ப.வி.ஸ்ரீரங்கன்
‘ மூலதனத்தின் கருப்பையில் சமாதனம் கருக்கொள்வதென்பது மொட்டைத் தலைக்கும்
முழங்காலுக்கும் முடிச்சிடுவதாகும். ‘
இன்று நாம் காணும் அமெரிக்கா வெறும் வர்த்தக முன்னணி நாடாகயில்லை,மாறாக வர்த்தகத்தால் மனித விரோதங்களைச் செய்யுங்காட்டாட்சியுடைய நாடு.அமெரிக்க மூலதனமானது எதிர்காலத்தில் அதீத மூலவளச் சுரண்டலினாலும்,வட்டியினது வட்டிக்கான அறவிடல்களாலுமே உயிர்த்திருக்க முடியும்.இந்தக் கோணத்தில் பொருளாதார முன்னெடுப்புகள் யாவும் தொடங்கி விட்டதற்கான அறிகுறியை ஜெனரல் மோட்டர் அதிபர் செய்தியாகப்போட்டுடைத்தார். ‘இன்றைய காலத்தில் நாம் வாகனங்களைத் திறம்படவுற்பத்தி செய்வதில் நோக்கமாக இருக்கவில்லை.மாறாக இந்தச் சந்தையை நோக்கியான நமது விருப்பானது அந்த இடத்திற்கான பாதுகாப்பை உறுதிப்படுத்தலே முக்கியம் பெற்றது.இன்றைய நிலை இதுவல்லாது சமூகக் கடமையென பிதற்றிக் கொண்டால் இருக்கின்ற முதலீடுகளை இழந்து காணாமற்போவது உறுதியாகிவிடுவதுண்மையான யதார்த்தம். ‘ என்று ஜெர்மனிய பொருளியற் சஞ்சிகைக்குச் செவ்வி வழங்குகிறார்.
இந்த உற்பத்திப் பொறிமுறையானது உலகத்தின் மூலவளங்களைக் காசாக்கும்(நிதிமூலதனமாக்கும்)சார்பு நிலைப் பொருளாதார முன்னெடுப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருவது பெரு வங்கிகளினது பாரிய முகாமைத்துவ ஒற்றைத்துருவ ஆதிக்கத்தை முன்மொழிகிறது. இந்த வங்கிகள் யாவும் அரபுத்தேச மூலவளத்தின் உபரிச் செல்வத்தால்(எண்ணை டொலர்கள்) இயக்கப் படுகிறது.இந்தச் செல்மானது இஸ்திரமான பாதுகாப்பு நோக்கியே அரேபிய எண்ணை மாபியாக்களால் இந்த அமெரிக்க-ஐரோப்பிய வங்கிகளில் இடப்பட்டுள்ளது.இதுவே இன்றைய நிதிமுதலீடுகளினதும்-உலக நாணய நிதியத்தினதும் மூலதனத்தில் கணிசமான பங்கை வகிக்கிறது.
