அடங்கோ… அடங்கு!

This entry is part of 49 in the series 20040101_Issue

சுப்பிரமணியன் ரமேஷ்.


ஒளிர் நிலவொளியில்
உள்மனத்தடங்களில்
கவனம்பதி

அதி வினோத சுழற்பாதை
வழியெங்கும் கிளிக்குரல்கள்
மயங்கிப்போய் நிற்காதே
முடிவிலொரு மாயக் குகை

தயக்கமாய் நிற்கும் உனை
ரகசியமாய் அழைத்திட வரும்
சிலிர்ப்பூட்டும் குளிர்காற்று!

போ.

பிரபஞ்சம் வைதர்ணி நதிக்கரையில்
அனுபூதியாய் பொத்திவைத்திருக்கும்
உனக்கான உன் குரலை மீட்டுத்தரும்!

இப்போது உங்கள் ஒவ்வொருவருக்கும்
உலகத்திற்கு சொல்லவென சேதியுண்டு
பறந்தோடி வருகிறீர்கள்
அருந்திய அமிர்தம் செறிப்பதற்குள்
அவசரமாய் கைவிட்டு வாந்தி எடுக்கிறீர்கள்
எல்லோர் முகங்களின் மீதும் தெறித்து விழ…

அடங்கோ…! இந்த கஸ்மால உலகில்
இத்தான பிரச்சனை.

subramesh@hotmail.com

Series Navigation