மு.தளையசிங்கத்தின் தத்துவமும் மெய்யியலும் – பகுதி :மூன்று – தளையசிங்கத்தின் முக்கியத்துவம் என்ன ?

This entry is part [part not set] of 31 in the series 20020623_Issue

ஜெயமோகன்

பகுதி :மூன்று தளையசிங்கத்தின் முக்கியத்துவம் என்ன ?

சென்ற காலத்தைசேர்ந்த தளையசிங்கம் போன்ற ஒரு படைப்பாளியின் இன்றைய முக்கியத்துவன் என்ன ? அதிலும் தளைய சிங்கம் வெற்றிகரமாக புதைக்கப்பட்ட ஒருவர் என்று ஈழ த்து முற்போக்காளர் பலர் நம்பிக் கொண்டிருக்கிறார்கள் . அவரது காலத்தில் இல்லாத பல புதிய சிந்தனைப்பொகுகளும் இலக்கிய அலைகளும் இப்போது வந்து விட்டன. இப்பொது அவரை பற்றிபேச வலுவான காரணம் இருந்தாக வேண்டும் .

விளிம்புநிலை தத்துவம்

தளையசிங்கம் காலகட்டத்தின் மையத்தில் இயங்குபவரல்ல , அதன் விளிம்பில் சஞ்சரிப்பவர் என புரிந்துகொள்வது மிக அவசியம் . இவ்வித்தியாசத்தை உணரமுடியாவிட்டால் அவரது சிந்தனைகளின் பயன் குறித்து ஆழமான ஐயங்கள் நமக்கு ஏற்பட்டுவிடும் . நாம் வாழும் இக்காலத்தை புரிந்துகொள்வது , அதன் பிரச்சினைகளை தாண்டிச் செல்வது என்பது தான் எப்போதுமே சிந்தனையின் உடனடித் தேவை என்பது உண்மையே.ஆனால் நாம் வரலாற்றாய்வில் பலநூறு ஆண்டுகள் பின்னோக்கி பயணம்செய்து அறிய முயல்கிறோம். நிலவியல் தொல்லுயிரியல் ஆய்வினூடாக பலலட்சம் ஆண்டுகள் தாண்டிச் செல்கிறோம் .அவை பயனற்றவையல்ல , நாம் வாழும் இந்த நிகழ்காலமென்பது அதன் தொடர்ச்சியே. அதை அறிந்தால் மட்டுமே நிகழ்காலத்தை அறியமுடியும். இன்னொரு கோணத்தில் இப்படி சொல்லலாம்.இறந்தக ‘லம் குறித்த நமது எல்லா புரிதல்களையும் நிகழ்காலத்திலிருந்தே நாம் உருவாக்கிக் கொள்கிறோம் . அப்படியானால் நமது இறந்தகாலம் குறித்த நமது ஆய்வுகளின் நோக்கம் என்ன ? நமது கொள்கைகள் ,நம்பிக்கைகள் ஆகியவற்றை நிகழ்காலத்தின் சிறு எல்லையிலிருந்து விரித்து இறந்தகாலத்தின் எல்லையின்மைவரை நீட்ட முயல்கிறோம் .தளையசிங்கம் செய்வதும் அதுதான் . அவர் எதிர்காலம் நோக்கி நகர்கிறார் .

இக்கட்டுரையில் ஏற்கனவே சொல்லப்பட்டபடி ஊகங்கள் தான் அறிதலின் அடிப்படைகள் ஆகின்றன. அறிவியலில் மட்டுமல்ல , தத்துவத்திலும் மெய்யியலிலும் கூட அப்படித்தான் .ஊகங்களுக்கு ஒரு முக்கியமான இயல்பு உண்டு . அவை அவற்றுக்குரிய அறிவுத்தளத்தின் விளிம்புநுனியில்தால் சஞ்சரிக்க முடியும் . இந்தத் தளம் விளிம்புநிலை அறிவியல் [frontier science ] என்று கூறப்படுகிறது .

விளிம்பு நிலை அறிவியல் மற்றும் தத்துவம் குறித்த பேச்சுகளில் எப்போதுமே எழக்கூடிய வினா இவற்றுக்கு அப்பால் உள்ள எந்த அடிப்படையில் இந்த சஞ்சாரங்கள் நிகழ் கின்றன என்பதே . கணிசமான அறிவியலாளர்கள் தங்களுக்கு அடிப்படையாக உள்ளது உள்ளுணர்வின் மூலம் உள்வாங்கப்பட்ட மெய்யியல் தேடல்களே என்றும் , அவற்றை பெரும்பாலும் மதத்தில் இருந்து பெற்றுக் கொண்டதாகவும் சொல்லிய்ருக்கிறார்கள் .உதாரணமாக சந்திர சேகர் கருந்துளைகள் குறித்த தனது ஊகம் இந்து மதமரபிலிருந்து கிடைத்ததே என்று சொல்லியிருக்கிறார் . ஓபன் ஹைமெர் , ஸ்க்ராடிஞ்சர் போன்றவர்கள் அவ்வாறு உபநிடத தரிசனங்களைப்பற்றி சொல்லியிருப்பது ஃப்ரிஜோ காப்ராவின் பிரபல நூலுக்குப் பிறகு நாம் அனைவரும் அறிந்ததே.

மெய்யியலின் தேடல் என்ன ? அது மனிதனால் புரிந்து வகுத்துவிட முடிவதாக பிரபஞ்சத்தை மாற்ற தொடர்ந்து முயல்கிறது என்று சொல்லலாம். நாம் இதுகாறும் அறிந்துள்ள இயற்கைவிதிகள் எல்லாமே உண்மையில் இயற்கையின் விதிகளா, இல்லை மனிதனுக்கு அர்த்தப்படும் இயற்கைத் தோற்றங்களா ? மனிதன் அறிந்த முதல் விஷயம் அவன் உடல் என்பதால் அவனது அறிதலின் அடிப்படை அலகாக உடல் இருந்தபடியே உள்ளது . அவன் அறியும் குணஇயல்புகள் பெரும்பாலும் அவன் உடலை அடிப்படையாகக் கொண்டவையெ [தூரம் விசை எடை…] பிற்பாடு மனம் உருவாகி அது தனித்துச் செயல்படவும் ஆரம்பித்தபோது உடலை மீறிமனதை செலுத்தி பிரபஞ்சத்தை அறியும் யத்தனம் உருவாயிற்று.மனம் பருப்பொருளின் பிரதிபலிப்பு என்பதால் பருப்பொருளையே படிமங்களாக்கி , அதன் மூலம் அது தன் பருத்தன்மையை மீறிநகரச்செய்து மன இயக்கத்தை சுதந்திரமாக்கினர். இவ்விரு முயற்சிகள் மூலம் பிரபஞ்சம் மனிதனால் அறியப்பட்டது . அத்வைதத்தின் மொழியில் சொல்லப்போனால் பிரபஞ்சம் அறிவு ஆக மாறியது . இம்மாற்றத்தையே மெய்யியல் என்கிறோம். அதை புறவயமாக ஆக்க முயல்வது அறிவியல் ,தருக்கபூர்வமாக வகுக்கமுயல்வது தத்துவம். விளிம்பில் சஞ்சரிக்கும் எல்லா அறிவியலாளர்களும் , தத்துவ வாதிகளும் மெய்யியலில் தான் பெரிதும் மூழ்கியுள்ளனர் .விசுவாசமான நாய் போல அவர்கள் சார்ந்துள்ள துறையின் தருக்கம் கூட வருகிறது .சிலசமயம் தவறவிட்டுவிடுகிறது .

தத்துவத்தின் விளிம்பில் , மெய்யியலில் சஞசரிப்பவர் தளையசிங்கம் .அப்படி சஞ்சரிக்கும்போது ஏற்படும் பிழைகள் ஏராளம் . தத்துவத்தின் முக்கியத்துவத்தை தனது உலகப்புகழ்பெற்ற அறிமுகநூலின் முன்னுரையில் வில் டூரண்ட் விளக்குமிடத்தை நினைவுகூர்கிறேன். கடந்தகாலத்தில் தத்துவத்தின் ஊகங்கள் எப்படி அத்துமீறின பிழையாயின என்பது இன்று தத்துவத்தின் முக்கியத்துவத்தை ஒருபோதும் குறைக்காது என்கிறார் வில் டுரண்ட் .காரணம் தத்துவத்தின் அப்பிழைகள் பாதைகளற்ற பாதையில் உள்ளுணர்வின் துணைகொண்டு பயணம் செய்ததன் விளைவுகள் ,அதன் கண்டுபிடிப்புகளும் சாதனைகளும் அப்படி உருவானவையே.

உதாரணமாக நீட்சே பிரபஞ்சத்தில் பொருள் எல்லைக்குட்பட்டதுஎன நம்பினார், காலம் எல்லையற்றது.ஆகவே இங்கு பொருளின் பல்வேறு இணைவுகள் மூலம் நிகழும் ஒவ்வொரு செயலும் மீண்டும் நிகழும் என்றார் . இது நிரந்தர சுழற்சி சித்தாந்தமாக அவரால் முன்வைக்கப்பட்டது.[ நான் இதைவைத்தே ‘ ஜகன்மித்யை ‘ என்ற கதையை எழுதினேன் ]இது இன்றைய அறிவியல்ப் பார்வையில் எத்தனை அபத்தமானது என்று சொல்லவேண்டியதில்லை .காலம் ஆற்றல் பொருள் மூன்றும் ஒரு புள்ளியில் ஒன்றாகுமெனில்தான் நீட்சேயின் கொள்கை தவறாகும் .ஆனால் அது உண்மைஎன்கிறது நவீன இயற்பியல் . மேலோட்டமாகப் பார்க்கும்போது வியப்பேற்படும் . நம் பொதுப்புத்திக்கு வெகு அருகேவரும் நீச்சேயின் கொள்கை தவறானது , பொதுப்புத்திக்கு மிக அபத்தமாகத் தோன்றும் நவீன இயற்பியல் கொள்கை உண்மைய ‘னது . பொதுப்புத்தி என்பது ஒரு துறையில் பொதுவாக ஏற்கப்பட்டவற்றால் ஆனது . விளிம்பில் நகரும் அதன் ஊகங்கள் அதை மீறிச்செல்பவையாக , அதற்கு எதிரானவையாகத்தான் பலசமயம் இருக்கும் .

நாமறிந்த பொதுத் தத்துவப் புரிதலை சகஜமாக மீறிச்செல்கின்றன தளையசிங்கத்தின் கருத்துக்கள் .இப்போது நம்மிடமுள்ள தத்துவ சிந்தனைகளை , மெய்யியல் போக்குகளை தொகுத்து எதிர்காலத்தின் முடிவின்மைவரை நீட்டிச் செல்கிறார் .அதற்கு தன் வாசிப்பையும் உள்ளுணர்வையும் சார்ந்திருக்கிறார் .அவற்றுக்கிடையேயான மோதலால் பிளவுண்டு பின்னதன் பக்கமாகச் சாய்கிறார் .இந்த ஊகங்களின் உடனடிப் பெறுமானம் என்ன ? அதாவது இன்றைய தத்துவ விவாதத்துக்கு இவற்றை நாம் எப்படி பயன்படுத்திக் கொள்ள முடியும் ?

ஒன்று இவை நமது தத்துவக் கொள்கைகளின் சாராம்சமான மதிப்பு என்ன என்று நம்மை அறியத்தூண்டுகின்றன.இவை எழுப்பும் வினாக்கள் ஒரு சிந்திக்கும்மனதை பொறுத்தவரை மிக அரியவை.தமிழ் சூழலில் உள்ள சிந்தனைக்கான பயிற்சியின்மையே அப்படிப்பட்ட ஆழமான உசாவல் தளையசிங்கத்தை சார்ந்து உருவாகாமல் போகக் காரணம் . இங்கு பெரும்பாலோர் அடிப்படை வினாக்களை எழுப்பிக் கொள்வதில்லை .தளைசிங்கத்தைப்பற்றி பொருட்படுத்தி எழுதப்பட்ட ஒரே கட்டுரையான சுந்தர ராமசாமியின் கட்டுரை அதன் செயற்கைஇறுக்கம் நிரம்பிய மொழிநடையை நீவிவிட்டுப் படித்தால் மிக எளிமையாக அவரை அன்றைய பொதுவான இலக்கிய வம்புகளின் அடிப்படையில் மதிப்பிடும் முயற்சியே என்பதைக் காணலாம் .

இரு வகையில் தளையசிங்கத்தின் ஊகங்கள் நம்மை தூண்டக்கூடும்.ஒன்று அவர் முன்வைக்கும் கருத்துச் சட்டகம் எழுப்பும் வினாக்கள் மூலம் . இன்னொன்று அதன் விவாதப்போக்கில் சகஜமாக அது விட்டுவிட்டு போகும் உதிரிக் கருத்துக்கள் மூலம் . உதாரணம் தரலாம் . தளையசிங்கம் இலக்கியம் எதற்காக என்றால் பரவச விடுதலையை அளிக்கும் பொருட்டு என்கிறார் . மனமைய சமூகத்தில் மேலும் ஆழமான அகங்களை காட்டுவதன்மூலம் இலக்கியம் அந்த பரவச நிலையை அளிக்கிறது .ஆழ்மனங்கள் மையப்படும் சமூகத்தில் எல்லா செயல்பாடுகளுமே அந்த பரவசநிலையை அளிப்பதானால் இன்றைய இலக்கியம் தன் மதிப்பை இழக்கும் என்கிறார் .இந்த ஊகத்தின் சாத்தியக்கூறு என்ன என்பது வேறு கேள்வி . ஆனால் இது இலக்கியத்தின் அசல் பெறுமானம் என்ன என்ற வினாவை எழுப்புகிறது . மனிதமனம் அன்றாடவாழ்வில் அதிகமாக ஈடுபட்டு அதன்மூலம் அடைந்த உதாசீனம்தான் இலக்கியத்தின் தேவையை உருவாக்கியதா ?

இக்கேள்வியை நாம் காலத்தில் முன்னும் பின்னும் நகர்த்திக் கொள்ளவேண்டும் . பழங்குடிப் பாடல்களில்உள்ள படிமச் செறிவு நுண்ணுணர்வுள்ள சமகால வாசகனுக்கு பரவச அனுபவத்தை அளிக்கிறது . ஆனால் அப்பழங்குடி மக்களுக்கு அது ஒரு வகை யதார்த்தம் மட்டுமே . தன் மேல்மனம் விலகப்பெற்று அப்படிமத்தை தனக்குள் கண்டடைய நேரிட்டதே இவனுக்கு பரவசத்தை அளிக்கிறது . அவனுக்கு அது ஒரு சுய தரிசனம் . ஆனால் அம்மக்கள் அதில் சகஜமாக வாழ்கின்றனர் .அதில் அவர்களுக்கு பரவசம் இல்லை . அவர்கள் மறக்காததானால் கண்டடைவதன் உவகை அவர்களுக்கு இல்லை .தளையசிங்கம் சொல்வதுபோல அன்றாட வாழ்வில் , தொழிலில்தான் அவர்களுக்கு பரவசம் இருக்கிறது .

காலத்தில் இதை முன்னகரச் செய்வோம் . நினைவில் வைத்திருத்தல் , கணித்தல் ,பகுத்தல் ,தொகுத்தல் போன்ற செயல்களை இப்போதே கணிப்பொறிகள் செய்ய ஆரம்பித்துள்ளன. நாளை கணிப்பொறி மொழியறிவு பெற்று மனித மூளையின் நியூரான்களுடன் நேரடியாக இணைக்கவும்பெற்றால் மனத்தின் அன்றாடச் செயல்கள் என நாம் இன்று நினைப்பவற்றில் இருந்து மூளை விடுதலை பெற்றுவிடும். கற்பனை , உள்ளுணர்வுப்பயணம் ஆகியவற்றை மட்டுமே மனிதன் செய்யவேண்டியிருக்கும் .அப்போது அவனது மன இயக்கம் பெரிதும் குறைந்து ஆழ்மன இயக்கம் தீவிரமடையலாம் .இது சாத்தியமாகக் கூடியதுதான். இந்த நூறு வருடங்களில் உலகம் முழுக்க கல்வியறிவு தரப்படுத்தப்ப்பட்டு பரப்பப் படுவதனால் மூளை உழைப்பாளர்கள் பெருகி வருகிறார்கள் .மொத்த உலகும் மூளை உழைப்புக்கும் ,பின்பு ஆழ்மனம் சார்ந்த உழைப்புக்கும் திரும்பிவிடலாம் . அப்படிப்பட்ட சமூகத்தில் இலக்கியம் என்ன அனுபவத்தை அளிக்க முடியும் ?காரணம் அவர்களுக்கு இலக்கியம் தரும் அறிதலின் பரவசத்தை அவர்களுடைய அன்றாட வேலையே அளிக்குமே. ஏன் , இப்போதே அறிவியலின் தளங்களில் உள்ள ஆக்கபூர்வமான செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு இலக்கியம் தேவையில்லை என்று சொல்கிறார்கள். என் நினைவு சரியென்றால் இலக்கியவாதியான ப்ரைமோ லெவி அப்படிச் சொல்லியிருக்கிறார் .

இலக்கியத்திலிருந்து அதன் ஒவ்வொரு பணியாக கழன்று விழுந்தபடியே இருப்பதை இலக்கிய வரலாற்றைக் கவனித்தால் அறியலாம் . ஒரு வீரகதைப்பாடல் வரலாறு ,தகவல் கைமாற்றம் , நீதி போதனை, விழுமியங்களின் வினியோகம் என மொழியின் எல்லா பணியையும் ஆற்றியது . மெல்ல தகவல் தொடர்புக்கு மொழியின் வேறு வடிவங்கள் உருவாயின.பிறகு நீதிபிரிந்தது. பிறகு வரலாறு . கடைசியாக இலக்கியத்தின் ஆவணமதிப்பு முற்றாக ரத்தானது. இப்போது இலக்கியம் வெறுமே அகமனதை எழுப்பிக்காட்டும் பணியை மட்டும் ஆற்றுவதாக மாறிக் கொண்டிருக்கிறது . நாளை இதையும் அது இழக்குமானால் அதன் பெறுமானம்தான் என்ன ?

இது குறித்து விவாதிக்க வேறு சந்தர்ப்பம் தேவை .ஆனால் தளையசிங்கம் எப்படி ஒரு பிரச்சினையை அதன் விளிம்பு நோக்கி இழுத்துச்செல்லுவதன் மூலம் அதன் அடிப்படி என்ன என்று வினவச்செய்கிறார் என்று காட்டவே இக்கேள்வி இங்கு விவாதிக்கப்பட்டது .விளிம்புநிலையில் சஞ்சரிக்கும் சிந்தனையாளர்கள் மட்டுமே இப்படி அடிப்படைகளை உலுக்கும் வினாக்களை உருவாக்கமுடியும் .மிகச்சிறந்த உதாரணம் நீட்சேதான் .

சிந்தனையின் பொறிகள்

அடுத்த உதாரணம் போகிறபோக்கில் வரும் ஒரு கருத்து எப்படி நம்மை யோசிக்க வைக்கும் என்பதற்கு . மெய்யுளில் இலக்கியம் குறித்து பேசிப்போகும் தளையசிங்கம்[நல்லசிவம்] எப்போதுமே கலையிலக்கியங்கள் அசலான பரவச அனுபவத்தை அளிப்பதில்லை என்கிறார் . ஒரு காலகட்டத்து தொழில்,சமயம், தத்துவம் ஆகியவை அளித்த பரவச அனுபவத்தை கலையிலக்கியங்கள் பிரதி செய்கின்றன, நினைவூட்டுகின்றன .அதன்மூலமே அவை தங்கள் பரவச அனுபவத்தை அளிக்கின்றன என்கிறார் . யோசித்துப் பார்க்கும் போது பலவகையான பிரச்சினகளை நம் சிந்தனையில் உருவாக்கியபடியே இருக்கும் கருத்து இது . இலக்கியம் நமக்கு அளிக்கும் ஒரு பரவச நிலையை எடுத்து ஆய்வு செய்தால் அது ஒரு நினைவூட்டல் என்பதை காணமுடியும். இயற்கையை காணும் அனுபவம் , பெண்ணின் அழகு , வாழ்க்கையின் ஒரு தருணம் எல்லாமே இலக்கியத்தால் கடன்வ ‘ங்கப்பட்டவை , பிரதியெடுக்கப்பட்டவை மட்டுமே.