ஏனைய நாடுகளோடு ஒப்பிடும்போது இவ்வகை நிதித் திரட்சியானது இந்த நாடுகளின் வருடாந்த உற்பத்திச் சூழலைவிட பன்மடங்கு பாரிய செல்வத்தால் முன்நிலை வகிக்கின்றது.இதுேவு இன்றைய பல்தேசியமான நிதிமுதலீட்டினது பலமான பங்குச் சந்தையாய் விருத்தியுறவும் செய்கிறது.இதன் தகர்வு சிலசமயம் பின்போவதும்-அதை மிக மிக பெறுமானமிக்க பொருளாதார விதியாகவும் பொருளியலாளர்கள் மதிக்கவும் செய்வது இந்த வங்கிகளினது வியூகத்தாற்றாம்! இத்தகைய சூழலில் முதலீடு என்றும்-தொழிற்றுறை முன்னெடுப்பென்றும் மூன்றாமுலக நாடுகளை-குறிப்பாக நமது இந்தியத் துணைக்கண்டத்தை சுரண்டி ஏப்பமிடுவதைச் சற்றுப் பாருங்கள் கீழ் வரும் வட்டி முறைமையின் சுட்டலில்:
முதலீடும் வட்டியும்:
அரசியற்பொருளாதாரக் கல்வியல் நாம் கற்பது என்னவெனில் எந்த முறைமைகள் முன்நிறுத்தப் பட்டாலும் அது சந்தைப்பொருளாதாரத்தின் அதிகூடிய பாதுகாப்பை வட்டிக்கு வட்டியின் உறுதிப்பாட்டை நிர்ணஞ் செய்யும்போது காத்துக்கொள்ளலாமென்பதே! இந்த நிதிமூலதனத்தின் அரிச்சுவடி எந்தத் தளத்தில் வெற்றிபெறுவதென்றால் அது பெரும்பாலும் அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளில் புதிய முதலீடென்றபோர்வையில் நகரும் நிதிமூலதனத்தின் முன்நிபந்தனையான முதலீட்டோடு சாத்தியமாவதாகும்.இதை முதலீட்டுக்குப் பின்பான-பின் முதலீட்டுச்சூழலென வகுத்துக்கொள்வதும்,அதன் வியாபித்த சுழற்சியை ‘தண்டக் காலம் ‘என்று வகுப்போம்.அதுவே அறுவடைக்கான காலம்.இந்தப் புரிந்துணர்வோடு மூன்றாமுலகில் தொழில்முதலீடுகளைச் செய்யும் ஏகாதிபத்திய தொழில் கழகங்கள் இவற்றை ‘குருவிக் குஞ்சு ‘புரிதற்பாடென அழைப்பதுண்டு.யாரொருவர் சத்தமிட்டு கூக்குரலிடுகிறாரோ அவருக்கு குறிப்பிட்டளவு பங்கு(உணவு) கிடைப்பதற்கு வழியுண்டு. இதைத்தாம் இன்றைய தரகு முதலாளிய இந்தியாவும்-இலங்கையும் செய்வது.இந்தக் கூக்குரல்தாம் ‘ இதோ இந்தியா ஒளிர்கிறது ‘ என்பதாகும்.
ஒரு முதலீடு எதற்கென்றாலும்-குறிப்பாக பணம் கடனிடுவது அல்லது தொழிற்சாலைக்கு பங்கிடுவது-எதுவானாலும் பொருளாதார விற்பனனின் பார்வையில் அது வெறும் இலாபத்தை அடுத்தாண்டின் புள்ளிவிபரத்தில் கணித்துச் செய்வதல்ல.மாறாக முற்றுமுழுதான அனைத்துக் காலத்திற்குமான உபயோகத்தின் இறுதியாண்டுவரையும் கணிக்கப் படும்.அதாவது தொழிற்சாலை உயிர்வாழுங்காலம் வரையாகும்.முதலீடென்பது எமக்கு முற்றுமுழுதாக வருவாயைக்கூட்டிவருவதற்கே தவிர கொடுப்பதற்கல்ல.நாமதைச்(முதலிடுவது-முதலீடு) செய்யாதவரை நமது பணம் வெறும் காகிதம்தாம்.இதன் பொருட்டு ஒவ்வொராண்டும் உபரியை நோக்கிய மதிப்பீடும் அவசிமாயினும் முன்கூட்டிய வட்டியெடுப்புத்தாம் முக்கியமானதாகும்.இதை இப்படி தொகுக்கலாம்:
