அற்றைப் பொழுதுக்கும் அப்பால்

This entry is part [part not set] of 49 in the series 20050225_Issue

இரா. றஜீன்குமார்


நித்திலம் கொழித்த கடல்தானிது!
நித்திலம் கொழித்த கடல்தானிது
ஊழியாடி….
கடல் கரைமேவாதென்ற
மனிதச் செருக்கின் கழுத்தறுத்துப் போனது.
புனல் கொண்ட மனிதரும் தரைதட்டிய மீன்களுமாய்
ஒழுங்கமைவைப் புரட்டிப்போட்டது.

உலகம் முழுவதும் மனித உணர்வுகள்
மீள உறையும்வரை உறைநிலை நீங்கின!
தொழில் முறையில் உயிர்பிடுங்க உருவான படையணிகள்
உயிர் மீட்கும் பணியில்! ?

அயரா முயற்சிக்கும்
விடுதலை முனைப்புக்கும்
வாழ்வின் எழுச்சிக்கும்
கரை மேவா அற்றைப் பொழுதுவரை
அலைகளே ஒப்புவமை

தப்பிப் பிழைத்த ஒரு குழந்தைக்கு
ஒன்பது பேர் உாிமை கோாினர்
கடன்கள் இரத்துச்செய்யப்பட்டன
நிதிகள் இறைக்கப்பட்டன.

புராண தாிசனங்களும்
மயான வைராக்கியங்களுமாய்
சனங்கள் கதைகள் கூறினர்

வறுமையால்
ஒடுக்குமுறையால்
யுத்தத்தால்
மீண்டும் சுனாமியால்
மானிடர் மாளாரென
எவரும் உறுதி தந்தாரில்லர்.

இற்றைப் பொழுதில்
ஒரு குறித்த நிலப்பரப்பின்மீது
ஒரு குறித்த இனத்தின்மீது
ஒரு குறித்த மதத்தவாின்மீது
சுனாமியை எப்படி ஏவலாம் என்பதில்
சிலர் தம் ஆய்வினைத் தொடரலாம்

அற்றைப் பொழுதுக்கும் அப்பால்
வாழ்வும்
நம்பிக்கைகளும்
அவைமீதான அச்சுறுத்தல்களும்
வானைப்போல் விாிந்துபடும்.

17.01.05
—-

arun.rajeenkumar@arcor.de

Series Navigation

இரா. றஜீன்குமார்

இரா. றஜீன்குமார்

அற்றைப் பொழுதுக்கும் அப்பால்

This entry is part [part not set] of 39 in the series 20050203_Issue

இரா. றஜீன்குமார்


நித்திலம் கொழித்த கடல்தானிது!
நித்திலம் கொழித்த கடல்தானிது
ஊழியாடி….
கடல் கரைமேவாதென்ற
மனிதச் செருக்கின் கழுத்தறுத்துப் போனது.
புனல் கொண்ட மனிதரும் தரைதட்டிய மீன்களுமாய்
ஒழுங்கமைவைப் புரட்டிப்போட்டது.

உலகம் முழுவதும் மனித உணர்வுகள்
மீள உறையும்வரை உறைநிலை நீங்கின!
தொழில் முறையில் உயிர்பிடுங்க உருவான படையணிகள்
உயிர் மீட்கும் பணியில்! ?

அயரா முயற்சிக்கும்
விடுதலை முனைப்புக்கும்
வாழ்வின் எழுச்சிக்கும்
கரை மேவா அற்றைப் பொழுதுவரை
அலைகளே ஒப்புவமை

தப்பிப் பிழைத்த ஒரு குழந்தைக்கு
ஒன்பது பேர் உாிமை கோாினர்
கடன்கள் இரத்துச்செய்யப்பட்டன
நிதிகள் இறைக்கப்பட்டன.

புராண தாிசனங்களும்
மயான வைராக்கியங்களுமாய்
சனங்கள் கதைகள் கூறினர்

வறுமையால்
ஒடுக்குமுறையால்
யுத்தத்தால்
மீண்டும் சுனாமியால்
மானிடர் மாளாரென
எவரும் உறுதி தந்தாரில்லர்.

இற்றைப் பொழுதில்
ஒரு குறித்த நிலப்பரப்பின்மீது
ஒரு குறித்த இனத்தின்மீது
ஒரு குறித்த மதத்தவாின்மீது
சுனாமியை எப்படி ஏவலாம் என்பதில்
சிலர் தம் ஆய்வினைத் தொடரலாம்

அற்றைப் பொழுதுக்கும் அப்பால்
வாழ்வும்
நம்பிக்கைகளும்
அவைமீதான அச்சுறுத்தல்களும்
வானைப்போல் விாிந்துபடும்.
—-
17.01.05

Series Navigation

இரா. றஜீன்குமார்

இரா. றஜீன்குமார்