அப்படியானால் இலக்கியம் தத்துவத்தின் சமயத்தின் ஒரு தாதிமட்டும்தானா ? பரிமாறப்படும் தட்டு மட்டுமா ? அப்படிச் சொல்ல முடியாது . இலக்கியம் தரும் ஆழ்ந்த பரவசநிலையை அந்த அசல் அனுபவம் பலசமயம் தருவது இல்லை . மேலும் இலக்கியம் ஒருபோதும் நேரடியாக பிரதியெடுப்பது இல்லை. அது மாற்றியமைக்கிறது .அந்த இலக்கிய அனுபவமே ஒருவேளை அம்மாற்றம் மூலம் விளைவதாக இருக்கலாம் .அப்படியானால் அனுபவத்தில் உள்ளுறைந்துள்ள பரவச அம்சத்தை அடையளம்காட்ட முயல்கிறதா இலக்கியம் ? அல்லது அனுபவங்களை கற்பனை மூலம் பரவசமூட்டும் மெய்மையனுபவங்களாக மாற்ற முயல்கிறதா ? இவ்வாறு இக்கேள்வியை பின்தொடர்ந்து வெகுதூரம் போகமுடியும். தளையசிங்கத்தின் முக்கியத்துவமே அவர் தன் ஆய்வுப்போக்கில் நமது அடிப்படைகளை மாற்றிப்போடும் வரிகளை தொடர்ந்துமுன்வைத்தபடி போகிறார் என்பதே .

ஒருங்கிணைந்த அறிதல் அல்லது முழுமையறிவு

கடந்த பல வருடங்களாக உலக அறிவுத்துறையை தழுவி எழுந்துவரும் பிரச்சினை ஒன்று உண்டு.மானுட அறிவுகளுக்கும் அறிதல்முறைகளுக்கும் பொதுவான ஓர் அளவுகோல என்ன என்பதே அது. அமீபா போல இன்று அறிவுத்துறைகள் பிளந்து பிளந்து வளர்கின்றன. ஒவ்வொன்றும் தனக்குரிய மெய்காண்முறையையையும் நிரூபணமுறையையும் வளர்த்து வருகின்றன.ஒன்றின் உண்மை பிறிதில் செல்லுபடியாகாது என்ற நிலை உருவாகி வருகிறது . மிக நெருக்கமான, ஒன்றிலிருந்துஒன்றென பிறந்த துறைகளில் கூட அப்படித்தான் . பெரும்பாலான சமயங்களில் அறவியல்[ethics] ஒழுக்கவியல் [m orality] சட்டம் [law] ஆகியவற்றுக்கிடையே கூட பெரும் வித்தியாசம் உள்ளது. உளவியலும் நரம்பியலும் அல்லது மானுடவியலும் சமூகவியலும் போன்ற இரட்டைத் துறைகளுக்கிடையே ஒத்திசைவு இல்லை . நிரந்தரமான பயன் தரக்கூடிய உண்மை அனைத்து தளங்களுக்கும்பொதுவானத ‘கவே இருக்க முடியும். இன்றைய சூழலில் புறவயமாக அப்படி ஒரு பொது உண்மையை கட்டமைக்கும் தளத்தை உருவாக்கிவிட முடியாது.அது அகவயமானதாக மடுமே இருக்க முடியும்.அகவயமான கருதுகோள்கள் சமூக முழுமையால் ஏற்கப்படுதல் என்ற நிலை மெய்யியல்மூலமே சாத்தியமாகும் .ஏதாவது ஓர் அடிப்படையின்ல் சாரம்சப்படுத்தப்பட்டு தொகுக்கப்பட்ட ஒருமித்த அறிவு என்பதற்கான தேடல் இன்று உள்ளது .

மொழியியல் அவ்வாறு ஒரு பொதுத்தளமாக செயல்படுவதற்கான அடிப்படைகளை உருவாக்கியது . குறிப்பாக விட்ஜென்ஸ்டானின் சிந்தனைகளை இதற்கான துவக்கப்புள்ளியாக சொல்லவேண்டும் .மொத்த மானுட ஞானமும் மொழியே என்றும் எல்லாவகை அறிதல்களையும் கோட்பாடுகளையும் கூறுதல்/எடுத்துரைத்தல் [narration]பொதுமைப்படுத்தி அவற்றின் உபயோக மதிப்பின் அடிப்படையில் அளவிடலாம் என மொழியியல் கூறியது .இதற்கு இணையாக அறிவியல் சூத்திரங்களையெல்லாம் சொல்ல செயற்கை மொழிகளை உருவாக்குதல் , கணிப்பொறியின் செயலிகளையும் அதில் சேர்த்துக் கொள்ளுதல் ஆகிய தளங்களில் அதீத உற்சாகம் ஏற்பட்டு சீக்கிரமே வடிந்தது. பிரச்சினை கணித வாய்ப்பாடுகளை தொகுத்துமதிப்பிடும் கார்ட்டாசியன் தேற்றம் போலவோ , தேற்றவிதிகளை தொகுத்து மதிப்பிடும் ராம்சே கோட்பாடு போலவோ ஒன்றை உருவாக்குவதல்ல என்று தெளிவாயிற்று .பிரச்சினை ஏன் எதற்கு எதனடிப்படையில் தொகுக்கவேண்டும் , பயன் என்றால் என்ன என்பதை வகுத்துக் கொள்வதே என புரிந்துகொள்ளப்பட்டது . ஆகவே மெய்யியல் முதன்மைப்பட்டது .

இத்தளத்தைசேர்ந்த பல கட்டுரைகளை சொல் புதிது தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. இவற்றில் முன்னேண்டியான கட்டுரை ,தளைசிங்கத்தின் மொத்த எழுத்துக்களுடன் சேர்த்து பயிலவேண்டிய கட்டுரை ; நடராஜ குரு எழுதிய அறிவியலைபாட முடியுமா என்ற கட்டுரையாகும். நடராஜ குருவின் மெய்யறிவு [wisdom ] என்ற நூலில் இவ்விஷயம் குறித்து விரிவாக பல கட்டுரைகளில் விவாதிகிறார் அவர் . சார்போன் பல்கலையில் ஹென்றி பெர்க்ஸனின் மாணவராக தத்துவ ஆய்வு செய்தபோதே இந்த விஷயம் அவரை பின்தொடர்ந்திருந்தது என்றாலும் நடராஜகுரு நாராயணகுருடமிருந்து இந்திய தத்துவ மரபை அறிந்துகொண்டபிறகே இந்நூலுக்கான அடிப்படைகளை அறிந்தார் .மெய்யியலின் கனிந்த நிலையில் கவிதைக்கும் அறிவியல் கோட்பாட்டுக்கும் இடையே வேறுபாடு ஏதுமில்லை என நடராஜகுரு கண்டடைந்தார் .பிரபஞ்சம் தழுவிய ஓர் மனவிரிவாக அதை தன் நூலில் அவர் அறிமுகம் செய்கிறார் .சொல்புதிது 9 இதழில் நீலகண்டன் அரவிந்தன் இதுசார்ந்த இன்றைய விவாத தளம் குறித்து ‘அறிவியலின் மெய்யியல் அடிப்படை ‘ என்ற கட்டுரையை எழுதியுள்ளார் .

1959 ல் இச்சிந்தனையின் முன்னோடியான சி. பி.ஸ்நோ தன் கருத்தை முதன்முதலாக முன்வைத்தார் என்றாலும் இவ்விவாதம் பொருள் பெற்றது எழுபதுகளுக்கு பின்புதான் என்று காணலாம். தளையசிங்கம் இவ்விவாதத் தளம் குறித்து எத்தனை தூரம் அறிந்திருந்தார் என்று தெரியவில்லை . ஆனால் அவரது மனம் சமானமாக நகர்ந்திருப்பது வியப்பு தருகிறது .இத்தளத்தில் இன்று வெளிவரும் பல கட்டுரைகளின் வரிகளை சிறிய மாற்றங்களுக்கு பிறகு தளையசிங்கத்தின் வரிகளாக மாற்றிவிடலாம் ஃப்ரிஜோ காப்ராவின் உயிர்வலை[ Web of life] என்ற நூலை தளையசிங்கத்தின் வரிகளுக்கான அறிவியல் அடிப்படையாக முன்வைத்து பேசமுடியும். ஆல்பர்ட் ஐன்ஸ்டான்பிரபஞ்சம் தழுவிய சமய உணர்வு என்று கூறுவதையே ஏறத்தாழ அதே சொற்களில் தளைய சிங்கம் குறிப்பிடுவதைக்காணலாம்.இனி அறிவல்ல அறிவுகளை இணைக்கும் மெய்யறிவே வாழ்க்கையை தீர்மானிக்கமுடியுமென தளையசிங்கம் கூறுகிறார் . தளையசிங்கத்தின் தரிசனங்களில் முதன்மையானது ஒருங்கிணைந்த அறிதல்முறை அல்லது உண்மைக்கான அவரது தேடலேயாகும் .அதை சமகால சிந்தனைகள் பலவற்றுடன் இணைத்து வாசிக்க முடியும்.

தத்துவத்தின் உறைநிலையும் புதியசவால்களும்

தளையசிங்கத்தின் தரிசனங்களின் முக்கியமான இரண்டாவது அம்சம் அவர் இன்றைய கருத்தியல் உறைநிலையை மிகத்தெளிவாக முன்கூட்டியே கண்டார் என்பதுதான். இதுகுறித்த அகவயமான தரிசனங்களை மேற்கிலும் பலர் முன்வைத்தது உண்டு . மேற்கத்திய தத்துவ சிந்தனை இருகூறான நிலையை [ dichotomy] அடிப்படையான மெய்யியல் விதியாக வகுத்துக் கொண்டு , அதன் நீட்சியாக முரணியக்க இயங்கியலை [dialectics] தனது பிரபஞ்ச புரிதலாக அனைத்து துறைகளுக்கும் பொருத்திபர் த்துக் கொண்டிருந்தது . சார்பியல் தத்துவத்தின் வருகை உயர் பெளதிகத்தில் இருகூறான நிலைக்கு இடமில்லை என்று ஆக்கியது . தொடர்ந்து பலதளங்களிலும் இருகூறுகளும் முட்டி நின்று ஒரு சமநிலை / உறைவுநிலை ஏற்படுமென பல த்த்துவசிந்தனையாளர் கணித்திருந்தார்கள் . அதை மிகச்சரியாக ஊகம் செய்யும் தளைய சிங்கம் அடுத்த கட்டத்துக்கு நகர்வதற்கான காரணமாக அதை பலமுறை சொல்கிறார் .

சோவியத் வீழ்ச்சிக்கு பிறகு நாம் இந்த உறைநிலையை ஒரு கண்கூடான உண்மையாக காண்கிறோம். இன்று தமிழ் சூழல் உட்பட எங்குமுள்ள பலவகையான கருத்தியல் தள்ளாட்டங்களுக்கு அடிப்படைக் காரணம் தெள்ளத்தெளிவான இரு எல்லைகளாக வகுக்கப்பட்டிருந்த இரு தரப்புகளும் வலுவிழந்துவிட்டமையே. புதிதாக இரு எல்லைகளை வகுத்த முயல்பவர்கள் ஒரு பக்கம் . ஆனால் இப்படி எல்லைகளை வகுத்துக் கொண்டு மோதல்சமரசம் மோதல் என உலக இயக்கத்தை புரிந்துகொள்ள முயல்வது எத்தனைதூரம் சரி என்ற வினா எல்லா துறைகளிலும் எழ ஆரம்பித்துள்ளது .

இருபது வருடம் முன்பே இந்தத் தருணத்தை தளையசிங்கம் ஊகித்து விட்டிருக்கிறார் என்பது அவர் சஞ்சரித்த விளிம்புநிலையை வைத்துப் பார்க்கும்போது வியப்பு தருவது அல்ல. சோவியத் முகாமும் அமெரிக்க முகாமும் சமவல்லமை பெற்று மோதலின் உச்ச நிலையில் அசைவற்று உறைந்து விட்டன , இனிமேல் வளர்ச்சி இல்லை ,ஏதாவது ஒரு தரப்பு வெல்வதும் இல்லை ,அழிவுதான் என்று தளையசிங்கம் சொல்கிறார் [அதில் முதலாளித்துவத் தரப்பின் தோல்வியைப்பற்றி அவருக்கு அத்தனை திடம் இல்லை போலும்.ஆனால் சோவியத் ரஷ்யா அழியும் என உறுதியாகவே சொல்கிறார் . தனிமனித மனத்தின் செயல்பாடுகளையோ , கலாச்சார அரசியல்போக்குகளின் சுதந்திரமான நகர்வையோ கணக்கில் கொள்ளாமல் ஒருங்கிணைக்கப்பட்ட மையம் சார்ந்த இய்க்கமே அதற்குக் காரணம் என்கிறார் ] முதலாளித்துவ அமைப்பு சோஷலிச அடிப்படைகளை ஏற்றும் கம்யூனிஸ அமைப்பு சந்தைவிதிகளை ஏற்றும் சமரசமாவதன் வழியாக இரண்டும் ஒரே போல ஆகி இந்த உறைநிலை ஏற்படுகிறது .[அமெரிக்கா சீனா இன்றைய சிறந்த உதாரணம் ] அதாவது முடிவின்றி மோதி முன்னகரும் சித்தாந்தம் பொய்யாகிறது. இதுவே புதியவினாக்களை எழுப்புகிறது.

இந்த உறைநிலையிலிருந்து முன்னகர தளையசிங்கம் தனக்கேயுரிய பல கருத்துநிலைகளை முன்வைக்கிறார் . அதை அவர் ‘அத்வைத நிலை ‘ என்று சில இடங்களில் குறிப்பிடுகிறார் . தமிழ் சூழலில் இது குறித்து சில புரிதல்களை ஏற்படுத்த வேண்டியுள்ளது .பண்டைய இந்திய கருதுகோள்கள் அனைத்துமே இந்துமதம் சார்ந்தவை , அவையெல்லாமே பிராமணர்களால் உருவாக்கப்பட்டவை , ஆகவே தெரிந்துகொள்ள முயலாமலே முற்றாக எதிர்க்கப்பட வேண்டியவை என்ற மடத்தனமான எண்ணம் இங்கு வேரூன்றச் செய்யப்பட்டுள்ளது .அத்வைதம் என்ற சொல்லை உடனே சங்கரமடம் வரை கொண்டு செல்லவேண்டியதில்லை . ஒன்று மரபான அத்வைதம் மதச் சார்புகள் இல்லாத ஒது தூய தத்துவ நிலைபாடு மட்டுமே . இரண்டு தளையசிங்கம் பேசுவது கறாரான சங்கர அத்வைதமும் அல்ல . இரண்டின்மை என்ற கருத்தையே அவர் அச்சொல்லால் குறிப்பிடுகிறார் எனலாம் இரண்டின்மை என்ற கருத்தக்கத்தை தொடர்ந்து பலதளங்களுக்கு அவர் எடுத்துச் செல்கிறார் .

தளையசிங்கம் சொல்வதை ஏறத்தாழ இப்படி விளக்கலாம். மனிதமனம் அதன் ஆரம்பக்கத்திலேயே அகவிழிப்புநிலையை அடைந்துவிட்டது . அந்நிலையில் அது முழுமையான ,காலம்சாராத பேருண்மையை அறிந்தும்விட்டது .அது முன்வைக்கப்பட்ட படிமங்கள் ,மொழி ஆகியவை பிறரால் தங்கள் அதிகார நோக்கத்துக்காக நிறுவனமாக்க பட்ட் போது மதங்கள் உருவாயின . நமது நூற்றாண்டின் துவக்கத்தில் நிறுவன அதிகாரத்தின் மூலமாக சீரழிந்து ,தனது சாரம்சமான பேருண்மைகளை மறைத்துக்கொண்டு இயங்கும் மதங்களையே நாம் கண்டோம் . ஆய்வறிவு அதற்கு எதிராக முளைத்து வளர்ந்தது .அது தனித்த அறிவுத்துறைகளாக பிரிந்து இயங்கி தன் வளர்ச்சிநிலையில் இப்போது மதங்கள் சொன்ன அதே பேருண்மையின் வாசலை சென்று தட்டிக் கொண்டிருக்கின்றது . ஆகவே இதுகாறும் இருந்துவந்த ஆய்வறிவுX உள்ளுணர்வு போன்ற இருமைகள் இனி இல்லாமலாகும் . எல்லா அறிதல்முறைகளும் மையமான மெய்யறிவின் அடிப்படையில் தொகுக்கப்படும்.விளைவாக அறிவியலின் யுகம் மெய்யியலின் யுகமாக வளர்ச்சி பெறும் .அந்நிலையில் எல்லா மனங்களும் பேருண்மையை சாதரணமாக ஏற்கும்காலம் வரும் .அதுவரை சமயம்சார்ந்த பேருண்மைகள் உறைந்தே கிடக்கும் என்கிறார் தளையசிங்கம்.

மார்க்ஸியமும் மெய்யியலும்

இங்கு தளைய சிங்கம் மார்க்ஸியம் குறித்து சொல்லும் ஒரு கருத்து முக்கியமாக சிந்திக்கத்தக்கது . மார்க்ஸியம் சென்ற காலகட்டத்தின் அழிவை நிகழ்த்தும் ஒரு சித்தாந்தமே ஒழிய புதிய காலகட்டத்தை ஆக்கும் சித்தாந்தமல்ல என்கிறார் அவர் .சென்ற காலட்டத்தின் சிந்தனை முறையிலேயே முளைத்தெழுந்து அதற்குள்ளேயே செயல்படுவது அது. கடந்த யுகங்கள் ஜடசக்தியை நம்புவை , மார்க்ஸியமும் அந்நம்பிக்கையை கொண்டது .சென்ற காலகட்டம் மனதை மையமாக கொண்டது ,மார்க்ஸியமும் அப்படித்தான்.ஆழ்மனத்தளங்களை அது கருத்தில் கொள்ளவில்லை என்கிறார் .சென்ற காலகட்டத்தின் முரண்பாடுகளை வெளிப்படுத்தி அதை செயலற்றதாக ஆக்குவது மட்டுமே மார்க்ஸியத்தின் வரலாற்றுக் கடமை என்கிறார் தளையசிங்கம்.

தமிழ்ச்சூழலில் தளையசிங்கத்தைப் புரிந்துகொள்ளத் தடையாக இருப்பது அவர் அடிக்கடிச் சொல்லும் சமயஞானம் என்ற சொல்லாகும் . ஏற்கனவே சொல்லப்பட்டதுபோல மரபார்ந்த எல்லாமே பிற்போக்கானவை என்று கற்பிக்கப்பட்டு வளர்ந்த எளிய தமிழ் வாசகனுக்கு இது அளிக்கும் அவநம்பிக்கை சாதாரணமல்ல .[நான் இதன் பொருட்டே ஆன்மீகம் என்ற சொல்லை பயன்படுத்துகிறேன்.அதை ஒவ்வொரு முறையும் மதம் சார்ந்த பொருளில் அல்ல என்று குறிப்பிடவும் செய்வேன். எனினும் எளிய வாசகர்கள் மட்டுமல்ல எழுத்தாளர்களுள் உள்ள சில பாமர மனங்கள் கூட அதை சாமி கும்பிடுதல் என்றே புரிந்துகொள்கின்றன] தளையசிங்கம் சமயஞானத்தின் சாரமாக உள்ள பிரபஞ்ச அனுபவத்தையே இங்கு குறிப்பிடுகிறார் ,அதை விளக்கியும் சொல்கிறார் .ஏற்கனவே சொல்லப்பட்டதுபோல இந்திய மரபுசார்ந்த கருதுகோள்களை நவீனச்சூழலில் பயன்படுத்துவதில் உள்ள சிக்கல் இது.

பேருண்மையை நோக்கி எல்லா மனிதர்களும் செல்லும் நிலையை அறிவியல் உருவாக்கிவிடும் என தளைய சிங்கம் கூறுவதை புரிந்துகொள்ள இன்றுள்ள பல அறிவியல்புனைவுக் கதைகளை படிப்பது உதவியானதாக இருக்கக் கூடும்.காலம் ,வெளி , நான்குபரிமாணப்பிரபஞ்சம் போன்ற கருத்துக்கள் எத்தனை எளிதாக சமூகப்புழக்கத்துக்கு வந்துவிட்டன என்ற வியப்பு அப்போது நமக்கு ஏற்படும் .மிகப்பிரபலமான பரபரப்பு நாவலான இழக்கப்பட்டஊ லகம் [The Lost World . Michael Crychton ] போன்ற நாவல்கூட பெருஞ்சிக்கல் சித்தாந்தத்தை , கருத்துருவமாக நாம் உருவாக்க்கும் தோற்றத்தில் வெளிப்பிரபஞ்சம் வந்து பொருந்திக் கொள்ளும் விந்தையை , அறிவியல் ஊகங்கள் மனிதனின் கற்பனையை எல்லையாகக் கொண்டிருப்பதை எளிதாகக் காட்டிவிடுவதைக்காணலாம் .உயர்கல்வி சமூகத்தில் அனைவருக்கும் கிடைக்கும் நிலை ஏற்படும் போது தளையசிங்கம் சொல்லும் நிலை ஏற்படக் கூடும் . இன்றைய அறிவியல்ப் புனைகதைகளில் சாதாரணமாகவே அப்படிப்பட்ட ஒரு சமூகம் கற்பனை செய்யப்பட்டுவிட்டது .