இன்றைய தினத்தில் முதலீடுக்கான தொகையை 12வீத வட்டிஅறவிடல் மூலமே இலாபநோக்கிடப்படுகிறது.இது எப்படியென்றால்: 10 ஆண்டுகளில் 1மில்லியன் யூரோவானது இன்றைய நிகரமுதலீடாக வெறும் 321.973,-தாம் பெறுமதியாகும்.இதுவேதாம் இன்றைய ஒரு மில்லியன் முதலீடென்பது.இந்த மூன்று இலட்சத்தை பத்தாண்டுகளில் 1மில்லியனாக இலாபம் அடைவதை நோக்காகக்கொண்டே முதலிடப்படுகிறது.இதன் படி தொழில் துவங்குபவர்கள் கிட்டத்தட்ட பொருளின் உற்பத்திச் செலவோடு மீளவும்40 வீதச் செலவை வட்டிக்காகச் சேர்த்தும் கூடவே மதிப்புக்கூட்டுவரியான அரச புடுங்கலுக்கும் சேர்த்து சுமார் 60சத வீதம் கூடிய விலையில்தாம் இவற்றைச் சாத்தியப் படுத்தலாம்.இத்தொகை யாவும் உழைப்பவர்களே தாங்கியவேண்டும்.எனவேதாம் நிதிமூலதனத்தை அணுக்குண்டைவிட ஆபத்தென்கிறோம்.இத்தகைய கணக்கை 25 ஆண்டகளுக்காகப் பார்த்தால் இன்றைய ஒரு மில்லியன் யூரோவானது :58.823,-மட்டுமே.இதுவே 50 ஆண்டானால்:3.460,- வதும் 100 ஆண்டுகளானால்:12,-யூரோவாகவுமே நிதியிடப்படும்.ஆனால் எந்த நிதியீடும் 10 ஆண்டுகளின் வட்டியறப்படுதல் மூலமே நிதியிடப்படுகிறது.இந்த மானுடவிரோத மூலதனம் எங்கு பாய்ந்தாலும் அந்த நாடு உருப்பட வாய்பேயில்லை.இன்றைக்கு இந்தியா-இலங்கைபோன்ற நாடுகள் இவற்றை வேலைவாய்புக்கருதி வரவேற்பதுபோன்று பாசாங்கு செய்கிறது.ஆனால் உண்மை வேறுவடிவமானது.வளர்ச்சியடைந்த நாடுகளில் இந்த முதலீட்டுப் பெருவட்டி அறவீடானது இப்போது சாத்தியமின்றி தொழிலகங்கள் பொறிந்து போகின்றன.இந்த நாடுகளின் வாழ்கைச்செலவோடு அண்டியே கூலித்தொழிலாளியின் ஊதியம் மதிப்பிட்டு வழங்கவேண்டும்.ஆனால் மூன்றாமுலகத் தொழிலாளியோ நாளொன்றுக்கு 12மணி உழைப்புக்கு வெறும் 2 யூரோவே ஊதியமாகப் பெறுகிறா(ள்)ன்.இந்தப் பொன்முட்டையிடும் வாத்தை நம்பியும்,கனிவளத்தை வேட்டையாடவுமே மூலதனம் இந்த மூன்றாமுலகை நாடுகிறது.
உற்பத்திவீச்சும் அதீத சுரண்டலும்:
உலகத்தில் 40 வீதமான தொழிலாளர்கள் நாளொன்றுக்கு 12-14 மணிநேரம் உடலுழைப்பில் ஈடுபடுகின்றனர்,ஆனால் அவர்கள் பெறும் ஊதியமோ வெறும்1,30டொலா;தாம்!
இந்த குறைகூலிச் சூழலானது அனைத்துத்தொழில் கழகங்களையும் பாரிய நிதிநெருக்கடியிலிருந்து காப்பாற்றி மென்மேலும் தனது இருப்பை நிலைநிறுத்தவும்-உற்பத்தியுறவுக்கும் மூலதனத்துக்குமுள்ள முரண்பாட்டை நீற்றுப்போக வைப்பதற்கும் வலுவாய்ப்பாகப்போய்விட்டது.இந்தச்சூழலின் மிக நெருக்கடியான காலம் பஞ்சாய்ப் பறந்தோடிவிட்டது.கூம்புவடிவிலான முதலாளிய உற்பத்திப்பொறிமுறையும்-உபரியீட்டலும் இன்னும் பலநூறாண்டுகள் உயிர்வாழும் சாத்தியம் நிலவுகிறது.இத்தகைய அரிய சந்தர்ப்பத்தை அனைத்து தேசங்கடந்த தொழிற்கழகங்களும் புதிய உற்பத்தியூக்க போர்மூலா மூலம் சரிசெய்கின்றனர்:
