கூத்துப் பட்டறையின் படுகளம்

This entry is part [part not set] of 46 in the series 20030822_Issue

வெளி ரெங்கராஜன்.

தமிழ் நாடக நிகழ்வில் அண்மைக்காலங்களில் சில நல்ல முயற்சிகள் வரத்தொடங்கி இருக்கின்றன. கூத்துப்பட்டறை பல பொருளாதார சிக்கல்களுக்கிடையிலும் நாடகப் பயிற்சியில் அதிக கவனம் எடுத்துக்கொண்டு அவ்வப்போது சில செறிவான நாடகங்களை வழங்கி வருகிறது. மகாபாரதத்தின் பதினெட்டாம் நாள் போரில் துரியோதனன் வதமாகும்போது நிகழ்த்தப்படும் படுகளம் சடங்கை மையமாக வைத்து முத்துசாமி எழுதிய படுகளம் நாடகம் சென்னை அடையாறு காந்தி மண்டபத்திலும், நுங்கம்பாக்கம் பிரெஞ்சு கலாச்சார மைய வளாகத்திலும் கணிசமான பார்வையாளர்களுக்கு நடுவே நிகழ்த்தப்பட்டபோது ஒரு வலுவான நாடகத்தின் இருப்பை உணர முடிந்தது. நடிகர்கள் ஒரு நாடகத்தை நிகழ்த்துபவர்களாக மட்டுமில்லாமல் மகாபாரத காலத்துக்கும், நிகழ்காலத்துக்கும் இடையே ஒரு ஊடாட்டத்தை நிகழ்த்துபவர்களாக தோற்றம் கொண்டனர். நடிகர்கள் கூத்திசைத்தும், ஆடியும், ஓடியும் நாடக களத்தை பல தளங்களுக்கு விரிவு படுத்தினர். மகாபாரத்தின் பதினெட்டாம் நாள் போராட்ட களனாக வடிவம் கொண்டு அன்றைய நிகழ்வுகளை பின்பற்றிச் செல்லும் நாடகம் திரெளபதியின் துகில், கூந்தல், பெண்ணின் உபாதைகள், கற்புநிலை குறித்த சண்டைகள், பெண் உடல் கொண்டாட்டம் என அலைவுகள் கொண்டு பீமன் துரியோதனன் சண்டைகள் காலத்தின் குறியீடுகளாய் நின்று தொடர்ந்து நீடிப்பதான தோற்றத்தை அளித்துக்கொண்டு இருந்தன.

பாஞ்சாலியின் கொடுமையோடு உடல் உபாதைகளுக்காக இடம் தேடி அலையும் புஞ்சை கிராமத்து இலுப்பைத்தோப்பு பெண்களின் அவஸ்தைகளும் சேரும் போது இரண்டு காலகட்டங்களை ஒன்றாக இணைத்து தொடரும் சோகத்தை வெளிப்படுத்த முடியும் என்று முத்துசாமி தன் நாடக முன்னுரையில் குறிப்பிடுகிறார். தமிழ் சமூகத்தின் மொத்த பரிமாணமும் சரியான விதத்தில் வெளிப்பட்டு தமிழ் சமூகத்திற்கு ஒரு புதிய ஆளுமை உண்டாக வேண்டும் என்பது அவரது விழைவாக இருக்கிறது. அவ்வகையில் பழையது, புதியது என்கிற பேதமில்லாதபடி நம்முடைய சமூக கலாச்சார வாழ்வில் பல்வேறு காலக்கூறுகளும், படிமங்களும் ஊடுருவி உள்ளதை அவரால் பார்க்க முடிகிறது. வரப்புக்காக கிராமப்புறங்களில் தொடரும் சண்டைகள், சண்டையின் மையமாக பெண்ணின் கற்பு விவாதிக்கப்படுவது இவையெல்லாம் வெவ்வேறு விதமாக நம்முடைய சமூக வாழ்வில் தொடர்ந்தவாறுதான் உள்ளன.

இத்தகைய தொடர்ச்சியில் நன்மை, தீமை என்பதற்கிடையிலான மெல்லிய இழைகளும் இடம் பெயர்ந்தவண்ணம் உள்ளன. சமூகம் மீண்டும் மீண்டும் இவைகளை மறு பரிசீலனை செய்யவும், ஒருபக்கம் சார்பு கொள்வதான சாத்தியங்களும் தொடர்ந்தபடியே உள்ளன. பீமனுக்கு வண்ணாரப்பேட்டை கிளை சார்பாக மாலைகள் விழும்போது துரியோதனனுக்கு மூலக்கடை கிளை சார்பாக மாலைகள் விழுகின்றன. பாஞ்சாலி சபதம் முடித்தலும், துரியோதனன் மனைவி பானுமதி கூந்தல் அவிழ்த்தலுமான நிகழ்வுகளுக்கும் முடிவில்லை. இதற்கிடையில் நாடகம் மனிதர்களின் பல்வேறு முகங்களையும், சஞ்சல குணத்தையும், முரண்களையும் வெளிப்படுத்தி செல்கிறது. துரியோதனன் பீமனுக்கு பயந்து பிணங்கள் நடுவே ஒளிதலும் கிருஷ்ணன் அரவாணை திருப்தி படுத்த பெண்வேடம் தரித்து நிர்வாணியாய் நின்றதை நினைத்து அழுதலும், பாஞ்சாலி மற்றும் பானுமதியின் உடல் அழகை வேடர்களும் வேடிக்கை பார்த்து ரசிப்பதும், துரியோதனன் உடன் இருந்தவர்களே அவன் இறக்கும் தருவாயில் நரிகளாய் அவனை புசிப்பதும் என நாடகம் சிறு சிறு இழைகளாக பல்வேறு உணர்வுகளுக்கும் ஊடுருவிச் சென்றபடி உள்ளது. திருதராட்டிரன் — காந்தாரி தம்பதி போல் கிருஷ்ணன், பீஷ்மர் போன்றவர்களும் பல சந்தர்ப்பங்களில் வேடிக்கை பார்க்கும் பார்வையாளர்களாகின்றனர். இதனூடாக புறக்கணிக்கப்பட்டதாக கருதப்படும் பல்வேறு உணர்வுகள் கால ஓட்டத்தில் அதிக பரிமாணம் கொண்டு பல்வேறு செயல்பாடுகளின் அடிநாதமாக ஒலிப்பதையும் பார்க்கமுடிகிறது. உதாரணமாக அரவான் குறித்த கவனம் நாடகத்தின் நெகிழ்ச்சியூட்டும் அம்சமாக உள்ளது. அரவான் பலியானதும் பதினெட்டாம் நாள் போர் பார்க்க ஆவியாக வந்து அவன் பேசும் வார்த்தைகள் நாடகத்தில் அவனுக்குள்ள பங்கை கோரி நிற்கின்றன. நாடகமே ஒரு போஸ்ட் மாடர்னிஸ பிரதிபோல் பல்வேறு சிறுசிறு கூறுகளில் அலைவுகள் கொண்டிருந்தது. நடிகர்கள் ஒருவிதமான லயிப்புடன் தாங்கள் தாங்கிய பாத்திரங்களாக மட்டுமில்லாது படிமங்களின் பல்வேறு நீட்சிகளாய் உருமாற்றம் கொண்டனர்.

