சமசுகிருதம் பற்றிய மறுமொழியில்,

This entry is part [part not set] of 54 in the series 20090915_Issue

வெண் தாடி வேந்தர்.


சமசுகிருதம் பற்றிய மறுமொழியில், திரு துரைவேல் (திண்ணை – 4.9.2009) சொல்கிறார்:

”மற்றொன்று சம்ஸ்கிருதத்தை மற்ற சாதியினர் பயன்படுத்தவில்லை விரும்பவில்லை என எப்படி. சொல்லுகிறார்கள் என தெரியவில்லை. நான் தமிழுக்கு அடுத்தபடியாக விரும்பும் மொழியாக சமஸ்கிருதம் உள்ளது. ”

நீங்கள் இருக்கலாம திரு துரைவேல். எல்லாரும் இருக்கிறார்களா இல்லையா என்பதை இந்தியர்களை குறிப்பாக, தமிழர்களைப் பார்த்தால் தெரியுமே! கைப்புண்ணுக்குக் கண்ணாடியா?

திரு துரைவேல் சொல்கிறார்:”கோயிலுக்கு செல்லும் பெரும்பாலான பக்தர்கள் அர்ச்சகரின் அர்ச்சனை சமஸ்கிருதத்தில் இருப்பதையே வேண்டுகிறார்கள். அவர்களின் பெரும்பாலோர் தமிழ் கற்றவர்கள்,நாயன்மார்கள், ஆழ்வார்கள் பாடல்களில் திளைப்பவர்கள் (தமிழ் விரோதிகள் அல்ல). இவர்களுக்கெல்லாம் சமஸ்கிருதம் பயன்படும் மொழியாகவே உள்ளது. இந்துமதத் தத்துவங்களில் ஈடுபாடுகொண்டவர்கள் கணிசமானவர்கள் அனத்து சாதியினரிலும் உள்ளனர். அவர்கள் சமஸ்கிருதத்தை பயன்படுத்துகின்றனர். உலகம் முழுவதும் திருக்குரான் அதற்கான மொழியில் ஒலிப்பதைப்போல் இந்தியா முழுவதும் கோயில்களில் சமஸ்கிருதம் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது. சமஸ்கிருதத்தை செத்த மொழி என அனைவர் சார்பிலும் கூறுவேன் என்பது வெற்று அகம்பாவம் மட்டுமே. ”

இங்கு தனிமனித குணங்க்ள் விமர்ச்னத்துகுள்ளாகக் கூடாது. உலகத்தில் பொதுவான் பழக்கம் என்ன என்பதைத்தான் பார்க்கவேண்டும். அதன்படி, சமசுகிருதம் கோயிலில் திணிக்கப்படுகிறது. இது கிட்டத்தட்ட மதமாற்றத்தைப்போலத்தான். ஒருதலைமுறைமீது, திணித்தோமானால் போதம, .வரும்தலைமுறைக்ள் ஏற்றுகொள்ளும். அதுமட்டுமா, தீவிரவாதிகளாகவும் மாறிவிடுவர்.

கோயிலிலும், பூசைபுனஸ்காரங்களிலும் சொல்லப்படும் சம்சுகிருதத்தின் பொருட்கள் யாருக்காவது தெரியுமா? இப்படியிருக்க, சமசுகிருதத்தை தமிழர்கள் ஏற்றுக்கொண்டார்கள் என எப்படிச் சொல்லமுடியும்?

திரு துரைவேல் கேட்கிறார்:”செத்த மொழியென்பதற்கான வரையறை என்ன? மனிதர்களின் பேச்சுவழக்கில் இல்லாதது அதன் வரையறை என்பதாக யார் முடிவெடுத்தது?. சில நாட்டில் பல தலைமுறையாய் வாழும் தமிழர்கள் இடத்தில் தமிழ் பேச்சுமொழியாக இல்லை. அதற்காக தமிழை அவர்களைப்பொருத்தவரை ’அவ்வாறு’ கூறமுடியுமா? ”

ஒருமொழி செத்ததா, இல்லையா என்பதைக்கணக்கிட, மொழியியலாளர் உலகமுழுவதும் பேசப்படுகிறதா என்று பார்ப்பதில்லை. அப்படிப்பார்ப்பின், எல்லாமொழிகளும் செத்தமொழிகளே. எல்லாம் எல்லாநாடுகளிலும் பேசப்படுவதில்லை. ஆங்கிலம் உலகமொழிதான். ஆனாலும் பலநாடுகளில், அம்மொழி ம்க்களால் பேச, படிக்கப்படுவதில்லை.

