தே உருவாக்கப்படுகின்றன என்பது அவரது சுதந்திரமான மன நிலைக்கு ஒரு சாட்சியம். இந்த நூல் அந்த மன நிலைக்கு ஒரு நிருபணம்.பக்கம் 168.
4.கடவுளும் சைத்தானும்—சாருநிவேதிதா—ரூ 60
சாரு இந்த நூலில் விவாதிக்கும் பல பிரச்சினைகள் நமது கலாச்சார மதிப்பீடுகளோடும் நுண்ணுணர்வுகளோடும் தொடர்புடையவை. குடி, கவிதை,புங்கொத்துகள், உடல்குறைபாடுகள், கசப்புகள், பிரியங்கள், என பல்வேறு தளங்களில் இவை கூர்மையான கேள்விகளை எழுப்புகின்றன.பக்கம் 96
5.சேக்ஸ்பியரின் மின்னஞ்சல் முகவரி—சாரு நிவேதிதா—ரூ 60
சாருநிவேதிதாவின் கதைகள் தமிழ்ச் சிறுகதைகளின் இலக்கணங்களை தயக்கமின்றி கலைப்பவை. வழக்கமான கதை சொல்லும் முறைமையினைக் கடந்து செல்வதன் மூலம் அவர் தனக்கே உரித்தான ஒரு பிரத்யேக மொழியில் தனது புனைவுலகை உருவாக்குகிறார். நவீன வாழ்க்கைமுறையின் அபத்தங்களை மனித உறவுகளின் விசித்திரத் தன்மையை அக் கதைகள் வெகு சுவாரசியமாக எழுதிச் செல்கின்றன.பக்கம் 96.
6.கனவுகளின் நடனம்—சாருநிவேதிதா—ரூ 110
இதைப் படிக்கும் ஒருவருக்கு தமிழ்ச் சினிமா பற்றி மிகவும் எதிர்மறையாக எழுதப்பட்ட கட்டுரைகள் என்று தோன்றக்கூடும். தமிழ் சினிமாவை மிக அதிகமாக நேசிப்பதாலேயே இப்படிப்பட்ட கட்டுரைகளை எழுதினேன். கடந்த 30 ஆண்டுகளாக சர்வதேச சினிமாவின் தீவிரமான ரசிகன் என்ற முறையில் இதையெல்லாம் சொல்லியாக வேண்டியிருக்கிறது.(சாரு நிவேதிதா முன்னுலையிலிருந்து).பக்கம் 184.
7. மழையா பெய்கிறது—சாரு நிவேதிதா—ரூ 95
சாருநிவேதிதா இந்த நூலில் உருவாக்கும் சர்ச்சைகள் வழியே எழுப்பும் அட்ப்படைக் கேள்விகள் உரு தமிழ் எழுத்தாளன் சந்திக்கக் கூடிய அவமானங்களைப் பற்றியவை. அவன் தனது இருப்பையும் எழுத்து இயக்கத்தையும் தக்கவைத்து கொள்ள போராடும் அபத்தமான சூழல் பற்றியவை.பக்கம் 160
8.இதற்கு முன்பும் இதற்கு பின்பும்—மனுஷ்ய புத்திரன்—ரூ 190
மனுஷ்ய புத்திரன் 2010 ல் எழுதிய 126 கவிதைகளின் தொகுப்பு இது. ஒரு கலாச்சாரத்தின் கூட்டு மனத்தை பிரதிநிதித்துவம் செய்யும் ஒரு கவிஞனின் சாத்தியங்கள் எந்த அளவுக்கு உக்கிரமானவை. எல்லையற்றவை என்பதற்கு சாட்சியமாக இந்த தொகுதி திகழ்கிறது. நவீன தமிழ் கவிதையில் இதுவரை எழுதப்படாத எண்ணற்ற உடல்களும் மனங்களும் இக்கவிதைகளெங்கும் ததும்புகின்றன.பக்கம் 320
9.காண் என்றது இயற்கை—எஸ். ராமகிருஷ்ணன்—ரூ 90.
இந்த கட்டுரைகள் இயற்கை குறித்த ஆழ்ந்த புரிதலை ஏற்படுத்துகின்றன. நாம் எவ்வளவோ முறை கண்டு விலகிப்போன இயற்கைக் காட்சிகளை நின்று அவதானித்துப் புரிந்துகொள்ள வைக்கின்றன. இயற்கை குறித்த ஈடுபாடும் லயிப்புமே அகவிடுதலையின் ஆதார உணர்வுகள் என்பதைச் சுட்டிக்காட்டுகின்றன.பக்கம் 168.
10.குறத்தி முடுக்கின் கனவுகள்– எஸ். ராமகிருஷ்ணன் —ரூ 100.
ஜி.நாகராஜன்.புதுமைபித்தன். சம்பத. வண்ணதாசன். சரத் சந்திரர். வைக்கம் முகமது பஷீர் என்று நீளும் இந்த மறுவாசிப்புக் கட்டுரைகள் நவீன இலக்கிய படைப்புகள் சார்ந்த புதிய வாசிப்பு அனுபவத்தையும் அணுகுமுறையையும் வெளிப்படுத்துகின்றன.தீவிர வாசகன் தன்னை வளர்த்து கொள்ள வேண்டிய முக்கிய படைப்புகளை அடையாளம் காட்டும் சிறப்பான நூல் இது.பக்கம் 184.

Series Navigation

தமிழ் நூல்.காம்

தமிழ் நூல்.காம்