ஆனாலும்…..

This entry is part of 49 in the series 20030724_Issue

பெப்பின் பிரிட்டோ


மதிற்சுவர்கள்
சாதிகளுக்கு மத்தியில்
தேவாலயங்களில் மட்டுமல்ல
கல்லறைகளிலும்

தோமையார் கூட
தீண்டத்தகாதவராகிறார்
அரிச்சனத்தெருவில் அவருக்குக்
கோவில் இருப்பதால்.

அருட்சகோதர சகோதரிகளுக்கும்
தேவைப்படுகின்றன வண்ண உடைகள்
சாதீய வர்ணங்கள் பூசி

தேர்கள் வர மறுக்கின்றன
திருவிழாக்கள் புறம் தள்ளுகின்றன
கீழ் சாதிக்கு ஏனிந்த
ஆடம்பரங்கள் ?

மதம் மாறுவோம் – மனம்
மட்டும் மாறவே மாட்டோம்

ஆனாலும் உரக்கச்சொல்லுவோம்
நாங்கள் கிறிஸ்துவுக்குள் ஒன்றாயிருக்கிறோம்
***
Peppin_Britto@bankone.com

Series Navigation