கடிதம் பிப்ரவரி 3,2005

This entry is part of 39 in the series 20050203_Issue

ராதா


திண்ணை ஆசிரியர் குழுவினருக்கு,

கடந்த வாரத்திண்ணையில் ரெ.கார்த்திகேசுவின் கடிதம் வெளியாகி இருக்கிறது. http://www.thinnai.com/le0127051.html அவர், திண்ணை வாசகர்கள் கவனத்திற்கு

வலைப்பதிவொன்றில் http://dystocia.blogspot.com/2005/01/blog-post_17.html

முன் வைக்கப்பட்டுள்ள கருத்துக்களை கொண்டுவர விரும்புகிறேன்.அறிவியல் புனைகதை

என்ற தலைப்பில் வெளியாகும் கதைகள்தாம் அறிவியல் புனைகதைகள் என்று கருதப்பட

வேண்டியதில்லை.அப்படி ஒரு முத்திரையின்றி ஒரு அறிவியல் புனைகதை திண்ணையில்

வெளியாகியுள்ளது, நித்யா என்ற தலைப்பில் http://www.thinnai.com/st1104041.html

ஜெயமோகன் கதைகள் குறித்து மேலே சுட்டப்பட்டுள்ள வலைப்பதிவில் http://dystocia.blogspot.com

சில பதிவுகள் உள்ளன. இந்த ஒன்பது கதைகளிலும் ஒரு தேர்ந்த பதிப்பாசிரியருக்கு பொறுமையை சோதிக்குமளவிற்கு பல வேலைகள் காத்திருக்கின்றன. உதாரணமாக,புத்தகமாக வெளியிடும் போது பக்க எண்ணிக்கையினைக் கூட்டிக்காட்ட உதவும் பகுதிகள் கதைகளில் உள்ளன, மற்றபடி இவற்றால் வேறு பயனேதுமில்லை. இலக்கிய பிரதி, தொழில் நுட்பம்,கணினி, இணையம் குறித்த விவாதங்களுடன் ஒப்பிடுகையில் கார்த்திகேசு வியக்கும் கதையில் ஒரு ஆரம்ப கட்ட புரிதல் கூட இல்லை. மாறாக தன்னை முன்னிலைப்படுத்துவது தூக்கலாகத் தெரிகிறது. மெடாபிக்ஷன் metafiction குறித்த அவரது புரிதலில் உள்ள பிரச்சினையைத் தான் இக்கதை காட்டுகிறது. இக்கதைகளை படித்து விட்டு அறிவியல் புனைகதைகளே இப்படித்தான், சிறப்பான அறிவியல் புனைகதைகளுக்கு இவை ஒரு உதாரணம் என்ற தவறான புரிதல் வாசகர்களுக்கு ஏற்படாது என்று நம்புகிறேன். என்னுடைய மதிப்பீட்டில் இக்கதைகளுக்கு நூற்றுக்கு முப்பது மதிப்பெண் தரலாம்.

ஜீன் திருடனின் விநோத வழக்கு கதை ஜேம்ஸ் மூர் வழக்கினை நினைவுபடுத்துகிறது.கதாசிரியர் அதை குறிப்பிடாவிட்டாலும் அதை இதனுடன் தொடர்புபடுத்தி பார்க்க முடியும். நான் இதை விளக்கப்பப்போவதில்லை, இருக்கவே இருக்கிறது கூகிள். ஜேம்ஸ் பாய்ல் இதைக் குறித்து Shamans, Software and Spleens : Law and the Construction of the Information Society என்ற நூலில் விரிவாக எழுதியிருக்கிறார்.

திண்ணையில் வெளியாகும் என் கடிதங்கள் பற்றி சிலர் எனக்கு மின்னஞ்சல்கள் அனுப்பியுள்ளனர், அவர்களுக்கு என் நன்றிகள்.கருத்துக்களை எனக்கு மின்னஞ்சலில் தெரிவிப்பதை விட திண்ணைக்கு அனுப்புவதே பொருத்தமாயிருக்கும்.

வணக்கத்துடன்

ராதா

Series Navigation