எல்லாம் சுகமே..

This entry is part [part not set] of 47 in the series 20040304_Issue

புஷ்பா கிறிஸ்ரி


அவசரமாய் ஓடுகின்றேன்..

இயற்கை அழைத்து விட

வகுப்பு நடக்கிறது

விரிவுரை தொடர்கிறது

கடன் கழித்து

விரைந்து வருகின்றேன்

பாடம் கேட்கும் அவசரம்.

கதவைத் திறக்கின்றேன்

கடக்.. என்றொரு சத்தம்..

என்ன என்று

வினாக் குறியுடன்

உள்ளே நுழைந்தால்..

மூக்கையும், பல்லையும்

மூடிப் பிடித்த படி

முறைத்து நிற்கிறார் ஆசிரியர்

என்ன என்ன.. என்று

அலறிக் கேட்ட போது

படிக்கும் மாணவர் சொன்னார்

நீ அவர் மூக்கை உடைத்து

பல்லையும் ,

தள்ளிய கதவால்

உடைத்து விட்டாய் என்று..

தவித்துப் போனேன்..

ஆசிரியரின் முறைப்பு,

அழும் பாவனை முகமும்

என்னை பதற வைக்கிறது

என்ன இது..

இப்படி ஒரு நிலையா ?

ஏக்கத்துடன், விழித்து,

தவித்து நின்ற போது..

தடவிக் கொடுக்கிறார்

ஆசிரியர் புன் சிரிப்போடு..

உன்னை பழிவாங்கப்

போட்ட திட்டமிது..

எனக்கொன்றும் ஆகவில்லை..

இதோ என் மூக்கு,,

இதோ என் பல்லு..

எல்லாம் சுகமே..

அப்பாடா..

போன உயிரெனக்கு

மீண்டு வந்த திருப்தி..

வகுப்பு தொடர்கிறது..
—-
pushpa_christy@yahoo.com

Series Navigation

புஷ்பா கிறிஸ்ரி

புஷ்பா கிறிஸ்ரி