உதவும் உள்ளத்தின் குமுறல்

This entry is part [part not set] of 37 in the series 20030619_Issue

சத்தி சக்திதாசன்


மழைத்துளியாகி நான் பலமாகப் பெய்தேன்
விழுந்ததென்னவோ
தரிசான நிலத்தில் தான்
அரத்த சந்தனமாக வீசினேன்
நறுமணத்தை , மணம் எனும்
உணர்ச்சியற்றோர் கூட்டத்தின் முன்னே
மெழுகுதிரியாக பரப்பினேன் ஒளி ஜயகோ!
குருடர்கள் உலகமல்லவோ அது
கம்பளியானேன் போர்த்தட்டும் என்று
கொளுத்தும்
வெய்யில் காலமல்லவோ ?
சுயநலமெனும் பெயர் கொண்ட உலகில்
தியாகத்தின் விலையறியா மாந்தர்
சாம்ராஜ்ஜியத்தில்
இனியும் நான் முட்டாள்களின் மன்னன்
என முடி சூட்டிக் கொள்ளப் போவதில்லை.

சத்தி சக்திதாசன்
sathnel.sakthithasan@bt.com

Series Navigation

சத்தி சக்திதாசன்

சத்தி சக்திதாசன்