இலக்கியமும் மெய்யியலும்

மூன்றாவதாக தளையசிங்கம் இலக்கியவடிவங்களில் மாற்றம் தேவை என சொல்லும் இடத்தை கவனிக்க வேண்டும் . இரண்டின்மை என்ற அவரது கருத்துநிலையின் நீட்சியேஇது .அறிவுத்தளம் ,உணர்வுத்தளம், உள்ளுணர்வு [அல்லது தர்க்கம் ,கற்பனை, தியானம்] என மூன்றாக பிரித்து மன இயக்கத்தை அறிவதை அவர் நிராகரிக்கிறார் . அப் பிரிவினை இல்லாமாலாகும்போது உருவாகும் ஓர் இலக்கியப்படைப்பு வடிவத்தை அவர் கற்பிதம் செய்கிறார். அவ்வடிவம் இன்றுள்ள எல்லா வடிவங்களையும் ரத்து செய்துவிடும் என நம்புகிறார் .அவர் தன் கருத்துக்களை முன்வைத்த காலகட்டத்தில் அது அர்த்தமற்ற வெறும் பேச்சாகவே இருந்தது என்பது புரிந்துகொள்ளக் கூடிய ஒன்றே. மேலும் தளையசிங்கம் எழுதிக்காட்டிய வடிவமான கலைஞனின் தாகம் படைபெழுச்சியுடன் வரவுமில்லை .ஆனால் கடந்த முப்பதாண்டுகளில் இலக்க்ய வடிவம் குறித்து எழுந்த பேச்சுகள் பலவகையிலும் தளைய சிங்கத்தின் குரலுடன் ஒத்துப்போவதைக் கணலாம்

ஒன்று இலக்கியப்படைப்பு மற்ற அறிவுத்துறைகளின் செயல்பாடுகளையும் மொழியயையும் உள்ளடக்கியதாக இருக்கவேண்டுமென்பது இப்போது மிக விரிவாகவே பேசப்படுகிறது . இலக்கியவடிவம் தூய கற்பனையைச் சார்ந்து இயங்கவேண்டுமென்ற எண்ணம் இப்போது ரத்துசெய்யப்பட்டுவிட்டது என்றே சொல்லவேண்டும் .அறிவியல் தேற்றங்கள் , வரலாற்றுத் தரவுகளின் ஒழுங்கமைப்புமுறை ,கணிதமொழி எல்லாவற்றையும் உள்ளடக்கிய ஒன்றாக இன்றைய இலக்கியவடிவங்கள் உள்ளன.தீவிரமான அறிவார்ந்த உழைப்பு இல்லாமல் இன்றைய படைப்புகளை வாசிப்பதுகூட சாத்தியமில்லாமல் உள்ளது . அதேப்போல இலக்கியம் மெய்யியலின் எல்லைக்குள் புகுந்து சுயமான கட்டமைப்புகளை உருவாக்குவதும் இன்றைய போக்காக உள்ளது . தளையசிங்கம்இதன் பொருட்டே அவரது இலக்கியவடிவத்தை உள்ளுணர்வின் கவித்துவ வெளிப்பாடு ,அறிவார்ந்த விவாதம் ,மற்றும் கற்பனையின் வீச்சு ஆகியவை சம அளவில் கலந்து வருவதாக அமைத்துள்ளார் . அதேசமயம் யாதார்த்தப் பிரதிபலிப்பு , சித்தரிப்பு போன்றவற்றை அவர் முற்றக நிராகரித்துவிட்டிருக்கிறார் .

தன் இலக்கிய வடிவில் தளையசிங்கம் விவாத அம்சத்தை பெரிதும் வலியுறுத்துகிறார் என்பதைக் காணலாம் . அது எழுத்தாளனை மையம் கொண்ட படைப்பாக இல்லை . எழுத்தாளன் உருவாக்கும் யாதார்த்தத்தை முன்வைப்பதாகவும் இல்லை .எழுத்தாளனின் யதார்த்தத்திலிருந்து திமிறி மீறி வேறு ஒரு யதார்த்தம் புறப்பட்டு தன்னை நிறுவும் களமாக அது உள்ளது . இந்த பன்மைப்பார்வையே அதன் சிறப்பியல்பாகும் . அது புனைவையும் சேர்த்தே புனைந்து காட்டும் பிரதியாக உள்ளது . இந்த அடிப்படையில் பார்த்தால் தளைய சிங்கம் காட்டும் வடிவம் ஒரு பின் நவீனத்துவ நாவலுக்கு மிக அருகே உள்ளது என்பது வியப்பூட்டுகிறது . கலைஞனின் தாகத்தின் குறுக்கு வெட்டுகள் மூலம் சிதறுண்ட கூறுமுறை இன்று பிரேம் ரமேஷ் , எம் ஜி சுரேஷ் , தமிழவன் எழுதும் நாவல்களின் வடிவங்களுடன் கணிசமாக ஒத்துப் போகிறது .இவற்றின் முன்னோடி வடிவங்களான உம்பர்ட்டோ எக்கோ , ஜான் பார்த், பிரைமோலெவி ஆகியோரின் நாவல்களையும் இதனுடன் நாம் ஒத்துப்பார்க்க முடிகிறது . அதே சமயம் இவ்வடிவத்தில் நமது காவிய ,புராண, நாட்டார்கதைமரபுகளின் சாயல் சிறிதும் இல்லாமலிருப்பது என் பார்வையில் குறையாகவும் படுகிறது . அவை இணையும்போதுமெய்யுளின் வடிவம் இப்போதிருப்பது போல அந்தரத்தில் நிற்பதாக இருந்திருக்காது , மேலும் ஆழமாக நம்மை பாதிப்பதாக இருந்திருக்கும் என்று படுகிறது.

தளையசிங்கத்தின் முக்கியத்துவம் இவ்வாறு அவர் காலத்தில் வெகுவாக முன்னால் நடந்தமையில்தான் உள்ளது . அவரது ஊகங்களின் உடனடிப் பயன்பாடு நாம் கொண்டுள்ள கருத்துக்கள் மற்றும் நம்பிக்கைகளின் சாரமென்ன , நீண்டகால விளைவென்ன ,அவற்றை வரலாற்று ஓட்டத்தில் எங்கு எப்படி பொருத்திக் கொள்வது என்று நம்மை அவை யோசிக்கச் செய்கின்றன என்பதே .உடனடி விளைவுகள் மற்றும் எதிர்வினைகளை தவிர்த்துதான் நாம் இந்த கோணத்தில் யோசிக்கமுடியும் .அதற்கான உந்துதலை எப்போதுமே விளிம்புநிலையில் சஞ்சரிக்கும் படைப்பாளிகளே அளிக்கின்றனர் . அத்தகைய படைப்பாளிகள் காலம்தோறும் மீண்டும் மீண்டும் கண்டடையப்படுகின்றனர் .தமிழில் அவ்வகையில் சொல்லப்பட வேண்டிய ஒரே சிந்தனையாளார் மு தளையசிங்கம் மட்டுமே.

====

Series Navigation

மு.தளையசிங்கத்தின் தத்துவமும் மெய்யியலும் (பகுதி : இரண்டு – மு .தளையசிங்கம் என்ன சொல்கிறார் ?)

This entry is part [part not set] of 29 in the series 20020617_Issue

ஜெயமோகன்

பகுதி : இரண்டு

மு .தளையசிங்கம் என்ன சொல்கிறார் ?

தளையசிங்கத்தின் கருத்தியக்கத்தை இரு கூறாக வகுத்து புரிந்துகொள்வது அவசியமாகும் . தருக்கபூர்வமாக , சிந்தனை சார்ந்து அவர் செயல்பட்ட தளம் முதலாவது. உள்ளுணர்வு சார்ந்து அவர் செயல்பட்ட தளம் இரண்டாவது . அவரிடம் இவ்விரு தளங்களுக்கும் இடையே மோதலும் முரண்பாடும் எப்போதும் உண்டு . அவரை இன்று நாம் பொருட்படுத்த வேண்டியது அவரது உள்ளுணர்வு வெளிப்படும் கணங்களுக்காக மட்டுமே .

அடுத்த யுகம் குறித்த கனவின் பின்னணி

தளையசிங்கத்தின் தரிசனங்களில் அடுத்த யுகம் குறித்த கனவுகளுக்கே பெரிதும் இடமளிக்கப்பட்டுள்ளது . இதை இரண்டு தளங்களில் நாம் புரிந்துகொள்ள முடியும் .ஒன்று காலம்காலமாக மானுட சிந்தனையில் மேலும் சிறப்பான அடுத்த காலகட்டம் குறித்த கனவுக்கு இடம் இருந்தபடியே உள்ளது . எல்லா தரிசனங்களும் அடிப்படையில் பொற்காலம் குறித்தவையே என்று சொல்லலாம். சென்று மறைந்த பொற்காலத்தை மீட்பது பற்றியோ அல்லது புதிய ஒரு பொற்காலத்தை உருவாக்குவது பற்றியோதான் அவை பேசுகின்றன. சொல்லப்போனால் இப்பெரும் கனவே மானுடத்தை இதுவரைக்கும் இட்டு வந்துள்ளது .

அடுத்த தளம் குறிப்பானது . மேற்கத்திய சிந்தனையில் , பதினெட்டாம் நூற்றாண்டில் பற்ப்ல துறைகளில் பல்வேறு வகையான பரிணாம வாத கருத்துக்கள் உருவாகி வலுப்பெற்றன. அதற்கும் முன்பே கிரேக்க சிந்தனையிலேயே பரிணாம வாதம் பேசப்பட்டிருந்தது . அதன் உச்சப்புள்ளி சார்ள்ஸ் டார்வினின் உயிரியல் பரிணாம க் கொள்கை . அது எப்படி செமிட்டிக் மதங்களின் பிரபஞ்ச உருவகத்தை உலுக்கியது என நாம் அறிவோம். ஆனால் அனைத்து சிந்தனைகளிலும் அதன் குறியீட்டு தாக்கம் ஏற்பட்டது . உயிரியல் பரிணாமத்தின் விதிகளை அப்படியே கலாச்சாரத்திலும் , சமூகவியலிலும் , வரலாற்றிலும் பிற்பாடு உளவியலிலும் போட்டுப் பார்த்ததன் விளைவாக பல்வேறு விதமான சித்தாந்தங்கள் உருவாயின .

உதாரணமாக ஒருசெல் உயிரினத்திலிருந்து பரிணாமம் அடைந்து இன்றைய மனிதன் உருவான நீண்ட பரிணாமப் பாதையின் திசை மேற்கொண்டு என்னவாக இருக்கும் என்ற கேள்வி தத்துவ வாதிகளால் மீண்டும் மீண்டும் எழுப்பப்பட்டது . அதேவினா வரலாற்றையும் கருத்தியல்களையும் மையமாக்கி விரிவுபடுத்தப்பட்டது .அன்றையகாலகட்டமானது பொருள்முதல்வாதிகளின் கடுமையான தாக்குதல்களை எதிர்கொண்ட கருத்துமுதல்வாதம் தன் தர்க்கத்தை விரிவுபடுத்தி பல உச்சங்களை கண்டடைந்த ஒன்றாகும். அத்துடன் அந்த உச்சநிலையில் கருத்துமுதல்வாதமும் பொருள்முதல்வாதமும் ஒன்றையொன்று கண்டுகொண்டதும் நிகழ்ந்தது .ஹெகல் மார்க்ஸ் நீச்சே போன்றவர்கள் அப்படிப்பட்ட உச்சநிலைகள் .மேற்கண்ட வினாவை எழுப்பிய தத்துவவாதிகள் மனிதனின் பரிணாமத்துக்கும் , அவனது இதுவரைக்குமான வரலாற்றுக்கும் ஒரு தெளிவான இலக்கு , அதை நோக்கி அவனை நகர்த்திச் செல்லும் திட்டம் இருப்பதாக உர்வகித்தார்கள் . முழுமுதல்படைப்பாளி, கண்ணுக்குதெரியாத இயக்குநன் ,கடவுள் என்ற மையத்தில் தேங்கி நின்றிருந்த கருத்துமுதல்வாதம் இந்த கட்டத்தில்தான் புத்துயிர் பெற்று பாய்ச்சலை நிகழ்த்தியது என்பதைக் காணலாம்.

வரலாற்றுவாதம் [Historicism ] தான் கருத்துமுதல்வாதத்தின் கடைசி பெரும் ஆக்கம். அதை மார்க்ஸியம் போன்ற பொருள்முதல்வாத சித்தாந்தத்துக்கும் செல்லுபடியானதாக ஆக்கியதுதான் அதன் வெற்றி. வரலாற்றுவாதம் வரலாற்றை ஒரு திட்டம் உடையாதாக சித்தரிக்கும்போது வேறுவழியில்லாமல் இறுதி இலக்கையும் தீர்மானித்து விடுகிறது . ஆகவேதான் ஹெகல் உச்சகட்ட நாகரீகம் அடைந்த ஒரு அதிசமூக அமைப்பு நோக்கி வரலாறு நகர்வதாக சொல்லநேர்ந்தது .நீட்ச்சே அதிமனிதனை உருவகிக்கிறார் . மார்க்ஸ் பொதுவுடைமை சமூகத்தை உருவகிக்கிறார் . ‘ முழுமுதல் மனிதன் ‘ , ‘ முழுமுதல் சமூகம் ‘ குறித்த ஏதேனும் ஒரு சித்தாந்தத்தை இக்கால தத்துவவாதிகளில் பெரும்பாலோர் முன்வைத்திருப்பார்கள் .

பிற்பாடு உளவியலின் கண்டுபிடிப்புகள் பரவலாக வெளிவந்தபோது இந்தப்போக்குகளில் வேகம் கூடியது . ஃப்ராய்ட் மனம் என்பது ஒரு இயல்பான அகச்செயல்பாடு அல்ல , அறியமுடியா ஆழங்கள் கொண்டது என கூறியதானது மானுட மனம் எதிர்காலத்தில் அடையச்சாத்தியமான பெரும் பாய்ச்சல்கள் குறித்த கனவுகளை மேற்கே ஏற்படுத்தியது .சி ஜி யுங்கின் கருத்துக்களை பயன்படுத்தாத மேற்கத்திய கருத்துமுதல்வாதிகளே இல்லை என்று சொல்லலாம் .மானுடக் கூட்டுமனம் குறித்த உருவகமே அதிமனம் , மாமனம் குறித்த பலவகையான உருவகங்களுக்கு ஆதாரம் .

பரிணாமவாதம் கருத்துமுதல்வாத அடிப்படையில் விரிவுபடுத்தப்பட்டதே ஹென்றி பெர்க்ஸனின் படைப்பூக்க பரிணாமம் குறித்த சித்தாந்தம் . தத்துவார்த்தமாக பரிணாம வாதத்தை அடுத்தகட்டத்துக்கு எடுத்துசென்றவர் கார்ல் பாப்பர். மானுடம் ஒருநாள் மரணத்தையும் தாண்டி செல்லலாம் என்கிறார் பெர்க்ஸன் . மனிதனின் எல்லா உளவியல் நிகழ்வுகளையும், எல்லா கலாச்சார எத்தனங்களையும் மேலும் மேலும் சிறந்த மனிதத்துக்காகவும் , சமூகத்துக்காகவும் இயற்கை மேற்கொள்ளும் சிருஷ்டிகர செயல்பாடுகளாகவே விளக்க முடியும் என்கிறார் பெர்க்சன் . அதேபோல மேலோட்டமான பார்வையில் மானுட வரலாற்றிலும் மானுட சிந்தனைப்போக்கிலும் உருவாகும் முரண்பாடுகளை விரிவான மானுடபரிணாமம் சார்ந்த ஒரு திட்டத்தில் பொருத்தினால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும் என்கிறார் பாப்பர் . இதற்கு சமானமாக மேலும் அகவயமான ஒரு குரலின் அரவிந்தர் மாமனிதன் குறித்து பேசுகிறார் . பரிணாமவாதம் நவீன நரம்பியல் ஆய்வுகளில் மேலும் பல [என்னால் தெளிவாக புரிந்துகொள்ள முடியாதபடி உள்ள ] முக்கியமானவளர்ச்சிகளை அடைந்துள்ளது.இப்போக்குக்கு எதிரானது மேற்கே இப்போது சற்று அடங்கியுள்ள பின் நவீனத்துவ அலையாகும்.

பரிணாம வாதத்தையும் அதன் விளைவான வரலாற்றுவாதத்தையும் உளவியல் கருவிகளின் உதவியுடன் விளக்க முயல்கிறார் தளையசிங்கம் . அவரது படைப்புலகில் பொதுவாக மேற்குறிப்பிட்ட சிந்தனையாளர்களின் பெயர்களையும் மேற்கோள்களையும் காணமுடிவதில்லை . ஆனால் அவர்களின் பாதிப்பையும் சமானமான சிந்தனைகளாஇயும் காணாமுடிகிறது . வரலார்ருவாதம் சார்ந்த கனவு அவருக்கு அரவிந்தரிலிருந்து கிடைத்திருக்கிறது .

வரலாற்றுவாதத்தினை நிராகரிக்கும் பின் நவீனத்துவ சிந்தனைகள் இங்கு வரும் போது அவர்கள் எதிர்கொள்ளவேண்டிய முக்கியப்படைப்பாளி தளைய சிங்கமே . அவர் வேறு ஒருவகையில் நவீனத்துவத்துக்கு எதிராக இருப்பதையும் , அவரது படைப்புகளின் பிளவுண்ட தன்மை பின் நவீன படைப்புகளுக்கு சமானமாக இருப்பதியும் அவர்கள் விளக்கவேண்டியிருக்கும்

இலக்கியவாதியும் தத்துவவாதியும்

தளையசிங்கம் ஒரு முற்போக்காளராக தன் இலக்கிய வாழ்க்கையை ஆரம்பித்தவர் . பிற்பாடு இலக்கிய ஆக்கம் மூலம் அத்தத்துவத்தின் போதாமைகளை உணர்ந்து அடுத்தகட்டத்துக்கு நகர்ந்தவர் . அவர் தீவிரமாக செயல்பட்ட காலத்தில் தான் சோவியத் ருஷ்யா குறித்த நம்பிக்கைகள் வீழ்ச்சி அடைந்தன. உலகம் முழுக்கவே இடதுசாரி எழுத்தாளர்கள் வேறு தளங்களுக்கு நகர முற்பட்டனர் . இடதுசாரி கருத்துக்களில் இருந்து வெளியேவர தளைய சிங்கத்துக்கு ஆர்தர் கோஸ்லர், ஷோல்செனிட்சின் முதலியோரின் ஆக்கங்கள் தூண்டுதலாகியுள்ளமை அவரது எழுத்துக்களில் இருந்து தெரிகிறது . அதன் பின் தளையசிங்கத்தின் எழுத்துக்களில் நவீனத்துவச் சாயல் உருவாகிறது . கோட்டை , தொழுகை போன்ற கதைகள் நவீனத்துவ வடிவப்பிரக்ஞையும் , தத்துவ நோக்கின் சாயலும் உடையவையே. இந்தியாவெங்கும் இடதுசாரிக் கருத்துக்களைமீறி வளர்ந்த எல்லா படைப்பாளிகளும் நவீனத்துவ அழகியல், தத்துவ கட்டமைப்புக்கு உள்ளேயெ சென்று சேர்ந்துள்ளனர் . அங்கேயே தங்கி பல ஆழமான சிறுகதைகளையும் சிறு நாவல்களையும் படைத்துள்ளனர். தமிழில் சிறந்த உதாரணம் சுந்தர ராமசாமி. இன்று நவீனத்துவம் பின்னகர அவர்கள் தங்கள் முக்கியப்படைப்புகள் சிலவற்றை மட்டும் விட்டுவிட்டு காலத்தில் மறைந்து கொண்டிருக்கிறார்கள் . ஆனால் தளைய சிங்கம் சீக்கிரத்திலேயே அந்த வட்டத்துக்கு உள்ளிருந்து தன்னை விடுவித்துக் கொண்டிருப்பதைக் காணலாம் .