எனவே, செத்தமொழி என்பதை எந்த நாட்டில் அம்மொழி தோன்றியதோ, அந்நாட்டில் மக்களால் பேசப்படுகிறதா என்பதை வைத்தே கணக்கிடுவர். அப்படிப்பார்க்கின், தமிழ், தமிழ்நாட்டில் பேசப்படுகிறது. சமசுகிருதம், பண்டிதர் படிக்கும் மொழி மட்டுமே. எனவே, செத்தமொழி எனவழைக்கப்படுகிறது.

‘செத்தமொழி’ என்பதன் வரையறை, மக்களால் அன்றாடவாழ்க்கைவாழ ப்யன்படுத்தப்படாதமொழி. அதே சமய்த்தில், அது பல சிறப்புச்செயல்களுக்கு ப்யன்படலாம். இங்கே சமசுகிருதம், கோயில்களில் பயன்படுத்தப்படுகிறதல்லவா?

இன்னொரு மொழியைப்பற்றியும், மொழியியலாளை பகர்வர். அது, காணாமல் போன மொழி: Extinct Language. அது எவ்விசய்த்திலும் பயன்படுத்தப்படாமல் ஒரேயடியாக அழிந்த ஒன்றாகும்.

Dead Language என்று விளக்குமிடத்தில், சமசுகிருதத்தை, எடுத்துக்காட்டிச்சொல்வர். Extinct Language என்று விளக்குமிடத்தில், Aghwan, Akkadian, Anglo-norman, Prakrit, Carian போன்றவற்றை எடுத்துக்காட்டுவர். இம்மொழிகள் இன்று எவராலும் பேசப்படுவதில்லை, மற்றவழிகளில் பயன்படுத்தப்படுவதில்லை.

செத்தமொழிக்கு சமசுகிருதம், லத்தீன் போன்றவற்றை எடுத்துக்காட்டுவர். ஏனெனில், இவை மக்களால் பேசப்படாவிட்டாலும், சிலவழிகளில் இன்றும் உள்ளன். வட்டிக்கானின், ஆலயத்தொழுகையில், முழுக்கமுழுக்க இலத்தீன்மொழியிலேதான்.

’செத்தமொழி’ என்ற அடை, எவருடைய கண்டிபிடிப்பல்ல. உலகமெங்கிலும் உள்ள மொழியியலாளர்கள் ஒருமித்த எழுதிய வரையறையாம். வெள்ளைக்காரர் சொலலி்த்தந்த விஞ்ஞானம், கலை, எனக் கல்லூரி்களில் படிக்கிறோம். மொழியியலும் (Linguisitics) அவர் சொல்லித்தந்ததே. திரு துரைவேல், அவரிடம் போய், ‘எப்படி சமசுகிருதத்தைப் போய் செத்தமொழி எனலாம்? நான் படிக்கிறேனே! என்று கேட்டுக்கொள்ளலாம்.

”தமிழ்மொழியின் பெருமையை மற்றொரு மொழியை தாழ்த்துவதன் மூலம்தான் உயர்த்தமுடியும் எனக்கூறுவது என் தமிழை பழிப்பதாக கருதுகிறேன். அவ்வாறு பழிப்பவர்கள் தமிழின் பெருமையை அறியாதவர்கள். அவர்களால் என்றுமே தமிழுக்கு நன்மை விளையப்போவதில்லை. ” எழுதுகிறார் திரு துரைவேல்.

சமசுகிருதம் தூற்றப்படவில்லை. ஆனால், அது இன்று மக்களால் சீந்தப்ப்டாத செத்தமொழி என மொழியியலாளர் சொல்வதே சுட்டிக்காட்டப்படுகிறது.

அப்படி, மக்களிடமிருந்து அம்மொழியைப் பிரித்து, அழித்ததில் பெரும்பங்கு பார்ப்பனருக்குண்டு. அதை அவர்கள் தேவைபாசை எனச்சொல்லி, கோயில்களில் முடக்கியதாலென்பதே என முதல்மடலில் அடிநாதமாகும். அவ்வர்று அவர்முடக்கக்காரணம் அவர்பிறமக்களை அடிமைப்படுத்த அது உதவியது. தமிழ்ப்பார்ப்பனரைப் பொறுத்தவரையில், தமிழா, சமசுகிருதமா உமக்கு முதலில் என்றால், எதைச்சொல்வர் என்பது தமிழகம் அறிந்த வரலாறு.

இவண்

வெண் தாடி வேந்தர்.

karikkulam@gmail.com

Series Navigation

வெண் தாடி வேந்தர்.

வெண் தாடி வேந்தர்.