சுப்ரபாரதிமணியனின் ” சாயத்திரை -: மலையாள மொழிபெயர்ப்பு நூல் வெளியீடு

This entry is part [part not set] of 54 in the series 20090915_Issue

சாயத்திரை



சுப்ரபாரதிமணியனின் ” சாயத்திரை “நாவலின் மலையாள மொழிபெயர்ப்பு நூல் ” சாயம் புரண்ட திர “வெளியீட்டு விழா கோவை காந்திபுரத்தில் உள்ள மலையாளி சமாஜத்தில் ஓணம் பண்டிகை அன்று நடைபெற்றது. மலையாள கவிஞர் விஜயகுமார் குனிச்சேரி நாவலை வெளியிட்டுப் பேசினார். ” மூன்றாம் உலக நாடுகளின் ச்ற்றுச்சூழல் பிரச்சினைகள் விசுவரூபம் எடுத்து மனித உரிமை விசயங்களாக மாறி வருகின்றன. சுற்றுச் சூழல் பிரச்சினைகள் சார்ந்த அக்கறையை கலைப்படைப்புகளில் பதிவு செய்ய வேண்டிய அவசியத்தை சுப்ரபாரதிமணியனின் ” சாயத்திரை ” நாவல் வலியுறுத்துகிறது. ” என்றார்.

” சாயம் புரண்ட திர ” நூலை மலையாளத்தில் மொழிபெயர்த்திருப்பவர் கோவையைச் சார்ந்த ஸ்டேன்லி ஆவார். திருப்பூரின் சுற்றுச்சூழல் பிரச்சினைகளை மையாமாகக் கொண்டும் , நொய்யலை ஒரு கதாபாத்திரமாகவும் கொண்ட ” சாயத்திரை ” நாவல் ஆங்கிலத்திலும் ( டாக்டர் ராஜ்ஜா மொழிபெயர்ப்பு ‍ The coloured curtaiந் ), ஹிந்தியிலும் ( மீனாட்சிபுரி மொழிபெயர்ப்பு ‍ Reng Rengli sadhar meiheli ) முன்பே மொழிபெயர்ப்பாகி வெளிவந்துள்ளன. கனனடத்தில் தமிழ்ச்செல்வி மொழிபெயர்த்து 2 ஆண்டுகள்ல ஆகி விட்டது. அது விரைவில் வெளி வரலாம்.

” சாயம் புரண்ட திர ” நூலை திருவனந்தபுரம் ” சிந்த ” பதிப்பகம் வெளியிட்டுள்ளது . விலை ரூ 85

issundarakkannan7@gmail.com

Series Navigation

சாயத்திரை

சாயத்திரை