வேத வனம் –விருட்சம் 47

This entry is part [part not set] of 38 in the series 20090820_Issue

எஸ்ஸார்சி


வாசுதோஷபதி மனை காப்போன்
அறிக எம்மை
நோய் தராதிரும் எமக்கு
எம் வாயிற்கதவு உத்தமம் ஆகுக
மனிதரும் விலங்கும் சேமமுருக
சேறுக செல்வங்கள்

இந்து நீ
ஆ அசுவம் காத்திடுக
எம்மை இளமையாக்குக
தந்தை நீ
புதல்வர்கள் யாமுனக்கு

வாசுதோஷ பதியே
நீ அளித்த மனை
நலம் வளம் தனம் பெருகும் மனையொடு
பொலிவு அமைதி யோகம் தருக
உழைப்பில் சுகம் பெருகி
உள பொருளும்
வரு பொருளும்
காத்தருள்வீர் எமக்கு ( ரிக் 7/54)

சரமை எனும் இந்திர நாயின்
புதல்வ
நீ சயனிக்கவும்
திருடனும் கள்ளனும்
பார்த்து க் குரை
ஒய்வெடு தூங்கு
இந்திரனை வழிபடும் எம்மையா
அச்சமுறுத்துவாய்

அன்னையர் உறங்குக
தந்தையர் உறங்குக
உற்றார் உறங்குக
உறவினர் உறங்குக
தலைவன் உறங்குக
எல்லா மக்களும் இனிதே உறங்குக
ஒய்வில்லா
மனிதனின்
கண்களை
மனை வாயில் அடைப்பதுபோல்
மூடுகிறோம் யாம் (ரிக் 7/55)

இயற்கையாய் பலமுடை மருத்துக்களே
கவிகளே
புகழில் சூரியன் ஒத்தோரே
வேள்விக்கு வருக வருகவே

யாம் வலிமைக்கே வலு வழங்கும்
முக்கண்ணனை
சுகந்தனை
போற்றி நிற்கின்றோம்
வெள்ளரிப்பழமொன்று தான் தொங்கு
கொடியின் பிடியிலிருந்து
இற்றுக்கொள்ளும் இசைவொப்ப
இறப்பை ப்பாவித்து
அமுதம் பற்றுவோமாக. ( ரிக் 7/59 )
—————————————————————

Series Navigation

எஸ்ஸார்சி

எஸ்ஸார்சி