‘0இ5/2/3ஸ்ரீ 300; ‘அதாவது அரைப்பங்கு தொழிலாளர்களைக் கொண்டு இருமடங்கு உயர்ந்த உற்பத்தியூக்கத்தைப் பெறுவது.இது பழைய உற்பத்தியோடு வகுக்கும்போது அதைவிட மூன்றுமடங்கு உயர்ந்த உற்பத்திவீச்சு. இந்தப் போர்மூலாதாம் இன்றைய உற்பத்தித்திறன்!இதை ஏழைநாடுகளில்: ‘0இ25/2/4ஸ்ரீ400; ‘ஆகவுமாக உற்பத்தித் திறன் கட்டியெழுப்பப்பட்டள்ளது.இங்கு 300-400 மடங்கு உற்பத்தித்திறன்கூட பெருவங்கிகளின் ‘வட்டிக்குவட்டியை ‘ ஈடுசெய்யத் தணறியபடிதாம் முதலாளியம் சேடமிழுத்தபடி நகர்கிறது.இந்தப்போக்கால் மூன்றிலைத்திட்டமாக உற்பத்திப்பொறிமுறையை நாம் வகுக்கலாம்:
1):முக்கிய உற்பத்தியகம்
2):வெளியார் உற்பத்தி
3):வளைந்துகொடுக்கும் வேலை
இதை இப்படிப் புரியலாம்: ஒரு வாகன உற்பத்திநிறுவனம்,உதாரணம்:ஜெனரல்மோட்டார். மோட்டரை தனது முக்கிய தளத்திலும்,சிறியரக உதிரப்பாகங்களை வெளியாரிடமும்,வளைந்து கொடுக்கும் வேலையை தொழிலாளர்களை வழங்கும் முகவர்களிடமாகவும் பெறுவதுதாம் இந்த முச்சிலைத்திட்டம்.இன்றைய நிலவரப்படி ஜெனரல் மோட்டரிடம் தொழில் புரிபவர்களில் 65 வீதமான தொழிலாளிகள் வெளிமுகவா;களால் வழங்கப்பட்ட தினக்கூலிகளே.இது உச்சஊதிய வரம்பை அதன் கடைக்கோடி நிலைக்குத் தள்ளிய முதலாளியப் பொறிமுறையாகும்.வருங்காலத்தில் ஒரு தொழிலகம் தனது 80 வீதமான தொழிலாளிகளை வீட்டுக்கு அனுப்பிவிட்டு 20 வீதமான வேலையாட்களோடு சகலதையும் வெற்றிகரமாகச் செய்து முடிக்கும். இதுவே பயங்கரவாதத்தின் மூலவூற்று.இதை மீறிய எந்த உற்பத்திவடிவமும் முதலாளியத்திடம் கிடையாது.இது சகல நாடுகளையும் தன் உயிர்வாழ்வுக்காய்ச் செரித்து ஏப்பமிட்டுவிடும்.இந்தப் புதிய நவநாகரீக முதலாளியம் ஒரு தொழிலாளியைத் தேர்வு செய்யும்போது அவரிடம் பல்முனையாற்றலைவேண்டிக் கொள்கிறது.அதாவது ஜந்திரத்தை இயக்குபவர் கணினியல் கணக்குப் பதியத் தக்கவராகவும் கூடவே ஜந்திரத்தைப் பழுது பார்க்கத் தக்கவராகவும் முடிந்தால் புதிய வாடிக்கையாளரைக் கூட்டிவரும் ஆற்றலுடையவராகவும் இருத்தலே அவசியமாக இருக்கிறது.மைக்றோ சொவ்ற் அதிபர் பில் கேட்டின் வார்த்தையிற் சொன்னால்: ‘ இனிமேற் காலத்தின் உற்பத்திப் புதுமைகள் ஒரு ரோல் றோய்ஸ் காரை 10 யூரோவுக்கு வழங்கக்கூடிய நிலை வந்தாலும் வரும் ‘ என்பதாகும்.இது திட்டமிட்ட உற்பத்திப் போட்டியை மிகமிக நயவஞ்சகமான முறையிற் குறிப்பதாகும்.