தளையசிங்கத்தை மேலும் நகரவைத்தது எது ? முதல் பார்வைக்கு அது இந்திய ஆன்மீக மரபின்மீது அவர் கொண்ட ஈடுபாடுதான் என்று படும் . அது அடிப்படையில் நாஸ்திக [எதிர்மறை ] தன்மைகொண்ட நவீனத்துவ கொள்கைகளுடன் ஆழமான விலகலை அவருக்கு ஏற்படுத்தியது என்று தோன்றும் . ஆழ்ந்து யோசித்தால் தளைய சிங்கத்தை இயக்கிய அடிப்படை வினாக்கள்பலவற்றுக்கு நவீனத்துவ மரபில் பதில் இல்லை என்பதே அதற்குக் காரணம் என்று தெரியும். உதார்ணமாக தளையசிங்கம்அறிவியலின் எல்லை என்ன என்றகேள்விக்கு அழுத்தமான முக்கியத்துவம் தருபவர் . அறிவியல் நோக்கின் அடிப்படையாக மெய்யியலுக்கு கவனம் தருபவர் .இந்த பார்வையே நவீனத்துவர்களிடம் இல்லை. நவீனத்துவம் அறிவியல் நோக்கின் கலைநீட்சி மட்டுமே . நவீனத்துவத்திலிருந்து விலகிய தளையசிங்கம் அதற்கு அடுத்தகட்டத்துக்கு தன் சொந்த உள்ளுணர்வையும் தருக்கத்தையும் துணைகொண்டு நகர முயன்றார்,அவரது முதன்மையான பங்களிப்புகள் இந்த தளத்திலேயே அமைந்தன.

தளையசிங்கத்தின் சிறந்த சிறுகதைகளை [ கோட்டை ,தொழுகை, ரத்தம் , தேடல், சாமியாரும் வீட்டுக்காரரும் ] தமிழின் ஆகச்சிறந்த 50 கதைகளின் பட்டியலில் சேர்க்கலாம். ஈழத்தின் படைப்பிலக்கியவாதிகளில் இப்பட்டியலில் முதலிடம் தரத்தக்கவர் தளையசிங்கமே . அவரது ‘ஒரு தனிவீடு ‘ ஈழ குறுநாவல்களில் முதன்மையானது என்பது என் கணிப்பு. ஆயினும் தமிழின் முக்கியமான படைப்பாளிகளுடன் ஒப்பிடப்பட்டால் தளயசிங்கம் சற்று கீழேயே நிற்கநேரிடும் . அவரது முக்கியத்துவம் அவர் நவீனத்துவத்தை விட்டு முன்னகர்ந்த பிறகே ஏற்படுகிறது . அப்படி முன்னகர்ந்தபோது அவர் படைப்பிலக்கியத்தைவிட்டும் பெரிதும் நகர்ந்து விட்டிருந்தார் .இம்முன்னகர்தலை முதலில் அடையாளம் காட்டிய நூல் ‘ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி ‘

ஏழாண்டு இலக்கியவளர்ச்சி அடிப்படையில் இலக்கிய சர்ச்சைத்தன்மை [polemical] கொண்டது .ஈழ இலக்கியத்தின் ஒரு காலகட்டத்துப் போக்குக்ளை அவற்றின் படைப்பாளிகளை முன்வைத்து தளையசிங்கம் அலசுகிறார் .ஆனால் அதன் அமைப்பை கூர்ந்து கவனித்தால் அக்காலகட்ட கருத்தியல் இயக்கத்தை ஈழ இலக்கியத்தை முகாந்திரமாகக் கொண்டு தளையசிங்கம் மூன்று பெரும் போக்குகளாகப் பிரித்து ஆய்வுக்கு உட்படுத்துவது தெரியவரும் .ஒன்று மார்க்ஸிய சிந்தனைத்தளம். பொருளியல் அடிப்படையில் சமூக இயக்கத்தை புரிந்துகொள்ளுதல், வர்க்கப் போரின் அடிப்படையில் வரலாற்றை விளக்குதல் ,மனித மனத்தை ஒரு சமூகக் கட்டுமானமாக காணுதல் , கலைஇலக்கியங்களை கருத்தியலின் நீட்சிகளாகமட்டும் வகுத்துக் கொள்ளுதல், கருத்தியலை சமூக மாற்றத்துக்கான கருவியாக பயன்படுத்துதல் ஆகியவை அதன் ஆதாரப்போக்குகள் . கைலாசபதி இதன் பிரதிநிதி .

முற்போக்கில் பங்குகொண்டிருந்து பிரிந்து எதிராக ஆகிய போக்கு எஸ் பொன்னுத்துரை வழிநடத்திய நற்போக்கு . இதை உலகளாவிய தளத்தில் விரித்துப் பார்த்தால் மனித மனத்தின் இயக்கத்திற்கு நேரடியான சமூகவியல் விளக்கங்களை அளிக்க மறுத்து அதன் செயலபாடுகளை மேலும் நுட்பமாக காணமுயன்ற , மொழிக்கு மனித மன இயக்கத்துடன் கொள்ள சாத்தியமான இணைவை இலக்கியத்தின் அடிப்படை விதியாகக் கண்ட , தன்னை முன்னிறுத்தி சமூகத்தையும் வரலாற்றையும் அறிய முயன்ற நவீனத்துவப் பொதுப்போக்குகளுடன் அடையாளப்படுத்தலாம்.ஆனால் நற்போக்கு முற்போக்கைப்போலவே சமூக மாற்றத்தில் இலக்கியம் ஆற்றக்கூடிய பங்களிப்பை வலியுறுத்தியது . இதன் இணையான மறுபக்கமாக செயல்பட்ட நவீனத்துவத்தின் இன்னொருபோக்கை முதளையசிங்கம் பிரமிளில் சரியாகவே அடையாளம் கண்டார்.கருத்தியல் இயக்கம் , சமூக இயக்கம், அழகியல் ஆகியவற்றுக்கு இடையே இணைகோடுகளை போட மறுத்து இலக்கியத்தை பெரிதும் உள்ளுணர்வுகளின் அடிப்படையில் காணமுயன்ற மரபு இது .

தன் இயல்பின்படி பிரமிளின் செயல்தளத்துடன் இணைவு கொள்ள வேண்டியவரே தளையசிங்கம். அவரது உள்ளுணர்வு பிரமிளின் படைப்பியக்கத்தை ஏற்கவும் செய்கிறது . ஆனால் இரு அடிப்படைகளில் இருந்து இறுதிவரை தளைய சிங்கம் விலகவில்லை .ஒன்று அனைத்து செயல்பாடுகளுக்கும் மானுட விடுதலைமேம்பாடு ஆகியவற்றுடனான உறவு முக்கியம் என அவர் கருதினார் .இரண்டு தத்துவம் அரசியல் அறிவியல் போன்ற துறைகளுடன் உறவின்றி இலக்கியம் தனித்து இயங்க முடியாது என அவர் நம்பினார் . இந்த இரு நம்பிக்கைகளும் அவரை மேலும் உந்திச்சென்றன. ஏழாண்டு இலக்கியவளர்ச்சியை பார்த்தோமென்றால் தளைய சிங்கம் கைலாசபதி முன்வைத்த எந்திரத்தனமான அணுகுமுறையை கடுமையாக நிராகரிக்கிறார் என்பது தெரிகிறது . அத்துடன் நற்போக்கினர் மொழியில் ஆழ்ந்து இலக்கியத்தை உச்சாடனத்தொழில்நுட்பமாக ஆக்க முயன்றதையும்ம் நிராகரிக்கிறார். பிரமிளின் உள்ளுணர்வு சார்ந்த இயங்குதளம் அவரை ஒப்பீட்டளவில் மேலும் கவர்கிறது .

ஆனால் மூன்று போக்குகளையும் தளையசிங்கம் நிராகரிக்கவே செய்கிறார் . இது முதல் தோற்றம் என்பேன் . அவர் கைலாசபதியை நிராகரிப்பது அறிவியலுக்கு எதிரான நோக்கில் அல்ல .மாறாக கைலாசபதி முன்வைத்த அறிவியல் நோக்கு காலத்தால் பின்தங்கியது என்பதனாலேயே . ஏழாண்டு இலக்கியவளர்ச்சி எழுதப்பட்ட காலத்தில் ஐரோப்பாவில் தளையசிங்கத்தின் தரப்பை மிக வலுவாக உறுதிப்படுத்தும் ஏராளமான அறிவியல் கோட்பாடுகள் வர ஆரம்பித்துவிட்டன, அவற்றை தளையசிங்கம் அறிந்திருக்கவில்லை என்றே அவரது எழுத்துக்களில் இருந்து தெரிகிறது .அக்கோட்பாடுகள் எண்பதுகளில்தான் தமிழில் அறிமுகம் செய்யப்பட்டு விவாதத்துக்கு வந்தன . மொழியைமுன்னிறுத்தி வரலாறு , இலக்கியம் , தத்துவம் , அறிவியல் ஆகியவற்றை விவாதிக்க முற்பட்ட கோட்பாடுகளையே குறிப்பிடுகிறேன் . அவை புறவயம ‘ன அறிவு என்ற கருத்தை கேள்விக்குரியதாக்கி , நிரூபணவாதத்தின் முக்கியத்துவத்தை நிராகரித்தன என்பதை நாம் அறிவோம் . கைலாசபதி முன்வைத்துப்பேசிய அறிவியல் கோட்பாடுகள் அவை பிறந்த அறிவுத்தளத்திலேயே ஆழமான மறுபரிசீலனைகளுக்கு ஆளாகிவிட்டிருந்தன.

தளையசிங்கம் இந்த சிந்தனை அலையை நேரடியாக அறியாவிட்டாலும் அவர் அன்றைய நுண் இயற்பியலில் வந்த மாற்றங்களை கூர்ந்து கவனித்திருந்தார் . அம்மாற்றங்கள் புறவய யதார்த்தம் , நிரூபணவாதம் போன்ற கருத்துக்களின் அடிப்படைகளை நிராகரிப்பதை அவர் ஊகித்தார் .அவை கருத்தியல் தளத்தில் ஏற்படுத்தபோகும் மாற்றங்களை அவர் முன்கூட்டிக் கண்டார் . கருத்துமுதல்வாதம் பொருள்முதல்வாதம் போன்ற பிரிவினைகள் அர்த்தமிழந்துவிட்டன என அவர் மீண்டும் மீண்டும் சொல்வதை காணலாம். அப்போது அவருக்கு பதில் சொல்ல வந்த ஈழ எழுத்தாளர் ஒருவர் தளைசிங்கத்தின் கருத்துக்களுக்கு நிரூபணவாத பலம் இல்லை என்று சொன்னது மெய்யுளில் பிரசுரமாகியுள்ளது.இன்று அக்கேள்விகளுக்கு பதிலை நாம் ஃபிரிஜோ காப்ராவில் ,காரி சுகோவில் , ரோஜர் பென் ரோஸில் , பால் டேவிஸில் அல்லது க ‘ர்ல் பாப்பரில் இருந்து எடுத்துச் சொல்லலாம் . கைலாசபதியின் பார்வை நவீன அறிவியல் நோக்குக்கு எதிரான இயந்திரயுகத்து பார்வை என்பதே தளையசிங்கம் முன்வைக்கும் விமரிசனம் .

அதேபோல நவீனத்துவத்தை விமரிசிக்கும் தளையசிங்கம் அதன் தனிமனிதமையப் பார்வையை ஏற்கமறுக்கிறார். அது தருக்கபுத்தியின் மீது கொண்டுள்ள நம்பிக்கையை அவரால் ஏற்கமுடியவில்லை . மேற்கத்திய சுதந்திர இச்சை [free will ] விவாதங்களின் நீட்சியாக உருவான நவீனத்துவ சிந்தனைப்போகுகள் மனிதனை சமூகத்துக்கு எதிரானவனாக நிறுத்துவதன் மூலம் அவனது சக்தியை வீணடிக்கின்றன என்று அவர் கருதுவது தெரிகிறது . மனிதனை சமூகத்தில் இருந்து பிரித்துப் பார்ப்பதை அவர் விரும்பவில்லை .அத்துடன் தளையசிங்கத்தை பொறுத்தவரை மெய்யியல் மிக முக்கியமானது . அது மானுட நன்மையை மேம்பாட்டை இலக்காக கொண்டதாகவும் இருந்தாக வேண்டும். நவீனத்துவம் மீது தளையசிங்கம் முன்வைக்கும் பல விமரிசனங்கள் பின் நவீனத்துவம் முன்வைத்தவற்றுக்கு சமமானவை . அக்கருத்துக்கள் மேற்கத்திய சிந்தனையின் வார்ப்படத்தில் அப்போதுத ‘ன் உருக ஆரம்பித்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது .

தளையசிங்கம் ஏழாண்டு இலக்கிய வளர்ச்சியில் ஒரு இலக்கியவாதியாக இந்த போக்குகளுக்கு இடையே ஒரு இணைப்பு ,ஒரு பொது இடம் உருவாக சாத்தியமுண்டா என்று பார்க்கிறார் என்று சொல்லலாம். தன் படைப்பியக்கத்தை அந்த இணைப்பின் தளம் நோக்கி நகரக்கூடிய ஒன்றாக அவர் அடையாளம் காண்கிறார் . ஆனால் தொடர்ந்து அவரது தேடல் அவரை படைப்பியக்கத்தில் இருந்து வெளியே கொண்டு செல்கிறது . ‘போர்ப்பறை ‘ இந்த திசைமாற்றத்தை சுட்டும் திருப்புமுனையான படைப்பு . தன் கேள்விகளுக்கு தருக்கத்தால் விடை தேடுவதை மெல்ல தவிர்த்து அவர் தன் உள்ளுணர்வை நோக்கி திரும்பும் காலம் இது . இத்தொகை நூலில் கவனத்துக்கு உரிய விஷயம் ஓன்று உண்டு . இதில் தளையசிங்கத்தின் படைப்பியக்கம் பலவீனமடைந்துள்ளது .கதைகள் கருத்துமையம் கொண்ட எளிய அமைப்புடன் உள்ளன. ஆனால் கட்டுரைகளில் அதுவரை இருந்த சர்ச்சை தன்மை விலகி சுய உரையாடலுக்குரிய தோரணை தென்பட ஆரம்பிக்கிறது .விளைவாக சீராக விரியும் வாதகதிகளுக்குப் பதிலாக ஒழுங்குக்குள் சற்று சிரமப்பட்டுமட்டுமே தன்னை நிறுத்திகொள்ளும் சிந்தனை மின்னல்கள் காணக்கிடைக்கின்றன . இந்த மாற்றம் முக்கியமானது .

ஒரு சிந்தனையாளராக தளையசிங்கம் நேரடியானவர் .இடக்கரடக்கல்கள் , தயவு தாட்சணியங்கள் அற்றவர் .உண்மையில் பூசிமெழுகாது பேசும் ஒருவரை நாம் எளிதாக புரிந்துகொள்ளும் நிலை இருக்கவேண்டும் . ஆனால் நமக்கு இதுமிகப்புதியது ஆகையால் அதிர்ச்சியும் குழப்பமும்தான் ஏற்படுகிறது .இலக்கியப்படைப்பு ஒரு படைப்பாளியின் சுயத்தின் வெளிப்பாடு என்ற நவீனத்துவ நிலைப்பாடுதான். அந்த சுயம் அவன் வாழும் சூழலின் விளைவு என வரையறுத்துக் கெ ‘ண்டு பேசுகிறார் தளையசிங்கம். ஆகவே சாதி குறித்து பேசும்போது எந்தவிதமான பாவனைகளுமில்லாமல் அப்பட்டமாக பேசுகிறார் தளையசிங்கம் .அந்த அப்பட்டத்தன்மை அவரது அந்தரங்க சுத்தியின் விளைவு. அவரது எழுத்துக்களும் அவரது தனிப்பட்ட வாழ்வும் மரணமும் அவர் எந்த அளவுக்கு சாதியசமூக அமைப்பிற்கு எதிராக இருந்தார் என்பதற்குச் சான்ற ‘கும் . அறிவியக்கத்தில் ஈடுபடமுனையும் அடித்தளச் சாதியினருக்கு ஏற்படும் தாழ்வுணர்வு அதுசார்ந்து எழும்பிரச்சினைகளை வெளிப்படையாக விவாதித்த ஒரே தமிழ்ச் சிந்தனையாளர் தளையசிங்கமே , அது தமிழின் மிக முக்கியமான பிரச்சினையாக இருந்தும்கூட .முற்போக்கு கெடுபிடிகளை எத்தனை துணிச்சலாக அவர் எதிர் கொண்டார் எனபதற்கு இது சான்று . அதேசமயம் அவர் தாழ்வுணர்ச்சியை , அதன்மூலம் உருவாகும் அவநம்பிக்கைமனநிலையை வெல்வதற்கு அவர் அடித்தள சாதியினருக்கு பரிந்துரை செய்தது தீவிரமா ‘ன அதிகார மோகம் , தாக்கிவெல்லும் முனைப்பு ஆகியவற்றையே என்பதைக்காணலாம்.

ஆனால் தளையசிங்கத்தின் ஆழ்மனவெளிப்பாடு முதன்மைகொண்டுள்ள மெய்யுளின் அத்தகைய அப்பட்டமான குரல் இல்லை.அது பூடகமும் சிக்கல்களும் தனக்குத்தானே பேசிக்கொள்ளும் இயல்பும் உடையதாக காணப்படுகிறது .மெய்யுள் தளையசிங்கத்தின் படைப்புகளில் மிகச் சிக்கலானது . அவரது ஆக்கங்களிலேயே துல்லியமற்றது ,கட்டுக்கோப்பற்றது அதுதான் . ஆனால் அதுவே மிக முக்கியமானது .தமிழில் எழுதப்பட்ட அசல் சிந்தனை நூல்களில் பலவகையிலும் ஆழ்ந்து பயில வேண்டிய முதல் நூலும் அதுதான்,வேறு சூழல்களில் இத்தைகைய நூல் வந்திருந்தால் அடுத்தகட்ட அறிஞர்களால் அவை நீவி சீராக்கப்பட்டு தேவையான பின்னணி விளக்கங்கள் அளிக்கப்பட்டு [அன்டோனியோகிராம்ஷியின் சிறைக்குறிப்புகள் போல ] நமக்குக் கிடைத்திருக்கும் . இப்போது நாமே ஒரு எளிய முன்வரைவை உருவாக்கிக் கொண்டு முன்னகரவேண்டியுள்ளது .

பரிணாமத்தின் அடுத்த கட்டம் , புதுயுகம் ?

மெய்யுளின் அடிப்படையானது மனித சமூகத்தின் வளர்ச்சி குறித்த ஒரு உருவகத்தில் உள்ளது . பரிணாம வளர்ச்சியில் மனிதன் அடுத்த படியை நோக்கி நகரவேண்டிய கட்டத்தில் இருக்கிறான் என தளைய சிங்கம் கருதுகிறார் . பரிணாம வரலாற்றை மெய்யியல் நோக்கில் விரித்தெடுத்து ஒரு சித்திரத்தை அளிக்கிறார் .சடநிலையில் இருந்து பிரபஞ்சம் உயிர்நிலை நோக்கி முதலில் பரிணாமம் பெற்றது . அதில் இருந்து அது மனநிலைக்கு வளர்ச்சி பெற்றது. அடுத்த பரிணாம கட்டம் பேர்மனம் உருவாவதாகும் எனலாம் என்கிறார் . இது ஒவ்வொன்றும் ஒரு சுழல். ஒவ்வொரு சுழலிலும் நான்கு யுகங்களை [ கிருத துவாபர திரேத கலி யுகங்கள் ] உருவகம் செய்யலாம். அப்படியானால் இப்போது நாம் மனம் மையமாக உள்ள யுகத்தின் கலியுக முடிவில் இருக்கிறோம். இந்த காலகட்டம் ஒரு கொந்தளிப்பின் காலகட்டம் .ஒரு யுகம் முடிந்து பிறிதொன்று பிறக்கும் தருணம் . இதையே புதுயுகம் பிறக்கிறது என்று தளையசிங்கம் சொல்கிறார் . இங்கு ஒரு விஷயம் கவனிக்கவேண்டும்.இவை உருவகங்களே என்றும் புரிந்து கொள்ளும் வசதிக்காக செய்யப்படுபவை என்றும் தளையசிங்கம் வலியுறுத்திச் சொல்கிறார்.

