இருவர்

This entry is part of 43 in the series 20030918_Issue

ஜி செந்தில்நாதன்


இருவர் ஓருவராக கடற்கரை மணலில் தெரிந்தார்கள்
இவன் சிரித்தான்.

அவள் காதலிக்கிறா இவனை.
இவன் காதலிக்கவில்லை.
அவள் இவன் நண்பனை காதலிக்கிறா
மற்ற நண்பர்கள் இவனிடம கேட்டார்கள், ‘ உன் காதலை அவள் ஏற்றுக்கொள்ளவில்லையாமே ‘

கடற்கரையில் இருக்கிறேன். செல் அடிக்கிறது.
‘நான் தான் பேசுகிறேன். எங்கே இருக்கிங்க ‘
‘கடற்கரையில் ‘
‘யாரோட ‘
‘உன்னோட ‘

கடற்கரை மணலில் அமர்ந்தேன்.
பூக்காரி வந்தா..
என்கிட்ட பூ வேணுமான்னு கேட்கலை
ஆனா எனக்கு அப்படி கேட்டது, காதுல வச்சுக்க!
சோசியக்காரி வந்தா..
‘கல்யாணம் பண்ணிட்டு சந்தோஷமா இருப்பீங்கனு ‘ சொல்லவில்லை!
தண்ணி பையன் வந்தான்..
‘அண்ணா, தண்ணி ‘ கேட்டான்..
எனக்கு இருந்த சூடை குறைக்க!
சுண்டல் பையன் வந்தான்..
‘எங்க அக்கா ‘ அப்படின்னான்..
கடல் தண்ணிரை, என் கண்ணின் தண்ணிர் முத்தமிட்டது!

gsvnatha@rediffmail.com

Series Navigation