தந்தை பெரியார் பிறந்த மண்ணில்

This entry is part [part not set] of 61 in the series 20040805_Issue

மயிலாடுதுறை சிவா…


கரூர் அருகில் உள்ள மேட்டு மகாதன புரம் என்ற ஊரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் ஆண்டுதோறும்

ஆடிப் பெருக்கு கொண்டாடுவது வழக்கம். இதற்கு அருகில் உள்ள, சுற்றுப் பட்டு அனைத்து

கிராமங்களில் இருந்தும் பக்தர்கள் பெரும் திரளாக கலந்து கொள்வது வழக்கம்.

இதில் கொடுமை என்ன வென்றால், சாமி புறப்படும் பொழுது பக்தர்கள் தங்கள் காணிக்கையாக,

தலையில் படார், படாரென்று தேங்காய் உடைப்பது வழக்கமாம். தங்களுடைய கஷ்டங்களும் தேங்காய்

போல் சிதறி விடும் என்று நம்புகிறார்கள், அதுதான் ஐதீகமாம்.

இந்த வாரம் சூரிய தொலைக் காட்சியில் (SUN TV) செய்தியில் அதனைப் பார்க்கும் பொழுது மனம்

பதை பதைக்கிறது. அதைவிட கொடுமை ஓர் அம்மா தலையில் மொட்டைப் போட்டு உள்ளார்கள்,

அவர் தலையில் பாடாரென்று தேங்காய் உடைக்கும் பொழுது அவர் தலையில் ரத்தம் பீறிட்டு வருகிறது,

அதனை மஞ்சள், குங்குமம் வைத்து அடைக்கிறார்கள். என்ன கொடுமை இது ? இதை கேட்பார் யாரும்

இல்லையா ? மாவட்ட ஆட்சியர் இதனை தடுக்கமால் காவல் துறை அதிகாரிகள் இவ் விழாவிற்கு

பாதுகாப்பு வேறு! அடுத்து வரும் ஆண்டிலாவது அரசு இதனை இரும்பு கரம் கொண்டு தடுத்தால் தேவலை…

இதேப் போலவே விருது நகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ளே மற்றொரு கோவிலில் பச்சிளம்

குழந்தைகளை குழியில் போட்டு, மண்ணை போட்டு மூடிவிட்டு கோவில் பூசாரி அதன் மேல்

நடப்பார், இந்த ஆண்டு மண்ணிற்கு பதிலாக பலகை போட்டு மூடி விட்டு அதன் மேல் நடக்கிறார்.

இந்த விழாவின் தவறான செயலுக்காக மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை கோரப் பட்டுள்ளது.

இந்த நூற்றாண்டில் அடிதட்டு மக்களுக்காகவும், உரிமைக்களுக்காகவும், சமூக விடுதலைக்காகவும்,

சமுதாய மறுமலர்ச்சிக்காகவும், மூட நம்பிக்கைகளை அறவே ஒதுக்கவும் போராடிய தந்தைப் பெரியார்

பிறந்த மண்ணில் இப்படியும் மக்கள். நம் சமுதாய மக்களை எப்படி நல் வழி படுத்துவது ? இதுப் போல

மூட பழக்க வழக்கங்களில் இருந்து எப்படி மீட்டு எடுப்பது ?

மயிலாடுதுறை சிவா…

mpsiva23@yahoo.com

Series Navigation

மயிலாடுதுறை சிவா

மயிலாடுதுறை சிவா