இதை இந்திய யோகமரபின் அடிப்படையில் [ இங்கு பொதுவாசகர்களுக்காக ஒன்றைச் சொல்லவேண்டும் . தமிழ் சூழலில் யோகம் என்பதை ஆன்மீகத்துடனும் வழிபாட்டுடனும் கடவுளிடமும் எல்லாசாராரும் பிணைத்துவிட்டனர் . யோகம் மூலவடிவில் ஒரு லெளகீகவாத அல்லது பொருள்முதல்வாத தரிசனம்தான் . உள்ளத்தை ஆழ்ந்து அறிவதற்கான பயிற்சிகள் தான் அது முன்வைப்பது . மிகப்பிற்காலத்தில் அதை ஆன்மீகவாத மரபுகள் எடுத்துக் கொண்டன .இந்த எடுத்தாளுகை பகவத் கீதையால் செய்யப்பட்டது என்பார் டி டி கோசாம்பி ] தளையசிங்கம் இதை விளக்குகிறார் . மனித இருப்பு அன்னமயகோசம் [பருப்பொருள்] பிராணமய கோசம்[உயிர்] மனோமய கோசம் [ மனம்] விஞ்ஞானமயகோசம் [ஆழ்மனம்] ஆனந்தமய கோசம் [ ஒட்டுமொத்த ஆழ்மனம் ,பேர்மனம் ] ஆகிய பல தளங்களில் உள்ளது என்று பகுக்கிற ‘ர் . பிரபஞ்சத்தில் ஆதியில் அன்னமய கோசம் மட்டும் இருந்தது . அதாவது ரசாயனங்கள் போன்றவை. பிறகு உயிருள்ள இருப்புகள் உருவாயின. பின்பு மனம் உருவாகிவந்தது. இப்போது மனத்தை மையமாககொண்டதாக மானுட இருப்பு உள்ளது . இனி ஆழ்மனத்தை மையமாகக் கொண்ட மானுடம் உருவாகும் என்கிறார் .இதுவரை அதிமானுடர்களுக்கும் யோகிகளுக்கும் சாதகம் செய்து அடையக் கூடியதாக இருந்த விஞ்ஞான மய கோசமும் ஆனந்தமனகோசமும் இனிமேல் உருவாகும் காலச்சுழலில் அனைவருக்கும் உரியதாக ஆகும் என்கிறார் தளைய சிங்கம் .

இது ஒரு வகை தத்துவார்த்த விளிம்புநிலை உருவகம் . இன்றைய அறிவியல் புனைகதைகளில் இத்தகைய அறிவியல் விளிம்புகள் தொடர்ந்து பலவாறாக பரிசீலிக்கபடுவதைக்காணலாம் . உண்மையில் இதுசாத்தியமா என்ற கேள்வியைவிடவும் முக்கியமானது அப்படிப்பட்ட ஒரு நிலையில் இன்று நாம் கொண்டிருக்கும் நம்பிக்கைகள் கொள்கைகள் கோட்பாடுகள் எம்மாதிரி பொருள்படும் என்ற வினாதான் .

பூரணஅத்வைத நிலை

இந்தப் புதுயுகத்தை தளையசிங்கம் இப்போது பிரிந்தும் தங்களுக்குள் மாறுபட்டும் கிடக்கும் பலவகைப்பட்ட அறிதல்முறைகளுக்கு இடையேயான ஒரு பூரண இணைப்பின் மூலம் நிகழக் கூடியதாக காண்கிறார் என எளிதாக விளக்கலாம் . உதாரணமாக ஜனநாயக அமைப்பு ஒவ்வொருகூறுக்கும் சுதந்திரமான வளர்ச்சியை வாக்குறுதியளிக்கிறது . ஆனால் அதில் மையப்படுத்தப்பட்ட இலக்கும் இல்லை , ஆகவே ஒருங்கிணைவு இல்லை , அது தாமதம் மூலம் நேர் எதிரான விளைவுகளையே உருவாக்கும் . அதேபோல சர்வாதிகார அமைப்புகளில் ஒருங்கிணைப்பும் இலக்கும் துரிதமும் இருப்பினும் சுதந்திரம் இல்லை .இரு போக்குகளின் எல்லா சிறப்பியல்புகளும் இணையும் ஒரு அமைப்பினை மனித இனம் அடையுமென தளையசிங்கம் கற்பனை செய்கிறார் .இலக்கும் தெளிவும் உள்ள , அதேசமயம் சுதந்திரத்தின் மதிப்பை உணர்ந்த ஞானி அரசை தலைமைதாங்கலாம் என்று கருதுகிறார் தளையசிங்கம் .

அதேபோல கருத்துமுதல்வாதம் பொருள்முதல்வாதம் போன்ற கருத்துருவங்கள் பொருளிழந்து போகும் என தளையசிங்கம் கூறுகிறார் . பதிலுக்கு மெய்முதல்வாதம் மனித குலத்தின் அறிதல்முறையாக ஆகும் என்று சொல்கிறார் .இதை இன்றைய சிந்தனைப் போக்குகளில் அறிமுகமுள்ளவர்கள் பலவகையில் தொடர்பு படுத்தி புரிந்துகொள்ள முடியும். புறவய அறிதல்முறை என்ற ஒன்று இல்லை , ஒரு வரையறுக்கப்பட்ட பேசுதளத்தில் பொதுவாக ஏற்கப்பட்ட விதிகளின் அடிப்படையில் முன்வைக்கப்பட்ட கருத்தே புறவயமானது எனப்படுகிறது என்ற கூற்று அடிப்படையில் இந்தப் புரிதலில் இருந்து உருவாவதுதான்.பொருள் என்பதே அப்படி ஒரு ஒரு தளத்தில் நம் பார்வையை வரையறுத்துக் கொள்வதனூடாக நம்மால் அறியப்படுவது மட்டும்தான் எனும்போது பொருள்முதல்வாதம் அடிப்படையற்றுப் போகிறது . அதேபே ‘ல கருத்தும் அப்படி ஒரு தளத்துக்கு ஏற்ப வரையறுத்துக் கொள்ளப்படுவதுதான் என்று கொள்ளும்போது ஒவ்வொன்றுக்கும் மூலமாக உள்ள முழுமுதன்மையான கருத்து என்பதும் இல்லையென்றாகிறது . அப்போது எஞ்சும் வினா ஏன் , எப்படி ,நம் தளவரையறைகளை உருவாக்கிக்கொள்கிறோம் என்பதே . இங்குதான் மெய்யியல் முதன்மைப்படுகிறது .

அறிவியல் சித்தாந்தங்களின் அடிப்படியாக அமைபவை ஊகங்கள்[hypothesis ] அவை மானுடனின் தேவையில் , அவனது கற்பனையின் சாத்தியங்களில் , உலகைவிளக்க அவன் கொள்ளும் கோணத்தில் இருந்து முளைப்பவை .அவற்றுக்கு அடிப்படியாக அமைவது அவனுக்கும் பிரபஞ்சத்துக்குமான உறவேயாகும். அது மெய்யியல்சார்ந்தது . ஆகவே அறிவியலின் அடிப்படையாக ஆழ்ந்த மெய்யியல் தரிசனம் இருக்கவேண்டும் என்றுடின்று கருதப்படுகிறது .அதே இதழில் குமரிமைந்தன் நவீன வரலாற்றாய்வு குறித்து பேசும்போது வேறு ஒரு கோணத்தில் இதையெ கூறுகிறார் . புறவயமான தரவுகள் என ஏதுமில்லை .வரலாற்றாய்வுக்கு அடிப்படியாக அமைவது ஆதன் மெய்யியலே என. இந்த அம்சத்தை தளையசிங்கம் கூறும் மெய்முதல்வாதத்துடன் இணைத்து யோசிக்கலாம் .

இதேபோல உள்ளுணர்வு சிந்தனை ஆகிய பிரிவினைகளும் பொருளிழந்து போகலாம் என தளையசிங்கம் சொல்கிறார் .அவை முரண்படும் நிலை மனத்தை மையமாக கொண்ட ஒரு மானுட சமூகத்துக்கு உரியது . அன்றாட வாழ்வுக்குரியதாக உள்ளது மனம் ,அல்லது ஜாக்ரத் அல்லது பிரக்ஞை .ஆழ்மனம் அதன் அடித்தள விரிவாக பின்ன்ணியில் ம்றைந்துள்ளது .ஆழ்மனம் வெளிப்படுபதையே உள்ளுணர்வு என்கிறோம். ஆழ்மனதை மனதால் விளக்கமுடியாதபோது அது முரண்படுகிறது.உள்ளுணர்வின் வெளிப்பாடு பித்தாக தோன்றுகிறது .மனத்தின் தருக்கத்தை விரித்து ஆழ்மனத்தை அள்ள முயன்று களைக்கிறோம் .அனைவருமே விஞ்ஞான கோச நிலையில் அதாவது ஆழ்மனமே இயல்பான மன இயக்கமாக இருக்கும் நிலையில் இந்த இருபாற்பிரிவினையும் சரி மோதலுமசரி இருக்காது என தளையசிங்கம் சொல்கிறார் .

கலையிலக்கியங்களின் அடிப்படை

இதன் அடுத்தபடியாக கலை இலக்கியங்களின் பணி என்ன என்ற கேள்விக்கு வருகிறார் .கலையின் நோக்கமே உண்மையான பரவச விடுதலையை அளிப்பதுதான். அது எப்படி அப்பரவச விடுதலையை அளிக்கிறது ? மனத்தை மையமாகக் கொண்டு வாழும் மனிதர்களுக்கு அது ஆழ்மனங்களை காட்டுகிறது .மனோமயகோசத்தில் வாழ்பவர்களின் விஞ்ஞான ஆனந்தமய கோசங்களை வெளிக்கொணர்கிறது . ஆனால் சமுகமே சாதாரணமாக அந்நிலையை அடையும்போது கலை அப்பணியை செய்யவேண்டியிருக்காது. சாதாரணமான தொழில்களே அன்றாட அனுபவங்களே அந்த பரவச நிலையை மனிதர்களுக்கு அளிக்கும் .முழுவாழ்க்கையே கலையாக ஆகும்காலகட்டத்தில் கலை எதற்கு என்கிறார் தளையசிங்கம். அந்நிலையில் கலை பூரண கலையாக ஆகவேண்டியிருக்கும். இலக்கியம் பூரண இலக்கியம் ஆக மாறவேண்டியிருக்கும்

இதனடிப்படியில் பூரண இலக்கியம் என்ற கருத்தைப்பற்றி தளைய சிங்கம் விரிவாகபேசுகிறார் .இனிமேல் இலக்கியவாதி பொழுதுபோக்கு எழுத்தாளனாகவோ , வாழ்க்கையின் ஏதேனும் ஒரு தளத்தைச் சேர்ந்த உண்மையை சொல்பவனாகவோ இருக்க முடியாது.இனிவரும் இலக்கியவாதி அறிவியல் அரசியல் அழகியல் ஆகிய அனைத்திலும் ஊடிருவியுள்ள பூரணமான ஞானத்தை உணர்ந்தவனாக அதை தன் எழுத்தினூடாக அனுப்வமாக்குபவனாக இருக்கவேண்டும். அதாவது அவன் எழுதுவது அறிவியல் சமயம் என்றெல்லாம் பிரிக்கமுடியாதபடி அனைத்தையும் தழுவிய சாரம்சத்தைக் கொண்டவனாக இருக்கவெண்டும் .நேற்று ஒரு சமய ஞானி தன் மெய்யறிதல்மூலம் பெற்ற பூரண நிலையை எழுத்தாளன் கலைஞன் ஆகியோர் தங்கள் இலக்கியம் கலை மூலம் சாத்தியமாக்க வேண்டும்.

இந்த பூரண இலக்கியத்துக்கு உரிய வடிவமாக தளையசிங்கம் மெய்யுள் என்ற வடிவத்தை கற்பிதம் செய்கிறார் . அவ்வடிவில் ‘கலைஞனின் தாகம் ‘ என்ற நூலை உருவாக்குகிறார் . அந்நூல் மெய்யுளின் இணைப்பாக கொடுக்கப்பட்டுள்ளது . ஆனால் அது ஒரு ஆளுமைப் பிளவு பிரதியாக உள்ளது . [ schizophrenic text] தளையசிங்கம் உத்தேசித்துள்ள வடிவம் ஒரு க்லவை , அதாவது கவித்துவம் /புனைவு/விவாதம் இயல்பாகவே ஒருமுனைப்பட்டு ஒரு பேருண்மையை வெளிப்படுத்துவது ஆகும் . ஆனால் இப்பிரதியில் அந்த இயல்பான இணைப்பு உருவாகவேயில்லை . மாறாக அவற்றுக்கிடையேயான மோதல் உக்கிரப்பட்டு ஆழ்மன ஒளிகளும், அவற்றை அபத்தமாக கைநீட்டிப் பிடிக்கத்தாவும் தருக்கவிளையாட்டுகளும் , சுருதியிறங்கும்போது மேலோட்டமான கவிதைநடையில் வெளிப்படும் உணர்ச்சிக் கொந்தளிப்புமாக ஒரு ருசியற்ற கலவை வடிவில் அது அமைந்துள்ளது .

தமிழின் இலக்கியமுக்கியத்துவம் கொண்ட ஆளுமைப்பிளவுப் பிரதிகளில் நகுலனின் ‘நினைவுப்பாதை ‘ இலக்கிய ரீதியாக முக்கியமானது .[நகுலன்X நவீனன் ] அதன் ஊடுபிரதித் தன்மை [ inter textuality]மற்றும் நடையில் உள்ள மெல்லிய நகைச்சுவை ஆகிய்வை அதை முக்கியப்படுத்துகின்றன . கலைஞனின் தாகம்[நல்லசிவன்Xமு.தளையசிங்கம் ] தத்துவ அடிப்படையில் முக்கியமானது .ஒரு தத்துவவாதியை ஆழமான சிந்தனைகளில் இறக்கிவிடும் ஒளிமிக்க வரிகளாலானது இது . மெய்யுளின் பல பகுதிகளை தன் உக்கிரமான மனநிலைகளை அவ்வாசிரியரே வேறு ஒரு தளத்தில் மிக எளிமையாகப் புரிந்து கொண்டமையின் விளைவு என நவீன வாசகன் ஒதுக்கிவிட வேண்டியிருக்கும் . புதுயுக மாற்றமொன்றை கற்பனைசெய்யும் தளையசிங்கம் அம்மாற்றம் உலகத்துக்கு ஈழத்திலிருந்து தெரியவரும் என எண்ணிக்கொள்கிறார் .அதை ஈழ அரசியலுடன் அவர் இணைக்கும் இடத்தில் தான் ஆளுமைப்பிளவு பிரதிகளுக்கே உரிய அபத்தம் துல்லியப்படுகிறது . பழையபாணி உளவியலாளன் உடனே மருத்துவத்தை ஆரம்பித்துவிடுவான்.

(இறுதிப்பகுதி அடுத்தவாரம்)

jeyamohanb@rediffmail.com

மு.தளையசிங்கத்தின் தத்துவமும் மெய்யியலும் – 1 ( மு .தளையசிங்கத்தை புரிந்துகொள்வதற்கான் அடிப்படைகள்.)

This entry is part [part not set] of 30 in the series 20020610_Issue

ஜெயமோகன்

பகுதி : ஒன்று

மு .தளையசிங்கத்தை புரிந்துகொள்வதற்கான் அடிப்படைகள்.

மு .தளையசிங்கத்தை இன்று படிக்கும்போது பல இடர்கள் தமிழ் வாசகனுக்கு ஏற்படுவதை கவனித்துள்ளேன். அவனது விமரிசனங்கள் இரு தளத்தில் அமைந்துள்ளன. ஒன்று மு.தளைய சிங்கம் தெளிவாக சிந்திக்கவில்லை ,மிகவும் குழப்புகிறார். இரண்டு அவரது பார்வை பல சமயம் அபத்தமாகவும் ,தர்க்கத்தைமீறி அகவயமாகவும் , அபூர்வமாக மூட நம்பிக்கை அளவுக்கும் போகிறது. அவர் வழிமுறைகளைப்பற்றிய தெளிவு இல்லாமல் ஒரு இலட்சிய வாழ்க்கைநிலையை அல்லது காலகட்டத்தை கற்பனை செய்கிறார் என சுந்தர ராமசாமி மிக மென்மையாக அதையே சொல்கிறார் . இக்குற்றச்சாட்டுகள் பொத்தாம் பொதுவானவை என்பதை மறுப்பதற்கில்லை . அதேசமயம் இவற்றை கூர்ந்து அவதானிக்கவேண்டியுள்ளது. தளையசிங்கத்தை புரிந்துகொள்வதில் நம் சூழலுக்கு உள்ள சிக்கல்கள் முதல் விஷயம். தளையசிங்கத்துக்கே சிந்திப்பதிலும் வெளிப்படுத்துவதிலும் இருந்த சிக்கல்கள் இரண்டாம் விஷயம் .தளையசிங்கம் சொல்வதென்ன என்று யோசிப்பதற்கு முன்னால் இப்பிரச்சினைகளை பற்றிய ஓர் தெளிவை அடையவேண்டிய அவசியமுள்ளது .

படைப்புச்சிந்தனையும் தெளிவும்

தெளிவாக யோசித்தல் மற்றும் பேசுதல் என்பதை அசல் சிந்தனையாளர்களுக்கு நிபந்தனையாக ஆக முடியாது என்றே படுகிறது. முதற்கட்ட சிந்தனையாளர்களுக்கு முக்கியமாக . முதற்கட்ட சிந்தனையாளர்கள் அல்லது அசல் சிந்தனையாளர்கள் வழி தவறுவது , குழம்புவது ,பாதியில் நின்றுவிடுவது எல்லாமே சாத்தியம் தான் .ஏனெனில் முதற்கட்ட சிந்தனையாளர்கள் எனது கணிப்பில் சிந்தனையை அதாவது தருக்கத்தை [ கரண அறிவை , கரணியத்தை Reason /Rationality ] நம்பி இயங்குவதைப் பார்க்கிலும் அதிகமும் உள்ளுணர்வை நம்பியே இயங்குகிறார்கள் . கறாரான வரைபடமொன்றினை வைத்துகொண்டு படிப்படியான சிந்தனைவளர்ச்சி மூலம் சீராக முன்னகரும் இயல்பு அவர்களிடம் இல்லை . அவர்களுக்கு கருத்துக்கள் அவர்கள் ஆழத்திலிருந்து மின்னல்கள் போல தெறித்தே வருகின்றன என்றுபடுகிறது . ஒரு கோணம் அப்படியே திறந்துகொள்கிறது . அதை பிறகு அவர்கள் விரிவாக தருக்கப்படுத்தி விளக்க முயலலாம்.

எனவே இவர்களின் மன இயக்கத்தில் சிந்தனையானது தர்க்க அலகுகளாக இருப்பதைவிட சில மனப்படிமங்களாக இருப்பதையே அதிகமாக காண்கிறேன் .எல்லா முக்கிய சித்தனையாளர்களுக்கும் அவர்களுக்கே உரிய படிமங்கள் சில இருப்பதை கவனிக்கலாம் . கணிசமான சிந்தனையாளார்கள் ஒரு குறிப்பிட்ட காலம் கழிந்ததும் அப்படிமத்தின் மூலமே நினைவுகூரப்படுகிறார்கள். அவர்களுடைய முக்கிய பங்களிப்பாக அந்த படிமமே எஞ்சிவிடுகிறது. சாக்ரட்டாஸுக்கு குகை படிமம். ஹெகலுக்கு ஆண்டான் அடிமை என்ற படிமம். ஃபூக்கோவுக்கு கண்காணிப்புக் கோபுரம் குறித்த படிமம் , சங்கரருக்கு கயிற்றரவு, நாகசேனருக்க்கு தீபச்சுடர் …இவ்வாறு .[ தளையசிங்கத்துக்கு மாடிகள் எழுந்துகொண்டேயிருக்கும் கட்டிடம் ]அதாவது முதல் கட்டச் சிந்தனையாளர்கள் ஒரு வகையான இலக்கியப் படைப்பாளிகள்தான் . கற்பனையும் உள்ளுணர்வும் அவர்களை இயக்கும் முக்கிய மூல விசைகள். ஆகவே படைப்பாளிகளையும் கலைஞர்களையும் அலைக்கழிக்கும் அதே நிலையின்மை , வகுத்துவிட முடியாத தன்மை அவர்களையும் ஆட்கொள்கிறது . அவர்களும் கண்ணைமூடிக்கொண்டு துழாவுபவர்களே . அதன் நிறை குறைகளை அவர்களிடமும் காணலாம்.

