வேத வனம் விருட்சம் 81

This entry is part [part not set] of 28 in the series 20100418_Issue

எஸ்ஸார்சி


முனிவர்கள் திரட்டிய
வேத ச்செல்வத்தை
எவன் அத்யயனம் செய்கிறானோ
அவனாலேயே
மாதரி என்னுமொரு
வாயுதேவதை இனிய புனிதம் நுகர்க்கிறாள்
வேதஞ்சொல்லிக்கு
நெய்யொடு பாலும்
தெளிதேனும் சரசுவதியே தருபவள்
தேவர்கள் சேகரம் செய்த
புனிதச் சொற்கள்
எமக்கு பூவுலகும் சொர்க்கமும் தருபவை
எமது விருப்பங்கள்
பூரணம் எய்துகின்றன
இந்திரனின் ஆத்மாவைச்சுத்தஞ்செய்யும்
ஆயிரம் தாரைகள்
எம்மையும்புனிதஞ்செய்க
சோம பவமானன்
நன்மை விரவிய ப்பேரானந்தம் தருவோன்
புண்ணியமானதும்
புசிக்கத்தக்கதுமான சோமம் அமிர்தமே ( சாம வேதம் 133)
நண்பர்களே
அன்னியரை ப்புகழ்ந்துபேசற்க
ஆபத்தேதுமில்லை அதனால்
இந்திரனை வலிமைக்கு
ஒயாது பற்றுங்கள்
இந்திரனுக்கு அறிவும்
தேவர்க்கு வலுவும்
சோமமே வழங்குவது ( சா.வே. 140)
இந்திர த்தேருக்குச்சொந்தமுடை
ஆயிரமும் நூறுமாய்க் குதிரைகள்
சோமம்பருகவே
இந்திரனைக்கொணர்கின்றன
மயில் தோகை வாலும்
வெள்ளை நிற முதுகும் கொண்ட
குதிரைகள் இந்திரத்தேரில்
பிணைபட எப்படி விரைகின்றன
செல்வமுடை நட்பினை
இந்திரன் விரும்புவதில்லை
அவர்கள் சுராபானம் அருந்தி
இந்திரனை நிந்திக்கிறார்கள் ( சா.வே 143)
அக்கினியே போர்க்களத்தில் ரட்சிப்பவன்
அவனே அன்னம் தருவோன்
எங்கும் பார்வையுடைக் குதிரைகளே
வெற்றிக்குத்துணை செய்வன
சோம கலசம் அலங்கரிக்கப்படுகிறது இங்கே
ஆடவன் ஒர் யுவதியைத்தொடர்வதுபோலே
பாலுடன் கலந்த சோமத்தை
சூரியனின் அரி வியாபிக்கிறான் ( சா.வே.146)
வர்ஷிப்பது
இன்பம் தருவது
விழையத்தகுதியுடையது
வெற்றிக்குத்துணையாவது
சேவிக்கத்தக்கது
சோமம் அது இந்திரனைச்சேர்க
இந்திரனே சூரன்
கொடைதருவோன்
மனிதரில் வெற்றிக்கு ஆற்றல் அருளி
தகிக்கும் பாத்திரம்போலே
நேர்மையில்லா தசுயுக்களை பொசுக்குக ( சா.வே.147)
சோமனே வெண்மையும் சிவப்புமாய
வண்ணமுடையோனே
பாலும் தயிரும் கலந்த
நினக்கு வந்தனம் பல
சித்தமறிந்தோன் சோமன்
சித்த நாயகன் இந்து
நல் வீரம் நற்தனம் தருக
சூரியன் எதிரிகளை ஒழிப்போனை
வீரனை நோக்கியே உதயமாகிறான்
அவ்வீரன் தன் கை வலியால்
தொண்ணூற்று ஒன்பது கோட்டைகள்
தூள் தூளாக்குவான்
விருத்திரனை அகியைக்கொல்வான்
அவ்வீரனேஅழகன்
மங்கலம் தருவோன்
தோழனும் அவன்
குதிரைப் பசு தானியம்
மழையென வழங்குவது
கதிரோனே அவ்வீரனுக்கு ( சா. வே. 149)
கதிரவனே வேள்விசெய்வோனுக்கு
நெடிய ஆயுள் தருவோன்
சோமம் அருந்துக அவன்
மக்களை ரட்சிப்போன்
பெருமையோடு ஒளி வழங்கி
பெரியோன் பிரகாசிப்போன்
நலமருள்வோன்
வலிமை தருவோன்
வாயுவால் தரிக்கப்படுவோன்
வானில் நிலைப்போன்
சத்தியன் பகை கொல்வோன்
இதமில்லாதவர்களை தசுயுக்களை
தொலைப்போன் அவன்
அசுரர்களை அழிப்போன்
காட்சிப்படும் பெருஞ்சோதி
உத்தமன் உலகம் வெல்வோன்
பெருஞ்செல்வன்
அழிவில்லா க்கீர்த்தியருளி
வலிவும் பொலிவும் அருள்க
மகற்கு தந்தை ஆற்றுவதொப்ப
இந்திரனேஅருள்க செயல் திறனொடு ஞானம்
இன்று நாளை பின்வரு நாளும்
காத்திடுக எம்மை ( சா.வே.150)
எவர் எம்முள் ஞானத்தைத்தூண்டுகிறார்களோ
அத்தேவதையைத்துதிப்பதற்கான
ஆளுகையின் ஆதார ஒளியை
யாமிவண் தியானிக்கிறோம்
இரவில் பிரக்ஞைதொலைத்த
இரவில் உருவம் தொலைத்த
காண்பொருளத்தனையும்
விடியற்காலைப் போதில்
உஷை யொடு நீ மலர மலர
மீண்டும் உருக்கொள்பவை ( சா.வே. 151)
அக்கினி அண்டியோர்க்குச்
செல்வமும் வீரமும் அளிப்போன்
அளிப்போனுக்கே அள்ளிக்கொடுப்பான்
அக்கினி அவனே
வேள்வி மன்ற வாணன்
ஆகுதி கொண்டுசெல்வோன்
சூரியனுக்கு பலம் தருவோன்
யம் துதிகள் அவனுக்கு
வாழ்நாள் வர்ஷித்து
அன்னை பூமியை அனுசரித்துச்செல்வோனே அக்கினி.. ( சா.வே. 156)
அக்கினியே அத்தனௌக்கும் முன் செல்வோன்
முதன்மையானவன் யாண்டும்
அளிக்கும் மனிதனுக்கு அளிப்போன் அக்கினி
அழகு தருவோன்
சோபன நிறை வழங்கி
ஆனந்தம் அருளி
சுகம் கொடுப்போன் ( சா.வே.160)
இந்திராக்கினியே உம்மிருவரையும்
இசைகொண்டு வணங்குகிறோம்
தாசர்களின் தொண்ணூறு கொட்டைகளைத்
தூளாக்கியோர் நீவிரே £ ( சா.வே.162)
விசுவ கர்மன் இந்திரனே
எம் வேள்வியால்
வானம் பூமி அனைத்தும் ஆளுக
வேள்வி செய் செல்வன்
பெறுக பெரு ஞானம்
எம்மைச்சுற்றியுள்ள அன்னியர்
மதியிலிகள் மொத்தமாய் ஆகுகவே. ( சா.வே. 163)
———————————————————————-

Series Navigation

எஸ்ஸார்சி

எஸ்ஸார்சி