கடந்த மாதம் மாதம் இந்திய நிதியமைச் பா.சிதம்பரம்(மனிதனின் காவாய் யுனிவர்சிட்டி ஆங்கிலத்தை கேட்டுக் கொண்டேயிருக்கலாம்.அவ்வளவு ஆழமாகவும் அழகும் பொலிவுறும் உரையாடல்) ஜேர்மன் தொழில் மந்திரியோடு உரையாடியபோது ‘எதிர்கால இந்தியா ஜேர்மனிய உற்பத்திவீச்சுக்கு முண்டு கொடுக்கும்.இந்திய அரசினது நிர்வாகச் சிக்கல் யாவும் சரிசெய்யப் பட்டு ஜேர்மனிய பொருளாதார ஆர்வத்தை இந்தியாவுக்குள் சிறப்பாக்குமெனக் கூறியுள்ளாா;. ‘
இதுகுறித்துக் கருத்துக்கூறிய ஜேர்மனிய அமைச்சர்: ‘ இந்தியா கடந்த 2004 இல் 7பில்லியன் யூரோக்களுக்கு நம்மிடம் பொருள்களைக் கொள்முதல் செய்து நமது நாட்டில் கொள்முதல் செய்யும் நாடுகளின் பட்டியலில் 35 இடத்தில் இருக்கிறது.இது வரும் 5 ஆண்டுகளின் பத்துக்கு உட்பட்ட நாடுகளுக்குள் வரும் ‘ என்கிறார்.
ஏகாதிபத்தியங்களும் இந்தியத் துணைகண்டமும்:
கைவலிக்குது தொடரும்…
18.04.2004
ப.வி.ஸ்ரீரங்கன்
- நெடுந்தீவு ஆச்சிக்கு
- நெருக்குவாரம் + சுவாரஸ்யம் = புனிதம்
- கார்ல் பாப்பரின் வெங்காயம்-7
- பிரக்ஞையின் தளங்கள் : மாண்டூக்ய உபநிடதமும் யூத கபாலாவும்
- டென்மார்க்கின் தனிப்பெரும் இலக்கியவாதி கிாிஸ்ாியன் அண்டர்சன்
- தன்னலக் குரலின் எதிரொலி
- சருகுகளோடு கொஞ்ச துாரம்
- சந்திரமுகி க(வ)லையா ? – அறியா விஷயம் ஆயிரம் புரியும்
- மெல்லக் கொல்லும் விஷங்கள் …
- அறிந்தும் அறியாத அண்டார்க்டிகா கண்டம் (9)
- கீதாஞ்சலி (19) பேராசைப் பிடியிலிருந்து விடுவிப்பு! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- தஸ்லிமா நஸ்ரீனின் பெண்ணியக் கவிதைகள் ( வங்கமொழியில்: தஸ்லிமா நஸ்ரீன் ) ஆங்கில மூலம்: கரோலின்ரைட்
- மழைக்குடை மொழி
- சிறுவாயளைந்த அமிர்தம்
- தூங்கலாமா தம்பி தூங்கலாமா… பேருந்தில்
- வாரம் ஒரு குறுங்கதை – ஈசல்கள்
- பெரியபுராணம்-37
- 21 ஆம் நூற்றாண்டு மரபணுவியலும் 18 ஆம் நூற்றாண்டு இனக்கட்டுமானங்களும்
- பாவேந்தரின் பதறல்கள்!
- கடந்த வரலாறும் கண்முன் விரியும் வரலாறும்:பயங்கரவாதம் வரிக்கும் சமாதானப் பாயிற் படுப்பவரெல்லாம் பாடையிற்போவர்! ( பகுதி:4)
- மீனம் போய் மேடம்
- தலைவர்களும் புரட்சியாளர்களும் – யாஸர் அராஃபாட்- பாகம் 1
- அனைத்துப் பிரச்னைகளுக்கும் ஆண்களே காரணம்
- கடப்பாரை
- அவர்கள் வரவில்லை
- மழலைச்சொல் கேளாதவர் ( அறிவியல் சிறுகதைப் போட்டியில் மூன்றாம் பரிசு பெற்ற கதை)
- கிருஸ்ணபிள்ளை
- சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா எழுதிய செயின்ட் ஜோன் நாடகத்தைத் தழுவியது)
- மரண வாக்குமூலம்