இட்லியின் அருமை இங்கிலாந்தில் தொியும் – 2

This entry is part of 37 in the series 20020310_Issue

கோமதிநடராஜன்


அன்புள்ள அனைவருக்கும்,

லண்டனில் என் தோழிகளிடம், ‘இட்லிக்கு என்ன வழி ? ‘,என்றுக் கேட்டதுதான் தாமதம்,அவர்களும் ஒரே இடத்துக்குப் போகப் பல வழிகளைக் காட்டும்,நம் ஊர்

ஆட்டோ ஓட்டுனர்கள் போல்,ஆளாளுக்கு ஒரு செய்முறையைக் கூறினார்கள்.

நானும் சளைக்காமல்,ஒவ்வொரு வழியையும் முயன்று பார்த்தேன்.செய்து பார்த்தபிறகுதான், எனக்கு ஒரு சந்தேகம் உதித்தது,இவர்களெல்லாம் இட்லிக்கு

வழி சொன்னார்களா அல்லது வெண்பளிங்குக் கல் செய்முறைக்கான விளக்கத்தைக்

கூறினார்களா ?

‘இட்லி மாவில் ஈஸ்ட் போட்டுப் பாருங்களேன் ‘இது ஒரு மலையாளியின் யோசனை.

இட்லி மாவில் ஈஸ்ட் கலந்தால் இட்லி வராது ‘ரொட்டிலி ‘தான் வரும். ‘மாவில் ஈனோ போடுவேன் ‘இது ஒரு குஜராத்தியின் சூப்பர் ஐடியா.கேட்கும்போதே வயிற்றிலிருந்து நுரை பொங்கிப் பொங்கி வருவது போலிருந்தது.

‘இட்லியை விட்டால் இங்கிலாந்தில் இவளுக்கு வேறு எதுவுமே கிடையாதா ? ‘என்று நீங்கள் அங்கே முணுமுணுப்பது எனக்கு இங்கே துல்லியமாகக் கேட்கிறது.

கற்பனையாக ஒரு சின்ன உரையாடல்:

‘இதோ பாருங்கள்,இந்த அறையில்,உங்களுக்குத் தேவையான அத்தனையும் நீங்கள்

நினைத்த நொடியில் வரும்….. ‘

‘ஆஹா!சந்தோஷம்….. ‘இது நான்.

வீட்டுச் சொந்தக்காரர் தொடர்கிறார். ‘டிவியில் சமீபத்தியத் தமிழ் படங்கள்,நீங்கள் டாவியை ஆஃப் பண்ணினால் கூடத் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும்.

‘இதை இதை இதைத்தான் நான் எதிர்பார்த்தேன் ‘

‘…..டெலிஃபோனைக் கையில் எடுத்தால் போதும் ஐஎஸ்டி மீட்டர் இல்லாமலேயே மணிக்கணக்கில் எந்த ஊருக்கும் பேசிக் கொண்டே இருக்கலாம் ‘என்று வாிசையாய்

மகிழ்ச்சி வெள்ளத்தில் திக்கு முக்காட வைத்தவர்,கடைசியில் ‘ஆனால் ‘என்று ஒரு பீடிகையுடன் , ‘ஒரே ஒரு சிரமம் ‘என்று நிறுத்தினார்.

‘ஒரே ஒரு சிரமம்தானே பொறுத்துக் கொள்ள மாட்டேனா ? நான் என்ன அத்தனை பேராசைக்காாியா ? ‘என்று அவாின் ஆனாலுக்குப் பின்னால் ஒழிந்திருக்கும் ஆபத்தை

உணராமல் நெகிழ்ந்தேன்.

‘இந்த அறையில் ஆக்ஸிஜன் வர வழியே கிடையாது ‘இது எப்படி இருக்கிறது ?

இதே நிலைமைதான் இட்லி இல்லாத இங்கிலாந்து.இங்கே கிடைக்கும் உணவு வகைகளைப் பற்றி எழுதினால் பத்திாிகைகள் இலவசப் பதிப்பு ஒன்று வெளியிட வேண்டியிருக்கும்.மாதிாிக்குச் சில உணவுகள்[நான் குறிப்பிடும் ஃபாஸ்ட் ஃபுட் எதுவும் வும் 1990ல் இந்தியா கேட் வழியாகவோ,கேட் வே ஆஃப் இந்தியா வழியாகவோ

இந்தியாவுக்குள் நுழைந்திருக்கவில்லை].

மாதிாிக்கு சில பதார்த்தங்கள்:காலை உணவுக்குக் கார்ன்பிளேக்ஸ் பல வகைகள்,பெப்ஸி,கோலா எல்லாமே மஹா மஹாதான்,2லிட்.3லிட் பாட்டில்கள்,ரொட்டி வகைகள்,ஃபிரன்ச் பிரட்,சீஸ் பிரட்,நூறு வகைகள்,[ஆயிரம் ராமர் சேர்ந்தாலும்,பரதனுக்கு ஈடாகாது என்ற கம்பர் லண்டனில் வசிக்க நேர்ந்திருந்தால்,ஆயிரம் ரொட்டிகள் சேர்ந்தாலும் ஒரு இட்லிக்கு ஈடாகுமா ? என்று நிச்சயமாகக் கேட்டிருப்பார்.]ஜாம் ஜாம் என்று ஜாம் வகைகள் ,,டெலிஃபோனில் ஆர்டர் கொடுத்தால் அரை மணிக்குள் அலறிக் கொண்டு வரும் இத்தாலி புகழ் பீட்ஸா,அடி முடி காணமுடியாத நூடுல்ஸ்,அதன் ஒரு முனையை நான் என் தட்டில் பிடித்துக் கொண்டு,அழகாகச் சிக்கல் எடுத்து ,நீட்டி நிமித்தி அனுப்பினால்,அதன் அடுத்த முனையை இந்தியாவில் இருக்கும் உங்கள் கையில் ஒப்படைத்து விடலாம்.

இப்படி ஏராளமான வகைகள் இருந்தாலும் நம் இட்லிக்கு முன் அத்தனையும் தூசு.

ஒரே ஒரு முறை நான் சொல்லும் முறையில் இட்லிக்கு அரைத்து வார்த்துப் பாருங்களேன்,என் தவிப்பு உங்களுக்குப் புாியும். ‘லண்டன் போய் இட்லிக்குத் திண்டாட வேண்டுமென்று உனக்குத்தான் தலையெழுத்து,எங்களுக்கென்ன வந்தது ?,இங்கே நாங்கள் மல்லிகைப்பூ மாதிாி இட்லி வார்த்துச் சாப்பிடுவோம்,மீதமிருந்தால்,தொடுத்துத் தலையில் வைத்துக் கொள்வோம் ‘என்கிறீர்களா ?அதுவும் சாிதான்.

இதோ இன்னும் ஒரு கற்பனை:

‘சங்கடமான சமையலை விட்டு சங்கீதம் பாடப் போறேன் ‘என்று யாரோ சொன்னது போல்,ஒரு மாறுதலுக்காக திரு சுப்புடு அவர்கள், ‘ சங்கீதத்தை விட்டுச் சமையலை

விமாிசனம் செய்யப் போகிறேன் ‘என்று வைத்துக் கொள்வோம்.[என் போதாத காலம்],என் இட்லியை விமாிக்க வந்தால் எப்படி இருக்கும் ?

அன்புடன் கோமதி நடராஜன்

( மீண்டும் அடுத்தவாரம் கடிதம் தொடரும்)

Series Navigation