நிழல்

This entry is part of 36 in the series 20101101_Issue

ப.மதியழகன்,


எனக்குச் சம்மதமில்லை
நிழல் என்னை பின் தொடருவதற்கு
நிழல் தொடும் இடங்களெல்லாம்
சுகாதாரமாய் இருப்பதில்லை
என்னையும் மீறி
நிழல் எனது செயலுக்கு சாட்சியாகிறது
ஏதேனும் மரநிழலில் ஒதுங்கும்போது
எந்தன் நிழல் எங்கும் இருப்பதில்லை
மேகம் சூரியனை மறைக்கும்
சமயங்களில்
சர்வம் போல் எனது நிழலை
விழுங்கிக் கொள்கிறது
நடைபாதையில் செல்லும்போது
மற்றவர் கால்களில் மிதிபடுகிறது
எனது நிழல்
சுவாமி வீதி உலாவில்
தெய்வச் சிலை மீது
விழுந்தது எனது நிழல்
சுவாமியை தீண்டுவதற்கு
எனக்கு ஏது துணிபு
இதெல்லாவற்றிக்கும் மேலாக
சிவப்பாய் உள்ள ரதிகளுக்கு கூட
கறுப்பாய்த் தான் விழுகிறது நிழல்.

Series Navigation