சிந்தனையாளர்கள் இரு வகை. நாம் அறியும் பெரும்பாலான சிந்தனையாளர்கள் ஏற்கனவே உருவாக்கப்பட்ட வாழ்க்கை பற்றிய ஒரு தரிசனத்தை அல்லது தத்துவச் சட்டகத்தை அல்லது அடிப்படைப் புரிதலை சார்ந்து , அதன் இடைவெளிகளை நிரப்பும் பொருட்டோ அல்லது அதை தங்கள் சூழலிலோ தாங்கள் செயல்படும் துறைகளிலோ செயல்படுத்தும் பொருட்டோ சிந்திப்பவர்கள் . இதற்கு உதாரணமாக ஞானி , கைலாசபதி ஆகியோரை சொல்லலாம் .மார்க்சியம் அவர்களுக்கு அடிப்படையான சிந்தனைச் சட்ட்டகத்தை அளித்துள்ளது . ஞானி மார்க்ஸிய விளக்கத்தில் இலக்கியம் , கலாச்சாரம் , மெய்யியல் குறித்த இடைவெளிகள் இருப்பதை நிரப்ப முயல்கிறார். கைலாசபதி மார்க்ஸியச் சட்ட்டகத்தை தமிழ்ச் சூழலுக்கு செயல்படுத்திப் பார்க்கிறார் . நமது இரண்டாம் நிலை சிந்தனையாளர்களை இவ்விரு வகைப்பாடுகளுக்குள் அடக்கிவிடலாம் . பின் நவீனத்துவர்களில் பிரேம் ஞானியின் வகைபட்டவர் . தமிழவன் கைலாசபதியின் வகை. இவர்களுக்குக் கீழே இங்கு பெருவாரியாக உள்ளவர்கள் சிந்தனைகளைப் பிரதியெடுப்பவர்கள் ,மொழிபெயர்ப்பவர்கள் ,மேற்கோள் காட்டுபவர்கள் . இவர்களை வெறுமே அறிஞர்கள் என்று மட்டுமே சொல்ல முடியும் உதாரணம் சிவத்தம்பி , எஸ் வி ராஜதுரை . பலரை அப்படிக்கூட சொல்ல முடியாது , அவர்களுடையது விசுவாசமும் அரைகுறைக் கேள்வி ஞானமும் மட்டுமே , உதாரணமாக தி .க. சிவசங்கரனைக் கூறலாம் .

அசல் சிந்தனையாளன் சிறிய அளவிலேனும் சுயமாக வாழ்க்கை பற்றிய ஒரு தரிசனத்தை கொண்டிருப்பான் என நான் எண்ணுகிறேன் .[தரிசனம் என்பது இங்கு வாழ்க்கையின் ஒட்டுமொத்தத் தன்மையை கணக்கில் கொண்ட ஒரு அடிப்படையான பார்வை என்று பொருள்படும் ]அத்துடன் அதை விளக்கும் தத்துவ அமைப்பை சென்றடைய அவன் தொடர்ந்துமுயல்வான்[ தத்துவம் என்பது அனைத்து துறைகளிலும் உள்ள தருக்கங்களின் தொகுதியான ஓர் அமைப்பு என்று இங்கு கொள்ளப்படுகிறது ] அனைவரையும் போலவே அவனும் பிறரது சிந்தனைகளில் இருந்தே தொடங்குகிறான் .அவற்றிலிருந்து நகர்ந்து தன்னுடைய சுய சிந்தனைத்தளத்துக்குப் போகிறான் .அச்சிந்தனைகளின் மீதான அவனது விமரிசனம் அவனது அனுபவம் சார்ந்ததாகவும் , உள்ளுணர்வினைச் சார்ந்ததாகவும் இருக்கலாம் .

ஒரு முந்தைய சிந்தனை மரபில் இருந்து வெளியேறும் அசல் சிந்தனையாளன் அதன் தருக்கக் கட்டமைப்பின் போதாமையை உணர்ந்து தான் வெளியெறுகிறான் என்று புரிந்துகொள்வது நம் வழக்கம் .குறிப்பாக மார்க்ஸ் ஹெகல் இருவருக்குமிடையேயான உறவு குறித்த விவாதத்தில் அப்படி இங்கு பேசப்பட்டிருக்கிறது . ஆனால் தருக்கம் வெளிப்பாட்டு முறையையும் , தரிசனத்தையும் புறவயமாக்கும் முயற்சியை மட்டுமே சார்ந்தது என்பதே என் கணிப்பு . உண்மையில் ஹெகலுக்கும் மார்க்ஸுக்கும் தருக்க அமைப்பு ஒன்றேதான். அவர்களுக்கு இடையேயான முரண்பாடானது அடிப்படையில் தரிசனரீதியானது, மெய்யியல் சார்ந்தது .[ அதை ஞானி விளக்கியுள்ளர் .] மெய்யியல் சார்ந்த போதாமை என்பது பெரும்பாலும் அவனது அந்தரங்கமான கேள்விகளை ஒட்டி உணரப்படுவதாகும் . அவனுடைய அந்தரங்கம் வாழ்க்கை மற்றும் பிரபஞ்சம் குறித்து எழுப்பும் அடிப்படையான கேள்விகளுக்கு அவனுக்கு திருப்தியான ஒரு பதிலை நோக்கி நகரும் முனைப்பே அவனைஇயக்குகிறது .

தமிழ்ச் சமூகத்தில் அப்படிப்பட்ட அசலான சிந்தனையாளர்கள் அனேகமாக இல்லை . இரு விதிவிலக்குகள் ஆனந்தக் குமார சாமியும் மு. தளையசிங்கமும் மட்டுமே . ஆனந்தக் குமாரசாமி தமிழில் எழுதவில்லை ,தமிழ்ச் சமூகத்தை முன்னிறுத்திப் பேசவுமில்லை .ஆகவே அவரை தமிழ்ச் சிந்தனையாளராக கருதமுடியாது . ஆகவே இப்போதைக்கு நம் முன் உள்ள ஒரே உதாரணம் தளைய சிங்கம் மட்டுமே . அதிலும் குறிப்பிடப்பட வேண்டிய விஷயம் ஒன்று உண்டு. ஒரு சிந்தனையாளராக ஒருவகையில் தளையசிங்கம் தோல்வியடைந்தவரே. அவரது தோல்வி மகத்துவம் கொண்ட தோல்வி என்போமே அவ்வகைப்பட்டது. தன் சூழலை ஆழமாகப் பாதிக்க அவரால் முடியாமல் போய்விட்டது என்பதை வைத்தே அவரை தோல்வியடைந்தவர் என கூறுகிறேன். அதற்குக் காரணம் அவரது சிந்தனைகள் முழுமைபெறவில்லை , திட்டவட்டமாக முன்வைக்கப்படவுமில்லை . அவரது தோல்வியில் இருந்து நம் சூழலை எதிர்கொள்ளும் அறிவார்ந்த சவால்கள் என்னென்ன என்று நாம் ஊகிக்க முடியும். சுயமாக சிந்திப்பதற்கு நமக்குள்ள தடைகள் என்ன , சிந்தித்தவற்றை வெளிப்படுத்தும் புறவய மொழி மற்றும் தத்துவ அமைப்பை உருவாக்குவதில் உள்ள பிரச்சினைகள் என்ன என்பவற்றை ஊகிக்க முடியும் . அனைத்தையும் விட மேலாக அவரிலிருந்து பல சிந்தனைமுளைகளை நம்மால் இன்றைய புதிய சூழலில் வளர்த்தெடுக்க முடியும் .

இந்திய தத்துவ உபகரணங்களின் எல்லைகள்

தளையசிங்கம் மிக இளம் வயதிலேயே மரணமடைய நேரிட்டது அவரது தேடல் திட்டவட்டமான பலன்களை அளிக்க முடியாமல் செய்த முதல்க்காரணம் என்பதை மறுப்பதற்கில்லை. அவரது காலத்தில் அவர் முன்வைத்த கருத்துக்களை ஆக்க பூர்வமாகப் புரிந்துகொண்டு எதிர்வினையாற்றிய வாசகர்களோ , அவரை தர்க்க தளத்தில் அறிவார்ந்த நேர்மையுடன் விமரிசித்த எதிர்தரப்பினரோ இல்லை என்பது அடுத்த முக்கியமான காரணம் . வெறும் அக்கப்போர்த் தளத்தில் வைத்தே மார்க்ஸியர் அவரது கருத்துக்களை எதிர்கொண்டிருக்கிறார்கள் . கைலாசபதியிடமிருந்து அதை விட முதிர்ச்சியான எதையும் எதிர்பார்ப்பதற்கான ஆதாரம் எதையும் அவர் உருவாக்கவுமில்லை . மார்க்ஸியரல்லாத எழுத்தாளர்களும் தளையசிங்கத்தை எதிர்கொண்ட விதமும் அப்படியே . தமிழ் நாட்டில் வெங்கட் சாமிநாதன் , சுந்தர ர ‘மசாமி ஆகியோர் தளைய சிங்கத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்தபோதிலும் கூட அவர்களுக்கிடையே ஆக்கபூர்வமான விவாதம் ஏதும் நடந்தது இல்லை. வெங்கட் சாமிநாதநுக்கும் தளையசிங்கத்துக்கும் தொடர்பு இருந்தபோதிலும்கூட அவர் தளையசிங்கம் பற்றி முக்கியமாக எதுவும் எழுதவில்லை .சுந்தர ராமசாமி மிகவும் பிந்தி குறிப்பிடத்தக்க கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார் . தளைய சிங்கத்தை தமிழ்ச் சூழல் பொருட் படுத்தியமைக்கான ஒரே ஆதாரம் அக்கட்டுரைதான் .

இவை வெளித்தடைகள் .தளைய சிங்கம் போன்ற தீராத ஆற்றல் உடைய மனிதர் இத்தடைகளை தாண்டக் கூடியவர்தான். இவற்றை விட பெரிய பிரச்சினை அவர் எதிர்கொண்ட அகத்தடை . அது தத்துவார்த்தமானது . தன் சிந்தனைகளை நிறுவுவதற்கான தத்துவார்த்தப் பின்னணியை அடையாளம் காண்பதில் ஏற்பட்ட சிக்கல் என அதைக் கூறலாம் .தளைய சிங்கம் இந்நூற்றாண்டின் எல்லா சிந்தனையாளர்களையும் போல முதலில் மேற்கத்தியக் கல்வியையே பெற்றிருக்கிறார் . அக்கல்விக்கு அடிப்படையாக அமைந்த மேற்கத்திய தத்துவமரபின் வழியாகவே அவரது சிந்தனைகள் உருவாகியுள்ளன. மேற்கத்திய மார்க்ஸிய சிந்தனை மற்றும் சுதந்திர சிந்தனையாளர்கள் அவரைப் பாதித்துள்ளனர் . என் வாசிப்பில் எமர்சன் , தோரோ போன்ற சிந்தனையாளர்கள் மற்றும் எஃப் ஆர் லூயிஸ் முதலிய இலக்கிய விமரிசகர்கள் . அவரது ஆரம்பகட்டச் சிந்தனைகள் அந்தப் பாணியிலேயே அமைந்தன. உதாரணமாக ‘ ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி ‘ யானது எலியட் , எஸ்ரா பவுண்ட் முதலிய நவீனத்துவகால இலக்கிய விமரிசகர்களின் பாணியில் அமைந்துள்ளது. தமிழ் நவீன இலக்கியம் நவீனத்துவத்தால் உருவாக்கப்பட்டது என்பதனால்தான் அக்கட்டுரைநூல் அந்த அளவுக்கு பரபரப்பையும் ஆர்வத்தையும் இங்கு உருவாக்கியது . இலக்கியப்படைப்பு என்பது அதை உருவாக்கிய படைப்பாளியில் ஆளுமையின் வெளிப்பாடுதான் , அவ்வாளுமைவழியாகவே அவன் வாழும் சூழல் அவனை ஊடகமாக்கிக் கொண்டு வெளிப்படுகிறது என்பதிலெல்லாம் தளைய சிங்கத்துக்கு அழுத்தமான நம்பிக்கை இருப்பதாக அதை வாசித்தால் உணர முடிகிறது .

ஆனால் அவரது சிந்தனையின் வளர்ச்சிப்போக்கில் அவர் இந்திய சிந்தனைமரபின் நீட்சியாகவே தன்னை அடையாளம் காண்கிறார் [ இங்கு இந்தியாவை ஒரு அரசியல் அமைப்பாக அன்றி கலாச்சார அமைப்பாகவே கருதவேண்டும் ] அவரது அறிதல் முறையில் நம் மரபான ஆய்வு உருவகங்கள் நேரடியாகவே செல்வாக்கு செலுத்துவதை பார்க்கிறோம் .உதாரணமாக மெய்யுளில் அவர் நம் மரபு எப்படி யுகப்பிரிவினைகளை செய்தது அதை எப்படி இன்றைய காலகட்டத்தை பிரித்து வகுத்துக் கொள்ள பயன்படுத்தலாம் என்று கூறும் இடத்தை உதாரணம் காட்டலாம் . மேற்கு xஇந்தியா என்ற இந்த இரு மரபுகளின் இணைப்பில்தான் பிரச்சினைகள் உள்ளன . அவற்றை என் பார்வையில் அரவிந்தரோ விவேகானந்தரோ தீர்த்துவைக்கவுமில்லை . அப்பிரச்சினைகளை தளையசிங்கமும் எதிர்கொள்ளவில்லை . ஆகவே அவரது சிந்தனை ஆழம ‘ன பல முரண்பாடுகளை எதிர் கொண்டு தேங்கிவிட நேரிட்டது .

மேற்கத்திய சிந்தனை அதன் ஆரம்பகட்டம் முதலே புறவயத்தன்மை [Objectivity ] என்ற இலக்கை நோக்கி நகர்வதைக் காணாலாம். இன்றும் மேற்கத்திய சிந்தனையின் அடிப்படியாக உள்ள புறவய அறிதல்முறைகள் பெரும்பாலானவை அரிஸ்டாடில் காலத்திலேயே உருவாகிவிட்டன . அகவய சிந்தனைகள் அந்த அடிப்படைகளுக்கு மாற்றாகவே அங்கு உருவாக்கப்பட்டன. ஆகவே நாம் காண்பது மிகத் துல்லியமான ஓர் அறிவியங்கியல் படிப்படியாக அங்கு உருவாகி வருவதைத்தான் . முற்றிலும் அகவயமான அணுகுமுறைகொண்ட எமர்சன் போன்றவர்கள் கூட கறாரான புறவயத் தருக்கத்துடன் பேசுவது எனக்கு ஆரம்ப காலத்தில் அளித்த வியப்பு சாதாரணமல்ல. நேர்மாறாக நம் மரபு ஆரம்பம் முதலே அகவய அறிதல் முறைகளையே அதிக அழுத்தம் தந்து பேசியிருக்கிறது . புறவயசிந்தனை கொண்ட மரபுகளாலான சாங்கியம் வைசேஷ ‘ ‘கம் முதலியவை கூட தருக்கப்போக்கில் அகவய அறிதல்முறைநோக்கிச் செல்வதையே நமது சிந்தனை வரலாற்றில் காண்கிறோம். இது ஏன் என்ற வினாவுக்குள் இங்கு புகவிரும்பவில்லை . ஆனால் நமது மரபார்ந்த தத்துவ உபகரணங்களை நாம் இன்றைய பிரச்சினைகளை விளக்குவதற்குப் பயன்படுத்த இந்த விஷயம் பெரும் தடையாக உள்ளது என்பது ஓர் அனுபவ உணமை .

தளைய சிங்கம் மெய்ய்ளில் இவற்றை பயன்படுத்துவது பற்றியே பார்ப்போம் .

………… ‘ ‘ பரிணாம த்தில் அன்னமய கோசமும் பிராணமய கோசமும் வெளிப்படுத்தப்பட்ட காலங்கள் விஞ்ஞான ரீதியாக சொல்லப்போனால் உலக பரிணாமத்தின் அன்னமய கோசத்தை geosphere என்றும் [சட நிலையும் அதன் வலயமும் ] பிராணமய கோசத்தை [உயிர்நிலையும் அதன் வலயமும்]biosphre என்றும் சொல்லலாம். இன்று அவற்றுக்குரிய குணங்களாக முக்குணங்களில் தாமத குணங்களையும் [அன்னமயகோசம்] ரஜத குணத்தையும் [ பிரணமய கோசம் ] குறிப்பிடலாம். மனிதனிலும் இயற்கை செயல்பாட்டிலும் இவ்வலயங்கள் மட்டுமல்ல அவற்றுக்குரிய குணங்களும் இருக்கின்றன ….. ‘ ‘ [மெய்யுள் ]

………பரிணாமவளர்ச்சி பற்றிய மேற்கத்திய சித்தாந்தங்கள் எல்லாமே புறவயமான நிரூபணவாதக் கருத்துக்களின் மூலம் முன்வைக்கப்பட்டவை என நாம் அறிவோம். ஆனால் அன்னமய கோசம் பிராணமய கோசம் போன்ற கருத்துக்கள் அப்படி நம் மரபில் புறவயமாக வரையறை செய்யப்பட்டவையல்ல . உதாரணமாக அன்னமய கோசத்துக்கும் பிராணமய கோசத்துக்கும் இடையேயான வித்தியாசம் என்ன என்று நம் மரபு எங்காவது வரையறை செய்து சொல்லியிருக்கிறதா ? யோகம் மூலம் தன்னை அறியும் ஒருவன் அவற்றை அறிய முடியும் ,அவற்றை பற்றிய ஒரு சித்தரிப்பை நியாய மரபின் வழிமுறைகளை உபயோகப்படுத்தி அவன் அளிக்கவும் முடியும் . அவ்வளவுதான் . இந்நிலையில் தளைய சிங்கம் பரிணாம வாதத்தின் அடுத்த கட்டத்தை , மாமனிதன் அல்லது பேர்மனதை நோக்கி வாதகதிகளை இட்டுச் செல்லும்போது பிழையான ஒரு தாவலை நிகழ்த்துவதாக நமக்கு படுகிறது .புறவயமாக நகர்ந்த தருக்கம் மொழியின் சகஜமான நகர்வை பயன்படுத்திக் கொண்டு அகவய எல்லைக்குள் தாவி விடுகிறது இங்கு .

இந்திய சிந்தனை முறைக்கு தொடர்ச்சியான வளர்ச்சி இல்லை . அதன் முக்கியப் போக்கு அகவயமானது , சாராம்சப் பார்வை கொண்டது , பொதுவாக அது ஆன்மீகம் என்று குறிக்கப்படுவது . இந்திய சிந்தனையில் பெரும் எழுச்சிகள் நடைபெற்ற காலத்தில் அப்போக்குக்கும் அதன் மறுஇணையான உலகியல்கொள்கைகளுக்கும் இடையே அதி தீவிரமான விவாதங்கள் நடைபெற்றுள்ளன. வேதங்களின் காலத்தில் அகவயப்பார்வை வெறும் நம்பிக்கை மட்டுமே . வேதாந்தங்களின் [உபநிடதங்களின் ] காலத்தில் அது வலுவான தருக்க முறைகளை அடைந்துவிட்டிருந்தது , அதற்குக் காரணம் உலகாயதர்களுடன் அது மேற்கொண்ட விரிவான விவாதமே என்று காணலாம் . அதைப்போலவே அடுத்தகட்ட லோகயத சிந்தனை போக்குகளான சாங்கிய ,யோக, நியாய, வைசாஷிக மரபுகள் வேதாந்தத்துடன் விவாதித்து தங்களை வலுப்படுத்திக் கொண்டவை . அவற்றின் நீட்சியான பெளத்தமும் வேதாந்த மரபுடன் விவாதித்தே வளர்ந்தது . பெளத்த மெய்யியலை மறுத்து விவாதித்துத்தான் பிற்கால வேதாந்தங்களான அத்வைதம் போன்றவை தங்களை விரிவாக்கம் செய்தன. சங்கரரின் நூல்களிலெல்லாம் பரபக்கமாக லோகாயத சிந்தனைகள் வலுவாக வீற்றிருப்பதைக் காணலாம் . அதன் பிறகு இந்திய சிந்தனைமரபில் பெரும்தேக்கம் . பிற்பாடு நாம் காண்பவை பயணங்களல்ல , மரபை காலத்துக்கேற்ப மறுவிளக்கம் தரும் முயற்சிகள் மட்டுமே. .இக்காலகட்டத்தையே பொதுவாக உரைகளின் [பாஷ்யம்] காலம் என்றால் மிகையல்ல . இருபது நூற்றாண்டுக்கும் மேலாக இந்திய சிந்தனையில் ஆன்மிகப்போக்குகளுக்கு வலுவான பரபக்கமாக விளங்கிய லெளகீகவாத தரிசனங்கள் மறைந்தந்ன . ஆகவே நான்கு நூற்றாண்டுக் காலம் இந்திய சிந்தனை உறைந்து கிடந்தது .

