இந்தியாவின் விடிவெள்ளி

This entry is part of 44 in the series 20030209_Issue

விஜய்ஆனந்த் ச


அறிவியலால் நம் நாட்டை வல்லரசாக்க முடியுமா,
அறிவியல் மேதையே நாட்டின் குடியரசுத்தலைவராக முடியுமானால்,
சாதித்து காட்டுவோம் அவர் தலைமையில் நம் அறிவால்.

மாமன்னர்கள் ஆண்ட நாட்டை கறையான் போல உள்ளிருத்தே அறிக்கும் ஊழலை
கண்டு அழிக்க விண்கலங்கள் வேண்டும்,
காந்தி பிறந்த மண்ணை இரத்தமாக்கிய மதவாதத்தை
ஒழிக்க ஏவுகணைகள் வேண்டும்,
நதி நீறை அரசியலாக்கி உழவனை சாகடிக்கும் அரசியலை
அழிக்க அணுகுண்டு வேண்டும்,
உணவு கிடங்குகள் நிரம்பி வழியும் போதும் நிகழும் பட்டினி சாவுகளை
தடுக்க அறிவியல் வேண்டும்,
பொருளாதாறத்தில் சரி பங்கு புழங்கும் கருப்பு பணத்தை
நீக்க அஸ்திரங்கள் வேண்டும்,
நம் இளம் அறிவாளிகள் வெளி நாட்டுக்கு போவதை
தடுக்க நம் அறிவியல் கூடங்களுக்கு சக்தி வேண்டும்.

இத்தனையும் செய்து முடிக்க
ஒரு நம்பிக்கை நட்சத்திரம் நீயா,
கோடானு கோடி இள நெஞ்சங்களை கொள்ளை கொண்ட
விஞ்ஞானியான நீதான் எங்கள் தேவ தூதனா,
கனவு காண கற்று கொடுத்த
உண்ணால் தான் இது முடியுமா,
விஞ்ஞானியாய் இருந்து இந்தியாவின் முதல் குடிமகனான
நீதான் எங்களின் விடி வெள்ளியா,
விண்கலங்களையும் ஏவுகணைகளையும் செய்த
நீதான் எங்களின் சராசரி இன்னல்களை சரி செய்ய வந்தாயா,
காந்தி பெற்ற சுதந்திரத்தை காக்க வந்த
எங்கள் ‘ஐன்ஸ்டான் ‘ நீதானா

vijayanandc@hotmail.com

Series Navigation