‘ இந்த நாநிலம் முற்றும் நல்ல இன்பத்தில் வாழ

இந்த புஞ்சையில் வாழ்கின்ற அத்தனை

பேரும் ஆணை உரைத்துச் சொல்வோம்

இந்தப் பாஞ்சாலி துகிலினை அன்றி

வேறெந்தத் துணியையும் பிடித்து என்றும்

திரையெனக் கொள்ளோம் — ‘.

என பாஞ்சாலியின் துகிலுக்கும், புஞ்சைக் கூத்தர்களுக்கும் இடையிலான சரடுகளும் நீண்டு கொண்டே போகின்றன. நாடக வெளியில் நிறைந்திருந்த துரியோதனனின் பொம்மை வடிவம் நாடக உருவாக்கத்தில் கூத்து கலைஞர்கள், நவீன நடிகர்கள், ஓவியர்கள் என பலரது பங்களிப்பையும் கோரும் குறியீடாய் நின்று கொண்டிருந்தது.

முத்துசாமி மிகுந்த சுதந்திரம் எடுத்துக்கொண்டு பாத்திரங்களை கால மயக்கமின்றி பல்வேறு மனநிலை வெளிப்பாடுகளின் குறியீடுகளாய் நாடக களத்திற்கு கொண்டு வருகிறார். நடிகர்களும் அவரது உற்சாகத்திலும், திளைப்பிலும் தாங்களும் பங்கு கொண்டு நாடக நிகழ்வை புனைவுகளின் நீட்சியாக உருமாற்றுபவர்களாகின்றனர். முக்கியமாக பீமன், துரியோதனன் மற்றும் பாஞ்சாலியாக நடித்த ஜார்ஜ், ராஜாரவிவர்மா மற்றும் சந்திரா போன்றவர்களும், பிற நடிகர்களும் பாத்திரங்களின் மரபான கட்டுமானங்களை சுலபத்தில் மீறிச்செல்பவர்களாகவே தோற்றம் கொண்டனர். துரியோதனன் இறந்ததற்காக ஆட்டபாட்டங்களுடன் ஊர்வலம் நடக்கிறது. துரியோதனன் கொலைக்காக பீமன் கடைசியில் போலீஸால் கைது செய்யப்படுகிறான். அவ்வப்போதைய மதிப்பீடுகளுக்கு இடமளித்தபடி பாத்திரங்களின் மறுஉருவாக்கம் நாடகத்தில் நிகழ்ந்தபடியே இருக்கிறது. நாடகம் இன்னும் மீதமிருப்பதான உணர்வே தொடர்ந்து ஏற்படுகிறது.

நாடகம் பல சாத்தியங்களை திறந்து விடும் முயற்சியில் ஒரு விதமான புத்துணர்வையும், உற்சாகத்தையும் அளித்தது என்றே கூறவேண்டும். நாடகச்செயல்பாடு என்பது ஒருவித மனமகிழ்வை பகிர்ந்து கொள்கிற முயற்சி என்பதான உணர்வையே நடிகர்கள் உருவாக்கினர். இத்தகைய அண்மையிலும் நெருக்கத்திலும் மதிப்பீடுகளின் இறுக்கமும், நிகழ்வும் அதிகம் சாத்தியப்படும் என்றே தோன்றுகிறது. இன்று நாடகங்கள் எண்ணிக்கையில் குறைந்திருந்தாலும் ஒரு நல்ல நாடகம் மீட்டெடுக்கும் வேலையை சுலபத்தில் செய்கிறது. இன்று பரீக்ஷா நாடக குழு இளம் சக்திகளுடன் மீண்டும் தன்னை புதிப்பித்து கொள்ள தொடங்கியிருப்பதும், மதுரையிலும் பாண்டிச்சேரியிலும் கோவில்பட்டி கிராமப்புறங்களிலும் நாடகம் புதிய எழுச்சியுடன் கிளம்பி இருப்பதும் புதிய விழைவுகளின் அடையாளங்களாகவே தோன்றுகின்றன.

rangarajan_bob@hotmail.com

Series Navigation

வெளி ரெங்கராஜன்