பிறகு மேற்கத்திய கல்வி , நவீன அறிவியல் ஆகியவற்றின் மூலம் நவீன மேற்கின் உலகியல் சார்ந்த புறவயமான சிந்தனைமுறைகள் இங்கு வர ஆரம்பித்த பிறகுதான் இந்திய சிந்தனை மரபில் மெல்லிய சலனங்கள் ஏற்பட ஆரம்பித்தன என்று காணலாம் . மரபை ‘மீட்பது ‘ குறித்து இந்திய மறுமலர்ச்சிக்கால சிந்தனையாளர்கள் , சுவாமி தயானந்த சரஸ்வதி முதல் விவேகானந்தர் வரை , பேசும்பொதெல்லாம் காலத்துக்கு ஏற்ப மறுஆக்கம் செய்வது என்ற தொனியே இருப்பதை இன்று காணமுடிகிறது .அவர்கள் அனைவருமே மேற்கத்திய மரபுடன் இந்திய மரபை உரையாட வைப்பதிலும் ஆர்வம் காட்டினார்கள் . புகழ்பெற்ற உதாரணம் விவேகானந்தர் . மேற்கத்திய அறிவியங்கியலின் [ epistemology] முறைகளைப் பயன்படுத்தி இந்தியமெய்யியல் கோட்பாடுக்ள் சிலவற்றை முன்வைத்தவர் அவர் . அதன் பொருட்டு அவர் இந்திய மெய்யியலை வளைத்து அமுக்கிச் சுருக்கினார் என நடராஜ குரு போன்றவர்கள் பிற்பாடு குறிப்பிட்டிருக்கிறார்கள் . மேற்கத்திய அறிவியங்கியலை அப்படியே பிரதிசெய்து டாக்டர் ராதாகிருஷ்ணன் போன்றவர்கள் இந்திய சிந்தனையை கிட்டத்தட்ட மாற்றி எழுதினார்கள் . இந்திய மெய்யியல் மரபை மேற்கத்திய தத்துவ அலகுகளின் அடிப்படியில் ராதாகிருஷ்ணன் பிரித்தார் என்று கூறலாம் .

கார்பே , ஷெர்பாட்ஸ்கி , போன்ற இந்தியவியலாளர்கள் மேற்கத்திய அடிப்படைகளின்படி இந்திய மெய்யியலும் குறியியலும் தொகுக்கப்பட பெரும்பங்காற்றியுள்ளனர் . அன்னி பெசண்ட் , ஆர்தர் ஆவலோன் போன்ற இந்திய மெய்யியலின் மேற்கத்திய வழிபாட்டாளர்கள் வேறு ஒரு வகையில் இந்திய மெய்யியலை திரித்து மேற்கத்திய சிந்தனைசட்டகத்துக்குள் கொண்டு சென்றார்கள் .உதாரணமாக மேடம் ப்ளவாட்ஸ்கி இந்திய மெய்யியல்மரபை தன் கற்பனைப்படியெல்லாம் கொண்டு சென்று இறுதியில் மேற்கே பலகாலங்களாக கற்பனை செய்யப்படும் ஒரு மாய உலகைச் சேர்ந்ததாக அதை ஆக்கிவிட்டார் . அதற்கு பூமியுடன் உள்ள எல்லா தொடர்புகளையும் துண்டித்துவிட்டார் என்று சொல்லவேண்டும் . அதை மூடநம்பிக்கை என்றெல்லாம் விளக்க முயல்வதில் எனக்கு மாறுபாடான கருத்து உண்டு.அது ஒரு கூறுமுறை [narration ] தன் ஆழ்த்தள அறிதல்களை ஒரு குறிப்பிட்ட வகையான படிம/ உருவக முறைப்படி முன்வைக்கமுயல்வது .அது அவரை பொறுத்தவரை ஒருவகையான யதார்த்தமாகக்கூட இருக்கலாம் . அவரது வளர்ப்புப்பின்னணி அதற்கு பங்களிப்பாற்றியது என்று கருதலாம் .

ஆக ஒட்டுமொத்தமாக நமக்கு கிடைக்கும் இந்திய மெய்யியல் காலத்தால் மிகவும் பின்தங்கியது , நவீன அறிவுத்தேடலுக்கு நேரடியாகப் பயன்படுத்த முடியாதது. இந்தியவியலாளர்கள், பண்பாட்டு மீட்பாளர்கள் ஆகியோரால் இருவேறுகோணங்களில் மறுஆக்கம் செய்யப்பட்டது. அதை இருவகையில் நாம் அணுகுகிறோம் . ராதாகிருஷ்ணன் போன்ற மேற்கத்திய அறிவியங்கியல் விதிக்ளை அடிப்படையாகக் கொண்டு அணுகுபவர்களை வாசிக்கும்போது நமக்கு கிடைப்பது ஒரு உயிருள்ள சிந்தனைமுறை அல்ல. கடந்தகால சிந்தனை அமைப்பு ஒன்றின் வரலாற்றுத் தகவல்கள் மட்டுமே. மறுபக்கம் சென்று மாடம் பிளவாட்ஸ்கி போன்றவர்களின் மூலம் நுழையும்போது நாம் அறிவியங்கியலுக்கே தொடர்பற்ற ஒரு படிம உருவக வெளியை அடைகிறோம் .இப்போது இவ்விரண்டில் ஒன்றே சாத்தியம் என்பதே உண்மை.

என்னைப் பொறுத்தவரை இரண்டாவது முறையே பிழையானவற்றில் மேலானது .முதல்பார்வை நம்மை நம் மரபு குறித்த மிகத்தவறான ,எளிதில் சரிசெய்துவிட முடியாத ஒரு போலி அறிவுத்தளத்துக்கு இட்டுச் செல்கிறது . மிகதவறாக சிந்திப்போம் ,ஆனால் அத்தவறு மேற்கத்திய நவீன அறிவியங்கியலின்படி செய்யப்படுவதனால் அது மிக கறாரான புறவய தன்மை கொண்டது என கற்பனை செய்தும் கொள்வோம். மிகச்சிறந்த உதாரணமாக இங்கு குறிப்பிடப்பட வேண்டியது நம் போலி அறிவுஜீவிகளில் சிலர் நமது தியான மரபை ஃப்ராய்டிய முறைப்படி புரிந்துகொண்டு விளக்க மூற்பட்டமைதான் . தாந்த்ரீக மரபை நவீன குறியியல்படி விளக்க முற்பட்டிருக்கும் சிலரும் இங்கு உண்டு .முற்றிலும் வேறான ஒருதளத்தின் ஆயுதங்கள் இங்கு பயன் படுத்தப்படுகின்றன என்பது ஒருபக்கம் .மறுபக்கம் அவ்வாயுதங்கள் எல்லாமே மிக எளியவை வளர்ச்சியடையாதவை என்பது . தன் சொந்த அம்மாவை மானுடவியலின் உதவிகொண்டு புரிந்துகொள்ள முயலும் அன்னய்யாக்கள் இங்கு சாதாரணம்*

த ளையசிங்கம் இவற்றில் இரண்டாவது அணுகுமுறையின் அருகே நிற்கிறார் . அதற்குக் காரணம் பாண்டிச்சேரி ஸ்ரீஅன்னை .அன்னையின் அணுகுமுறை பிளவாட்ஸ்கியின் நோக்குக்கு மிக அருகே நெருங்கி வருவதாகும் . அதற்கு அன்னையின் மேற்கத்திய வளர்ப்புப் பின்னணியும் காரணமாகலாம் .இந்த அணுகுமுறையின் முக்கியமான சிக்கல் இது சற்றும் புறவயமானது அல்ல என்பதும் நவீன அறிவியல் கோட்பாடுகளையோ பிற நவீன சித்தாந்தங்களையோ தருக்கபூர்வமாக சந்தித்து விவாதிக்க முடியாத ஒன்று என்பதும்தான். ஒரு நவீனவாசகன் சிலசமயம் ஒருவகை சங்கடத்தையும் ஒட்டுமொத்தமான அவநம்பிக்கையையும்கூட அடையக்கூடும். உதாரணமாக தளையசிங்கம் ராமகிருஷ்ண பரமஹம்சரின் மாணவரான சசியின் அடுத்த பிறப்பே என்று அன்னை சொன்னதை மு. பொன்னம்பலம் தளையசிங்கத்தின் நூலின் முகப்பில் எடுத்து தந்திருப்பதைக் கூறலாம் . ஆனால் இதன் முக்கியமான சாதக அம்சம் ,என்னதான் இருந்தாலும் படிம உருவகங்கள் ஆழ்மனம் சார்ந்தவை , அவை அறிவுத்தள சிக்கல்களால் நேரடியாக திரிபு அடைவது இல்லை என்பதே . அவற்றை சிறப்பாக கலை இலக்கியத்தில் பயன் படுத்தலாம் . ஆழ்மன தரிசனப்பயணங்களுக்கு அவை மிகவும் உபயோகமானவையே. ஆனால் அவற்றுக்கு புறவய இயக்கம் இல்லையென்பதால் தத்துவ சித்தாந்த விவாதத்தில் அவை பயன்படுத்தப்படும்போது விவாதம் அகவயமாகச் சுருங்கி இறுதியில் வெற்றுக்கனவாக அடையாளப்படுத்தப்படும் நிலை ஏற்படுகிறது . இதுவே தளைய சிங்கத்துக்கு நேர்ந்தது .

இங்கு சம்பந்தமில்லையென்றாலும் ஒன்றை சொல்லவேண்டியுள்ளது. இந்தியமரபின் கருத்தியல் உபகரணங்களை நவீன காலகட்டத்துக்கு ஏற்ப பயன்படுத்துவதில் வழிகாட்டியான முயற்சிகளை நடராஜ குருவும் நித்ய சைதன்ய யதியும் ஆற்றியுள்ளனர் . அவர்கள் அளவுக்கே இத்தளத்தில் அகேகாநந்த பாரதியின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்கது . முந்தைய இருவரும் இந்திய தத்துவ ஞானியர்களிலேயே அதிகமான அளவுக்கு முறையான மேற்கத்திய தத்துவக் கல்வி உடையவர்கள் .அமெரிக்கரான அகேகானந்தபாரதி இங்கு வந்து கற்றவர் . மேற்கத்திய அறிவுத்துறைகள் மற்றும் அறிவியங்கியலுடன் இந்திய மரபின் அறிவியக்கத்தையும் உபகரணங்களையும் ஒப்பிடுவது இவர்களின் வழிமுறை. ஆனால் இருமரபுகளையும் கலக்கவோ ஒன்றுக்கொன்று ஏற்ப மாற்றவோமுயல்வதில்லை. தனித்தன்மைகளை மட்டும் அடையாளம் காண்கிறார்கள் ,சவால்களை வகுத்துக் கொள்கிறார்கள். பிறகு இந்தியமரபின் இயல்புக்கு ஏற்ப அதன் கருத்துக்களை அதற்கு சமானமான மேற்கத்திய அறிவுத்தளத்துடன் ஒப்பிட்டு வளர்த்தெடுக்கிறார்கள் . ஆயினும் இது பல தளங்களில் கூட்டாக பலர் உருவாக்கியெடுக்கவேண்டிய ஒரு வளர்ச்சி . அதன் பின்னரே இவ்வுபகரணக்களை நவீன தளத்துக்கு பயன்படுத்துவது சாத்தியமாகக் கூடும் .

வெற்றுகனவா மெய்யியல் ஊகமா ?

மெய்யுளின் பல பகுதிகள் மீமெய்யியல் [metaphysics ] ஊகங்களாகவே நின்று விடுவதாக படுகிறது . ஆகவே சாதாரண தத்துவ விவாதத்தில் அவற்றின் மதிப்பு குறைந்து விடுகிறது.அடிப்படை விவாதத்தில் மட்டுமே அவற்றை கருத்தில் கொள்ள் முடிகிறது .ஆனால் சுந்தர ராமசாமி கூறுவதுபோல அவை உட்டோப்பியக் கற்பனைகள் அல்ல. உட்டோப்பியக் கற்பனை உலகியல் சார்ந்தது , கற்பனாவாதப்பண்பு இருப்பினும் கூட அதற்குரிய தருக்கமும்உலகியல்சார்ந்ததே. மீமெய்யியல் ஊகங்கள் அகவயமானவை , அவற்றின் தருக்கங்கள்கூட உருவகங்களினால் ஆனவையாகவே பொதுவாக காணப்படுகின்றன. அவை ஒரு மெய்மையின் அகமனப் படிமநிலைகள் . தரிசனிகர்களான சிந்தனையளர்களிடம் அந்த அம்சம் பெரும்பாலும் காணப்படுகிறது.மீமெய்யியல் ஊகத்தின் தளம் என்பது நமது அடிப்படைப்புரிதல்களை கொண்டுசென்று பொருத்திப்ப ‘ர்த்து புரிந்துகொள்ள வேண்டிய , அல்லது விரிவாக்கம் செய்துகொள்ளவேண்டிய ஒரு உதாரணப் பிராந்தியம் மட்டுமே . எதிர்கால ‘ மீ மனிதன் ‘நீட்சேயின் ஒரு மீமெய்யியல் உருவகம் மட்டுமே, உட்டோபிய கற்பனை அல்ல.

உட்டோப்பியக் கற்பனைகள் கூட தத்துவ விவாதத்தில் படிப்படியாக மீமெய்யியல்படிமமாக மாறிவிடக்கூடுமென்பதற்கு முதல்பெரும் உதாரணம் பிளேட்டோவின் குடியரசு தான் .அது நேரடியான புறவய தருக்கத்துடன் முன்வைக்கப்பட்ட ஓர் உலகியல் கனவு. ஆனால் பிற்பாடு அது மீமெய்யியல் ஊகமாக மாறி , அரசு சமூகஅமைப்பு ஆகியவை குறித்த நமது ஊகங்களை முழுக்க பரிசோதித்துக் கொள்ளும் களமாக ஆகி தத்துவ சிந்தனையில் கடந்த இருபத்தைந்து நூற்றாண்டாக இடம்பிடித்து வருகிறது. அதேபோல ஹெகலின் இலட்சிய சமூக அமைப்பு என்ற தத்துவார்த்த உருவகம் –மீமெய்யியல் ஊகங்களின் அருகே நிற்பது — மார்க்ஸில் ஒரு உட்டோப்பிய கனவாக மாறியதையும் நாம் காணலாம் .

தளையசிங்கம் உட்டோபிய கனவை முன்வைப்பவரல்ல .ஆகவே சுந்தர ராமசாமி எதிர்பார்ப்பதுபோல புறவயமான தருக்கம் , அங்கு போய்சேர்வதற்கான வரைபடம் , அவரிடம் இருக்க நியாயமில்லை . அவரளவுக்கு அது ஒரு யதார்த்தமானாலும் தளைய சிங்கத்தின் ‘புது யுகம் ‘ ஒரு மீமெய்யியல் ஊகமாகவே உள்ளது . அதன் மதிப்பு அந்நிலையில் அவரது கருத்தியல் ஆய்வுகள் ஓர் ஊச நிலையை அடைந்து அடிப்படை விவாதங்களை நோக்கி நகர்கின்றன என்பதே. ஹென்றி பெர்க்சன், அரவிந்தர் , நடராஜ குரு , ஜெ கிருஷ்ணமூர்த்தி என பெரும்பாலான அடிப்படை சிந்தனையாளர்களிடம் இப்படி ஒரு உச்சநிலை குறித்த உருவகம் இருப்பதைக் காணலாம் . அதன் பயன் இதுவேயாகும்.

இத்தகைய பிழைகள் தளையசிங்கத்தின் ஒட்டுமொத்த அணுகுமுறையையும் ஓர் இடத்தில் உறைந்து நிற்கச்செய்துவிடுகின்றன .தன் அகத்தரிசனங்களை அவர் இந்தியமரபை சார்ந்த உபகரணங்கள் மூலமே அடைகிறார் , முன்வைக்கிறார் .அவற்றை மேற்கத்திய மரபின் ஆய்வு முறைகள் மற்றும் ஆய்வுபகரணங்களுடன் சாதாரணமாக இணைத்து விடுகிறார். கிருதயுகம் ஆன்மீக விடுதலை , உபரி குவிக்கப்படாத சமூகம் , ஆழ்மனத்துடன் மோதாத மன இயக்கம் எல்லாம் எந்த இடத்தில் ஒன்றாக மாறுகின்றன என நிதானிக்க முடியவில்லை . இந்தப்போக்கில் ஒரு புள்ளியில் தளைய சிங்கம் பிறரால் பின் தொடர முடியாதபடி மிக அந்தரங்கமாக பேச ஆரம்பித்துவிடுவதாக நமக்கு தோன்றிவிடுகிறது . தத்துவ அறிஞராக தளையசிங்கத்தின் தோல்வி இங்குதான் நிகழ்கிறது .ஆனால் உண்மையில் அதுகூட தளைய சிங்கத்தின் உபகரணங்கள் அளிக்கும் மாயத்தோற்றம் மட்டுமே . அவை மிக எளிதில் முக்கியமான அழகியல்க் கோட்பாடுகளாகவோ தத்துவ தரிசனங்களாகவோ மாற்றப் படச்சாத்தியமான ஒருவகை அகவய தரிசனக்களேயாகும் . . தளைய சிங்கம் தன் சிந்தனையின் பயணத்தில் வரலாறு உருவாக்கி வைத்திருந்த ஒரு அகழியில் அகப்பட்டுக் கொண்டதன் மூலம் பயணம் தடைபட்ட ஒரு மேதை .

தரிசனத்தின் உளவியல் சிக்கல்கள்

சிந்தனை தரிசனமாவது எப்போது ? அது ஒருவிதத்தில் முழுமையைத் தொட்டுவிடமுனையும் போது என்று சொல்லலாம் . வாழ்க்கையின் எல்லா தளங்களையும் தழுவி விரியும் கருத்தே தரிசனம் என்பது . தருக்கம் வழியாக அப்படி ஒரு மனம் நகர வாய்ப்பே இல்லை . மானுட அனுபவம் , அறிவு அனைத்துக்கும் திட்டவட்டமான எல்லைகள் உண்டு .தன் காலத்தை ,தான் வாழும் சூழலை தாண்டி சிந்திப்பது சாத்தியமில்லை என்றே சொல்லவேண்டும் .ஆனால் எல்லா காலகட்டத்திலும் கால இடத்துக்கு அப்பால் நகரக்கூடிய தரிசனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. சொல்லப்போனால் சிந்தனைகள் செயல்படும் பொதுசட்டகங்களை அல்லது வரைபடங்களை அவையே உருவாக்குகின்றன . ஆகவே தரிசங்கள் என்பவை சிந்தனைத்தளத்தில் வெளிப்படும் உள்ளுணர்வுகளே என்று படுகிறது . படைப்பூக்க நிலைபோலவே தரிசன நிலையும் ஒரு அதீதமனநிலை. ஆழ்மனம் தன்னை வெளிப்படுத்தும் தருணம் .

சிந்தனை படைப்புநிலை என்ற இரு இயக்கங்களுக்கும் பொதுவாக முக்கியமான அம்சம் ஒன்றை அடையாளம் காணலாம். படைப்பூக்கநிலை ஒரு வகை பிளவுண்ட ஆளுமையின்[ schizophrenic ] விளைவு என அடையாளப்படுத்தப்பட்டுள்ளது . [குறிப்பாக பின் நவீனத்துவ விமரிசகர்கள் இதுகுறித்து அதிகமாக பேசியுள்ளனர் .தமிழில் இக்கருத்தாக்கத்தின் பலதளங்களைமுன்வைத்து பிரேம் ரமேஷ் எழுதியுள்ளனர் ] தருக்கபூர்வமான் புறவய உலகின் நியதிகளுக்கு கட்டுப்பட்ட ஓர் ஆளுமையை மீறி அப்பால் உள்ள பிறிதொரு ஆளுமை கிளம்பி வருதல் பெரும்பாலான படைப்பூக்க நிலைகளில் சாத்தியமாகியுள்ளது . அதையே படைப்பாக்கத்தின் பரவச நிலை என்றோ ஆழம் என்றோ பித்து என்றோ வேறு சொற்களிலோ காலாகாலமாக சொல்லிவருகிறார்கள். சன்னதம் கொள்ளும் சாமியாடியின் அதே மனநிலை . இது கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டுள்ள , அளந்து எடுத்து பயன்படுத்தப்படுகிற ஒரு மனப்பிளவுநிலை என்று கூறலாம் .மனப்பிறழ்வு என அதை சொல்ல முடியாது .

