யதார்த்தங்கள்

This entry is part of 38 in the series 20091015_Issue

ஜீ கே


யதார்த்தங்கள் சில சமயம்
காயங்களையே அர்ப்பணிக்கிறது…

இங்கு உன்னையும் என்னையும்
பற்றியுமான யதார்த்தங்கள்
வடம் பிடித்து இழுப்பவர்
ஆளுகைக்கு ஆட்பட்ட
ஆண்டவன் இல்லா தேர் போல்…

யதார்த்த மனிதர்கள்
யதார்த்த மனங்களை
ஏன் என்றே தெரியாமல்
கொய்து எறிகின்றனர்
யதார்த்தத்தின் ஆழம் புரியாமல்…

சிறு நடைப் பயணத்திலும்
சிற்றுண்டிச் சாலையிலும்
டீக் கடை கலாட்டாக்களிலும்
இலவச இணைப்பாகவே
மொழிப் பெயர்க்கப் படுகின்றன
நம்மைப் பற்றிய யதார்த்த வக்கிரங்கள்
ஆம் …ஏன் என்றேத் தெரியாமல் …

சந்தர்ப்பங்களைத் தேடும்
சந்தர்ப்பவாதிகளுக்கு
சாசனம் கொடுக்கும்
சந்ததியினர் இருக்கும் வரை
காயச் சுவடுகளை நம் உள்ளங்களில்
பதித்துக் கொண்டே பயணிக்கும்
இது போன்ற சில யதார்த்தங்கள்.

ஜீ.கே (gkkarai@gmail.com)

Series Navigation