முகமூடி!

This entry is part of 34 in the series 20101128_Issue

ஷம்மி முத்துவேல்


முகம் உருக
உள்ளுக்குள் வெறும் ரத்தமும் சதையும்
நாளங்களோடு
அழுகல் வாடை ……..

விதவித சாயங்கள் ….
சில நேரம் பச்சையாய் ….
சில நேரம் சிவப்பாய்…..
நேரத்திற்கு ஒன்றாய்
நிறம் மாறும் உறவுகள் …..

வயோதிகத்தின் இறப்பை
ஜீரணம் செய்ய மறுக்கும்
வாழ்வியல் பிரயத்தனம் …..

ஓரங்க நாடகம்
அரங்கேறியது ….
பங்கு பெறுவோருக்கு கூலி ….

பங்கிட்டுச் செல்லும்
எண்ணமற்ற சுயநலத்தோடு
திசைக்கொன்றாய் பறவைகள் கூட்டம்
வித வித தேடல்களோடு
இரை கிடைத்ததும்
பறந்திடும் யோசனையில்

Series Navigation