இன்றைய உளவியல் படைப்பூக்கம் கொண்ட அதீத மனநிலைகளுக்கும் மனப்பிறழ்வுக்கும் இடையேயான நுண்மையான வேறுபாட்டினை உணர்ந்துள்ளது . படைப்பியக்கம் குறித்து 1970களில் மலையாளச்சிந்தனையாளரான பி .கெ .பாலகிருஷ்ணன் * எழுதிய நூலில் மனப்பிறழ்வு நிலைக்கும் படைப்பூக்கத்துக்கும் குறித்து விரிவாக பேசியுள்ளார் .படைப்பாளியில் செயல்படும் இந்த ‘மற்ற ஆளுமை ‘யை அழகாக படைப்பாளிகளே சித்தரித்துமுள்ளனர். போர்ஹெயின் மற்றவன் என்ற கதை தமிழிலும் புகழ்பெற்றது . ஹெர்மன் ஹெஸ்ஸின் சுயகதையில் அவரது சிறுவயது முதல் இன்னொரு சிறுவன் கூட இருக்கிறான் அவன் என்ன செய்தாலும் அதை அப்படியே திருப்பிச் செய்வதுதான் குட்டி ஹெஸ்ஸியின் வெலை .அவனுக்கு எல்லாம் தெரியும் .அவனுக்கு என்ன தெரியுமென்பது மட்டும் ஹெஸ்ஸிக்கு தெரியாது . ஷேக்ஸ்பியரின் இறுதி நாடகமான ‘ புயல் ‘ குறியீட்டு ரீதியாக ஒரு சுயகதை என சொல்லப்பட்டுள்ளது .மந்திரத்தால் பிராஸ்பரோ கட்டிவைத்துள்ள ஏரியல் என்ற சுட்டித்தனமான ஆவி ஷேக்ஸ்பியர் என்ற பிராஸ்பரோவின் மற்றவன் தான் . தடைகளற்றவன் ,மனிதர்கள் மேல் பிரியம் கொண்டவன், அவர்களுடைய அற்பத்தனக்களையும் பேராசையையும் மூர்க்கத்தையும் கண்டு உள்ளூர அரண்டுபோனவன் ,மனிதர்களால் ஒருபோதும் நெருங்கமுடியாதவன்.

மனப்பிளவு நிலை என்பது கலாச்சாரத்தால் கட்டமைக்கப்படுவது என்று இன்று அனைவருமே ஏற்கிறார்கள் .கலாச்சாரம் அளிக்கும் அழுத்தத்தை தாங்க முடியாத மனித மனம் தன்னை இரண்டாகப் பகுத்துக் கொண்டு தன் புழங்கிடத்தை அதிகரித்துக் கொண்டு அதை எதிர் கொள்கிறது .இப்பகுப்புகளுக்கிடையேயான ஒத்திசைவு முற்றிலும் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டதாக ஆகும்போது அது சிதறுண்ட நிலைக்கு செல்கிறது. 1986 முதல் இரண்டரை வருடக்காலம் எனக்கு இப்பிரச்சினை இருந்தது . உச்ச கட்டத்தில் மூன்று மாதம் சிகிழ்ச்சை எடுத்துக் கொண்டதைத் தவிர்த்துப் பார்த்தால் நான் வேலைக்குச் சென்றபடியும் சமூகக்கடமைகளை ஆற்றியபடியும்தான் [பல குளறுபடிகள் இருந்தன என்பது உண்மைதான். பிறர் சிறு பிரச்சினை உள்ளவனைக்கூட பைத்தியம் என அழைப்பதை மிகவும் விரும்புகிறார்கள் ] இருந்தேன். எனது ஒரு பகுதி பூமியின் கட்டுப்ப ‘டுகளுக்குள் செயல்பட்ட போது விடுபட்ட் மற்ற பகுதி தடையற்ற வெளியில் உலாவியது .இரண்டும் ஒன்றை ஒன்று வேவு பார்த்துக் கொண்டிருந்தன . என் படைப்பியக்கத்தின் மிக உக்கிரமான பகுதிகளில் எல்லாமே எனது இந்தக் காலகட்ட அனுபவத்தின் நேரடி பாதிப்பு இருக்கிறது என்று படுகிறது .

இவ்வனுபவத்தை வைத்து இப்படிச் சொல்லமுடியும் . தரிசனிகர்களில் செயல்படும் மனப்பிளவானது சமகாலத்தின் தத்துவ தருக்கங்கள் ,மனநிலைகள் ஆகியவற்றில் இருந்து விலகி அப்பால் செல்ல மனம் மேற்கொள்ளும் முயற்சியின் விளைவேயாகும் . தன்னை பிளந்து ஒரு பகுதியை அவர்கள் கால இடத்துக்க்கு அப்பால் வீசிவிடுகிறார்கள் . அந்த விலகல் மூலமே அவர்களுடைய தனித்த பார்வை , தீர்க்க தரிசன அம்சம் சாத்தியமாகிறது . ஆனால் அது அவர்கள் தங்களில் இருந்து விலகிச்சென்று அடைந்தது என்பதனாலேயே சாதாரணமான தர்க்கத்துக்கு அதீதமானதாக உள்ளது .

நாராயணகுருவைப் பற்றிய தன் ஆய்வுநூலில்* பி. கெ. பாலகிருஷ்ணன் தீர்க்கதரிசிகள் மற்றும் தரிசனிகர்களின் மனநிலை குறித்த விவாதத்தில் படைப்பியக்க மனநிலையின் பிளவுண்ட தனமை எப்படி மேலும் பலமடங்கு உக்கிரத்துடன் அவர்களில் வெளிப்படுகிறது என்று தீர்க்கமாக விளக்கியுள்ளார் . தரிசனம் என்பது ஒருபோதும் தருக்கபூர்வமான சாதாரண மனநிலையின் வெளிப்பாடுகளாக இருப்பது இல்லை .தீர்க்கதரிசியின் மற்றவன் அவரை விழுங்குமளவுக்கு பெரிதாக வளர்ந்து விடுகிறன். அவ்விரு ஆளுமைகளுக்கு இடையே ஒரு குறைந்தபட்ச இணைப்பு சாத்தியமல்லாதாகும்போது பலசமயம் அவர்கள் பித்தர்களேயாகிவிடுகிறார்கள் . மற்றவன் பேசுபது கனவு நிலைக்கூற்றாக , தர்க்கத்துக்கடங்காததாக , வகுத்துவிட முடியாத ஒரு கவித்துவத்தால் தன்னை வெளிப்படுத்துவதாக உள்ளது . கிறிஸ்துவோ , முகம்மதோ ‘ நான் ‘ என்று சொல்லும்போது கால இடத்தில் அகப்பட்ட அந்த ஆளுமை அதைச் சொல்லவில்லை . அவனுக்கு அப்பாற்பட்ட தடையற்ற பேராளுமை ஒன்றே அங்கே பேசுகிறது . எளிய முறையில் கவிஞர்களிடமும் அந்த மற்றவனின் குரலை கேட்கலாம். அதைத்தான் இவன் சாதாரண மொழியிலும் தருக்கத்திலும் கொண்டுவர வேண்டியுள்ளது .

முதல்நிலை தரிசனிகர் பலருடைய மொழிகள் அப்படியே நமக்கு கிடைப்பது இல்லை.அவர்களுடைய மாணவர்களால் அவை ஒழுங்குபடுத்தப்பட்டு தொகுக்கப்பட்டுள்ளன. கிறிஸ்து ,புத்தர் போன்றவர்களின் கூற்றுகளாக தொகுக்கப்பட்டுள்ளவை உச்சபட்ச கவித்துவம் ஒரு வலுவான தொகுப்புமுறையால் பிற்பாடு ஒழுங்குபடுத்தப்பட்டிருப்பதையே காட்டுகின்றன. அரவிந்தர் இதைக்குறிக்க அழகிய சொல்லாட்சி ஒன்றை முன்வைக்கிறார் , உச்சக் கவித்துவ அரற்றல் [supreme poetic utterance] ஆகவே தரிசனச்சாயல் கொண்ட எந்த சிந்தனையாளனிலும் ஒழுங்கின்மை ஒரு இயல்பாக இருப்பதைக் காணலாம் . காந்தியின் அரசியலில் அவரது தரப்புகள் தெளிவாக முன்வைக்கப்பட்டிருப்பினும் அவர் அங்கு வந்து சேர்ந்த முறை எப்போதுமே மர்மமானதுதான் .அதை அவர் ‘குரல் ‘ என்கிறார் . அது அந்த பிறனின் குரல்தானே ?

முதன்முதலாக நான் நீட்சேயின் அனைத்து எழுத்துக்களின் தொகுப்பை படிக்க முற்பட்டபோது அவற்றின் சிதறுண்ட தன்மை , சட்டென்று அபத்தத்துக்கு தாவிவிடும் அகத்தரிசனங்கள் ஆகியவற்றால் பெரிதும் குழப்பப்பட்டேன் .நாந்த குழப்பத்திலிருந்து மீளவுமில்லை .

நான் காத்திருந்தேன் வெறுமே

ஆனந்தமாக நன்மைதீமைகளுக்கு அப்பால்

ஒளி பின்பு நிழல் அந்த நாள் மட்டுமே இருந்தது

அந்த ஏரி , அம்மதியம், முடிவின்றி வளர்ந்த காலம்

நண்பனே அப்போது ஒருவர் இருவரானோம்

ஜரதுஷ்ட்ரன் என்னிலிருந்து என் வழியாக வெளிவந்தான் .

நீட்சே [ ஹால்வே யில்]

நீட்சேயின் மனப்பிளவுநிலையைப்பற்றிய அவரது நேரடி வாக்குமூலமாக ஆகும் முக்கியமான கவிதை இது . சமீபத்தில் விட்ஜென்ஸ்டானின் நூலை படிக்கும்போதும் அதே குழப்பம் ஏற்பட்டது .பி.கெ. பாலகிருஷ்ணன் கூற்றுப்படி மிகச்சில தரிசனிகர்களே அந்தக்குழப்பங்கள் இல்லாமல் , இருதளங்க்ளுக்கிடையே சமநிலையை தக்கவைத்தப்டி செயல்படுகிறார்கள் , உதாரணம் சங்கரர் , கார்ல் மார்க்ஸ் .

மு தளையசிங்கத்தின் இறுதிக்காலகட்டத்தில் அவரை பற்றி ஒரு சக அறிஞர் எழுதிய கடிதம் மெய்யுளில் தரப்பட்டுள்ளது . அதில் அவரை மனப்பிளவு நோயால்பீடிக்கப்பட்டவர் என்று அவர் குறிப்பிடுகிறார் . அது சரிதான் என்பதற்கு மெய்யுளே ஒரு சிறந்த சான்றேடு ஆகும். அதன் உன்மத்த நிலை ஒருபுறமிருக்க , நேரடியாகவே அது ஒரு மனப்பிளவு ஆவணம் . நல்லசிவம் ,மு தளையசிங்கம் என இரு ஆளுமைகள் மோதியும் கலந்தும் வெளிப்படுவதை ஆதாரமாக சொல்லலாம். தளைய சிங்கத்தின் விருப்பபடி அவரது தம்பி பொன்னம்பலம் எழுதிய பதிலில் மனப்பிளவு என்ற கருத்து மனத்தின் இயக்கநிலைகள் குறித்து பெரிதாக ஞானமேதுமில்லாத நிலையில் உளவியலாளர் உருவாக்கியது என்கிறார் . அது உண்மை என இன்று மனப்பிளவு முறித்து வரும் ஆய்வுகளை பார்த்தால் உணரலாம் . ‘

‘ பிளவுண்ட மனம் என்பதைவிட நான் கட்டுரையில் கூறிய விதத்தில் இரு மனத்தளங்களின் கலப்பு என்று சிந்தித்துபார்த்தால் அதன் முற்போக்கான வளர்ச்சி மாற்றத்திற்குரிய தன்மையைகாணலாம்.அந்தத்தன்மையை வடிவாகப்பயன்படுத்துவதற்கு அவை பற்றி சீராக தெரிந்த சமய ஞானங்களுக்குரிய யோக முறையை நாடவேண்டுமே ஒழிய திரும்பவும் பொருள்முதல்வாத பெளதிக விஞ்ஞானத்திடம் சரண்புகுவது புத்திசாலித்தனமல்ல ‘ ‘[மெய்யுள் பகுதி கலப்பு வலயம் ]

என்று மிக நுட்பமாக அந்தமனநிலையின் சாத்தியங்களையும் பயன்பாடுகளையும் மு.பொன்னம்பலம் விளக்குகிறார் .

மனப்பிளவை கட்டுப்படுத்தி ,ஆக்கபூர்வமாகப் பயன்படுத்தி ,மனிதர்களின் உளச்சக்தியை இருமடங்காக்க முடியும் என்றுகூட இன்று அறிவியல் ஊகங்கள் முன்வைக்கப்படுகின்றன . மு.பொன்னம்பலம் தொடர்ந்து

‘ ‘ பிளவுபட்ட அல்லது கலப்பு மனநிலையை தாண்ட முடியாத நிரந்தர மனக்குழப்பங்களை காட்டும் பைத்தியங்கள் கூட பரிணாம வளர்ச்சியில் எதிர்பார்க்க வேண்டிய breaks வகையேதான்…. ‘

என்று ஒரு படிமேலே சென்று வலியுறுத்துகிறார் . இக்கடிதம் எழுதப்பட்ட போது அந்த நண்பர் எதிர்பார்த்த மேற்கத்திய உளவியல் சார்ந்த நிரூபணங்களை அளிக்க மு.பொன்னம்பலத்தால் முடிந்திருக்காது .ஆனால் இன்று ஆலிவர் சாக்ஸ்* போன்ற நவீன நரம்பியல் ,உளவியல் அறிஞர்களிடமிருந்து ஏராளமான ஆய்வுண்மைகளை முன்வைக்கமுடியும் .

தரிசனிகர்களில் ஒரு பகுதியினர் தங்களை வெளிப்படுத்த முடியாதவர்கள் , அந்த இறுதி எல்லையை அடைந்து நிறுவிட்டவர்கள் . இன்னொரு சாரார் வெளிப்படுத்தியும் புரிந்துகொள்ளப்படாதவர்கள் . இவ்விரு சாராரும் தங்கள் தரிசனத்தை தங்கள் வாழ்க்கையால் அடிகோடிடும் பொருட்டு சிலுவை ஏறியே ஆகவேண்டுமென்ற நிலைக்கு தள்ளப்பட்டவர்கள் என்று பி. கெ. பாலகிருஷ்ணன் சொல்கிறார் .ஏசுவும் காந்தியும் தங்கள் மரணத்தை நோக்கி தாங்களே நடந்து சென்றனர் ,தங்கள் உயிர்த்தியாகம் மூலம் ,அது உருவாக்கும் மனசாட்சிப் பிரச்சினைகள் மூலம் ,தங்கள் தரிசனத்தை பிறர் பொருட்படுத்தியேதீரவேண்டுமென்ற நிலையை உருவாக்கினார்கள் என்கிறார் .மு தளையசிங்கத்தின் வாழ்க்கையை பார்க்கும்போது அவரும் அதே பாதையில் செல்வது தெரிகிறது .மெய்யுளுக்கு பிறகு அவர் தன் மரணம் மூலம் தனது நேர்மையான தீவிரத்தை அடிக்கோடிட்டு முடித்துக் கொள்வதே சாத்தியமான விஷயமாக இருந்தது .

ஆகவே தளையசிங்கத்தின் மெய்யுள் தரிசன நூல்களுக்கே உரிய அனைத்துச் சிக்கல்களுடனும் உள்ளது. அது படிம மொழியில் பேசமுயல்கிறது .பல படிமங்கள் மரபிலிருந்து வந்தவை ,பல அந்தரங்கமானவை . படைப்பூக்கம் கொண்ட உக்கிரமான மனப்பிளவு நிலையில் அது செயல்படுகிறது . ஆகவே அது அகவெளிப்பாடுகளுக்கும் புறத் தருக்கங்களுக்கும் இடையே ஒரு இணைப்பை உருவாக்க ஓயாது முயன்று பலசமயம் தோல்வியையே அடைந்துள்ளது . ஒரு பிரதி என்ற முறையில் மெய்யுளை அணுகுவது மிகச்சிரமமானது . அது நம் சிந்தனையை சிதறடிக்கலாம். நாம் அதனிடம் கேட்கும் வினாக்களுக்கு அது நேரடியாக பதில் அளிக்காமல் போகலாம் . மெய்யுளை அணுக சிறந்த வழி அதை தனித்தனி துளிகளாக வாசிப்பதே .அதாவது அதை நமது கற்பனை மற்றும் சொந்த தருக்கம் மூலம் தொகுத்துக் கொள்ளலாம் . தளையசிங்கம் அளிக்கும் தொகுப்புமுறையை முற்றிலும் உதாசீனம் செய்துவிடலாம் . அவரது அரைகுறை விளக்கங்கள் , விவாத எல்லையை மீறிய பயணங்கள் ,சில அபத்தமான சுயவிவரணைகள் ஆகியவற்றை நாம் துணிந்து வெட்டித்தள்ளிவிடவேண்டும் . அப்படி வாசித்தால் அற்புதமான அகத்தரிசனம் ஒளிவிடும் துளிகளை அடுத்தடுத்து நாம் கண்டபடியே போகலாம் . நமக்கு வரலாற்று பிரக்ஞையும் , கற்பனை ஆற்றலும் ,சிந்தனைப்பழக்கமும் இருக்குமென்றால் அந்த ஒவ்வொரு துளியும் நமக்கு ஒரு வாசலை திறந்தபடியே போகும் . இந்த அனுபவத்தை அளிக்கும் தமிழ் சிந்தனையாளர் எவருமில்லை

நம்மில் அப்பொறிகள் உருவாக்கும் திறப்புகளை தொகுத்து அதன்மூலம் நாம் தளையசிங்கத்தை புரிந்து கொண்டோமென்றால் மட்டுமே அவரது மனம் அதன் உக்கிரநிலையில் எப்படி இயங்கியதோ அதன் அருகே நம்மால் போக முடியும். அதுவன்றி நாம் அவரது ஒழுங்கின்மையை பிழைகளை முக்கியப்படுத்தினோமெனில் அவரை முற்றாக இழந்துவிடுவோம் . துரதிருஷ்டவசமாக மேற்கோள்கள் மூலம் தெள்ளத்தெளிவாக சொல்லப்பட்ட ஒன்றை மனனம் செய்து உச்சாடனம் செய்வதே சிந்தனை என நம்மிடம் சொன்னபடியே இருப்பவர்களையே நாம் சிந்தனையாளர்களாக பல காலமாக கண்டு வருகிறோம் . அவர்களின் ‘தெளிவுக்கு ‘ பழகி விட்டிருக்றோம் . அவர்கள் தளையசிங்கம் போன்றவர்கள் மீது முன்வைக்கும் விமரிசனங்களுக்கும் பழகிவிட்டிருக்கிறோம். விட்ஜென்ஸ்டான் தமிழில் எழுதினாலும் தளையசிங்கம் எதிர்கொண்ட அதே விமரிசனங்களைதான் பெற்றிருப்பார் . அவர் தெளிவாகவும் தருக்கபூர்வமாகவும் ஏதும் எழுதியது இல்லை . வாதிட முன்வந்ததே இல்லை . அவரது எல்லா எழுத்துக்களும் சிறு சிறு உதிரி கூற்றுகளாக , ஒற்றையான தரிசனத் தெறிப்புகளாக உள்ளன. அவரை அறிய வேண்டுமெனில் அவற்றுக்கு இடையே அவரது மனம் அடைந்த பாய்ச்சல்களை அவ்வரிகளினூடாக சென்று நாம் அடையவேண்டும் . எந்த மூலச்சிந்தனையாளனையும் அறிய அது அவசியம் .தளையசிங்கம் அத்தகைய கவனம் இருந்தால் மட்டுமே அடையக்கூடிய சிந்தனையாளர் .

(தொடரும்)

**

jeyamohanb@rediffmail.com

Series Navigation

ஜெயமோகன்

ஜெயமோகன்