பா.ஸ்ரீராம் – நான்கு கவிதைகள்

This entry is part [part not set] of 37 in the series 20030619_Issue

பா.ஸ்ரீராம், மயிலாடுதுறை.


என் வாழ்க்கை

நிலவோடு ஒப்பிட்டேன்
நீதானே உயர்ந்தவள்…
மலரோடு ஒப்பிட்டேன்
நீதானே சிறந்தவள்…

கனவோடு கலக்கின்ற
கண்ணான கண்மணி
மனதோடு சேர்ந்திடு
மறவாது மின்மினி
சொலவது காதலன்
சொல்வது என் கடன்…

என்
காதோடு பாடியவள் நீதானே
தினம் காற்றோடு பேசியவள் நீதானே…
நெஞ்சிலே நிறைந்தவளும் நீதானே…- என்
நினைவிலே கலந்தவளும் நீதானே…

உள்ளத்தில் ஓர் இடம்

உனக்கு நான் கொடுத்தேன் – என்
மெளனத்தின் கொடுமையிலே
பொறுமை நான் இழந்தேன்
சிரித்து கொண்டு சொல்லிவிடு
ஓர் வார்த்தை…
அதிலே தான் இருக்கிறது
என் வாழ்க்கை…


பதில்

கல்லூரி எனக்கு
புனிதமான இடமாய் தெரிந்தது
என் அறிவு வளர்ந்ததிற்காக அல்ல
நீ அறிமுகமானாயே அதற்காக…

இனிப்பும் எனக்கு
கசப்பாக இருந்தது
உன் தந்தைக்கு
சக்கரை வியாதியாம்…

தலைமுடி அதிகம் இருப்பது
எனக்கு பிடிக்காது
ஏனென்றால்
உன் தங்கைக்கு பிடிக்காதாம்…

விபூதி பூசிக் கொண்டுதான்
வெளியே வருவேன் – உன்
அன்னைக்கு ஆன்மீகபக்தி அதிகமாம்…

எல்லோரிடமும்
நல்ல பெயர்…
உன்னிடம் மட்டும்
இல்லை பதில்….


தடுமாற்றம்

பெண்ணே!
உன்னை பேனா
முனையிலே வர்ணிக்க
முயன்றேன்…
தானாக கைகள்
தடுமாற்றம் தந்தது…

காரணம்

பூவை விடவும் மென்மையான
உனது உடலில்
பேனா முனைப்பட்டு
புண்ணாகிவிடக் கூடாது
என்பதற்காக…


விமோச்சனம்

வானவில் வழித் தவறி
பூமியிலே தோன்றியதோ ?
வண்ணத்துப்பூச்சி ஓன்று
பெண்ணாக மாறியதோ ?

புள்ளிமானா அவள்
துள்ளி குதிக்கின்றாள் – என்
நெஞ்சில் அன்பையவள்
அள்ளி விதைக்கின்றாள்

விதைத்தவிதை முட்டி வந்து
காதலாக மாறியதே…
காதலாக மாறியதும்

கடல் கடுகாக தோன்றியதே…

அவள்
ஒரு வார்த்தை சொன்னதுமே
உள்ளத்தில் உற்சாகம்…
அவள் என்னை தொட்டு சென்றால்
உடனே விமோச்சனம்…

***
balageethan@rediffmail.com

Series Navigation

பா.ஸ்ரீராம், மயிலாடுதுறை.

பா.ஸ்ரீராம், மயிலாடுதுறை.