ஒலிம்பிக்

This entry is part of 35 in the series 20080821_Issue

இராம. வயிரவன்இதயங்கள்
மூச்சிரைக்க ஓடியும்
பின் தங்குகின்றன

மூளைப்பார்வைகள்
முன்னேறுகின்றன

அதிகப் பதக்கங்களோடு
வண்ணக்காகிதங்களே
வாகை சூடுகின்றன

சொந்தச் சிறைகளுக்குள்
கைதிகளாகிறார்கள் மனிதர்கள்

அவர்கள்
தானாய் மீட்டுக்கொள்ளட்டும்
எனச் சும்மா
இருந்துவிடுகிறது சூழல்

அவசர சிகிச்சைப்பிரிவில்
குற்றுயிராய் அன்பு

இருத்தல்
முக்கியமாகி விட்டதால்
உறுத்தல்கள் உதாசீனப்படுத்தப்படுகின்றன

பூமி துளைக்கிறான் மனிதன்
பூகம்பங்கள் சாபங்களாகின்றன


rvairamr@gmail.com

Series Navigation