பொங்கட்டும் புதுவாழ்வு

This entry is part of 44 in the series 20110109_Issue

முனைவர் சி.சேதுராமன், இணைப் பேராசிரியர், மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.


““முனைவர் சி.சேதுராமன், இணைப் பேராசிரியர், மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.

E.Mail. sethumalar68 yahoo.com
மண்ணிலுள்ளோர் மகிழ்ச்சியுற
மாண்புடையோர் மேன்மையுற
மக்கள் நன்கு களிப்புறவே
பூத்ததுவே புத்தாண்டு!

பழையனவும் தீயனவும்
பாரிலிங்கு ஓடிடவே
பண்புடையோர் எண்ணங்கள்
பாங்குடனே முழுமைபெற
பார்மக்கள் மகிழ்வுறவே
மலர்ந்ததுவே புத்தாண்டு!

தீய்க்கின்ற தீமைகளும்
மாய்க்கின்ற மாயைகளும்
மண்ணிலிருந்து ஓடிடவே
மலர்ந்ததுவே புத்தாண்டு!

எண்ணங்கள் வலிவுபெற்று
ஏழையோர்கள் உயர்வுபெற்று
எக்காலமும் சிறந்திடவே
பொற்காலம் பிறக்க இங்கு
மலர்ந்ததுவே புத்தாண்டு!

மலர்கின்ற புத்தாண்டில்
மலிவான ஊழல்களும்
மறையட்டும் மண்ணைவிட்டு
மங்கலமாம் புத்தாண்டில்
மலரட்டும் நல்லெண்ணங்கள்
பொலிவான அனைத்தும் பெற்று
பொங்கட்டும் புதுவாழ்வு…..!

Series Navigation