கபிலர் பாறை

This entry is part [part not set] of 55 in the series 20031211_Issue

பா.சத்தியமோகன்


கண நேரம் நினைத்தான் கபிலன்
யுககாலம் தவித்தான் கபிலன்
ஏன்தான் சொன்னோமோ ஏன்தான் சொன்னோமோ
குமுறினான் கபிலன்
‘போரினால் வெல்ல இயலாது ..அவனுள்ளம் கொடை உள்ளம்
இரவலராகச் செல்க …பறம்பு மலை கிடைக்கும் … ‘
சொன்ன குறிப்பைப் பெற்று மூவேந்தர் நடித்தனர் இரவலராக
கேட்டனர் பாரி உயிரை பரிசாக
ஈந்தான் பாரி கொடையுள்ளத்தால்.
‘அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்
எந்தையும் உண்டு …நிலவும் உண்டு…
இன்று.. ? ‘
அங்கவை, சங்கவை
தந்தை நினைவில் அழுதனர் மகள்செல்வங்கள்.
தோழன் – கவிஞன் – அமைச்சர் கபிலன் சும்மாயிருப்பானா ! எழுந்தான்..
‘போரை நிறுத்த வழி சொல்லப் போனதில்-
பாரி மன்னன் உயிருக்கு உலையாயிற்றே … ‘
தென்பெண்ணை நடுவில் வடக்கிருந்தான்
உயிர் துறந்தான் ! அடையாளமாகிறது அப்பாறை
கபிலர் பாறை நின்று அழுகிறது திருக்கோவிலூரில் –
பாரி விட்ட மூச்சுக் காற்றைத் தேடித் தேடி வெப்பத்தில் அலைகிறது.
***
cdl_lavi@sancharnet.in

Series Navigation

பா. சத்தியமோகன்

பா. சத்தியமோகன்