தூரத்திலிருந்து பார்த்தேன்

This entry is part [part not set] of 30 in the series 20020414_Issue

தமிழில் வைஷாலி.

(ஹிந்தி கிண்டல்கவிதையிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டது, இதைப் படிக்கையில் ஷெர்வானி கவிதைகள் ஞாபகத்திற்கு வந்தால், ஒவ்வொன்று முடிந்தபிறகு ‘வாஹ் வாஹ் ‘ சொல்லிக் கொள்ளுங்கள்)

தூரத்திலிருந்து பார்த்தேன் ஒன்றும் தெரியவில்லை

தூரத்திலிருந்து பார்த்தேன் ஒன்றும் தெரியவில்லை

அருகினில் சென்று பார்த்தேன் அங்கே ஒன்றுமேயில்லை.

தூரத்திலிருந்து பார்த்தேன் கற்கள் தெரிந்தது

தூரத்திலிருந்து பார்த்தேன் கற்கள் தெரிந்தது

அருகினில் சென்று பார்த்தேன் அவை உண்மையிலேயே கற்கள்தான்.

தூரத்திலிருந்து பார்த்தேன் தண்ணீர் கொட்டிக்கொண்டிருந்தது

தூரத்திலிருந்து பார்த்தேன் தண்ணீர் கொட்டிக்கொண்டிருந்தது

அருகினில் சென்று பார்த்தேன் நனைந்து போய்விட்டேன்.

தூரத்திலிருந்து பார்த்தேன் சிங்கம் தெரிந்தது

தூரத்திலிருந்து பார்த்தேன் சிங்கம் தெரிந்தது

அதனால் அருகினில் செல்லவில்லை.

இன்று வானத்திலே நட்சத்திரங்கள் பிரகாசித்துக்கொண்டிருக்கின்றன

இன்று வானத்திலே நட்சத்திரங்கள் பிரகாசித்துக்கொண்டிருக்கின்றன

நேற்று எப்படி பிரகாசித்ததோ அதைப் போலவே.

தூரத்திலிருந்து பார்த்தேன் குழி போல் தெரிந்தது

தூரத்திலிருந்து பார்த்தேன் குழி போல் தெரிந்தது

அருகினில் சென்று பார்த்தேன் கீழே விழுந்து கால் முறிந்துவிட்டது.

Series Navigation

தமிழில்: வைஷாலி

தமிழில்: வைஷாலி