துப்பட்டா

This entry is part of 54 in the series 20090915_Issue

பிச்சுமணி


ஆரம்பத்தில்
இலைமறைவு காய்மறைவாய்
இளைமையை மாலைபோல்
மறைத்திருந்தேன்

மிதிவண்டி
பல்சக்கரத்தில் மாட்டி
நான் நைந்தபோது
பல் இளித்து உதவிக்கு வந்தார்கள்

ஜாக்கிரதை உணர்வில்
கழுத்தில் பாம்பாய்
பயனில்லாமல் தூக்கு போட்டு
தற்கொலை செய்தேன்

நாலாய் மடித்து தோளில்
ஆணி அடித்து
விரிந்த காம்பஸ் போல்
கச்சிதமாய் மறைத்திருந்தேன்

தீடீரென்று அரசியல்வாதி
துண்டாய் நான் மாறி
எந்த பயனுமில்லாமல
காற்றில் ஆடினேன்

புதிர் வியையாட்டு போல்
ஒரு பக்கம் மூடி கவர்ச்சியாய்
மறு பக்கம் ஊகிக்க
ஒரு பக்கமாய் தொங்கினேன்

பெற்றோர் மற்றோர்
பார்க்கா வண்ணம் பைக்கில்
நிலவை மறைத்த மேகமாய்
முகம் மறைத்தேன்

அலங்காரம் பண்ணி
நான் தனியே வாணிபமான கோபத்தில்
சுடிதார் கோள் சொல்லி
என்னை விலக்கி வைத்துவிட்டது

என்றாவது சிறுபிள்ளைக்கு
கட்டி விளையாட
சேலை ஆவேன் என்ற
எதிர்பார்ப்பில் மூலையில் கிடக்கிறேன்

Series Navigation